08/03/2026
அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் 2026 ஆம் ஆண்டு கம்பன் விழாவுக்கான இலக்கியப் போட்டிகள்
• அமரர் துரை விஸ்வநாதன் ஞாபகார்த்த பேச்சுப் போட்டி.
• அமரர் பொன் பாலசுந்தரம் ஞாபகார்த்த கவிதைப் போட்டி.
• அமரர் என். கருணையானந்தன் ஞாபகார்த்த திருக்குறள் மனனப் போட்டி.
• இஸ்லாமிய இலக்கியப் பேச்சுப்போட்டி (அனுசரணை இலக்கியப்புரவலர் ஹாஷிம்உமர் அவர்கள்)
அகில இலங்கைக் கம்பன்கழகம் ஆண்டுதோறும் கொழும்பில் நடாத்திவரும் கம்பன் விழாவிற்கான மேற்படி போட்டிகள் விரைவில் நடைபெறவுள்ளன.
சென்ற ஆண்டுக்கான கம்பன் விழாவினை, நடாத்த முடியாமற்போனதால், சென்ற ஆண்டு போட்டிகளுக்கென விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்களும் இவ் ஆண்டுப் போட்டியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.
புதிதாக இவ்வாண்டுப் போட்டிகளுக்கென விண்ணப்பிப்போர் தமது விண்ணப்பங்களை கீழ் கண்டவகையில் தயாரித்து தரப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
போட்டிக்கு விண்ணப்பிக்கும் விபரங்கள்
போட்டியாளர்கள் சுயமாகத் தயாரிக்கப் பெற்ற விண்ணப்பப் படிவத்தில் தமது முழுப்பெயர், வயது, பிறந்ததிகதி, முகவரி, தொலைபேசி இலக்கம், மாணவராயின் பாடசாலையின் பெயர், ஆகியவற்றைக் குறிப்பதோடு தாம் கலந்து கொள்ளவுள்ள போட்டி விபரங்களையும் குறிப்பிட்டு, செயலாளர், கொழும்புக் கம்பன் கழகம், இல. 12, இராமகிருஷ்ண தோட்டம், கொழும்பு - 6 (Secretary, Colombo Kamban Kazhakam, 12, Ramakrishna Garden, Colombo - 06.) எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
விரும்பினால் ஒருவரே ஒன்றிற்கு மேற்பட்ட போட்டிகளிலும் கலந்துகொள்ளலாம். அங்ஙனம் கலந்து கொள்வதாயின் ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனி விண்ணப்பங்கள் அனுப்பி வைத்தல் வேண்டும்.
கடித உறையின் மேற்பக்க இடதுபுறத்தில், போட்டியாளர் விண்ணப்பிக்கும் போட்டி விபரத்தை எழுதி, படிவங்களை 2026 மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும். போட்டி நடைபெறும் திகதி போட்டியாளர்களுக்குத் தனித்தனியாகவும் ஊடகங்கள் மூலமும் அறிவிக்கப்படும்.
பாடசாலை மாணவர்களது விண்ணப்பங்களை தனித்தோ, தமிழ் மன்றங்களின் ஊடாகத் தொகுத்தோ அதிபரின் உறுதிப்படுத்தலுடன் அனுப்பி வைக்கலாம்.
ஏற்கனவே இப்போட்டிகளில் கலந்து தங்கப்பதக்கப் பரிசில்களைப் பெற்றோர் தவிர்ந்த, மற்றையோர் மேற்படி போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
போட்டிகளின் விபரங்கள்
• அமரர் துரை விஸ்வநாதன் ஞாபகார்த்த பேச்சுப் போட்டி
மேற்படி பேச்சுப்போட்டி, 02 பிரிவுகளாக நடைபெறுவுள்ளது. மத்திய பிரிவுப் போட்டிகளில் 15 - 17 வயதுக்குட்பட்ட போட்டியாளர்களும், மேற்பிரிவு போட்டிகளில் 18 - 30 வயதிற்குட்பட்ட போட்டியாளர்களும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்து கொள்வோர் உடன் தரப்படும் தலைப்புகளில் தம் பேச்சாற்றலை வெளிப்படுத்தவேண்டும்.
தலைப்புக்கள் இலக்கியம், கலை, வாழ்வியல் தொடர்பில் அமைந்திருக்கும்.
• அமரர் பொன் பாலசுந்தரம் ஞாபகார்த்த கவிதைப் போட்டி
மேற்படி கவிதைப்போட்டியில் 14 - 35 வயதிற்குட்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்ளலாம். இப்போட்டியில் பங்குபற்ற விரும்புவோர், “வித்தகக் கம்பனின் சொற்திறம்”, “யாரே முடியக் கண்டார்?”, “மீண்டும் தொடங்கும் மிடுக்கு” எனும் தலைப்புக்கள் ஒன்றில் புத்தாக்கக்கவிதை ஒன்றை ஆக்கி, மேலே தரப்பட்டுள்ள கழகத்தின் முகவரிக்கு 10.03.2026க்கு முன்பாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
எழுதப்படும் கவிதை எவ்வடிவத்திலும் அமையலாம். தரமானதாகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் பத்துக் கவிதைகளை எழுதியவர்கள், இறுதிச் சுற்றுப்போட்டிக்காக நேரே அழைக்கப்படுவார்கள்.
