12/05/2023
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியினை (பெண்மையினை கெளரவிக்கும் சர்வதேச மகளிர் தினத்தில்) தேசிய பாடசாலையாக தரமுயர்த்தி உத்தியோகபூர்வமாக மாணவிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு.
(1971-2022) ஆண்டு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியானது 50வது ஆண்டு பொன்விழாவினை கொண்டாடுகின்ற கால கட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் பெண்கள் கல்வியின் வளர்ச்சியில் தனக்கு என்று தனித்துவமான அடையாளத்தையும் சர்வதேச ரீதியில் விருதுகளை தக்கவைத்ததும் மற்றும் அகில இலங்கை ரீதியில் பெண் மாணவிகளை கொண்ட மஹ்மூத் மகளிர் கல்லூரி ஜக்கிய நாடுகள் அமைப்பு 2022ம் ஆண்டு "நாளைய நிலையான உலகிற்காக இன்றைய பாலியல் சமத்துவம்" எனும் தொனிப்பொருளில் பெண்மையினை கெளரவிக்கும் சர்வதேச மகளிர் தினத்தில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தி உத்தியோகபூர்வமாக மாணவிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் கல்வியாளர்கள் புடைசூழ மிக பிரமண்டமான முறையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் தலைமையில் அதன் நிர்வாகம் சேர்ந்து நடத்தியிருப்பதானது பாடசாலை வரலாற்றில் மிக முக்கியமான பதிவாகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் தேசத்தைக் கட்டியெழுப்பும் “சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைக்கு அமைவாக இலங்கைக் கல்வியின் உண்மையான சுதந்திரத்திற்காக தேசிய பாடசாலைகள் எண்ணிக்கையை 1000 வரையில் அதிகரிக்கும் தேசிய நிகழ்வும், சர்வதேச மகளிர் தினமும் - 2022 நிகழ்வின் ஒரு அங்கமாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியை தேசிய பாடசாலையாக மாணவிகளுக்கு உரித்தாக்கும் நிகழ்வு 08.3.2022 (செவ்வாய்க்கிழமை) சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் பாடசாலை அதிபர் யூ. எல்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நாடு முழுவதும் நடைபெற்றுவரும் இந்நிகழ்வின் ஒரு அங்கமாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கல்வி வெளியீட்டு திணைக்கள மேலதிக ஆணையாளர் நாயகம் இசட். தாஜுதீன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்கா, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் என். புள்ளநாயகம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன், கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். ஸாஹிர், பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரி வீ. எம். ஸம்ஸம், முன்னாள் அதிபரும், சாய்ந்தமருது கலாச்சார அதிகார சபை பிரதித்தலைவருமான ஏ. எச்.அப்துல் வஸீர், கல்முனை வலய பாடசாலைகளின் அதிபர்கள், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி பிரதி அதிபர்களான திருமதி எஸ்.எஸ்.எஸ்.எம். மசூது லெவ்வை, ஆர்.எம். .அஸ்மி காரியப்பர் உதவி அதிபர் ஏ.எச். நதீரா, மனுனா, பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகம், மாணவர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ. சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், அண்மையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்ட எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்கா, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் என். புள்ளநாயகம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் பொன்னாடை போற்றி கெளரவிக்கப்பட்டதுடன் நினைவு சின்னங்களும் பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் பாடசாலை மாணவிகளினால் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
08.03.2022