09/06/2024
Z Score இல்லாமலும் பல்கலைக்கழகம் போகலாமா?
ஆம் போகலாம்
Dr PM Arshath Ahamed MBBS MD PAED
மருத்துவ பீடத்தில் முதல் இரண்டு வருடங்களை முடித்து, 2nd MBBS எக்ஸாம் பாஸ் ஆகினால் மட்டுமே மூன்றாம் வருடத்திற்கு போக முடியும். மூன்றாம் வருடம் தொடங்கும் போதே கிளினிகலும் (வைத்தியசாலை பயிற்சியும்)தொடங்கி விடும்.
கிளினிக்கல் தொடங்கிய பிறகு சொல்லவே தேவையில்லை காலையில் வைத்தியசாலை, பெகல்ட்டியில் மாலைவரை லெக்சர். அட்மிஷன் நாட்களில் இரவு 9 மணி வரை மீண்டும் வைத்தியசாலை என்று வாழ்க்கை இப்படியே போகும். அதற்குள்ளும் 3rd MBBS எக்ஸாமுக்கு வேறு படிக்க வேண்டும்.
எங்களது கிளினிகல் தொடங்கி ஒரு வாரம் போனபின் எல்லோரும் இது என்ன கஷ்டமான வாழ்க்கை என்று சலித்து கொள்வார்கள். அப்படியான ஒரு நாள், மருத்துவ பேராசிரியர் எங்கள் க்ரூப் எல்லோரையும் தனது ரூமுக்கு அழைத்து நலம் விசாரித்தார். ஒவ்வொருவரது ஏஎல் பெறுபேறுகளையும் கேட்டறிந்தார். எல்லொரும் 3A, 2AB, A2B, ABC, BBC என்று தங்களது பெறுபேருகளை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர் சொன்னார் "நீங்கள் எல்லாம் என்னை விட மகா கெட்டிக்காரர்கள். எனது ரிசல்ட் வெறும் 1C 3S. அதுவும் மூன்றாவது தடவை ஏஎல் தோற்றி எடுத்தது. ஆகவே என் அன்பு மக்களே மனம் தளராமல் படியுங்கள். நீங்களும் வெல்லலாம்." அது தான் எங்களுக்கு அப்போதைய மிகப்பெரும் பூஸ்ட்.
அதை ஏன் சொல்கின்றேன் என்றால், உண்மையில் ஏஎல் பரீட்சையில் மூன்று S ,அதற்கு மேல் எடுத்த எல்லோரும் சித்தியடைந்தவர்கள். பல்கலைக்கழகம் செல்ல தகுதியானவர்கள். ஆனால் நமது நாட்டில் உள்ள வளப்பற்றாக்குறை காரணமாக, எல்லோரையும் உள்வாங்க முடியாமல் Z Score கட்ஓப் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதனால் பலரது பல்கலைக்கழக கனவு நனவாகமலே போய்விடுகிறது. சிலருக்கு 3A எடுத்தும் மருத்துவ பீடம் கிடைக்காத நிலை. 😞
அப்படி உள்வாரியாக பல்கலைக்கழகம் கிடைக்காமல் கவலைப்படுபவர்களுக்கு இன்னும் ஒரு அரிய வாய்ப்பு நமது நாட்டில் இருப்பது உங்களுக்கு தெரியுமா?
அதுபோல, கையிலே இப்போது நல்ல தொழில் ஒன்று கிடைத்திருக்கிறது. அது போதும். ஆனாலும் பல்கலைக்கழகத்தில் நானும் ஒரு டிகிரி எடுக்க வேண்டும், ப்ரோமஷனுக்கு டிகிரி ஒன்று இருந்தால் நல்லது என்று ஆவல் உள்ளவரா நீங்கள்?
அப்படியானால் கவலை வேண்டாம். உயர்தர பரீட்சையில் நீங்கள் மூன்று பாடங்களிலும் சித்தியை பெற்றிருந்தால் உங்களுக்கு பொருத்தமான, தகுதியான, தொழில்வாய்ப்பு உள்ள டிகிரி ஒன்றை வெளிவாரியாக, குறைந்த செலவில் கற்கக் கூடிய பல்வேறு கற்கைகள் இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் நிரம்பி இருக்கின்றன.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில், 50ற்கும் மேற்பட்ட, பட்டம் பெறும் கற்கைகள் வெளிவாரியாக (External Degree )வழங்கப்படுகின்றன. குறித்த கற்கை நெறியை முடித்து, பட்டத்தை பெற்று விட்டால், உள்வாரி பட்டம் வெளிவாரி என்ற எந்த வேறுபாடுகளும் காணப்படாது. பாகுபாடும் காட்டப்படாது. நீங்களும் அரச அங்கீகாரம் பெற்ற ஒரு பட்டதாரி தான். தகுதியான தொழில்களுக்கு நீங்களும் விண்ணப்பம் செய்ய முடியும். வெளிநாடுகளுக்கு போக முடியும்.
கொழும்பு, மொறட்டுவை, பேராதனை, சிறீ ஜயவர்தனபுர போன்ற புகழ்பூத்த பல்கலைக்கழகங்களில் கூட நீங்கள் உலகத் தரமான பட்டங்களை பெறலாம். தொழில்வாய்ப்பு நிறைந்த பல்வேறு பாடநெறிகளில் நீங்கள் வெளிவாரியாக இணைந்து கொள்ளலாம்
👍தகவல் தொழில்நுட்பம், கணனி, எலக்ரோனிக் போன்ற துறைகளில் ஆர்வம் உள்ளவர்கள் கீழ் வரும் பாடநெறிகளில் சேர்ந்து கொள்ளலாம்.
