23/01/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு
பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட காணி சம்பந்தமான அறிவித்தல்
தெஹியங்க அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க,
அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் ஸ்தாபகர் அல்ஹாஜ் உமர் லெப்பை ஹாஜியார் அவர்களது புதல்வி
மர்ஹூமா சித்தி ஸனுபா(ஆசிரியை) அவர்களது பிள்ளைகள்,
15.01.2026 (வியாழக்கிழமை) அன்று எமது பாடசாலைக்கு வருகை தந்து,
🏫 பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள தமது பெறுமதிமிக்க காணியை
அண்மையில் மறைந்த தமது தாயான மர்ஹூமா சித்தி ஸனுபா (ஆசிரியை) அவர்களது பெயரில்,
அல்லாஹ்வுக்காக எமது பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள் என்பதனை
ஊர் ஜமாஅத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
📌 இந்நிகழ்வில், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்
பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் உட்பட உறுப்பினர்கள்,
மற்றும் தெஹியங்க,குருகம பகுதிகளுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
👉 இந்நிகழ்வின் போது, மர்ஹூமா சித்தி ஸனுபா ஆசிரியை அவர்களது பிள்ளைகள்,
பாடசாலைக்காக தமது காணி அன்பளிப்பை உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன்,
தமது தாயின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக
அனைவரும் தங்களது துஆக்களில் தமது தாயை இணைத்துக்கொள்ளுமாறு
அன்புடன் வேண்டுகோள் விடுத்தனர் என்பதையும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
🌱 இவ்வுயரிய சதகா ஜாரியா,
எமது பாடசாலையின் உட்கட்டமைப்பு வளர்ச்சி
கல்வி வசதிகளின் மேம்பாடு மற்றும்
மாணவர்களின் கல்வி நலன் உயர்விற்கு
நீடித்த பயனை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம்(SDEC), மாணவர்கள், பெற்றோர்கள்
மற்றும் ஊர் மக்கள் ஆகியோரின் சார்பில்,
எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
🤲 வல்ல அல்லாஹ்,
மர்ஹூமா சித்தி ஸனுபா ஆசிரியை அவர்களது அனைத்துப் பாவங்களையும் மன்னித்து,
மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சிறப்பாக்கி,
மேலான ஜன்னத்துல் ஃபிர்தௌஸை நிரந்தரமாக வழங்குவானாக.
இந்த காணியை அன்பளிப்புச் செய்த அவர்களது பிள்ளைகள் உட்பட
நம் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. ஆமீன்.
—
SDEC
School Development Executive Committee