திருவள்ளுவர் நன்னெறிக் கழகம்

  • Home
  • Sri Lanka
  • Koslanda
  • திருவள்ளுவர் நன்னெறிக் கழகம்

திருவள்ளுவர் நன்னெறிக் கழகம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from திருவள்ளுவர் நன்னெறிக் கழகம், School, S K Division Meeriyabedda Estate, Koslanda.

Thiruvalluvar Nannerikazhaga Araneri School offers moral studies that empower students to cultivate discipline, reach their full potential, and become responsible, compassionate, and successful global citizens

திருச்சிற்றம்பலம்!எமது திருவள்ளுவர் நன்னெறிக்கழக அறநெறிப் பாடசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் தொடர் சைவ சமய ஆன்மீக க...
17/05/2026

திருச்சிற்றம்பலம்!

எமது திருவள்ளுவர் நன்னெறிக்கழக அறநெறிப் பாடசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் தொடர் சைவ சமய ஆன்மீக கருத்தரங்கின் தொடர்ச்சியாக 16.05.2026 அன்று இரத்தினபுரி சூரியகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள எக்பர்த் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கான சமய விழிப்புணர்வு நிகழ்வானது செவ்வனே இடம்பெற்றது.

எமது இன்றைய சமூகத்தின் தேவை உணர்ந்து இவ் அறிய நிகழ்வை ஏற்பாடு செய்த பாடசாலையின் அதிபர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

திருச்சிற்றம்பலம்!

திருச்சிற்றம்பலம்!திருவள்ளுவர் நன்னெறிக்கழக அறநெறிப் பாடசாலையின் ஏற்பாட்டில் 04. 05. 2026 அன்று பண்டாரவளை ஐஸ்லேபி (Aisla...
05/05/2026

திருச்சிற்றம்பலம்!

திருவள்ளுவர் நன்னெறிக்கழக அறநெறிப் பாடசாலையின் ஏற்பாட்டில் 04. 05. 2026 அன்று பண்டாரவளை ஐஸ்லேபி (Aislaby) தமிழ் வித்தியாலய மனவர்களுக்கான சமய சொற்பொழிவானது "மனதைப் பயிற்றுவித்து, அறிவுடன் செயற்படுவோம்" என்ற தலைப்பில் எமது அறநெறிப் பாடசாலை பொறுப்பாசிரியர் அவர்களால் மிகச் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வில் மாணவர்களுக்கான ஒரு தொகை கற்றல் உபகரணங்களும் பாடசாலை அதிபர் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

திருச்சிற்றம்பலம்!

திருச்சிற்றம்பலம்!கனடா நாட்டில் உள்ள எம் உறவுகளால் அன்பளிப்பு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான கற்றல் உபகர...
04/05/2026

திருச்சிற்றம்பலம்!

கனடா நாட்டில் உள்ள எம் உறவுகளால் அன்பளிப்பு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான கற்றல் உபகரணங்கள், ஆடை வகைகள் மற்றும் பாலர் வகுப்புக்கான விளையாட்டு பொருட்கள் என்பன எமது திருவள்ளுவர் நன்னெறிக் கழக அறநெறிப் பாடசாலையின் மூலமாக பகிர்ந்தளிக்கும் செயற்பாடானது மக்கள்தெனிய புதிய மீறியபெத்தை கிராமத்தின் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் அன்னை சாரதா தேவி அறநெறிப் பாடசாலையின் பொறுப்பாசிரியர் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் தொடர்ச்சியாக சைவ சமய சொற்பொழிவும் அதனை தொடர்ந்து ஆலயத்தில் சிரமதான பணிகளும் இடம்பெற்றன.

திருச்சிற்றம்பலம்!

திருவள்ளுவர் நன்னெறிக் கழக அறநெறிப் பாடசாலையின் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமானது அறநெறி பாடசாலையின் பொறுப்பாசிரியர் அவர்க...
24/04/2026

திருவள்ளுவர் நன்னெறிக் கழக அறநெறிப் பாடசாலையின் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமானது அறநெறி பாடசாலையின் பொறுப்பாசிரியர் அவர்கள் தலைமையில் மிக விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வில் இறை வழிபாடு அதனை தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.

06/04/2026

கொஸ்லந்தை ஸ்ரீ கணேஷா தமிழ் மகா வித்தியாலயத்தில் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிடேக நிகழ்வில் (06.04.2026), எமது திருவள்ளுவர் நன்னெறிக்கழக அறநெறி பாடசாலை மாணவர்களால் திருமுறை சேர்ந்திசை வழிபாடு நிகழ்த்தப்பட்டது.

பிரித்தானியாவில்  அமையப்பெற்றுள்ள ஏழாலை நலன்புரிச் சங்கத்தினால், அன்மையில் வெள்ள  அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஊவா மாகா...
24/02/2026

பிரித்தானியாவில் அமையப்பெற்றுள்ள ஏழாலை நலன்புரிச் சங்கத்தினால், அன்மையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஊவா மாகாணத்தை சேர்ந்த சுமார் 350 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வானது 11.02.2026 அன்று இடம்பெற்றது. மீதும்பிட்டிய அனர்த்த முகாம், லுணுகலை கலைமகள் வித்தியாலயம், ஹொப்டன் விக்னேஸ்வரா பாடசாலை மற்றும் கெல்வத்த தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு மேற்படி பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

திருவள்ளுவர் நன்னெறிக்கழக அறநெறி பாடசாலையின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்நிகழ்வை சமூக சேவையாளரான தினேஷ் Dinesh Mohanraj அவர்கள் முன்னின்று நடத்திவைத்தார்.

09/02/2026

TNK Annual Thai Pongal Festival 2026

Happy Deepavali 🎉
20/10/2025

Happy Deepavali 🎉

மட்டக்களப்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் நிறுவனத்தின் பொது முகாமையாளர்சுவாமி நீலமாதவானந்தர், அவர்களின் ஊவா மாகாணத்திற்கான விஜய...
15/08/2025

மட்டக்களப்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் நிறுவனத்தின் பொது முகாமையாளர்
சுவாமி நீலமாதவானந்தர், அவர்களின் ஊவா மாகாணத்திற்கான விஜயத்தின்போது ப/பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் சுவாமி அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலையானது திரைநீக்கம் செய்துவைக்கபட்டது. பூனாகலை தமிழ் வித்தியாலயம் மற்றும் எமது அறநெறி பாடசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றன. நிகழ்வில் எமது திருவள்ளுவர் நன்னெறிக்கழக அறநெறி பாடசாலையின் பொறுப்பாசிரியர் கவியரசன் ஐயா, பூனாகலை பாடசாலையில் முன்னாள் அதிபர் சேதுகாந்த் ஐயா, தற்போதைய அதிபர் ஜோதி ஐயா, சமூக சேவகரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான தினேஷ்குமார் ஐயா மற்றும் ஏனைய அயல் கிராமத்தின் அறநெறி பாடசாலை ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

16/06/2025

Today, we celebrated Thirugnanasambandar (திருஞானசம்பந்தர்) Guru Pooja day at our school. The students sang Pannisai Geetham and participated in the pooja with devotion.

Address

S K Division Meeriyabedda Estate
Koslanda

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருவள்ளுவர் நன்னெறிக் கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category