Dharussalam Primary School-Thihariya

Dharussalam Primary School-Thihariya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dharussalam Primary School-Thihariya, School, Warapalana Road, Kalagedihena.

நினைவில் ஒரு வருடம்.தாருஸ் ஸலாம் ஆரம்பப் பாடசாலையின் முன்னாள் அதிபர்எமது அன்புக்குரிய  Zafyir ஆசிரியர் வபாத்தாகி இன்றுடன...
17/12/2025

நினைவில் ஒரு வருடம்.

தாருஸ் ஸலாம் ஆரம்பப் பாடசாலையின் முன்னாள் அதிபர்
எமது அன்புக்குரிய Zafyir ஆசிரியர் வபாத்தாகி இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்றது.

ஒரு வருடம் கடந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களை விட்டு
ஒரு நாளும் விலகவில்லை…

உங்கள் பாசமும், வார்த்தைகளும்
எங்கள் வாழ்வின் வழிகாட்டியாக என்றும் வாழ்கின்றன.

தாருஸ் ஸலாம் ஆரம்பப் பாடசாலையின் வளர்ச்சிக்காக
நீங்கள் ஆற்றிய தன்னலமற்ற கல்விச் சேவைகளையும்,
மாணவர் நலனுக்காகச் செய்த அர்ப்பணிப்பையும்
என்றும் நினைவு கூர்ந்து
எமது ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இறைவன்
உங்களை உயர்ந்த ஜன்னத்தில் இணைத்து,
உங்கள் கப்ரை சுவனப் பூஞ்சோலையாக ஆக்குவானாக.
ஆமீன்.

SDEC.

09/11/2025. *பாராட்டு விழா - 2025.* Black & White  நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் இளம் தொழிலதிபர் அல்ஹாஜ் K.M நிஸ்மின் ...
09/11/2025

09/11/2025.

*பாராட்டு விழா - 2025.*

Black & White நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும்
இளம் தொழிலதிபர் அல்ஹாஜ் K.M நிஸ்மின் அவர்களின் பூரண அனுசரணையில்,
திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலையில் 2025ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 2025/11/02ம் திகதி திஹாரிய, லப்சன் வரவேற்பு மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் M.I. அஸ்மின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் அஷ் ஷெய்க் முனீர் முளப்பர் அவர்களும் கௌரவ அதிதியாக கம்பஹா மற்றும் களனி வலய தமிழ் மொழி பிரதிக் கல்விப் பணிப்பாளர் M.T.M.தவ்ஸீர் ஆசிரியர் அவர்களும் விசேட அதிதிகளாக
Black & White நிறுவனத்தின் உரிமையாளர் அல் ஹாஜ் K.M. நிஸ்மின் அவர்களும், Fine Group of Companies பணிப்பாளர் அல் ஹாஜ் M.A.M. இக்ராம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அவ்வாறே பாடசாலை அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலையின் ஆசிரியைகள் , ஊரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் 2025ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மிகச் சிறப்பாக சித்தி அடைந்த மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவை வெற்றிகரமாக செய்து முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய அனுசரணையாளர், பாடசாலை அதிபர்,ஆசியைகள், பெற்றார், SDEC,EDC உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தரம் ஐந்து சகல மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

SDEC.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மற்றும் சிறப்பாகச் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள்...
03/11/2025

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மற்றும் சிறப்பாகச் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை (10.30.2025) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஐ அஸ்மின் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் விசேட அதிதியாக கம்பஹா வலய ஆசிரிய ஆலோசர் ரூமி ஆசிரியர் அவர்களும் பாடசாலை ஆசிரியைகளும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் HR Book Shop உரிமையாளர் அல் ஹாஜ் ரஹ்மதுல்லாஹ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

2025ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய சகல மாணவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

“வெற்றியே எமது பெருமை”2025/09/15 ம் திகதி  நடைபெற்ற கோட்ட மட்ட ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான "சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்ச...
17/10/2025

“வெற்றியே எமது பெருமை”

2025/09/15 ம் திகதி நடைபெற்ற கோட்ட
மட்ட ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான "சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்போம்" என்ற ஆரம்பப் பிரிவு விளையாட்டுப் போட்டியில், தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலையின் தரம் 5 மாணவிகள் *மூன்றாம் இடத்தை* பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்!
அத்தனகல்லை கோட்டத்தில் பல பாடசாலை போட்டியிட்டிருந்த நிலையிலும், மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமை பாராட்டத்தக்கது. அத்துடன் போட்டியில் பங்குபற்றிய ஏனைய தர மாணவ மாணவிகளுக்கும் எமது வாழ்த்துக்கள்.