• அமரர் என். கருணையானந்தன் ஞாபகார்த்த திருக்குறள் மனனப் போட்டி
மேற்படி போட்டி, ஒரே பிரிவாக மட்டும் நடைபெறும். இப்போட்டியில் தரம் 6 முதல் 9 வரையான வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்வோர் திருக்குறள் பொருட்பாலின் “அரசியலில்” உள்ள “இறைமாட்சி” முதல் “வலியறிதல்” வரையிலான பத்து அதிகாரங்களை (100 குறள்கள்) மனனம் செய்வதோடு அக்குறள்களுக்கான பொருளறிவையும் பெற்றிருத்தல் வேண்டும்.
• இஸ்லாமிய இலக்கியப் போட்டி (அனுசரணை இலக்கியப்புரவலர் ஹாஷிம்உமர் அவர்கள்)
“இஸ்லாமிய தமிழிலக்கியப் பேச்சுப் போட்டியில்” பாடசாலை மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். இப்போட்டி ஒரே பிரிவாக மட்டுமே இடம்பெறும். இப்போட்டியில் கலந்து கொள்வோர், கீழே வழங்கப்பட்டுள்ள தலைப்புக்கள் ஏதேனும் ஒன்றில் தம் பேச்சாற்றலை வெளிப்படுத்தவேண்டும்.
1. உமறுப்புலவரின் கவித்துவம்.
2. ம. மு. உவைசின் தமிழ்ப்பணி.
3. “கவிக்கோ” அப்துல் ரகுமானின் சிந்தனைகள்.
4. இஸ்லாமியம் காட்டும் வாழ்க்கைநெறி.
போட்டி முடிவுகள் பற்றிய விபரங்கள்
போட்டிகளில் நடுவர் குழுவினரின் தீர்ப்பே இறுதியானதாகும். நடுவர் குழுவினால் தெரிவு செய்யப்படும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கும் நடைபெறவுள்ள கம்பன் விழாவில் தங்க, வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும், சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கப்படும்.
போட்டிகளில் அதிகூடிய இயல்பாளுமையை வெளிப்படுத்தும் போட்டியாளர்கள் கம்பன் விழா நிகழ்ச்சிகளில் இணைத்துக் கொள்ளப்படுவர் எனவும் கொழும்புக் கம்பன் கழகம் அறிவித்துள்ளது.
05/10/2024
தமிழ் மொழியின் தொன்மையை அடையாளப்படுத்திய சர்வதேச பத்திரிகை
சுவிட்சர்லாந்தில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை ஒன்றில் உலகின் மிக பழமைவாய்ந்த மொழிகளின் பட்டியலில் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த பத்திரிகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள உலக வரைபடத்தில் இலங்கையை மையப்படுத்தியே தமிழ் மொழி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள வியாபார நிறுவனம் ஒன்று வாராந்தம் வெளியிடும் Coopzeitung என்ற இந்த வார பத்திரிகையில் 95ஆம் பக்கத்தில் வெளிவந்த பதிவிலேயே இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழமையான மொழிகள் குறித்த பத்திரிகையில், வாராந்தம் அந்த பகுதியில் வாசகர்களால் கேள்வி கேட்கப்படும் நிலையில் அவற்றிற்கு பத்திரிகை ஆசிரியர் பதில் அளிப்பார்.
இதற்கமைய, இந்த வாரம் உலகத்தில் பழமையான மொழி எது என்னும் கேள்வி ஒரு வாசகரால் எழுப்பப்பட்டுள்ளது.
அந்த கேள்விக்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில், உலகில் மிகவும் பழமையான, இன்றும் பேசப்படுகின்ற மொழி என்று முதலாவதாக தமிழ் மொழி குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், தமிழ், சீனம், அரபு, பேர்சி மற்றும் அரமேயம் ஆகிய மொழிகளை மிகவும் பழமையான மொழிகள் என்று அந்த பத்திரிகையில் வரிசைபடுத்தியுள்ளார்கள்.
உலக வரைபடம் அதேவேளை, இந்த மொழிகளை உலக வரைபடத்தில் அடையாளபடுத்துகையில், தமிழ் பேசப்படும் பகுதி என நேரடியாக இலங்கையே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி, இந்த பத்திரிகையின் பதிவில் கடைசியாக கேள்விக்கான பதிலாக தமிழ் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும்.
