29/05/2024
#புதிய_ஆசிரியர்களுக்கு
அண்மையில் நியமனம் பெற்ற #பட்டதாரி_ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துகள்.
அதேநேரம்
1) நீங்கள் எப்போது நியமனக்கடிதத்தை பெற்றாலும் பாடசாலையில் கடமையேற்ற திகதியே உங்களின் முதல் நியமனத்திகதியாக கருத்திற் கொள்ளப்படும்.எனவே உடனடியாக. கடமையேற்பது உங்களுக்கு எப்போதும் அனுகூலமளிக்கும்.
2) உங்களது தொழிற்தகமைக்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தினூடாக பட்டப்பின் கல்வி டிப்ளோமாவை(PGDE) செய்யவேண்டும்.
3) மாறிவரும் உலக ஒழுங்கில் பட்டப்பின் பட்டமொன்று எப்போதும் உங்களை முன்னிலைப்படுத்தும்.கல்விமுதுமாணிor உங்கள் நியமன பாடத்துடன் தொடர்புடைய முதுமாணி கற்கையொன்றை 5 வருடங்களுக்குள் பூர்த்தி செய்தால் சிறப்பு.இல்லாவிட்டாலும் தாமதமாகவேனும் பூர்த்தி செய்யுங்கள்.
4) ஐந்துவருட சேவையின் பின் நீங்கள் இலங்கை அதிபர்சேவை(SLPS) ,இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை(SLTAS),இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவை(SLTES),இலங்கை கல்வி நிர்வாகசேவை(SLEAS) போன்ற பரீட்சைகளை எழுதி கல்விப்புலத்தின் அடுத்த கட்டத்தினுள்ளும் நகரலாம்.அவ்வாறான இலக்குகளிலிருந்தால் அன்றாடம் பாடசாலை நிர்வாக விடயங்களில் நடைபெறும் மாற்றங்களை உள்வாங்கி இற்றைப்படுத்துவது அவசியம். SLTES உங்கள் இலக்காயிருந்தால் UGC ஆல் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனமொன்றில் ஒரு வருட ஆங்கில,சிங்கள,தகவல் தொழினுட்ப டிப்ளோமாக்களை செய்து வைத்திருப்பது நல்லது.
5) இதைவிட வேறு நாடளாவிய சேவைகளுக்கான (SLAS,SLAcS,SLFS,SLSS,SLEAS,SLTES) விண்ணப்பம் கோரப்படும்போது நீங்கள் 28 வயதை கடக்காதிருந்தால்(சிலவேளை 30) அந்த பரீட்சைகளுக்கும் தோற்றி மேலேவர வாய்ப்பை பயன்படுத்தலாம்.
இவ்வளவும் இன்னும் சாதிக்கவேண்டும் எனும் ஆர்வமுள்ளோருக்கான வழிகாட்டலே.வேலை கிடைத்துவிட்டது.இனியென்ன வேணும் என்று Safety zone இற்குள் தங்கள் வளர்ச்சியை மட்டுப்படுத்திக்கொள்வோர் இப்பதிவை தவிர்க்கலாம்.ஆனால் தங்களின் வாண்மைவிருத்தியை மேம்படுத்தாவிடின் இனிவரும் சமுகம் உங்களை பின்தள்ளிவிடுமென்பதை மறவாதீர்கள்.
இவையெல்லாவற்றிற்கும் முதல் மாணவரின் நிலையறிந்து கற்பிக்கும் முன்னாயத்தமுள்ள நல்லாசிரியராயிருந்தால் மற்றெல்லாம் தானாக கைகூடுமென்பது அனுபவ பட்டறிவு
நன்றி Navaneethan Sir