இவ் வெற்றிக்காக மாணவர்களை அர்ப்பணிப்புடன் தயார் செய்த ஆசிரியைகளுக்கும் , ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்களுக்கும் எமது பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் சார்பாக இதயங்கனிந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

“Victory is Our Pride”

திஹாறிய தாருஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையில் குறுகிய காலத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்  அதிபர் எம் ஐ அஸ்மின் அவர்கள் .20...
16/10/2025

திஹாறிய தாருஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையில் குறுகிய காலத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் அதிபர் எம் ஐ அஸ்மின் அவர்கள் .

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 21 மாணவர்கள் தாருஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையில் சித்தி அடைந்துள்ளார்கள். இந்தப் பாடசாலை வரலாற்றில் 21 மாணவர்கள் மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்திருப்பது இம்முறையாகும். அதேபோல் நூற்றுக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 79 ஆகும். அதேபோன்று 70-க்கும் மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 150 ஆகும். இவ்வாறான சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு அதிபர் அவர்களின் வழிகாட்டல் முன்னுதாரணமாக இருந்தது. மேலும் அதிபர் அவர்களே வகுப்பறைகளுக்கு சென்று ஒவ்வொரு மாணவர்களின் கல்வி மட்டத்தினை அவதானித்து அதற்கேற்ற ரீதியில் மாணவர்களை வழிப்படுத்தியதும் அதிகாலை நேரங்களிலும் மற்றும் மாலை மற்றும் இரவு நேரங்களிலும் மாணவர்களுக்கு தேவையான கல்வி போதிக்கும் நடவடிக்கைகளை அதிபர் அவர்களும் இணைந்து நேரடியாக மாணவர்களுக்கு வழங்கியமை வரவேற்கத்தக்க விடயமாக இருந்தது. அதிபர் அவர்களின் திட்டங்களுக்கு உறுதுணையாக ஆசிரியர்களின் பங்களிப்பும் காணப்பட்டது மிகப் பிரதான விடயமாகும். ஆசிரியர்களும் கால நேரம் பாராது அதிகாலை வேளை மாலை வேலை மற்றும் இரவு வேலைகளிலும் கூட மாணவர்களுக்கு கல்வி போதித்து வழிகாட்டியமையையும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியுடன் ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன். தாருஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையின் கல்வி முன்னேற்றத்திற்கும் அதே போன்று ஏனைய அபிவிருத்தி திட்டங்களுக்கும் அதிபர் அவர்களுக்கு ஒத்துழைப்பை நல்குவோம்.

நன்றி
மனாஸ் மகீன்
நிறைவேற்று பணிப்பாளர்
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்.

எமது பாடசாலையில்  3-E இல் கல்வி கற்கும் மாணவி ‍‌  மொஹமட் ரிfபாத் லீனா நடைபெற்று முடிந்த 2025 இற்குறிய சாஹித்ய இலக்கிய வி...
05/10/2025

எமது பாடசாலையில் 3-E இல் கல்வி கற்கும் மாணவி ‍‌ மொஹமட் ரிfபாத் லீனா நடைபெற்று முடிந்த 2025 இற்குறிய சாஹித்ய இலக்கிய விழா போட்டியில் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அத்தனகல்ல பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் பிரதேச இலக்கியப் போட்டித்தொடரில் சிறுவர் பிரிவில் நாட்டார் பாடல் போட்டியில் கலந்துகொண்டு முதலாம் இடத்தைப்பெற்று அடுத்த கட்ட மாவட்டமட்ட இலக்கிய போட்டித்தொடரில் பல பாடசாலைகளுடன் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை தனதாக்கிக்கொண்டு எமது பாடசாலைக்குப் பெருமையைத் தேடித்தந்துள்ளார்.

*அல்ஹம்துலில்லாஹ்* ✨

எமது பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயிலும் மாணவனும் , M.S.M நிஸார்( ஆசிரியர்) மற்றும் M.N.N ஸின்ஹா தம்பதிகளின் செல்வப் பு...
04/10/2025

எமது பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயிலும் மாணவனும் , M.S.M நிஸார்( ஆசிரியர்) மற்றும் M.N.N ஸின்ஹா தம்பதிகளின் செல்வப் புதல்வருமான M.N ஹானிப், நடைபெற்று முடிந்த தேசிய இலக்கிய விழா (2025) கதை கூறல் போட்டியில் பிரதேச இலக்கியப் போட்டியிலும், மாவட்ட இலக்கியப் போட்டியிலும், முதல் இடத்தை பெற்று தேசியமட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.நடை பெற இருக்கின்ற தேசிய மட்ட போட்டி நிகழ்ச்சியிலும் வெற்றி பெற்று எமது பாடசாலைக்கு புகழை ஈட்டித்ததர அல்லாஹ் அவருக்கு உதவி புரிவானாக என பாடசாலை சார்பாக பிரார்த்தித்துக்கொள்கின்றோம்.

