Nuraicholai Muslim Maha Vidhyalayam

Nuraicholai Muslim Maha Vidhyalayam An Educational Institution Enriching Lives over 80 Years

16/02/2015

பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் - 2015

பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான பொதுக்கூட்டம் 13.02.2015 வெள்ளிக்கிழமையன்று மாலை 4:30 மணிக்கு பாடசாலையின் அதிபரும், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் தலைவருமான கலீல் ரஹ்மான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டதிற்கு பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் முன்னால் நிருவாக உறுப்பினர்கள், பெற்றார்கள், பழைய மாணவர்கள் என பலர் வருகைதந்திருந்தனர்.
இக்கூட்டத்தில் முதல் கட்டமாக அதிபர் கலீல் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார். இதன்போது அவர் அதிபராக பதவி ஏற்றது முதல் இன்றுவரையில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் எமது பாடசாலை மாணவர்கள் புரிந்த சாதனைகள் மற்றும் பெற்றார்கள், பழைய மாணவர்கள், அரசியல் பிரமுகர்களின் ஒத்துழைப்புடன் பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட பௌதிக வள அபிவிருத்திகள் தொடர்பாக தெளிவுபடுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டிற்கான புதிய நிருவாக உறுப்பினர்களின் தெரிவு இடம்பெற்றது. இதன்போது A.R.M. அஸ்லம் (செயலாளர்), A.L.M. அரபாத், A.C.S. ஹமீத், N.M. நிலாம், ரிகாஸ் ஆகியோர் பெற்றார், பழைய மாணவர் சார்பில் நிருவாக சபை உறுப்பினர்களாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து அதிபர் உரையாற்றுகையில், தான் இவ்வருடம் பெப்ரவரி மாத இறுதியில் இடம் மாற்றம் பெற்று செல்ல இருப்பதாகவும், அதற்கு முன்னர் பொருத்தமான அதிபர் ஒருவரை தெரிவு செய்யுமாறும் புதிய நிருவாக உறுப்பினர்களிடம் வேண்டிக்கொண்டார்.
இறுதியாக, புதிதாக தெரிவு செய்யப்பட்ட செயலாளரின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.

Principals of  Nuraicholai Muslim Maha VidhyalayamNo	               Name	                                  Service Perio...
17/11/2013

Principals of Nuraicholai Muslim Maha Vidhyalayam

No Name Service Period

1. M.A. Rajakoan 04. 10. 1929- 30. 04. 1930

2. K. Visvalingam 01. 10. 1930- 29. 09. 1934

3. K. Veluppillai 28. 09. 1934- 28. 09. 1937

4. S. Arunampalam 07. 01. 1938- 04. 01. 1942

5. A.P. Nova 05. 01. 1942- 31. 10. 1947

6. S. Kanthappu 01. 11. 1947- 31. 12. 1958

7. K. Ismail 05. 01. 1959- 30. 06. 1959

8. A.S.M. Sahardeen 01. 07. 1959- 28. 12. 1962

9. P.M.A. Haththath 31. 12. 1962- 01. 01. 1963

10. A.W.M. Shafi 28. 02. 1963- 30. 03. 1965

11. M.S.M. Nasooh 01. 09. 1965- 10. 05. 1976

12. A.H.M. Mohammed 11. 05. 1976- 14. 07. 1976

13. K.S. Ismail 15. 07. 1976- 29. 01. 1978

14. A.L.M. Ismail 30. 01. 1978- 15. 05. 1978

15. K.S. Ismail 16. 05. 1978- 31. 12. 1990

16. A.H.M. Ibunsar 01. 01. 1991- 05. 01. 2000

17. V. Rajakopal 05. 01. 2000- 26. 06. 2000

18. A.M.M.M. Muhaideen 26. 06. 2000- 13. 06. 2003

19. M.P. Abdul Rasheed 13. 06. 2003- 17. 07. 2003

20. M.A.C.A. Muththalif 17. 07. 2003- 10. 03. 2008

21. A.S. Lahir 10. 03. 2008- 13. 10. 2008

22. M.P. Abdul Rasheed 17. 10. 2008- 24. 06. 2011

23. S.H.K. Rahman 24. 06. 2011- Present

15/11/2013

நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்யாலயம்; சில முக்கிய குறிப்புகள்.