இந்நிலையில், தமிழ் மொழியினை அங்கீகரிக்கும் வகையில் பிற மொழிகள் மேசும் நாடொன்றில் முதன்மை படுத்தப்பட்டுள்ளமையும் இலங்கையை அடையாளபடுத்தியுள்ளமையும் தமிழ் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
10/08/2024
400 #தமிழ்ப்பெயர்கள் - இரா.திருமாவளவன்
1 = அகரன் > முதன்மையானவன்
2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்
3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்
4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்
5 = அகிலன் > உலகம் போல் அகன்ற மனத்தன்
6 = அகில் > அகிலைப் போலும் மணம் வீசுபவள்
7 = அணவன் > நெருங்கிய தன்மையன்; பொது உறவினர்
8 = அணன் > நெருங்கிய அன்பின் தன்மையின்
9 = அணியன் > அழகானவன்
10 = அண்டன் > அண்டன் போல் விரிந்த மனத்தன்
11 = அண்ணல் > மேலானவன்
12 = அண்ணல் > மேன்மையானவன்
13 = அதிகன் > மேலானவன்
14 = அத்தன் > முதன்மையானவன்
15 = அந்தணி > அகம் தணித்தவன்
16 = அமரன் > வீரன்
17 = அமுதன் > இனிமையானவன்
18 = அமுதினி > அமிழ்தைப் போலும் இனியவள்
19 = அம்மை > அழகியவள்
20 = அரசி > தலையானவள்
21 = அரணன் > அரணானாக விளங்குபவன்
22 = அரண் > பாதுகாப்பாக விளங்குபவன்
23 = அரவன் > கூரிய அறிவாளன்
24 = அரன் > அரம் போலும் அறிவுக் கூர்மையாளன்
25 = அரி > அரிமா போன்றவன்
26 = அருவி > அருவி போலும் குளிர்ந்தவள்
27 = அருளி > அருள் உள்ளங் கொண்டவள்
28 = அருளினி > அருள் தன்மை கொண்ட இனியவள்
29 = அல்லி > அல்லி மலர் போன்றவள்
30 = அவ்வை > பெருமைக்குரிய பெண்
31 = அழகன் > அழகானவன்
32 = அழகி > அழகானவள்
33 = அறவான் > தூய உள்ளத்தவன்
34 = அறன் > தூய நெஞ்சம் உடையவன்
35 = அறிவன் > அறிவாளன்
36 = அன்பி > அன்புக்குரியவள்
37 = அன்பினி > அன்புக்குரிய இனியவள்
38 = ஆகன் > ஆக்க மனம் கொண்டவன்
39 = ஆதன் > உயிரைப் போன்றவன் / முதன்மையானவன்
40 = ஆதி > முதன்மையானவள்
41 = ஆயன் > ஆய்ந்த அறிவாளன்
42 = ஆயி > அறிவார்ந்த முதிர்ந்த பெண்
43 = ஆரன் > செம்மையான அறிவாளன்
44 = ஆலன் > ஆல மரம் போல் உறுதியானவன்
45 = ஆவலன் > மிகுந்த ஈடுபாடுடையவன்
46 = ஆவன் > ஆகும் எண்ணம் கொண்டவன்
47 = ஆழியன் > ஆழமான மனம் அறிவு உள்ளவன்
48 = ஆளன் > ஆளுமை உடையவன்
49 = ஆற்றல் > வலிமை உடையவன்
50 = இசை > இசை போலும் இனியள்
51 = இமிழ் > அலையோசை / இனிய ஓசை
52 = இமை > இமையைப் போலும் காப்பவள்/ உயர்ந்தவள்
53 = இலங்கி > ஒளி வீசுவது புகழ் பெறுபவள்
54 = இனி > இனிய மனத்தினள்
55 = இனியள் > இனிய பண்புடையவள்
56 = இனியன் > இனிய நெஞ்சன்
57 = இனியாள் > இனிய உள்ளத்தினள்
58 = இன்பன் > இன்பம் விழைபவன் / இன்புறுத்துபவன்
59 = இன்பா > இனிய பாவினைப் போன்றவள்
60 = இன்மொழி > இனிய மொழி பேசுபவள்
61 = ஈழவன் > ஈழத்தைப் போற்றுபவன் / சார்ந்தவன்
62 = ஈழன் > ஈழத்திருமகன்
63 = உயிரன் > உயிரைப் போலும் சிறந்தவன்
64 = உய்யன் > விடிவை உடையவன்
65 = உரன் > உரம் வாய்ந்தவன்
66 = உலகன் > உலகம் போலும் விரிந்தவன்
67 = உறவன் > உறவாய் விளங்குபவன்
68 = ஊங்கன் > எதிலும் முதன்மையானவன்
69 = ஊரன் > ஊரைச் சார்ந்தவன்
70 = ஊரன் > ஊரைச் சேர்ந்த உரிமையாளன்
71 = ஊழி > காலங் கடந்தும் நிலைப்பவன்
72 = எல்லன் > கதிரவன்
73 = எல்லோன் > கதிரவன்
74 = எழிலன் > அழகானவன்
75 = எழிலி > அழகியவள்
76 = எழில் > அழகன்
77 = எழினி > முகில் போன்றவன்
78 = எழுவன் > எழுச்சிக்குரியவன்
79 = எளியன் > எளிமையானவன்
