8"th batch of fathih

8"th batch of fathih 𝐀𝐔𝐃𝐀𝐂𝐈𝐎𝐔𝐒
8ᵗʰ Bᴀᴛᴄʜ Oғ Fᴀᴛʜɪʜ
Iɴsᴛɪᴛᴜᴛᴇ Fᴏʀ Hɪɢʜᴇʀ Eᴅᴜᴄᴀᴛɪᴏɴ

உயர் கல்விக்கான பாதிஹ் நிறுவனத்தினால் பாதிஹில் இருந்து இறுதியாக கற்று வெளியேறிச் சென்ற மாணவர்களுக்கான 07 நாட்களைக் கொண்ட...
13/01/2024

உயர் கல்விக்கான பாதிஹ் நிறுவனத்தினால் பாதிஹில் இருந்து இறுதியாக கற்று வெளியேறிச் சென்ற மாணவர்களுக்கான 07 நாட்களைக் கொண்ட "Graduate Empowerment Program" ஏற்பாடு செய்யப்பட்டு 2024.01.08 அதாவது சென்ற திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வானது அடுத்த கட்டமாக சமூகத்தினுள் நுழைகின்றவர்கள் என்ற வகையில் எம் மீது உள்ள சமூகத்தின் எதிர்பார்ப்பை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது என் நிகழ்வின் நோக்கமாக கொள்ளப்பட்டது. அதேபோன்று தனிமனிதன் குடும்பம் சமூகம் இலக்கு ஆகியவற்றை புரிந்து கொள்ளுதல் என்பதனையும் நோக்காக கொண்டு காணப்பட்டது.

இந் நிகழ்வானது 05 நாட்கள் நிறைவடைந்து இருக்கின்றது. இந் நிகழ்வைப் பொறுத்தவரை மிகவும் பிரயோசனமானதாகவும் பல அனுபவங்கள் நிறைந்தாகவும் காணப்பட்டது. அதேபோன்று பல சிறந்த ஆளுமைகளையும் சந்திக்க கிடைத்தது. அத்தோடு சில முக்கியமான இடங்களையும் தரிசிக்க கிடைத்தது.

எனவே இந்நிகழ்வை ஏற்பாடு செய்து அதில் எம்மை கலந்து கொள்வதற்காக வாய்ப்பை ஏற்படுத்தியமைக்கு உயர் கல்விக்கான பாதிஹ் நிறுவனத்திற்கும், இதற்காக உதவி செய்த சகோதரர்களுக்கும், குறிப்பாக இந் நிகழ்வை இறுதிவரை சிறப்பாக வழிநடாத்திய அஷ்ரக் இஸ்மாயில் சேர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சகோதரர் இன்ஸாம் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
جزاكم الله خيرا ❤️

◽இன்றுடன் எமது (8ஆம் தொகுதி மாணவர்கள்) உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனத்தின் ஐந்து வருட கல்விப் பயணம் நிறைவடைகிறது.(2018/05...
21/12/2023

◽இன்றுடன் எமது (8ஆம் தொகுதி மாணவர்கள்) உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனத்தின் ஐந்து வருட கல்விப் பயணம் நிறைவடைகிறது.
(2018/05/03 - 2023/12/19)

◽அக் கல்விப் பயணத்தில் மறக்க முடியாத பல அனுபவங்களையும், பல படிப்பினைகளையும், பல முக்கியமான ஆளுமைகளையும், பல புது உறவுகளையும் பெற்றவர்களாக பாதிஹ் வளாகத்தை விட்டு கண்ணீர் நிறைந்த கண்களோடும், கவலை நிறைந்த உள்ளங்களோடும் விடை பெற்றுச் செல்கின்றோம்.

◽பாதிஹ் கல்வி நிறுவனத்தைப் பொறுத்தவரையில் ஒவ்வொருவரையும் சிறந்த ஆளுமைகளாக உருவாக்கக்கூடிய ஒரு இடம். கிணற்றுத் தவளைகளாக இருந்த எம்மை சிகரம் நோக்கிய பருந்துகளாக மாற்றிய பாதிஹை ஒருபோதும் மறக்க முடியாது. இன்னும் அது வளர வேண்டும், நாட்டுக்கும், நாட்டுக்கு வெளியிலும் பல சேவைகளை செய்ய வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்கின்றோம்.

