Model Pre School Kattankudy Urban Council

Model Pre School Kattankudy Urban Council Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Model Pre School Kattankudy Urban Council, Nursery, Culture Hall, Main Street, Kattankudi.

காத்தான்குடி நகர சபையின் கீழ் இயங்கிவரும் முன்மாதிரி பாலர் பாடசாலையில் 2025ஆம் ஆண்டிற்காக play group பிரிவில் சிறார்களை ...
04/08/2025

காத்தான்குடி நகர சபையின் கீழ் இயங்கிவரும் முன்மாதிரி பாலர் பாடசாலையில் 2025ஆம் ஆண்டிற்காக play group பிரிவில் சிறார்களை உள்வாங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (04.08.2025) ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி நகரசபையின் பதில் செயலாளர் திருமதி றினோஸா முப்லிஹ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக எமது நகர முதல்வர் SHM. அஸ்பர் JP UM அவர்கள் கலந்து கொண்டதுடன் நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் சிறார்களின் பெற்றோர்களின் பங்குபற்றளுடன் இடம்பெற்றது.

*ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாட்ட  நிகழ்வு....* நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவூட்டும் வண்ணம் புனித ஹஜ்ஜூப் பெரு...
09/06/2025

*ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வு....*

நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவூட்டும் வண்ணம் புனித ஹஜ்ஜூப் பெருநாள் நிகழ்வானது நகரசபையின் செயலாளர் திருமதி.றிப்கா ஷபீன் அவர்களின் தலைமையில் 09.06.2025 திங்கட்கிழமை இன்று முன்மாதிரி பாலர் பாடசாலையும் பொது நூலகமும் இணைந்து காத்தான்குடி பொது நூலக சிறுவர் பகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகம் மற்றும் புனித கஃபா கட்டப்பட்ட வரலாறு தொடர்பான காணொளிகள் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டதோடு மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நகரசபையின் நிர்வாக உத்தியோகத்தர், நூலகர் மற்றும் நகரசபை உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது .

07/05/2025

புதிய மாணவர் அனுமதி
காத்தான்குடி நகரசபை முன்மாதிரி பாலர் பாடசாலைக்கு புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 01.02.2022 தொடக்கம் 31.01.2023 வரை பிறந்தவர்கள் 18.05.2025 ஆம் திகதி வரை நகரசபையில் விண்ணப்ப படிவத்தினை பெற்று பூரணப்படுத்த முடியும்.

செயலாளர்,
நகரசபை
காத்தான்குடி

*நோன்பு பெருநாளினை வரவேற்போம்*வருகின்ற ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளினை பிரயோசனமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் கொண்டாடுமுகமாக “...
27/03/2025

*நோன்பு பெருநாளினை வரவேற்போம்*

வருகின்ற ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளினை பிரயோசனமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் கொண்டாடுமுகமாக “நோன்பு பெருநாளினை வரவேற்போம்” எனும் தொனிப்பொருளில் எமது மாணவர்களுக்கான நிகழ்வு ஒன்று காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தில் இன்று 27.03.2025 ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாணவர்களுக்கான பயிற்சிக் கையேடு ஒன்று வழங்கப்பட்டதோடு பெருநாள் தினத்தில் என்ன ஒழுங்குகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.

காத்தான்குடி நகரசபையின் முன்மாதிரி பாலர் பாடசாலை பாலர்களுக்கு இலங்கையில் வாழும் பல்லினத்தவர்களையும் அவர்களின் பண்டிகைகளை...
05/11/2024

காத்தான்குடி நகரசபையின் முன்மாதிரி பாலர் பாடசாலை பாலர்களுக்கு இலங்கையில் வாழும் பல்லினத்தவர்களையும் அவர்களின் பண்டிகைகளையும் அறிமுகம் செய்து வைக்கும் நோக்கில் தீபாவளி பண்டிகை தொடர்பான அறிமுக நிகழ்வு 04.11.2024 ஆம் திகதி இடம் பெற்றது.

*சர்வதேச ஆசிரியர் தினம் - 2024*சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று 07.10.2024 ஆம் திகதி எமது முன்மாதிரி பாலர் பாடச...
07/10/2024

*சர்வதேச ஆசிரியர் தினம் - 2024*

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று 07.10.2024 ஆம் திகதி எமது முன்மாதிரி பாலர் பாடசாலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.

இதில் ஆசிரியர்கள் என்பவர்கள் யார், அவர்களின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் மகத்தான பணிகள் தொடர்பில் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

வருடாந்த சுற்றுலா
01/10/2024

வருடாந்த சுற்றுலா

 #மீலாதுன்நபிஇன்று 13.09.2024 ஆம் திகதி எமது முன்மாதிரி பாலர் பாடசாலையில் மீலாத் விழாவினை முன்னிறுத்தி மாணவச் சிறார்களுக...
13/09/2024

#மீலாதுன்நபி

இன்று 13.09.2024 ஆம் திகதி எமது முன்மாதிரி பாலர் பாடசாலையில் மீலாத் விழாவினை முன்னிறுத்தி மாணவச் சிறார்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அறிமுகம் செய்யப்பட்டதுடன் அவர்களின் வரலாறு மற்றும் அவர்கள் மீது ஸலவாத் சொல்லுவதன் அவசியம் பற்றியும் சிறார்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் ஸலவாத் உள்ளடங்கிய கையேடு ஒன்று வழங்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு இனிப்புப் பண்டமும் வழங்கப்பட்டது

2024 உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பாலர்களின் சிரமதான செயற்பாடு 🥰
05/06/2024

2024 உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பாலர்களின் சிரமதான செயற்பாடு 🥰

காத்தான்குடி நகர சபையினால் நாடாத்தப்படும் முன்மாதிரி பாலர் பாடசாலையின் Playgroup பிரிவில் சிறார்களை இணைத்துக் கொள்வதற்கா...
06/05/2024

காத்தான்குடி நகர சபையினால் நாடாத்தப்படும் முன்மாதிரி பாலர் பாடசாலையின் Playgroup பிரிவில் சிறார்களை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இப்பாடசாலையில் 2021.02.01 முதல் 2022.01.31 வரை பிறந்த பிள்ளைகள் தற்போது இணைக்கப்படவுள்ளனர்.

விண்ணப்ப படிவங்களை நகர சபை அலுவலக வரவேற்புப் பகுதியில் பெற்று பூர்த்தி செய்து எதிர்வரும் 16.05.2024 இற்கு முன்னர் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

M.R. F. றிப்கா
செயலாளர்
நகர சபை
காத்தான்குடி
2023.05.06

எமது நகர சபையால் நடாத்தப்படும் முன்மாதிரி பாலர் பாடசாலையின் playgroup பிரிவில் சிறார்களை இணைப்பதற்கான நேர்முகத் தேர்வு ந...
13/12/2023

எமது நகர சபையால் நடாத்தப்படும் முன்மாதிரி பாலர் பாடசாலையின் playgroup பிரிவில் சிறார்களை இணைப்பதற்கான நேர்முகத் தேர்வு நேற்றும் இன்றும் இடம்பெற்றது.

Address

Culture Hall, Main Street
Kattankudi
30100

Opening Hours

Monday 08:00 - 12:30
Tuesday 08:00 - 12:30
Wednesday 08:00 - 12:30
Thursday 08:00 - 12:30
Friday 08:00 - 12:30

Telephone

+94654929193

Website

Alerts

Be the first to know and let us send you an email when Model Pre School Kattankudy Urban Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category