80 = ஏந்தல் > பெருமைக்குரியவன்
81 = ஏந்தன் > உயர்ந்து வாழ்பவன் / தாங்கி நிற்பவன்
82 = ஏந்தி > ஏந்துபவன்/ பொறுப்புகளை தாங்கி வாழ்பவன்
83 = ஏரகன் > வான் போல் உயர்ந்தவன்
84 = ஏரன் > வான் போல் உயர்ந்தவன் / மேலானவன்
85 = ஏறன் > ஏற்றம் உடையவன்
86 = ஐயன் > மேலான அறிவாளன்
87 = ஒண்மை > ஒளியைப் போன்ற அறிவையுடையவள்
88 = ஒளி > ஒளி வீசுபவள்
89 = ஒளியன் > ஒளி வீசும் அறிவாளன்
90 = ஒளிர் > ஒளி வீசுபவள்
91 = ஓங்கல் > மலை போலும் உயர்ந்தவன்
92 = ஓங்கன் > உயர்ந்தவன்
93 = ஓரகன் > ஒரே குறிக்கோளை உடையவன்
94 = ஓரி > தேன் போலும் இனியவன்
95 = ஓரையன் > ஒரு நெறியாளன் / விண் மீன் போன்றவன்
96 = ஓவன் > ஓவியம் போன்ற அழகன்
97 = ஓவியன் > அழகு ஓவியம் போன்றவன்
98 = கணியன் > கணிக்கும் அறிவாளன்
99 = கதிர் > ஒளியைப் போன்றவன்
100 = கயல் > கயல் மீனைப் போன்றவள்
101 = கயல் > கயல் மீனைப்போன்ற கண்ணை உடையவள்
102 = கலை > எழிலானவள்
103 = கவரன் > கவரும் தன்மையன்
104 = கவினன் > அழகானவன்
105 = கனகன் > பொன்னைப் போன்றவன்
106 = கனலி > தீமையைக் கண்டு கனல் போல் சுடுபவள்
107 = கனி > கனி போலும் இனிமையானவள்
108 = கன்னல் > கரும்பைப் போன்ற இனியவள்
109 = கன்னி > இளைமையானவள்
110 = காந்தல் > ஈர்க்கும் மலர்
111 = காரன் > கரியன்/ உணர்ச்சியுள்ளவன்
112 = காரி > காரிக் கோளைப் போன்றவன்
113 = காரோன் > கார் முகில் போன்றவன்
114 = காவலன் > காக்கும் தன்மையன்
115 = காவன் > காக்கும் காவலன்
116 = காழன் > உறுதி வாய்ந்தவன்
117 = காளை > காளையைப் போல் திண்மையன்
118 = குணன் > பண்பாளன்
119 = குமரி > இளமையானவள்
120 = குயிலி > குயில் போலும் குரலைக் கொண்டவள்
121 = குழலன் > குழலிசை போலும் உள்ளத்தவன்
122 = குழலி > அழகிய கூந்தலை உடையவள்
123 = குன்றன் > மலை போலும் உறுதியானவன்
124 = கெழுவன் > நிறம் மிகுந்த அழகன்
125 = கொடி > கொடியைப் போலும் மென்மையானவள்
126 = கொவ்வை > கொவ்வைப் பழம் போல் சிவந்தவள்
127 = கொற்றன் > அரசனைப் போன்றவன்
128 = கோ > அரசன்
129 = கோதை > அழகிய கூந்தலை உடையவள்
130 = கோவன் > அரசனைப் போன்றவன்
131 = கோவை > கோவைப் பழத்தைப் போலும் சிவந்தவள்
132 = கோளன் > குறிக்கோள் உடையவன்
133 = கோன் > அரசன்
134 = சமரன் > போர் வீரன்
135 = சாந்தி > சந்தன மணம் போன்றவள்
136 = சாந்தினி > சந்தன மணம் போன்றவள்
137 = சாரன் > கொள்கைச் சார்புடையன்
138 = சாலன் > சால்புடையவன்
139 = சிவலை > சிவந்தவள்
140 = சிற்பன் > சிலையைப் போலும் நிலையானவன்
141 = சின்னன் > இளையவன்
142 = சீரன் > சீர்மையான போக்குடையவன்
143 = சீரியன் > சீரிய பண்பாளன்
144 = சுடர் > சுடர் ஒளி போன்றவள்
145 = செக்கன் > செம்மையானவன்
146 = செங்கனி > சிவந்த கனியைப் போன்றவள்
147 = செங்கை > சிவந்த கரத்தை உடையவள்
148 = செங்கொடி > சிவந்த கொடியைப் போன்றவள்
149 = செம்பகன் > செம்மை அகத்தவன்
150 = செம்பன் > செந்தன்மையன்
151 = செம்பன் > செந்நிறமானவன்
152 = செம்மல் > செவ்விய அறிவாளன்
153 = செம்மாள் > செம்மை மகள்
154 = செம்மை > வெவ்விய ஒழுங்குடையவள்
155 = செல்லன் > அன்புக்குரியவன்
156 = செவ்வன் > ஒழுங்கானவன்
157 = செவ்வி > செம்மையானவள் / தக்கவள்
158 = செவ்விழி > சிவந்த கண்ணையுடையவள்
159 = செவ்வை > ஒழுங்குடையவள்
160 = செறிவன் > சிறந்த, செறிந்த சிந்தனையாளன்
161 = சேகன் > செந்தன்மையாளன்
162 = சேந்தன் > சிவந்தவன் / காப்பானவன்
163 = சேம்பன் > செந்தன்மையுள்ளவன்