◽அதேபோன்று பலருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம். அந்த வகையில் கற்றுத் தந்த ஆசான்கள், மூத்த சகோதரர்கள், உறுதுணையாக இருந்த வகுப்புத் தோழர்கள், தம்பிமார்கள், அதே போன்று வெளியில் இருந்தது பாதிஹ்க்கு உதவி செய்கின்ற தனவந்தர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமாக நன்றியை கூறிக் கொள்கின்றோம்.

جزاكم الله خيرا ❤️

17/12/2023
✨ இன்றைய (08.12.2023) ஜும்ஆ பிரசங்க உரை🎙️◽நடாத்தியவர் : அப்துர் ரஹ்மான் அல் சுதைஸ்◽தலைப்பு : எதிர்காலத்தை திட்டமிடுதல்.◽...
08/12/2023

✨ இன்றைய (08.12.2023) ஜும்ஆ பிரசங்க உரை🎙️

◽நடாத்தியவர் : அப்துர் ரஹ்மான் அல் சுதைஸ்
◽தலைப்பு : எதிர்காலத்தை திட்டமிடுதல்.
◽இடம் : மஸ்ஜிதுர் ரிபாத் - உயர் கல்விக்கான பாதிஹ் நிறுவனம்.

𝐂𝐄𝐑𝐓𝐈𝐅𝐈𝐂𝐀𝐓𝐄 𝐀𝐖𝐀𝐑𝐃𝐈𝐍𝐆 𝐂𝐄𝐑𝐄𝐌𝐎𝐍𝐘 Fathih Institute for Higher Education - 2023 🤍உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனத்தில் இரண்டு வர...
05/12/2023

𝐂𝐄𝐑𝐓𝐈𝐅𝐈𝐂𝐀𝐓𝐄 𝐀𝐖𝐀𝐑𝐃𝐈𝐍𝐆 𝐂𝐄𝐑𝐄𝐌𝐎𝐍𝐘
Fathih Institute for Higher Education - 2023 🤍

உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனத்தில் இரண்டு வருட கற்கை நெறியை (Foundation Studies) பூர்த்தி செய்த 90க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த 1-12-2023 அன்று கலாநிலைய கேட்போர் கூடத்தில் பணிப்பாளர் கலாநிதி எம்.எம். நயீம் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் Z.A.M. Faisal அவர்களும் விஷேட அதிதியாக கொழும்பு Abdulla Traders உரிமையாளர் அல்ஹாஜ் C.M. Nuhu அவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பாதிஹ் நிறுவனத்தின் Board of Management மற்றும் Academic Council உறுப்பினர்கள், பிராந்திய அரச பாடசாலை அதிபர்கள். பிரதேச கல்விசார் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Fathih Institute for Higher Education

◽சென்ற வியாழன் (30.11.2023) அன்று, உயர் கல்விக்கான பாதிஹ் நிறுவனத்தின் இறுதி வகுப்பு மாணவர்களாகிய நாங்கள், மிஷ்காத் ஆய்வ...
03/12/2023

◽சென்ற வியாழன் (30.11.2023) அன்று, உயர் கல்விக்கான பாதிஹ் நிறுவனத்தின் இறுதி வகுப்பு மாணவர்களாகிய நாங்கள், மிஷ்காத் ஆய்வு நிறுவனத்திற்கு ஒரு கள சந்திப்பொன்றை (field visit) மேற்கொண்டோம்.

◽இச்சந்திப்பில், உஸ்தாத் M.A.M. மன்ஸூர் (பணிப்பாளர் - மிஷ்காத் ஆய்வு நிறுவனம்),
அஷ்ஷெய்க் S.A.K. அப்துர் ராஸிக் (தலைவர் - மிஷ்காத் ஆய்வு நிறுவனம்), அஷ்ஷெய்க் M.T.M. ஸப்ரி (தலைவர், பயிற்றுவித்தல் மற்றும் அபிவிருத்தி, அமல் சர்வதேச பாடசாலை), அஷ்ஷெய்க் பாரிஜ் ஜாபிர் (ஒருங்கிணைப்பாளர், மிஷ்காத் ஆய்வு நிறுவனம்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

◽ இச்சந்திப்பில், இலங்கையில் தற்போதைய ஸகாத் நடைமுறை, ஸகாத் நடைமுறையில் உள்ள சிக்கல்கள், சீர் செய்யப்பட வேண்டிய பகுதிகள், தேசிய பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கான வழிகள், போன்றவை தொடர்பாக தெளிவுகளை முன்வைத்தார்கள்.

