Wesley High School National School

Wesley High School National School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Wesley High School National School, Kalmunai.

பிரித்தானிய மெதடிஸ்த மிஷனரிமாரால் 1833ல் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் விடுதி பாடசாலையும் 1901ல் ஆரம்பிக்கப்பட்டஆண்கள் லீஸ் ஆங்கில பாடசாலையும் அ௫ட்தி௫. ஜோன் வெஸ்லி அவா்களின் பெயரை முன்னிட்டு உவெஸ்லி உயா்தர பாடசாலை எனப் பெயரிடப்பட்டது.
1833 நவம்பா் 30ம்திகதி இம்மாவட்டத்தில் முதல்பாடசாலையாக 18 மாணவா்களுடன் பதிவுசெய்யப்பட்டது.
ஆரம்பத்தில் கிடுகினால் வேயப்பட்ட நிலையிலேயே பாடசாலை காணப்பட்டது.படிப்படியாக
மாணவிகள் தொகை 80 ஆக உயா்ந்தது.செங்கல் கட்டடமாகமாற்றப்பட்டது.மாணவர்கள் ஆசிரியா்களாக பயிற்றுவிக்கப்பட்டனா்.பிற்காலத்தில் சிலா் தலைமை ஆசிரியா்களாகவும் பணியாற்றினா்.
வெளிநாட்டு மிஷனரிமார் அதிபராக கடமையாற்றிய போதிலும் தலைமை ஆசிரியா்களாக உள்நாட்டவா்களே கடமையாற்றினா்.
கல்முனை பகுதியில் ஆண்பிள்ளைகளுக்கான கல்விதி தேவையை உயா்த்துவதற்காக கபிரியேல் வீஸ் அவா்கள் 1901இவ் ஆண்கள் லீஸ் ஆங்கில பாடசாலையை ஆரம்பித்தார்.இது சிறிய பாடசாலையாக காணப்பட்டாலும் இதில் இ௫ந்து உ௫வான மாணவா்கள் சட்டத்தரணிகளாக,வைத்தியர்களாக, பாராளுமன்ற உறுப்பினா்களாக, ஆசிரியா்களாக,வர்த்தகா்களாக பிற்காலத்தில் மிளிர்ந்தனா்.
1930களில் இப் பாடசாலையில் 96 மாணவர்களும் 6 ஆசிரியா்களும் கடமையாற்றினா்.
பின்னா் வந்த காலப் பகுதிகளில் பல அதிபா்கள் கடமையாற்றினா்.அக் காலப் பகுதிகளில் கடமையாற்றிய அதிபா்களின் விபரங்கள்....

தி௫. யோகம் வேலுப்பிள்ளை 1972-1981
தி௫. சுப்பிரமணியம் 1981-1982
தி௫. மகாலிங்கம் 1982-1983
தி௫. யோகம் வேலுப்பிள்ளை அக் 83-நவ 83
தி௫. சுப்பிரமணியம் 1983-1998
தி௫. வெங்கடாசலம் 29.06.88-01.11.98
தி௫. மு௫கையா 01.11.98-2009
தி௫. பிரபாகரன்
திரு. கலையரசன் - இன்று வரை.......



உவெஸ்லி உயர்தர பாடசாலையின் ஆரம்பகர்த்தா Rev.G.J.Trimmer ஆவார்.


தற்போது சுமார் 1524 மாணவர்களும் 71 ஆசிரியா்களும் கடமையாற்றுகின்றனா். மற்றும் இப் பாடசாலையில் 125 ஆண்டு நிறைவு விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

15/09/2026
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை 90/91 ஆண்டு மாணவர்கள் ”இழந்ததை தேடுவோம்” ஏற்பாடு செய்த ஒன்று கூடல் சிறப்பாக நடைபெற்றது!கல...
29/08/2026

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை 90/91 ஆண்டு மாணவர்கள் ”இழந்ததை தேடுவோம்” ஏற்பாடு செய்த ஒன்று கூடல் சிறப்பாக நடைபெற்றது!

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை 90/91 ஆண்டு பழைய மாணவர்களின் இழந்ததை தேடுவோம் எனும் தலைப்பில் ஒன்றுகூடல் கடந்த 25 ஆம் திகதி சேனைக்குடியிருப்பு செல்வா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பழைய மாணவர்களும் ,அவர்களது குடும்பத்தினரும் பங்குபற்றிய இந் நிகழ்வில் குறித்த ஆண்டில் கல்வி கற்பித்த ஆசிரியர்களும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சினங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலைக்கால பசுமையான நினைவுகளை மீட்டிப்பார்க்கும் மகிழ்வான நிகழ்வாக இவ் ஒன்றுகூடல் அமைந்ததாக பங்குபற்றிய மாணவர்களும் ஆசிரியர்களும் கல்முனை நெற்றுக்கு தெரிவித்தனர்.

நிகழ்ச்சி நிரல்
திகதி: 25/08/2026
நேரம்: காலை 10:00 மணி

மாலை அணிவித்து அதிதிகளை வரவேற்றல்.
மங்கள விளக்கேற்றல். (தலைவர், விசேட அதிதிகள், பழைய மாணவர் சார்பாக)
இறை வணக்கம் (இந்து, கிறித்தவம், இஸ்லாம்)
மௌன அஞ்சலி.
பாடசாலை கீதம்.
வரவேற்பு நடனம்.
வரவேற்புரை:- திருமதி. நளாயினி விவேகானந்தன்
தலைமை உரை:- திரு. K. ராஜ்குமார்.
பழைய மாணவர் அறிமுகம்.
பழைய நினைவுகளை நினைவுட்டல் கவிதை (விஜிதா)
பாடல்:- V.ஜெய ரிஷி
பாடல்:- K.பிரேமா
மதிய உணவு.
வேறு நிகழ்வுகள்.
ஆசிரியர் கௌரவிப்பு:- பொன்னாடை + பரிசு வழங்கல்
சங்கீத கதிரை.
பழைய நினைவுகள் பகிர்வு – பரிசு வழங்கல்.
நன்றியுரை:- திருமதி. மரியாள்.