164 = சேயோன் > கதிரவன்
165 = சேரன் > சேரனைப் போன்றவன்
166 = சேல் > சேல் மீனைப் போன்ற சிவந்த கண்ணைக் கொண்டவள்
167 = சேல்விழி > சேல் மீன் போன்ற கண்ணை உடையவள்
168 = சேவன் > செந்தண்மையாளன்
169 = சேனன் > உயர்ந்தவன் / செம்மையானவன்
170 = ஞாலன் > உலகத்தைப் போலும் விரிந்தவன்
171 = தகவன் > ஏற்புடையன்
172 = தகையன் > தகைமைக்குரிய பெருமகன்
173 = தகையன் > பெரும்பண்புடையவன்
174 = தக்கன் > தகுதியானவன்
175 = தக்கன் > தகுதியானவன்
176 = தக்கான் > தகுதிப்பாடுடையவன்
177 = தங்கம் > பொன்னைப் போன்றவள்
178 = தங்கன் > தங்கமானவன்
179 = தணலி > தீமையைக் கண்டு தணல் போல் சுடுபவள்
180 = தண்டலை > குளிர்ந்த சோலையைப் போன்றவள்
181 = தண்ணல் > குளிர்ந்தவள்
182 = தத்தன் > மூத்தவன்
183 = தமிழவன் > தமிழுணர்வன்
184 = தமிழி > தமிழைப் போன்றவள்
185 = தவன் > கொண்ட கொள்கையை நிறைவேற்றுபவன்
186 = தழல் > தீமையைக் கண்டு தழல் போல் எரிபவள்
187 = தளிர் > மென்மெயானவள்
188 = தாதன் > முந்தையன்
189 = தாமரை > தாமரை மலரைப் போன்றவள்
190 = தாயகன் > தாய் நாட்டு உணர்வுடையவன்
191 = தானன் > கொடுக்கும் மனம் உடையவன்
192 = திங்கள் > நிலவைப் போலும் ஒளி வீசுபவள்
193 = திண்ணன் > திண்மையான உள்ளத்தவன்
194 = திருநுதல் > பெருமைக்குரிய நெற்றியை உடையவள்
195 = திருமான் > பெருமைக்குரியவன்
196 = திருமொழி > பெருமைக்குரிய மொழியைப் பேசுபவள்
197 = திருவிழி > பெருமைக்குரிய விழியை உடையவள்
198 = திலகம் > ஒளி வீசும் புகழுக்குரியவள்
199 = திறலன் > திறமை மிக்கவன்
200 = தீங்கனி > இனிமையுடைய கனியைப் போன்றவள்
201 = தீஞ்சுவை > தேன் போன்ற இனிய சுவை உடையவள்
202 = தீரன் > வீர மிக்கவன் / திறமையானவன்
203 = துணையன் > நன்மைக்குத் துணையாக விளங்குபவன்
204 = துய்யன் > தூய்மையானவன்
205 = தூணன் > தூண் போலும் துணையானவன்
206 = தூயவள் > தூய மனத்தினள்
207 = தூயள் > தூய்மை எண்ணம் உடையவள்
208 = தூயன் > தூய உள்ளத்தன்
209 = தூவன் > தூயவன்
210 = தூவி > வெள்ளை இறகினைப் போன்ற தூயவள்
211 = தெம்பன் > மன உறுதியானவன்
212 = தெய்வன் > கதிரவனைப் போன்றவன்
213 = தெளிதேன் > தெளிந்த தேனைப் போன்றவள்
214 = தெளியன் > தெளிந்தவன்
215 = தென்றல் > தென்றல் காற்றைப் போன்றவள்
216 = தென்னள் > தெற்குத் திசையள்
217 = தென்னன் > தென் திசைக்குரிய பாண்டியன்
218 = தென்னாள் > தெற்குத் திசைக்குரியவள்
219 = தேயன் > நாட்டுக்குரியவன் / ஒளி வீசுபவன்
220 = தேரன் > தேரியவன்
221 = தேறல் > தேன் போல் இனிப்பவள்
222 = தேறன் > தேனைப் போன்ற இனியவன்
223 = தேனன் > தேன் போன்ற இனியமையன்
224 = தேனாள் > தேனைப் போன்றவள்
225 = தேன் > தேன் போலும் இனியள்
226 = தொகையன் > செல்வச் சிறப்பானவன்
227 = தொன்மன் > தொன்மைச் சிறப்பைக் கொண்டவன்
228 = நகை > என்றும் சிரிப்பவள் / நகையைப் போன்றவள்
229 = நங்கை > அழகிய பெண்
230 = நந்தன் > நட்புறவானவன்
231 = நம்பி > நம்பகம் உடைவன் / நம் அன்பன்
232 = நயனன் > அழகானவன்/ இனிய உரையாளன்
233 = நல்லன் > நல்ல மனத்தன்
234 = நல்லான் > நல்ல உணர்வாளன்
235 = நல்லி > நல்லவள்
236 = நவ்வி > மானைப் போன்றவள்
237 = நளினன் > அழகன்
238 = நளினி > அழகிய தன்மை உடையவள்
239 = நன்னன் > நன் மனம் கொண்டவன்
240 = நாடன் > நாட்டுக்குரியவன்
241 = நாவலன் > சொல் வன்மை உடையவன்
242 = நாவன் > சொல்லாற்றல் உடையவன்
243 = நாவினி > இனிய பேச்சாற்றல் உடையவள்
244 = நிரையன் > நேர்மையானவன்
