Al - Jaamiathus Siddeeqiyya Muslim Ladies Arabic college - Kattankudy

Al - Jaamiathus Siddeeqiyya Muslim Ladies Arabic college - Kattankudy Islamic Studies

அகில இலங்கை அஹதிய்யா மத்திய சம்மேளனத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் அஹதிய்யா இடைநிலை  தேசிய சான்றிதழ் பரீட்சையில் அக...
30/07/2026

அகில இலங்கை அஹதிய்யா மத்திய சம்மேளனத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் அஹதிய்யா இடைநிலை தேசிய சான்றிதழ் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் எமது ஜாமிஆ சார்பாக பரிட்சையில் தோற்றி முதல் 10 இடங்களுக்குள் ( Top 10) தெரிவு செய்யப்பட்ட அல் ஜாமிஅதுஸ் ஸித்தீகிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் இரு மாணவிகளான MI. Fasnath Ilfa மற்றும் MAR. Hima ஆகியோர் அல்லாஹ்வின் உதவியால் 25 /07 / 2026 சனிக்கிழமை கொழும்பு Elphinston மண்டபத்தில் கௌரவிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு எமது ஜாமிஆ சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி செயலக PS/CSL/Circular/8/2026 இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக "ஊழலற்ற மனிதநேயமும் ந...
29/07/2026

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி செயலக PS/CSL/Circular/8/2026 இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக "ஊழலற்ற மனிதநேயமும் நற்பண்பாடுமிக்க சிறந்ததொரு சமூகத்தை உருவாக்குதல்" எனும் தலைப்பில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் எமது ஜாமிஆவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் இன்றைய தினம் 29.07.2026 காத்தான்குடி அல் ஜாமிஅதுஸ் ஸித்தீகிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியில் உஸ்தாத்மார்கள் மற்றும் மாணவிகளை உள்ளடக்கிய விசேட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜாமிஆவின் கெளரவ அதிபர் Ash Sheikh MI. Abdul Gafoor (Madani) BA, Dip.in.Edu - Rtd Isa அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜாமிஆவின் விரிவுரையாளர்களான Ash Sheikh Al Hafil MSM. Husam Falahi, BA (Hons), Ash Sheikh Al Hafil Mufthi SA. Inamul Hassan (Rashadi) BA மற்றும் Ash Sheikh Ihsan A Raheem (Al Hashimi) BS.c.in.psychology, Dip.in.Teacher Training & Dip.in.IB&F ஆகியோரினால் விசேட சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டதுடன் இறுதியாக இந்நிகழ்வில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளில் இருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையளித்த மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அஹதிய்யா   பரீட்சையில்  சித்தீகிய்யா  மாணவிகள் சாதனை.நடைபெற்று முடிந்த 2025 ம் ஆண்டுக்கான  அஹதிய்யா இடைநிலை சான்றிதழ்  ப...
11/05/2026

அஹதிய்யா பரீட்சையில் சித்தீகிய்யா மாணவிகள் சாதனை.

நடைபெற்று முடிந்த 2025 ம் ஆண்டுக்கான அஹதிய்யா இடைநிலை சான்றிதழ் பரீட்சையில் காத்தான்குடி சித்தீகிய்யா முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி மாணவிகள் அனைவரும் 100% சித்தியைப் பெற்றுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

இவர்களில் 70% ஆனோர் அனைத்துப் பாடங்களிலும் A சித்தியைப் பெற்றுள்ளனர் என்பது் குறிப்பிடத்தக்கதாகும். இம்மாணவிகளுக்கு கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் மத்ரஸா சார்பாக நன்றி கூறுகின்றோம்.

அதிபர், மற்றும் நிர்வாகம்
அல்ஜாமிஅதுஸ் சித்தீகிய்யா முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி,
காத்தான்குடி

22/03/2026
ரமழான் விடுமுறையை முன்னிட்டு இன்று 17.02.2026 செவ்வாய்க் கிழமை எமது ஜாமிஆவில்  மாணவர் மன்ற நிகழ்வுகள் கௌரவ அதிபர் அவர்கள...
17/02/2026

ரமழான் விடுமுறையை முன்னிட்டு இன்று 17.02.2026 செவ்வாய்க் கிழமை எமது ஜாமிஆவில் மாணவர் மன்ற நிகழ்வுகள் கௌரவ அதிபர் அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்டன.

உரையாடல், தமிழ் பேச்சு, அரபு பேச்சு, கஸீதா மற்றும் இன்னும் பல நிகழ்வுகள் மேடையை அலங்கரித்ததுடன் நடாத்தப்பட்ட நிகழ்ச்சிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டு விடையளித்த மாணவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்பட்டன.

அத்துடன் முக்கியமான நிகழ்வுகளாக

ஜாமிஆவின் விரிவுரையாளர்களில் ஒருவரான AH. அஸ்பர் (பலாஹி BA) அவர்களினால் எழுதப்பட்ட " நோன்பு ஒரு பிரயோக வழிகாட்டல்" எனும் நூல் அறிமுகம் நிகழ்த்தப்பட்டதுடன் விரிவுரையாளர்கள் அனைவருக்கும் அதன் பிரதிகள் வழங்கப்பட்டன.

மேலும் இவ்வருடம் ஷரீஆப் பிரிவு மற்றும் குர்ஆன் மனனப் பிரிவு (ஹிப்ழ்) களுக்கு புதிதாக இணைந்த மாணவர்களுக்கு அல்குர்ஆன் பிரதிகள் பரிசாக வழங்கப்பட்டன.

அத்துடன் நிகழ்வின் இறுதிக் கட்டமாக இலங்கைக்கான சஊதி அரேபிய தூதரகம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியவை இணைந்து நடாத்திய, அகில இலங்கை ரீதியிலான அல்குர்ஆன் மனனப் போட்டியில் மாகாண மட்டத்தில் எமது ஜாமிஆ சார்பில் கலந்து கொண்டு
வெற்றி பெற்ற மாணவர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தகவல்
அதிபர்
அல் ஜாமிஅதுஸ் ஸித்தீகிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி - காத்தான்குடி.

17/02/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ

அல்லாஹ்வின் பேரருளால் 50 வருட காலத்தை எட்டிய நிலையில் பெண்களின் மார்க்க கல்வியில் மிகப்பெரும் சேவையாற்றி வரும் காத்தான்குடி அல் ஜாமிஅதுஸ் ஸித்தீகிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் முக்கியமான அடைவுகள் மற்றும் நிகழ்வுகளை பதிவேற்றம் செய்வதற்காக உத்தியோகபூர்ப Facebook வலைத்தளம் ஜாமிஆவின் அதிபரின் மேற்பார்வையின் கீழ் 17.02.2026 செவ்வாய்க் கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனவே அனைவரும் இப்பாரிய பணிக்காக பிரார்த்திப்பதுடன் இப்பக்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

இப்படிக்கு
அதிபர்.

Address

Kattankudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al - Jaamiathus Siddeeqiyya Muslim Ladies Arabic college - Kattankudy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share