அஸ்ஸலாமு அறைக்கும் வரஹ்...
அன்பார்ந்த சமூக நல உறவுகளே! நண்பர்களே!
உமரின் உதவும்கரங்கள் வேலைத்திட்டத்தில்
இலவச பாலர்கல்வி செயற்பாடுகளுக்கு சதக்கத்துஜாரியா உதவிகளை தாராளமாக வழகுங்கள் மற்றும் இதில் பதிவிடப்பட்டுள்ள OCC KKY ன் கடிதத்தினை
உங்களது உறவுகள் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு அல்லாஹ்விடம் நன்மைகளை பெற்று கொள்ளுங்கள்
நன்றி
நிர்வாகம்
Omer community center
Kattankudy
Omer Communnity Centre Kattankudy
சமுகத்திற்கு மனிதநேய சமூகப்பணி, கல்வி, சுகாதாரம், வாழ்வாதார மேம்பாட்டிற்கான பங்களிப்பு
27/02/2026
01/02/2026
உமரின் இலவச பாலர்கல்விதிட்ட ஆரம்ப நிகழ்வு -2026
அல் -உமர் பாலர் பாடசாலையின் கல்வி செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு-30.01.2026
உமரின் உதவும் கரங்கள் இலவச பாலர்கல்வி திட்ட ஆரம்ப நிகழ்வும்
புதிய பாலர் வரவேற்பு இலவச சீருடை மற்றும் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கிவைக்கும் வைபவம் -30.01.2026
06/01/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பார்ந்த சமூக உறவுகளே!
நல் உள்ளங்கள் நண்பர்களே!
2000.09.30 தொடக்கம் பல்வேறுபட்ட மனித நேய சமூக பணிகளை முன்னேடுத்து வரும் காத்தான்குடி உமர் சன சமூக நிலையத்தின் அனுசரணையுடன் 10.01.2003 தொடக்கம்
அல்- உமர் பாலர் பாடசாலை அடிப்படை வசதி குறைந்த நிலையில் சில சிரங்களுடன் இயங்கி வருகின்றது
தற்போதுபாடசாலையின் கூரை சேதம் அடைந்துள்ளதால் எதிர்வரும் மழைக்காலங்கள் சவால் மிக்கதாக அமையும்
இப் பாடசாலையில் கஷ்ட நிலையிலுள்ள பெற்றோர்களின் பிள்ளைகளே கல்விகற்கின்றனர்
2026 ஆண்டுக்கான கல்வி செயற்பாடுகள் 05.01.2026ல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
2026 இந்ந ஆண்டு பாலர்கல்வியை முற்றிலும் இலவசமாக வழங்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது பாடசாலையில் இரண்டு ஆசிரியைகளும் 29 பாலங்களும் உள்ளனர்
பாடசாலையின் அபிவிருத்திக்கும்
பாலர்கல்வியை சிறப்பாக வழங்குவதற்கும் மற்றும் பரிபாலனம் முகாமைத்துவம் என்பவற்றுக்கு
நல் உள்ளங் கொண்டவர்களின் பங்களிப்பு உதவிகள் என்பன மிக அவசியமாகின்றது
கல்விக்காக உதவி செய்வது நிரந்தர தர்மத்தில் சேறும் என்பது இஸ்லாமிய கோட்பாடாகும் இது மரணதின் பின்னரும் நன்மைகளை அதிகரிக்கும் இன்மை
மறுமையின் வெற்றியை கருத்திற்கொண்டு உங்களது உதவி ஒத்துழைப்புகளை எமது நிர்வாகத்தினை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை கேட்டறிந்து
நிர்வாகத்தின் வங்கி கணக்கிற்கு
வழங்குமாறு பணிவன்புடன் கேட்கின்றோம்
நன்றி
நிர்வாகம்
உமர் சன சமூக நிலையம்
காத்தான்குடி
0777270105,0750745085
04/10/2025
காத்தான்குடி உமர் சன சமூக நிலையத்தின் மனித நேயப்பணி மற்றும் சமூகப்பணிகளின் தொடரில் 25 வருடகால நிறைவை அடுத்து அதன் தொடர் ஏற்பாட்டில்!