245 = நிலா > நிலவைப் போன்றவள்
246 = நிறன் > நிறமுள்ள அழகன்
247 = நிறை > நிறைவான மனம் கொண்டவன்
248 = நிறையன் > நிறைந்த உள்ளம் உள்ளவன்
249 = நின்றன் > சொல் மாறாத நெறியாளன்
250 = நீடன் > என்றும் இனியவன்
251 = நீரன் > நேர்மையானவன் / நீரைப் போலும் குளிர்ந்தவன்
252 = நீரியன் > நீர் போல் குளிர்ந்த வன்/ நேர்மையானவன்
253 = நீலன் > நீல நிறம் போல குளிர்ந்தவன்
254 = நுதலி > அழகிய நெற்றியை உடையவள்
255 = நூலன் > நூலைப் போன்ற அறிவாளன்
256 = நெடியன் > உயர்ந்த உள்ளத்தன்
257 = நெடியோன் > உயர்ந்த மனம் உடையவன்
258 = நெறியன் > ஒழுங்கானவன்
259 = நெறியன் > முறையானவன்
260 = நேரன் > நேர்மையானவன்
261 = நோற்பன் > உறுதியானவன்
262 = பகலன் > கதிரவன்
263 = பகவன் > பகுத்து உணர்த்தும் அறிவாளன்
264 = பணியன் > பணிந்த மொழியாளன்
265 = பணிவன் > பணிவானவன்
266 = பண் > இசையானவள்
267 = பண்பன் > பண்பாளன்
268 = பதி > தலைவன்
269 = பரவன் > பரந்த மனம் உள்ளவன்
270 = பரன் > விரிந்தவன்
271 = பரிதி > கதிரவன்
272 = பரிதி > சூரியனைப் போன்றவன்
273 = பனி > பனி போல் குளிர்ந்தவள்
274 = பாரி > உலகம் போல் விரிந்தவன் / கொடையாளன்
275 = பாவை > அழகிய பெண்
276 = புகழன் > புகழுக்குரியவன்
277 = புகழி > பலரால் போற்றப்படுபவள்
278 = புகழி > புகழை உடையவள்
279 = புதியன் > புதிய சிந்தனையாளன்
280 = புதுவன் > புதிய சிந்தனையாளன்
281 = புயலவன் > புயலைப் போன்றவன்
282 = புயலன் > புயல் வேகம் உடையவன்
283 = புரவன் > பேணிப் பாதுகாப்பவன்
284 = பூங்கனி > பூவைப் போல கனியாள் /
285 = பூஞ்சோலை > பூக்கள் நிறைந்த சோலையைப் போன்றவள்
286 = பூவணி > பூக்களின் அணி
287 = பூவனம் > பூஞ்சோலை
288 = பூவன் > பூவைப் போன்றவன்ன
289 = பூவாள் > பூவைப் போன்றவள்
290 = பூவிதழ் > பூவின் இதழைப் போன்ற மென்மையானவள்
291 = பூவை > பூவைப் போன்றவள்
292 = பெரியன் > சிறந்தவன்
293 = பெரியன் > பெருமைக்குரியவன்
294 = பெற்றி > எல்லாச் சிறப்பும் பெற்றவன்
295 = பேகன் > அருள் உள்ளம் கொண்ட பேகன்
296 = பொற்பன் > பொன்னைப் போன்றவன்
297 = பொற்பு > பொன்னைப் போன்றவள்
298 = பொன் > பொன் ஆனவள்
299 = பொன்மை > பொன்னைப் போல் ஒளிர்பவள்
300 = பொன்னன் > பொன்னைப் போன்றவன்
301 = பொன்னாள் > பொன்னைப் போன்றவள்
302 = பொன்னி > பொன்னைப் போன்றவள்
303 = மகிழி > என்றும் மகிழ்பவள்
304 = மங்கை > பெண்
305 = மணி > அழகன்
306 = மணி > அழகன்
307 = மணியன் > அழகானவன்
308 = மண்ணி > பொருத்தம் உடையவள்/ மண்ணுக்குரியவள்
309 = மதி > அறிவாளன்
310 = மதி > அறிவாளன்/ நிலவைப் போன்றவன்
311 = மதி > நிலவைப் போன்றவள்
312 = மயில் > மயில் போலும் அழகியவள்
313 = மலர் > பூவைப் போன்றவள்
314 = மலையன் > மலைபோலும் உயர்ந்தவன்
315 = மல்லி > மல்லிகை மலர் போன்றவள்
316 = மறத்தி > வீரமானவள்
317 = மறத்தி > வீரம் உடையவள்
318 = மறவன் > வீரன்
319 = மறன் > வீரன்
320 = மறையன் > ஆழமானவன்
321 = மனன் > நல்ல மனத்தன்
322 = மன்றன் > தலைவன்
323 = மாங்கனி > மாங்கனியைப் போன்றவள்
324 = மாணன் > மாண்புக்குரியவன்
325 = மாண்மொழி > பெருமைக்குரிய மொழி உடையவள்
326 = மாயோன் > அன்பில் மழை போன்ற மேலோன் / கரிய வண்ணத்தன்
327 = மாலன் > அன்பில் மழை போன்றவன்/ கரிய வண்ணத்தன்
328 = மாள் > அழகிய மகள்
329 = மாறன் > அழகானவன் / அன்புக்குரியவன்
330 = மானன் > பெருமன்
331 = மான் > மானைப் போன்றவள்