அத்தனகல பிரதேச செயலகம் நடாத்திய சாகித்திய விழா போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற எமது  தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை மாணவ...
03/10/2025

அத்தனகல பிரதேச செயலகம் நடாத்திய சாகித்திய விழா போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற எமது தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை மாணவச் செல்வங்கள் தமக்குரிய சான்றிதழ்களை
பிரதேச செயலகத்தில் பெற்றுக் கொண்டனர். அம் மாணவர்களுக்கு எமது பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் SDEC உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.

03/10/2025

Children's Day Celebration at Dharussalam primary school, Thihariya. (02/10/2025)

2025ம் ஆண்டு சிறுவர் தின கொண்டாட்டம் ஆரம்பம். ஆரம்ப நிகழ்வாக சின்னம் சூட்டப்பட்டு மாணவர் வரவேற்கும் சந்தர்ப்பம்
01/10/2025

2025ம் ஆண்டு சிறுவர் தின கொண்டாட்டம் ஆரம்பம். ஆரம்ப நிகழ்வாக சின்னம் சூட்டப்பட்டு மாணவர் வரவேற்கும் சந்தர்ப்பம்

*கல்விச் சுற்றுலா – 2025*எமது பாடசாலையின் தரம் 5  மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலா ஒன்று நேற்றையதினம் (2025/09/29)திங்கட்...
01/10/2025

*கல்விச் சுற்றுலா – 2025*

எமது பாடசாலையின் தரம் 5 மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலா ஒன்று நேற்றையதினம் (2025/09/29)
திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னவல யானைகள் சரணாலயம்,கதுரட குடை உற்பத்தி நிலையம் (KANDURATA), இலங்காதிலக விகாரை,பேராதனை தாவரவியற் பூங்கா,கண்டி தெப்பக்குளம் (Kandy Lake) போன்ற இடங்களை மாணவர்கள் தரிசித்தனர்.

இச் சுற்றுலாவில் மாணவர்கள் வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும், இயற்கை அழகும், அறிவியல் மையங்களையும் பார்வையிட்டனர்.

இந்த பயணம் மாணவர்களின் அறிவைப் பெருக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு சமூக உணர்வு, ஒற்றுமை மற்றும் வாழ்வியல் திறன்களையும் வளர்த்தது.

இக் கல்விச் சுற்றுலாவை ஏற்பாடு செய்த பாடசாலை அதிபர் ,ஆசிரியைகள் , ஒத்துழைப்பு வழங்கிய SDEC உறுப்பினர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

*கல்விச் சுற்றுலா கற்றலைக் களிப்பாக்கும் ஒரு பயணம்*

✨📚 கல்வி சாதனைச் செய்தி 📚✨அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ2025/09/10 அன்று Wp/GM/Anura M.M.V – யக்கலாவில...
18/09/2025

✨📚 கல்வி சாதனைச் செய்தி 📚✨

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

2025/09/10 அன்று Wp/GM/Anura M.M.V – யக்கலாவில் நடைபெற்ற கம்பஹா வலய மட்ட ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான ஆங்கில பாடல் போட்டியில், எமது தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் திறமையான முறையில் பங்கேற்று, இரண்டாம் இடத்தைப் பெற்று எமது பாடசாலைக்கு புகழைத் தேடித் தந்திருத் கின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்.🏆🎶

கம்பஹா வலயத்தில் பல ஆங்கில மொழி பாடசாலைகள் இடம் பெற்றுள்ள நிலையிலும், அவற்றை மிஞ்சிச் சிறந்த முறையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொள்வது எமது பாடசாலைக்கான மிகப் பெரும் வெற்றியாகும். 🌟👏

இந்த வெற்றிக்காக மாணவர்களை உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் தயார் செய்த ஆசிரியர்களுக்கும், ஆர்வமுடன் பாடுபட்ட மாணவர்களுக்கும் எமது இதயங்கனிந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 💐

📌 இப்படிக்கு,
அதிபர்
திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை

Address

Warapalana Road
Kalagedihena
11875

Telephone

+94332290022

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dharussalam Primary School-Thihariya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dharussalam Primary School-Thihariya:

Shortcuts

Share

Category