இலவச பாலர் கல்வி திட்டம்- 2026ல் ஆரம்பம்.
புதிய காத்தான்குடி-06
167/B கிரம சேவகர் பிரிவில் 23 வருடகாலமாக தகைமையும் அனுபவமும் உடைய ஆசிரியைகளை கொண்டு அல்-உமர் பாலர் பாடசாலையில் புதிய பாடத்திட்டத்திற்கமைய பாலர் கல்வி பயிற்றுவிக்கப் படுகின்றது.
இன்ஷா அல்லாஹ் 2026 புதிய ஆண்டில் மேலும் சில மாற்றங்களுடன் கட்டணங்கள் இன்றி இலவசமாக LKG UKG வகுப்புகள் ஆரம்பிக்க படவுள்ளன என்பதினை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
2026 கல்வி ஆண்டில் பாலர்களை பாடசாலையில் இணைத்து கொள்ள விரும்பும் பெற்றோர்கள் பாடசாலை நேரத்தில் விண்ணப்ப படிவத்தினை பெற்று பூரணப்படுத்தி
15.10.2025 திகதிற்கு முன்னர் தலைமை ஆசிரியையிடம்
சமர்ப்பிக்குமாறு
அன்புன் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி
தலைமை ஆசிரியை 0771025233
நிர்வாகம்,
தலைவர் +94 77 727 0105
பொருளாளர் +94 77 238 2099
செயலாளர் +94 77 538 3240
உப தலைவர் 0770490057
உப செயலாளர்
0779360959
+94 75 993 3552
உமர் சன சமூக நிலையம்
புதிய காத்தான்குடி -06
அல்-உமர் பாலர் பாடசாலை அபிவிருத்தி சங்கம்
புதிய காத்தான்குடி -06
02/10/2025
காத்தான்குடி உமர் சன சமூக நிலையத்தின் ஏற்பாட்டில்
அல்-உமர் பாலர் பாடசாலையின் பாலர்களுக்கான உலக சிறுவர் தின நிகழ்வு உமர் சன சமூக நிலையத்தின் தலைவர் AL.முஹம்மத் இர்ஷாத் jp அவர்களின் தலைமையில் 01.10.2025 அன்று காத்தான்குடி கடற்கரை சிறுவர் பூங்காவில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
பாலர் பாடசாலை ஆசிரியைகளின் நிகழ்ச்சி ஒழுங்கமைப்புடன், சன சமூக நிலையத்தின் உப செயலாளர் ASM. அஸ்ஜத் அவர்களின் விழா ஒழுங்கமைப்புடன் மற்றும் சன சமூக நிலைய நிர்வாகிகளின் பங்குபற்றலுடன் இந்நிகழ்வு இனிதே இடம் பெற்றது.
இந்நிகழ்வில் 167/B கிழக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் AC. கலீல்டீன் EDO , பாலர்களின் தோழன் MHM. முலாபீர் (லக்கி) மற்றும் கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பாலர்களின் பெற்றோர்கள் மற்றும்
பெரியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் சிறுவர்களின் பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இனிப்பு பண்டங்கள் மற்றும் உணவுகள் பரிமாறலின் பின்னர் சிறுவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
30/09/2025
காத்தான்குடி உமர் சன சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் அதன் 25வது நிறைவு ஆண்டில் 23வது வருடாந்த பாலர் விழாவாக ஐக்கிய பாலர் விளையாட்டு விழா-2025 நிகழ்வு 12.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் விளையாட்டு மைதானத்தில் உமர் சன சமூக நிலையத்தின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட சன சமூக நிலையங்களின் சம்மேளன பிரதிச் செயலாளருமான AL.முஹம்மத் இர்ஷாத் JP
தலைமையில் மூன்று பாலர் பாடசாலைகளை ஒன்றினைத்த நிகழ்வாக மிக சிறப்பாக இடம் பெற்றது.