332 = மான்விழி > மான் விழியைப் போன்ற கண்ணை உடையவள்
333 = மிசையன் > மேலானவன்
334 = மிளிர் > மினுக்கிடுபவள்
335 = மின்னல் > மின்னலைப் போன்றவள்
336 = மின்னி > மின்னுபவள்
337 = மீனன் > மீன் கொடியுடைய பாண்டியன்
338 = மீனன் > மீன் போல் மின்னுபவன் / பாண்டியன்
339 = மீனாள் > மீனைப் போலும் மின்னுமவள்
340 = முகிலி > வான் முகிலைப் போலும் மென்மையள்
341 = முதலன் > முன்னே இருப்பவன்
342 = முதல்வன் > தலைமையாக இருப்பவன்
343 = முத்து > முத்துமணியைப் போன்றவன்
344 = முல்லை > முல்லைப் பூ போன்றவள்
345 = முறுவல் > அழகிய சிரிப்பைக் கொண்டவள்
346 = முனைவன் > முனைந்த அறிவாளன்
347 = மெய் > உண்மைத் தன்மையள்
348 = மெய்மை > மெய்த்தன்மை உடையவள்
349 = மெய்யன் > உண்மையானவன்
350 = மெய்யாள் > உண்மையானவள்
351 = மெல்லி > மென்மையானவள்
352 = மென்மொழி > மென்மையான மொழி பேசுபவள்
353 = மேலன் > மேலானவன்
354 = மேழி > ஏர் போன்றவள்
355 = மேனன் > மேன்மைக்குரியவன்
356 = மொழியன் > நல்லதை உரைப்பவன்/ செம்மையானவன்
357 = யாழன் > யாழ் போலும் இசையாளன்
358 = யாழி > யாழைப் போன்றவள்
359 = யாழினி > யாழிசை போன்றவள்
360 = வடிவு > அழகானவள்
361 = வண்ணன் > அழகான வண்ணத்தன்
362 = வரணன் > கடலைப் போன்றவன்
363 = வருணன் > கடலைப் போன்றவன்
364 = வல்லன் > வலிமையானவன்
365 = வல்லி > வன்மையானவள்
366 = வளவன் > வளமானவன்
367 = வளன் > வளம் பொருந்தியவன்
368 = வள்ளி > வள்ளிக் கொடியைப் போன்றவள்
369 = வாகையன் > வெற்றி ஈட்டியவன்
370 = வாணன் > என்றும் வாழ்பவன்
371 = வாணன் > நெடிது வாழ்பவன்
372 = வாணி > என்றும் வாழ்பவள்
373 = வாரியன் > கடல் போலும் வளமை உடையவன்
374 = வாரியன் > பெருங்கடல் போல் வளம் உள்ளவன்
375 = வானன் > வான் போல் உயர்ந்தவன்
376 = விசும்பன் > விண்ணைப் போலும் உயர்ந்தவன்
377 = வித்தன் > விதைபோலும் மூலவன்
378 = வியலன் > விரிந்த உள்ளம் உடையவன்
379 = வியன் > வியப்புக்குரிய செயலாளன்
380 = விரியன் > விரிந்த நெஞ்சன்
381 = விரியன் > விரிந்த மனம் உள்ளவன்
382 = விழி > கண்ணாக விளங்குபவள்
383 = விழுப்பன் > அழியாத புகழுடையவன்
384 = விழுப்பன் > என்றும் நிலைத்த செயலைச் செய்பவன்
385 = வெண்பா > வெண்பாவைப் போன்ற சுவையள்
386 = வெயினி > தென்றலைப் போன்றவள்
387 = வெளியன் > விரிந்த உள்ளம் கொண்டவன்
388 = வெற்பன் > வெற்றியாளன் / மலையைப் போன்றவன்
389 = வெற்றி > வெற்றியாய் விளங்குபவன்
390 = வென்றி > வெற்றியாளன்
391 = வேங்கை > புலி போன்றவன் / வீரன்
392 = வேங்கை > வேங்கைப் புலி போன்றவன்
393 = வேண்மாள் > சீரிய அன்புக்குரியவள்
394 = வேந்தன் > மாமன்னன் ( வேய் > வேய்தோன் > வேந்தன்)
395 = வேயன் > வேந்தன்
396 = வேயோன் > மணிமுடி தரித்த வேந்தனைப் போன்றவன்
397 = வேலன் > வேலை ஏந்தியவன் / வேல் போன்ற கூரிய அறிவாளன்
398 = வேல் > வேல் போன்ற கூரிய விழி உடையவள்
399 = வேள்> வேட்கையுடையவன் / உழவன்
400 = வையன் > உலகுக்குரியவன் / கூரிய அறிவாளன்
நல்லத் தமிழ்ப் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள் நானொரு தமிழன் என்று அடையாளம் காட்டுங்கள்...
Copied...
23/07/2024
படைப்பாக்கத் திறன், தொடர்பாடலில் டிப்ளோமா கற்கைநெறி- 2024
இக் கற்கைநெறி 2024.07.27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், படைப்பாற்றலில் ஆர்வமுள்ளவர்கள் 077 123 6858 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளவும்.
16/07/2024
