28/12/2025
அதிபரின் இரங்கல் செய்தி
எமது பாடசாலையின் முன்னாள் அதிபரும், கல்லூரியின் பழைய மாணவருமாகிய திரு. அ. பஞ்சலிங்கம் அவர்கள் இயற்கை எய்தியுள்ளார் என்ற துயர் செய்தியை மிகுந்த வேதனையுடன் கல்லூரிச் சமூகத்துடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
அன்னார் எமது கல்லூரியில் இரசாயனவியல் ஆசிரியராகவும், உப அதிபராகவும், அதிபராகவும் பொறுப்பேற்று பணியாற்றியவர். அவரது அர்ப்பணிப்பு மிக்க சேவையின் பயனாக கல்லூரியின் கல்வித் தரம் மட்டுமன்றி, கட்டமைப்பு மற்றும் பௌதீக வசதிகளிலும் பல்வேறு முன்னேற்ற மாற்றங்கள் உருவாக்கப்பட்டன. மேலும், பழைய மாணவர்சங்க நம்பிக்கை நிதியத்தின் தலைவராக செயல்பட்டு, கல்லூரியின் நலனையும் வளர்ச்சியையும் உயரிய நோக்கமாகக் கொண்டு அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றும் நினைவுகூரத்தக்கவை.
கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும், கல்லூரிச் சமூகத்தாலும் மதிக்கப்படும் தலைமைத்துவம் மிக்க அதிபராகவும், சமூக நோக்குடன் செயல்படும் கல்வியாளராகவும் திகழ்ந்தார். இளைப்பாறிய பின்னரும் கல்விச் சமூகத்திற்கு தனது இறுதி நாள்வரை தொண்டாற்றி, தனது சேவையால் அமரத்துவம் பெற்றுள்ளார்.
அன்னாரின் ஆத்மா அமைதியும் சாந்தியும் அடைய இறைவனை வேண்டி, கல்லூரிச் சமூகத்தின் சார்பாக அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
— அதிபர்