University of Colombo
👉Bachelor of Science in Electronics & Automation Technologies.
👉Bachelor of Information Technology(BIT) .
👉Bachelor of Science in Financial Engineering
University of Moratuwa
👉Bachelor of Information Technology (BIT)
👍மருத்துவம், அதுசார்ந்த துணைக் கற்கைகளில் ஆர்வம் உள்ளவர்கள், களனி பல்கலைக்கழகம் வழங்கும், கீழ்வரும் கற்கைகளில் பதிவு செய்து கொண்டால் சிறப்பு.
University of Kelaniya
👉 Bachelor of Science(Physiotherapy) Diploma / Degree
👉Bachelor of Science(Speech & Language Therapy)
👉Bachelor of Science(Occupational Therapy
👍அதுபோல தாதிய தொழிலில் ஆர்வம் உள்ளவர்கள்
Eastern University Of Sri Lanka. வழங்கும்
👉Bachelor of Science Honours in Nursing டிகிரியில் இணைந்து கொள்ளலாம்.
👍பிஸ்னஸ், மேனேஜ்மென்ட், அட்மின் சார்ந்து படிக்க விரும்புபவர்கள் ஜயவர்தனபுர, பேராதனை பல்கலைக்கழகங்களில் பின்வரும் பட்டங்களை பெறமுடியும்.
University of Sri Jayewardenepura
👉 Bachelor of Science in Business Studies
👉Bachelor of Humanities & Social Sciences
👉 Bachelor of Science Management (Public) General
👉Bachelor of Social Sciences (General) in Environmental and Developmental Studies
University of Peradeniya
👉 Bachelor of Business Administration
👍உணவு, உணவுப் பாதுகாப்பு, அதுசார்ந்த வியாபாரம், பெருந்தோட்டத் துறை போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் வயம்ப பல்கலைக்கழகம் வழங்கும் கீழ்வரும் கற்கைகளில் இணைந்து கொள்ள முடியும்.
🔥 University of Wayamba
👉 Bachelor of Science in Plantation Management Wayamba University of Sri Lanka
👉Bachelor of Science in Food Quality Management
👉Bachelor of Science in Food Business and Marketing
மேற்குறித்த கற்கை நெறிகள் தவிர பொதுவான கீழ்வரும் கற்கைநெறிகளை
👉Bachelor of Business Administration
👉Bachelor of Arts
👉Bachelor of Commerce
👉Bachelor of Business Management அது போன்ற வேறு BA, BCom BBA கற்கைநெறிகளை
University of Ruhuna
Sabaragamuwa University of Sri Lanka
University of Jaffna
South Eastern University of Sri Lanka
Uva Wellassa University போன்ற நாட்டில் உள்ள எல்லா பல்கலைக்கழகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறான டிகிரிகள் அரச அங்கீகாரம் பெற்றவை. ஒப்பீட்டளவில் செலவு குறைந்தவை. உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் அங்கீகரிக்கப்பட்டவை என்பது தான் இதில் உள்ள இன்னொரு விசேடம். அதுபோல பகுதிநேரமாக வேலை செய்து கொண்டு கூட இவற்றை படிக்கலாம். டிகிரி ஒன்றை முடிக்கலாம். தொழிலுக்கு தொழில்.படிப்புக்கு படிப்பு. (சில வேளைகளில் உள்வாரியாக BA , BCom செய்வதை விட , தொழில் ஒன்றை செய்து கொண்டு, வெளி வாரியாகவே, வேறு ஒரு பொருத்தமான கற்கையை நெறியை நிறைவு செய்வது சாலப் பொருத்தமானது. )
ஆகவே நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு UGC கையேட்டை ஒரு தரம் வாசித்து அறிந்து கொள்ளுங்கள். அதுபோல இப்போதே பல்கலைக்கழகங்களின் வெப்சைட்டுகளுக்கு போய், உங்களுக்கு பொருத்தமான என்ன கற்கை நெறிகள் இருக்கின்றன என்பதை ஒரு முறை பார்த்து விடுங்கள்.
இவற்றிக்கு மேலதிகமாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும் The Open University of Sri Lanka பொறியியல், சட்டம் உட்பட பல்வேறு கற்கை நெறிகள் உண்டு. அதுபோல மருத்துவம், என்ஜினியரிங், IT , கொம்புயுடர் சயன்ஸ், கட்டிடக்கலை, சட்டம் உள்ளிட்ட பல்வேறு நவீன கற்கை நெறிகளை General Sir John Kotelawala Defence University ( KDU) ல் கற்க முடியும். இராணுவம், கடற்படை, வான்படை அல்லது பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதன் மூலமாக முற்றிலும் இலவசமாகவோ, அல்லது காசு செலுத்தி முற்றிலும் ப்ரைவேட்டாகவவோ ( இராணுவத்தில் இணைய தேவை இல்லை) மேற்படி கற்கைநெறிகளை இங்கே பயில முடியும். கீழே கொமண்டில் விளக்கம்( flyer )உண்டு.
Credit-DR Arshath AHAMED