நாளை (17) #ஆடிப்பிறப்பு!
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தௌ்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவாள்
மணக்க மணக்க வாயூறிடுமே!
குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே!
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே!
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே!
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
– நாவாலியூர் சோமசுந்தரப் புலவர்
09/04/2024
Eid Mubarak! Wish you all a very happy and peaceful Eid...
06/03/2024
ஸ்ரீராமரின் 68 தலைமுறை முன்னோர்களை தெரிந்து கொள்வோம்...
1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு
6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் அணரன்யா
9. அணரன்யாவின் மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா
11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா
16. குவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா
21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2
24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா
25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா
26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா
27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு
28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத்
29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2
30. அனரண்யாவின் மகன் - த்ரஷஸ்தஸ்வா
31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2
32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான்
33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா
34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா
35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு
36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன்
37. ஹரிசந்திரனின் மகன் ரோஹிதாஷ்வா
38. ரோஹிதாஷ்வாவின் மகன் ஹரித்
39. ஹரித்தின் மகன் -சன்சு
40. சன்சுவின் மகன் -விஜய்
41. விஜயின் மகன் -ருருக்
42. ருருக்கின் மகன் -வ்ருகா
43. வ்ருகாவின் மகன் -பாஹு
44. பாஹுவின் மகன்- சாஹாரா
45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன்
46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன்
47. அன்ஷுமனின் மகன் -திலீபன்
48. திலீபனின் மகன்- பகீரதன்
49. பகீரதனின் மகன் -ஷ்ருத்
50. ஷ்ருத்தின் மகன் -நபக்
51. நபக்கின் மகன்- அம்பரீஷ்
52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப்
53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு
54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா
55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா
56. சர்வகாமாவின் மகன்- ஸுதஸ்
57. ஸூதஸின் மகன் -மித்ரஷா
58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2
59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3
60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா
61. நிக்னாவின் மகன்- ரகு
62. ரகுவின் மகன் -துலிது
63. துலிதுவின் மகன் - கட்வாங் திலீபன்
64. கட்வாங் திலீபனின் மகன் - ரகு2
65. ரகுவின் மகன் - அஜன்
66. அஜனின் மகன் - தசரதன்
67. தசரதனின் மகன்
68. ஸ்ரீ_ரகு_ராமன்
இப்படி 68 பரம்பரை கொண்டது ஸ்ரீ ராமரின் தலைமுறை....