இவ்விழாவில் அல்-உமர் பாலர் பாடசாலை, அப்றா பாலர் பாடசாலை மற்றும் புளுமிங் ப்லவர்ஸ் பாலர் பாடசாலை என்பன பங்கு பற்றின. இந்நிகழ்வின் பிரதம அதியாக காத்தான்குடி பிரதேச செயலாளர் ஜனாபா. நிஹாரா மெளஜுத் (SLAS) அவர்களும்,
கெளரவ அதிகளாக உமர் சன சமூக நிலையத்தின் சட்ட ஆலோசகர் ஜனாப். முஹம்மது சாலி M.முகைதீன் (LLB) அவர்களும், காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர்
ஜனாபா. MS. சில்மியா (SLAS) அவர்களும், ஏறாவூர் உதவி பிதேச செயலாளர் ஜனாப். UM. அஸ்லம் (SLAS) அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட சன சமூக நிலையங்களின் சம்மேளன தலைவர் திரு. சின்னத்துரை கமல் JP அவர்களும் புதியகாத்தான்குடி 167/B GSO ஜனாபா. பாத்திமா மபாஸா அலி அவர்களும், மற்றும் ஊர் முக்கியத்தர்கள்,
நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், கல்விமான்கள், உலமாக்கள், உமர்சனசமூக நிலைய நிர்வாகிகள், பெற்றோர்கள், ஊர்மக்கள் என அதிகமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
30/09/2025
காத்தான்குடி உமர் சன சமூக நிலையத்தின் ஸ்தாபக வரலாறு!
காத்தான்குடி 167B கிழக்கின் பௌதீக அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், சமூக மேம்பாடு தழுவிய அபிவிருத்தி பணிகளின் இலக்குகளை நோக்கி அதற்கான முயற்சிகளை இளைஞர் குழுவாக 1994 தொடக்கம் 2000 ஆண்டு வரை அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இருந்த போதிலும் எமது இலக்குகளை அடைவதில் பல வகையான தடைகள் இடம்பெற்றன. அப்போது எமது பகுதியில் பல சமூகப்பணிகளை முன்னெடுப்பதற்காக ஒரு சமூக அமைப்பின் அவசியம் உணரப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் 30.09.2000 ல் ஒர் நள்ளிரவில், நடுவீதியில் ஒன்றுகூறப்பட்டதன் அடிப்படையில் நீதி, நேர்மை, பாரபட்சம் அற்ற தன்மை, வேகம், விவேகம் ஆகிய தகமைகளை கொண்ட இஸ்லாமிய வரலாற்றின் இரண்டாம் கலீபா உமர் (ரழி) அவர்களின் நாமத்தை பிரதிபலிக்கும் முகமாக உமர் சன சமூக நிலையம் என பெயர் சூட்டப்பட்டு ஒரு சமூக நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் ஆரம்ப தலைவராக ILM. நவாஸ் அவர்களும், செயலாளராக KMM. சக்மி அவர்களும், பொருளாளராக MSM. அஸ்ரப் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து அக்கால கட்டத்தில் பல்வேறு பட்ட மனிதநேய சமூகப்பணிகள் மற்றும் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டது. மற்றும் பிரதேச மக்களினால் பாலர் பாடசாலை ஒன்றின் தேவை கோரப்பட்டதன் அடிப்படையில் 10.01.2003 ல் 43 பாலர்களையும் 02 ஆசிரியர்களையும் கொண்டதாக அல் உமர் பாலர் பாடசாலை என பெயர் சூட்டப்பட்டு கர்பலா வீதியில் உள்ள வாடகை இடமொன்றில் உமர் சன சமூக நிலையத்தின் செயலாளர் AL. முஹம்மத் இர்ஷாத் JP தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக பல்வேறு பட்ட சமூக அபிவிருத்தி மற்றும் மனித நேயப்பணிகள் அரச நிதி, நிறுவன நிதி மற்றும் சன சமூக நிர்வாகிகளின் நிதியினை கொண்டு திட்டமிட்ட அடிப்படையில் மக்கள் நலனுக்காக முன்னெடுக்கப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றுவரை சமூகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
30.09.2025 இன்று 25 வருட நிறைவிற்கான வெள்ளிவிழாவை முன்னிட்டு Omer Community Centre Kattankudy முகநூல் பக்கம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Kattankudi
30100