09/11/2025
09/11/2025
*நன்றி நவிழல்*
எமது பாடசாலை மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் பெறுபேறு விருத்தியில் தொடர்ந்தும் பல வருடங்களாக முக்கிய பங்களித்து வரும் நிறுவனமான KDS அமைப்பு மற்றும் EDT (Education Development Trust) அமைப்பு இந்த முறையும் உயர்த்தர மாணவர்களுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபா செலவில் அனைத்து பாடங்களுக்கும் சிறப்பு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு பல செயலமர்வுகளை (Seminars) நடத்தித் தந்தமைக்காக பாடசாலை சார்பாகவும் SDEC, OBA சார்பாகவும் எமது மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்துடன் உயர்தர மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் இதற்காக என்றென்றும் கடமைப்பட்டுள்ளனர் ஏனென்றால் எமது பாடசாலை பொருத்தவரையில் எமது பாடசாலை வளர்ச்சியில் எமக்கு அன்றும் இன்றும் என்றும் பல சவால்களுக்கு மத்தியில் உதவி கரம் கொடுத்துக் கொண்டிருக்கும் KDS மற்றும் EDT அமைப்புகளின் உதவியை யாராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.
"கல்வியால் மாத்திரமே சிறந்த ஒழுக்கமுள்ள நல்ல சமூகம் ஒன்றை உருவாக்கலாம்" என்பதை யாவரும் அறிவோம்.
எனவே மாணவர்களின் சிறந்த கல்வி வளர்ச்சிக்காக யார் யாரெல்லாம் தூய எண்ணத்துடன் உடலாலும், பணத்தாலும் உதவி, ஒத்தாசைகளை வழங்கினார்களோ அவர்களுக்கெல்லாம் அல்லாஹுத்தஆலா நிச்சயமாக சிறந்த நற்கூலியை வழங்குவானாக ! ஆமீன்
இப்படிக்கு
அதிபர் உட்பட பாடசாலை நிர்வாகம்
K.M.M.V