27/07/2024
இலவச தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு
UBT Campus- Kalmunai கிளையினால் இலங்கை உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தில் (SLIATE) உயர்கல்வியினைத் (HND IT) தொடர்கின்ற மாணவர்களுக்கும், ஏனைய IT கல்வியினை பயில்கின்ற மாணவர்களுக்குமான தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தற்கால போக்குகள், வேலைவாய்ப்புக்கள், எதிர்கால முன்னேற்றங்கள் என்பன தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு 2024.07.26 ஆம் திகதி நடைபெற்றது.
இந்நிகழ்வில் வளவாளராக, தென்கிழக்கு பல்கலைகழகத்தின் பொறியியல் பீடத்தின் (Computer science Engineering) தலைவர் Dr. (Eng.) Ajmal Hinas அவர்கள் பிரதான வளவாளராக கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் தொழில் சந்தைக்கு ஏற்றவாறு தகவல் தொழில்நுட்ப துறையின் தொழில் பாதைகளை புரிந்துகொண்டு மாணவர்கள் தங்களை தற்கால IT உலகில் எவ்வாறு வளப்படுத்திக் கொள்ள வேண்டும், தாங்கள் வளர்த்து கொள்ள வேண்டிய திறன்கள் மற்றும் எவ்வாறு மிகச்சரியான முறையில் Resume களை தயாரித்துக் கொள்ள வேண்டும் என்பன தொடர்பான பல்வேறுபட்ட விடயங்களுக்கு மிகச் சிறந்த ஆலோசனைகளை வழங்கவென, 20 வருட கால அனுபவத்தினைக் கொண்ட UBL Group நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி IM. Sathath அவர்களும் முக்கிய வளவாளராக கலந்துகொண்டு இந்நிகழ்வை மேலும் சிறப்பித்திருந்தனர்.
அத்துடன் நிகழ்வின் இறுதிக் கட்டத்தில் மாணவர்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்கு, வளவாளர்கள் மிகச்சிறந்த முறையில் பதில்களையும் சரியான வழிகாட்டல்களையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வின் இறுதியில் இந்நிகழ்வினில் பங்கு பற்றியவர்களில் 4 மாணவர்களுக்கு சிறந்த இரண்டு IT நிறுவனங்களில் Internship இனை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டமை இந்நிகழ்வின் ஒரு சிறப்பம்சமாக விளங்கியதோடு, எதிர்காலத்தில் UBT Campus இல் உயர்கல்வியினை தொடரும் மாணவர்களுக்கும் எங்கள் UBT Campus மூலம் சிறந்த அடைவுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்