Shaliheen Learning Centre

Shaliheen Learning Centre SHALIHEEN Learning Centre Started on 1st of January 2018 by Saliheen Masjith Kattankudy

கற்றவற்றை முறையாக மீட்டுக்கொள்ளபரீட்சைகளில் கூடிய பெறுபேறுகளை அடைய மாணவர்களுக்கு கைகொடுக்கும் சிறப்பான இடம்
11/01/2024

கற்றவற்றை முறையாக மீட்டுக்கொள்ள
பரீட்சைகளில் கூடிய பெறுபேறுகளை அடைய மாணவர்களுக்கு கைகொடுக்கும் சிறப்பான இடம்

2ம் தவணைப் பெறுபேறுகளும் மாணவர் முன்னேற்றமும் தொடர்பான ஆசிரியர்-பெற்றார் கலந்துரையாடல் ( நிலையத்தில் நடைபெற்றபோது
23/11/2023

2ம் தவணைப் பெறுபேறுகளும் மாணவர் முன்னேற்றமும் தொடர்பான ஆசிரியர்-பெற்றார் கலந்துரையாடல் ( நிலையத்தில் நடைபெற்றபோது

24/06/2023
காத்தான்குடி மஸ்ஜிதுஸ்ஸாலிஹீன் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு   பள்ளிவாயலினால் நடாத்தப்படடுகின்ற ஸாலிஹீன் சுயகற்றல் நிலையத்...
06/04/2023

காத்தான்குடி மஸ்ஜிதுஸ்ஸாலிஹீன் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

பள்ளிவாயலினால் நடாத்தப்படடுகின்ற ஸாலிஹீன் சுயகற்றல் நிலையத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கான. இப்தார் நிகழ்வு கடந்த 05.04.2023 அன்று பள்ளிவாயலில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மாணவர்கள் , ஆசிரியர்கள்,பள்ளிவாயல் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வின்போது அஷ்ஷெய்க்.MiM. ABBAS NALEEMI அவர்களின் மார்க்க சொற்பொழிவும் இடம்பெற்றது.

24/03/2023

அஸ்ஸலாமு அலைக்கும்

றமழான் காலங்களில் எமது கற்றல் நிலையம் வழமை போன்று மூன்றாம் நோன்பு அன்று அஸர்த் தொழுகையுடன் ஆரம்பித்து இப்தாருக்காக மூடப்படும் என்பதை அனைவருக்கும் நிருவாகம் சார்பாக அறியத்தருகின்றேன்

எனவே அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவும்

நன்றி
அதிபர்
சாலிஹீன்

17/03/2023

5 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது மஸ்ஜிதுஸ் ஸாலிஹீன் கற்றல் நிலையம்
(Shaliheen learning center)

இக்கற்றல் நிலையமானது காத்தான்குடி -4 அரபிக் கலாசாலை வீதியில் மஸ்ஜிதுஸ் ஸாலிஹீன் பள்ளிவாயல் மேல் மாடியில் மிக அமைதியான சூழலில் கடந்த 5 வருட காலமாக அல்லாஹ்வின் உதவியால் சிறப்பாக இயங்கி வருகின்றது

பள்ளிவாயலின் அனுசரனையில் மஹல்லாவில் கல்வி பயிலும் மாணவர்களுக்களுக்காக இக்கற்கை நிலையம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது ஏனைய மஹல்லா மாணவர்களும் இனைத்துக் கொள்ளப் பட்டுள்ளனர்

2018 - 50 மாணவர்கள்
2019 - 60 மாணவர்கள்
2020 - 60 மாணவர்கள்
2021 - 45 மாணவர்கள்
2022 - 45 மாணவர்கள்

மொத்தமாக 260 மாணவர்கள் இங்கு கல்வி கற்றுள்ளதுடன் தற்போது 2023 ல்
33 மாணவர்கள் இங்கு கல்வி பயில்வதுடன் வாரத்தில் ஐந்து நாட்கள் இங்கே கற்பித்தலுடன் மாணவர்களின் சுய கற்றல் இடம்பெறுகின்றது.வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறைவழங்கப்படுவதுடன் மாலை 6.00மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு இரவு 9.30 மணியுடன் நிறைவு பெறகின்றது.

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களினால் இங்கே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. தமிழ், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், வரலாறு போன்ற முக்கிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

மாணவர்களுக்கு மஃரிப் மற்றும் இஷா தொழுகைகள் ஜமாஅத்தாக இடம்பெறுவதுடன் நாளாந்தம் அல்குர்ஆன் ஓதல், பாடங்கள் கற்பித்தல் ,சுயமாக கற்றல், போன்ற விடயங்கள் இங்கு இடம் பெறுகின்றது.

அத்துடன் மாணவர் மன்றம், சுற்றுலா பயணங்கள், மாணவர்களின் ஆளுமை விருத்தி தொடர்பான விடயங்களும் இடம்பெறுகின்றன.

தற்பபோது கற்றல் நிலையதில் புதிய மாணவர் அனுமதி இடம்பெறுகிறது விருப்பமுள்ள பெற்றோர்
வெள்ளி, ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் மாலை 7.00-- 9.00 மணிக்குள் சுய கற்றல் நிலைய அதிபருடன் நேரடியாக தொடர்புகொள்ளவும்

எமது கற்றல் நிலையம் தொடர்பான தகவல்களைப் பார்வையிட எமது page இனை பார்வையிடுங்கள்

https://www.facebook.com/profile.php?id=100090519996574

SHALIHEEN Learning Centre Started on 1st of January 2018 by Saliheen Masjith Kattankudy

Address

Shaliheen Masjith , Arabic College Road
Kattankudi
30100

Telephone

+94772365189

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shaliheen Learning Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category