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் சேவை நலன் பாராட்டு விழா: ஓய்வுபெற்ற, இடமாற்றம் சென்ற ஆசிரியர்களுக்கு விசேட கௌரவம்!கல்...
09/08/2026

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் சேவை நலன் பாராட்டு விழா: ஓய்வுபெற்ற, இடமாற்றம் சென்ற ஆசிரியர்களுக்கு விசேட கௌரவம்!

கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி, பின்னர் இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களையும் ஓய்வுபெற்றவர்களையும் கௌரவிக்கும் சேவை நலன் பாராட்டு விழா, பாடசாலை அதிபர் திரு. கலையரசன் அவர்களின் தலைமையில் 06.08.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், இப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் தமிழ் கோட்டத்தில் ஆசிரிய ஆலோசகராகச் சேவையாற்றி அண்மையில் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் திரு. கா. சாந்தகுமார் அவர்களும், திரு. எஸ். சிவாகரன், திரு. எம்.எஸ்.எம். யசார், திரு. பெ. ரஞ்சன், திரு. எம். தஸ்ருப், திருமதி மர்சுதா சமட், . திருமதி எஸ். ருசிகரன், . திருமதி பி. ஜீவரெத்னம், திருமதி எம்.வி.எஸ். றஜாத் மற்றும் திருமதி எம்.எம். ஜெம்ஸித் ஆகியோரும் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் உற்சாகமாகப் பங்கேற்றதுடன், மாணவர்களின் பல்வகைக் கலைநிகழ்ச்சிகள் விழாவிற்கு மேலும் சிறப்பூட்டின. கௌரவிக்கப்பட்டவர்களின் அர்ப்பணிப்பான சேவையை நினைவுகூர்ந்து, அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் பணிகளிற்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிகழ்வு, சேவையை மதிக்கும் பண்பையும் கல்விச் சமூகத்தின் ஒற்றுமையையும் வெளிப்படுத்திய அர்த்தமிக்க நிகழ்வாக அமைந்தது.

கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையில் “பிள்ளைகளை நம்புவோம்” விழிப்புணர்வுச் செயலமர்வு! “பிள்ளைகளின் பாதுகாப்பு” மற்று...
08/08/2026

கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையில் “பிள்ளைகளை நம்புவோம்” விழிப்புணர்வுச் செயலமர்வு!

“பிள்ளைகளின் பாதுகாப்பு” மற்றும் “பிள்ளைகளை நம்புவோம்” எனும் தலைப்புகளில், பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு, கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையில் பாடசாலை அதிபர் திரு. எஸ். கலையரசன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜெனிதா மோகன் அவர்கள் வளவாளராகக் கலந்துகொண்டு, பிள்ளைகளின் பாதுகாப்பு, பெற்றோரின் பொறுப்புகள், மாணவர்களின் கடமைகள், தலைமைத்துவப் பண்புகள் மற்றும் மாணவர் நலன் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து பயனுள்ள விளக்கங்களை வழங்கினார்.

பெற்றோர்களும் மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்று, தங்களது வாழ்விலும் கல்விப் பயணத்திலும் வழிகாட்டும் பல பெறுமதியான கருத்துக்களைப் பெற்றுக்கொண்டனர்.

இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகள், மாணவர்களின் பாதுகாப்பு, நற்பண்பு வளர்ச்சி மற்றும் பெற்றோர்–பாடசாலை உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான முயற்சிகளாக அமைந்துள்ளன.

 #இரத்ததானமுகாம்.எமது கல்லூரியின் ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம். திகதி - ஜூலை 02நேரம் - 08 AMஇடம் - நல்லதம...
27/06/2026

#இரத்ததானமுகாம்.

எமது கல்லூரியின் ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்.

திகதி - ஜூலை 02
நேரம் - 08 AM
இடம் - நல்லதம்பி மண்டபம்

இரத்தம்கொடுப்போம்.
உயிர் காப்போம்.

A/L Day 2025
14/11/2025

A/L Day 2025

மறக்க முடியுமா??WHS in சிங்கங்கள்... 💪💪🔥🔥👍👍
21/10/2025

மறக்க முடியுமா??
WHS in சிங்கங்கள்... 💪💪🔥🔥👍👍

" மீண்டும் பள்ளிக்கு போகலாம் "எமது பாடசாலையில் கல்வி கற்ற 2007  மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு நேற்றைய தினம் ( 19.10.20...
20/10/2025

" மீண்டும் பள்ளிக்கு போகலாம் "
எமது பாடசாலையில் கல்வி கற்ற 2007 மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு நேற்றைய தினம் ( 19.10.2025 )சிறப்பாக இடம்பெற்றது.


விஜயதசமி நிகழ்வு
09/10/2025

விஜயதசமி நிகழ்வு

Address

Kalmunai

Alerts

Be the first to know and let us send you an email when Wesley High School National School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share