◽இதன் போது மிஷ்காத் ஆய்வு நிறுவனத்தால் எங்களுக்கு கிடைத்த வரவேற்பும், உபசரிப்பும் மிகவும் சந்தோசத்தை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பிற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தந்த எமது விரிவுரையாளர் A.W.M.பாஸிர் (நளீமி) Mohamed Basir அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்..❤️

𝐔𝐥𝐭𝐫𝐚 𝐋𝐞𝐠𝐞𝐧𝐝𝐬 🤝
02/12/2023

𝐔𝐥𝐭𝐫𝐚 𝐋𝐞𝐠𝐞𝐧𝐝𝐬 🤝

Legends ✌🏻

◽ நேற்றைய தினம் , பாதிஹ் உயர் கல்வி நிறுவனத்தின் இறுதி வகுப்பு மாணவர்கள் ஆகிய நாங்கள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்...
24/11/2023

◽ நேற்றைய தினம் , பாதிஹ் உயர் கல்வி நிறுவனத்தின் இறுதி வகுப்பு மாணவர்கள் ஆகிய நாங்கள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு ஒரு கள சந்திப்பொன்றை (field visit) மேற்கொண்டோம்.

◽ இச்சந்திப்பில், அனுபவப் பகிர்வு, ஊடகத் துறையின் முக்கியத்துவம், சம காலத்தில் ஊடகத்தின் நவீன தொழில்நுட்ப முறைகள், மற்றும் இத்துறையின் சவால்கள் பற்றி, ஊடகப் பயிற்றுவிப்பாளரும் , நிகழ்ச்சி தயாரிப்பாளருமான "இஸ்பஹான் சாப்தீன் " அவர்களோடு கலந்துரையாடப்பட்டது.

◽ அதே போன்று ஊடகத்துறையின் தொடக்கம் முதல் இன்று வரை பயன்படுத்தப்பட்டுவருகின்ற தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அவற்றை கையாளுகின்ற முறைகள் பற்றிய தெளிவையும் மலையக முஸ்லீம் சேவையின் பொறுப்பதிகாரியும், நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான "முஹம்மது ரழீம்" மற்றும், அறிவிப்பாளர் "தயாலினி" ஆகியோர் வழங்கினார்கள்.
இதன்போது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் " அஷ்ஷெய்க் ஸுபைர்" அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகின்றோம்.

✨இன்றைய (24.11.2023) ஜும்ஆ பிரசங்க உரை🎙️✨▫️நடாத்தியவர் : N.M. நுசைருள் இஸ்லாம்▫️தலைப்பு : இஸ்லாத்தில் வரலாற்றின் முக்கிய...
24/11/2023

✨இன்றைய (24.11.2023) ஜும்ஆ பிரசங்க உரை🎙️✨

▫️நடாத்தியவர் : N.M. நுசைருள் இஸ்லாம்
▫️தலைப்பு : இஸ்லாத்தில் வரலாற்றின் முக்கியத்துவம்
▫️இடம் : மஸ்ஜிதுர் ரிபாத் - உயர் கல்விக்கான பாதிஹ் நிறுவனம்.

✨இன்றைய (17.11.2023) ஜும்ஆ பிரசங்க உரை🎙️✨▫️நடாத்தியவர் : அர்சாத் கமால்▫️தலைப்பு : இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுகள்.▫️இ...
17/11/2023

✨இன்றைய (17.11.2023) ஜும்ஆ பிரசங்க உரை🎙️✨

▫️நடாத்தியவர் : அர்சாத் கமால்
▫️தலைப்பு : இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுகள்.
▫️இடம் : மஸ்ஜிதுர் ரிபாத் - உயர் கல்விக்கான பாதிஹ் நிறுவனம்.

Address

152/4 ARM Junaid Mawatha
Kalagedihena

Telephone

+94778530044

Website

Alerts

Be the first to know and let us send you an email when 8"th batch of fathih posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to 8"th batch of fathih:

Shortcuts

Share

Category