பாடசாலை ஆரம்பம்: 1929.10.04

முதல் அதிபர்: M. A. இராசகோன்

முதல் மாணவன்: M. ஹனீபா

பாடசாலை காணி வழங்கியவர்: M.A.M. சேகு முகம்மது தம்பி மரைக்கார்

காணியின் அளவு: 1 ஏக்கர்

ஆரம்ப கால மாணவர் தொகை: 44

ஆரம்ப கால ஆசிரியர் தொகை: ௦2

ஆரம்ப கால கட்டிடங்களின் எண்ணிக்கை: 01

தற்போதைய அதிபர்: S.H. கலீலுர் ரஹ்மான்

ஆசிரியர் தொகை: 29

வகுப்புகளின் எண்ணிக்கை: 30

பாடசாலையின் தரம்: 1C

கட்டிடங்களின் எண்ணிக்கை: 15

கிராம சேவையாளர் பிரிவு: நுரைச்சோலை 621/ A

பிரதேச செயலகம்: கல்பிட்டி

கோட்டக் கல்வி அலுவலகம்: கல்பிட்டி

வலயக்கல்வி அலுவலகம்: புத்தளம்

தேர்தல் தொகுதி: புத்தளம்

பொலிஸ் பிரிவு: கல்பிட்டி

நிர்வாக மாவட்டம்: புத்தளம்

மாகாண கல்வி அலுவலகம்: குருநாகல்

15/11/2013

பாடசாலை கீதம்

இறையோனே மறையோனே அருள்வாய் எமக்கருள்வாய்
அருள்வாய் எமக்கருள்வாய்

நாளும் அதிகாலை உன்னை நாம்
துதிக்கின்றோம்.
இறை உன்னை போற்றியே ஏட்டினை
திறக்கின்றோம்.
அறியாமை அகன்றிட ஆசான்கள் உதவிட
வல்லவனே உன் அருள் மழை என்னாளுமே பொழிந்திடு
என்னாளுமே கருணையை எமக்கு நீ காட்டிடு கல்வி கற்கும் சிறார் நாங்கள் உன்னைத்தானே
வேண்டினோம்.

இறையோனே மறையோனே அருள்வாய் எமக்கருள்வாய்
அருள்வாய் எமக்கருள்வாய்

பாலர் நாம் கல்வி பயின்றிட வேண்டும்
பயின்ற நற்கல்வியை பரப்பிட வேண்டும்
நுரைச்சோலை அரசினர் கலையகம் புகழ்பெற
எமதிறை ஒளி நீயே தினம் அருள் பொழிந்திடு
மேதினியில் சிறந்திட வழியது காட்டிடு
கல்வி கற்கும் சிறார் நாங்கள் உன்னைத்தானே வேண்டினோம்.

இறையோனே மறையோனே அருள்வாய் எமக்கருள்வாய்
அருள்வாய் எமக்கருள்வாய்

15/11/2013

மகுட வாசகம் (Moto)

“என் இரட்சகா! என்னுடைய அறிவை அதிகரிப்பாயாக”

தூர நோக்கு (Vision)

“எதிர்கொள்ளும் சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கின்ற, ஒழுக்கமுடைய நற்பிரஜைகளை உருவாக்கி சமூகத்திற்கும், நாட்டிற்கும் வழங்குதல்.”

பணிக்கூற்று (Mission)

“தூர நோக்கை அடையும் வகையில் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள், அறிவு சார்ந்த சமூகம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் அரசு வழங்கியுள்ள பாடவிதானதிற்கேற்ப பாடசாலைக்கு உள்ளேயும், வெளியேயும் மாணவர்களின் அறிவு, திறன், மனப்பாங்குகளைக் கட்டி எழுப்புதலும் அதற்காக அர்பணிப்புடன் செயற்படுதலும்.”

எமது பாடசாலை அதிபரின் செய்தி.     புத்தளம் தேர்தல் தொகுதியில் புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி பிரதேசத்துள் அமைந்துள்ள எம...
15/11/2013

எமது பாடசாலை அதிபரின் செய்தி.

புத்தளம் தேர்தல் தொகுதியில் புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி பிரதேசத்துள் அமைந்துள்ள எமது நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயம் புத்தளம், கல்பிட்டி நகரங்களின் மத்தியில் அமைந்துள்ளது.

நுரைச்சோலையானது குறுகிய காலத்தினுள் வர்த்தக நகரமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதற்கு எடுத்துக் காட்டாக பல்வேறு விடயங்களை குறிப்பிடலாம். ஆனாலும் பாடசாலையின் வளர்ச்சியானது மந்த கதியிலேயே உள்ளது.

எனினும் தற்போதைய நிலையில் உள்ளூர் அரசியல்வாதிகளின் பங்களிப்புடனும், SDS உறுப்பினர்களின் ஒத்துழைப்புடனும், பெற்றோர்களின் ஆதரவுடனும் பாடசாலை வளர்ச்சியடைந்து வருகிறது. எனினும் ஆசிரியர் பற்றாக்குறை எமது வளர்ச்சியின் தடைக்கல்லாக தொடர்ந்தும் காணப்படுகிறது.

இதே வேளை எமது இப்பாடசாலை வரலாற்று சாதனைகள் பலவற்றை புரிந்து வருகின்றது.

• 2012 GCE O/ L பரீட்சையில் சகல பாடங்களிலும்(9A) அதி விசேட சித்தி பெற்று இரு மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

• இதன் மூலம் கல்பிட்டி பிரதேச 38 பாடசாலைகளில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.

• மேலும் அகில இலங்கை ரீதியில் கிராத் போட்டியில் முதலாம் இடம், மாகாணமட்ட கவிதை போட்டியில் முதலாம் இடமும், விளையாட்டு போட்டிகளில் முதலாம் இரண்டாம் இடங்களிலும் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இப்பாடசாலையை ஒரு தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் முயற்சியில் அதிபருக்கு சகல ஆசிரியர்களும், பெற்றோரும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். இது நிறைவேற இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.

இவ்வண்ணம்
S.H. கலீலுர் ரஹ்மான்
அதிபர்
நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயம்.

Address

Nuraicholai Muslim Maha Vidyalayam, Kalpitiya Road
Kalpitiya
61342

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Friday 08:00 - 14:00

Telephone

0094 322268763

Alerts

Be the first to know and let us send you an email when Nuraicholai Muslim Maha Vidhyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category