18/06/2026
காத்தான்குடி மத்திய கல்லூரியில் இஸ்லாமிய புது வருடம் முஹர்ரம் .
ஹிஜ்ரி 1448 ஆம் ஆண்டுக்கான இஸ்லாமிய புது வருடம் முஹர்ரம் நினைவு கூறும் நிகழ்வு காத்தான்குடி மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் 17.06.2026 புதன்கிழமை இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வானது கல்லூரியின் அதிபர் ஜனாப் A.L Sabry - SLPS அவர்களுடைய தலைமையிலும் கல்லூரியின் பிரதி அதிபர்களான ஐனாப் MNM. Fowsan - SLPS மற்றும் ஐனாப் M.A Nawsath ஆகியோரினது பங்குபற்றுதலுடனும், தரம் 8,9 பகுதித்தலைவி Mrs. H.Mubeen அவர்களது பூரண வழிகாட்டுதலின் கீழ் கல்லூரியின் இஸ்லாம் பாட ஆசிரியர்களது நிகழ்வு ஒழுங்கமைப்புடனும் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்வில் கல்லூரியின் பகுதி தலைவர்கள் முகாமைத்துவ குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டதோடு இந் நிகழ்வில் விசேட சொற்பொழிவாற்ற அஷ்ஷெய்க் . ARM. Azhar Naleemi அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மாணவர்களது பல்வேறு கலை நிகழ்வுகளுடன் நிகழ்வு இடம் பெற்றது.
KCC MEDIA UNIT
12/06/2026
📢 காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத் தேர்தல் -2026
எமது கல்லூரியின் மாணவர் தலைமைத்துவத்தையும் ஜனநாயகப் பண்புகளையும் வலுப்படுத்தும் இந்த தேர்தல் வெற்றிகரமாக நடைபெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
🗳️ பொறுப்புடன் வாக்களிப்போம்.
🤝 நல்ல தலைவர்களை தெரிவு செய்வோம்.
24/05/2026
காத்தான்குடி மத்திய கல்லூரி மாகாண மட்டத்திற்கு தெரிவு...
நடைபெற்று முடிந்த மட்டக்களப்பு மத்தி வலய மட்ட விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றிய காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் குழு மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளில் வெற்றீயீட்டி மாகாண மட்ட போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.
1️⃣குழு போட்டி
💠U16 பூப்பந்து (Badminton)
CHAMPION 🏆
💠U20 பூப்பந்து தனி (Badminton)
CHAMPION & RUNNER UP 🏆
💠U20 உதைபந்து (Football)
Runner Up 🏆
2️⃣ மெய்வல்லுனர்
16 பேர்
முதலிடம் -02 பேர்
இரண்டாம் இடம் -07 பேர்
மூன்றாம் இடம் -07 பேர்
போட்டிகளில் பங்கு பற்றி வெற்றியீட்டிய இம்மாணவர்களுக்கும் பயிற்றுவித்த பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் அனைவரும் மனமார்ந்த நன்றிகளை பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதோடு மாகாண மட்ட போட்டிகளிலும் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
13/05/2026
🏸 காத்தான்குடி மத்திய கல்லூரியின் மேலும் ஒரு விளையாட்டு சாதனை! 🏸
பூப்பந்து (Badminton) போட்டிகளில் எமது மாணவர்கள் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி இன்று வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.
🏸 U20 Individual Singles
🥇Champion – R. Isfak Ahamed
🥈 Runner Up – BMA. Mumthas
🥇 🏸 U16
Champion
எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த அனைத்து மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! 👏🎉
இவர்களின் எதிர்கால விளையாட்டு பயணமும் மேலும் வெற்றிகளால் நிரம்பியதாக அமைய வாழ்த்துகின்றோம்.
12/05/2026
🏆 பெருமையின் தருணம் 🏆
காத்தான்குடி மத்திய கல்லூரியின் மாணவர் சிப்பாய் படையணி (CADET) இன்றைய தினம் நடைபெற்ற 38வது படைபிரிவின் Company தெரிவு முகாமில் கலந்துகொண்டு சிறப்பான திறமையையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தி, அங்கு பங்கேற்ற 16 பாடசாலைகளுக்குள் முதலாம் இடத்தைப் பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அடுத்த கட்ட தெரிவுக்கு தேர்வாகியுள்ளனர்.
இவ்வெற்றியை பெற்றுத் தந்த அனைத்து மாணவர்களுக்கும், வழிகாட்டிய ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! 👏🎖️
“ஒழுக்கம் • அர்ப்பணிப்பு • வெற்றி”
07/05/2026
சிரமதான நிகழ்வு
எமது காத்தான்குடி மத்திய கல்லூரியின் மாணவர் விடுதி மற்றும் விடுதியை சூழவுள்ள பகுதிகளை துப்பரவு செய்வதற்கான சிரமதான நிகழ்வொன்று பின்வரும் ஒழுங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே இச்சிரமதான நிகழ்விற்காக பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என அனைவர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்பாய் அழைக்கின்றோம் .
காலம் : 08.05.2026 (வெள்ளிக்கிழமை)
நேரம் : காலை 7.00 மணி
அதிபர்
காத்தான்குடி மத்திய கல்லூரி.
07.05.2026
29/04/2026
தமிழ்மொழித்தினம் - 2026
காத்தான்குடி கோட்ட மட்ட போட்டிகளில் நமது காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு கிடைக்க பெற்றுள்ள அடைவுகள்
எழுத்தாக்கப்போட்டிகள்
✍️பிரிவு 3
இலக்கணப்போட்டி- 3ம் இடம்
தமிழறிவு வினாவிடை -குழு- 1ம் இடம்
✍️பிரிவு 4
கட்டுரை வரைதல் - 2ம் இடம்
சிறுகதையாக்கம் - 2ம் இடம்
இலக்கணப்போட்டி- 2ம் இடம்
குறுநாடக ஆக்கம் - 2ம் இடம்
✍️வாய்மொழிப் போட்டிகள்
நாட்டார் பாடல் - 1ம் இடம்
வில்லுப்பாட்டு - 1ம் இடம்
விவாதம் - 3ம் இடம்
✍️தமிழறிவு வினாவிடை - பிரிவு 4 -
2ம் இடம்
✍️தனிநடிப்பு - பிரிவு 4 -
1ம் இடம்
✍️அறிவிப்பாளர் - பிரிவு 4 -
3ம் இடம்