Mahajana Cadets OB

Mahajana Cadets OB ��Never Be Un Prepared ��

தொடர் வெற்றிச்சாதனையத் தொடரும் மகாஜனா.....🫡🤎🤍யா/மகாஜனா கல்லூரி மாணவ பொலிஸ் படையணி மாணவர்கள் 04.05.2026 அன்று முல்லைத்தீவ...
08/05/2026

தொடர் வெற்றிச்சாதனையத் தொடரும் மகாஜனா.....🫡🤎🤍

யா/மகாஜனா கல்லூரி மாணவ பொலிஸ் படையணி மாணவர்கள் 04.05.2026 அன்று முல்லைத்தீவு தேசிய மாணவர் படையணி பயிற்சி முகாமில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் பல தடைகளைத்தாண்டி முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர் 🤝

இவ் வெற்றி மூலம் தொடர்ந்து நான்காவது முறையாகவும் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த படையணி மாணவர்களிற்கும் பயிற்சியாளராக திறம்பட செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தரும்
பழைய மாணவருமான திரு.புருஷோத்மன் அவர்களிற்கும் பொறுப்பாசிரியராக செயற்பட்டு அணியை வழிப்படுத்தும் திரு.அல்வின் ஜென்ஸ் அவர்களிற்கும் நாடகத்தை உரிய நேரத்தில் நெறிப்படுத்த உதவிய ஓய்வு பெற்ற திரு.கிருபா ஆசிரியர் அவர்களுக்கும் எம்முடன் அஜராது பாடுபட்டு தேவையான உதவிகளை வழங்கிய பாடசாலையின் விஞ்ஞான பாட ஆசிரியர் திரு.மணிமாறன் அவர்களிற்கும் நேரகாலம் பாராது பயிற்சிக்கு ஒத்துழைத்த பெற்றோர்களிற்கும் தம்மாலான உதவிகளை வழங்கிய கட்டளை அதிகாரம் பெறாத உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 🫡🤝🥳

தொடர்ந்து ஐந்தாவது தடவையாக தேசிய மட்டத்துக்கு தெரிவாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எமது வெற்றிக்கு பிரார்த்தித்த அனைத்து நல் உள்ளங்களிற்கும் எமது மனமார்ந்த நன்றிகள்🙏☺️

19.03.2026 அன்று மாணவ பொலிஸ் படையணி மாணவர்களிற்கான ஒரு நாள் பயிற்சி பாசறையில் யா/மகாஜனாக்  கல்லூரி, யா/அருணோதயாக் கல்லூர...
20/03/2026

19.03.2026 அன்று மாணவ பொலிஸ் படையணி மாணவர்களிற்கான ஒரு நாள் பயிற்சி பாசறையில் யா/மகாஜனாக் கல்லூரி, யா/அருணோதயாக் கல்லூரி மற்றும் யா/பண்டதரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றி பயிற்சி பெற்றனர்.

யா/மகாஜனா கல்லூரியின் மாணவர்களான T.Thulasigan மற்றும் K.Chachchin ஆகியோர் 17.03.2026 அன்று யாழ் இந்து கல்லூரியில் நடைபெற...
20/03/2026

யா/மகாஜனா கல்லூரியின் மாணவர்களான T.Thulasigan மற்றும் K.Chachchin ஆகியோர் 17.03.2026 அன்று யாழ் இந்து கல்லூரியில் நடைபெற்ற மாணவ சிப்பாய் படையணியின் கட்டளை அதிகாரம் பெறாத உத்தியோகத்தர்களிற்கான பதவி உயர்வு விழாவில் Seargent பதவியில் இருந்து CQMS பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டனர்.
எமது பாடசாலை மாணவ பொலிஸ் படையணி மாணவர்கள் தொடர்ந்து உயர் பதவிகளிற்கு தகுதி பெறுகின்றமை குறிப்பிடத் தக்கது.
இதற்கு அயராது உழைத்த மாணவர்களிற்கும் வழிப்படுத்திய ஆசிரியர்களிற்கும் பாராட்டுகளும் நன்றிகளும்..

03/03/2026
🇱🇰Independence Dqy ___  04
04/02/2026

🇱🇰Independence Dqy ___ 04

28/01/2026

வணக்கம்,
வலிகாமத்தின் அடையாளமாக விளங்கும் யா/மகாஜனா கல்லூரியில் தேசிய மாணவ படையணியின் அத்தியாயமானது பொலிஸ் படையணிப் பிரிவாக பழைய மாணவனும் பொலிஸ் உத்தியொகத்தருமான திரு.புருஷோத்தமன் அவர்களால் 2022 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலே தேசியம்வரை முன்னேறி ஓர் வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. அத்துடன் நிறுத்தாது அடுத்த அடுத்த ஆண்டுகளில் [2023,2024,2025] மாகாணத்தில் முதலிடத்தை பெற்று தொடர் வெற்றிகளை பதிவு செய்து தேசியத்திலும் சிறப்பாக செயற்பட்டு அகில இலங்கை ரீதியில் மகாஜனா கல்லூரியின் பெயரை நிலை நிறுத்தியது.
சிரேஷ்ட கட்டளை அதிகாரம் பெறாத உத்தியொகத்தர்களை [SNCO] உருவாக்குவதிலும் சிறப்புடனே திகழ்ந்தது மகாஜனாவின் பொலிஸ் மாணவ படையணி. RSM,RQ,CSM,CQ போன்ற 4 வகை பதவிகளையும் கொண்ட மாணவர்களை உருவாக்கியது. அத்துடன் 2024 ம் மற்றும் 2025 ம் ஆண்டுகளில் படையணியின் உயர் பதவியான RSM ஆக தெரிவு செய்யப்பட்டவர்கள் மகாஜனா மாதவின் மாணவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சாதனை பயணத்தில் பலர் எம்முடன் இணைந்து செயலாற்றினார்கள். பொறுப்பாசிரியர்களாக செயற்படுபவர்களான திரு ந.துர்க்காதபன் மற்றும் திரு சி.சிவகரன் ஆகியோரின் அர்ப்பணிப்பும் ஆற்றலும் படையணி வெற்றியின் ஓர் தவிர்க்கப்பட முடியாத ஒன்றாக உள்ளது.

மேலும் பாடசாலையின் நாடகத்துறை ஆசிரியர்களான திரு அயூரன், திரு தவசோதிநாதன் மற்றும் ஆசிரியை இமாயினி ஆகியோர் குறுகிய காலங்களில் நாடகங்களை தயார்படுத்தி வெற்றிகளில் தங்கள் பங்களிப்பையும் கொடுத்துள்ளனர்.

சாதனைப் பயணம் தொடரும்.....🤎🤍

Address

J/Mahajana College/Tellippalai
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahajana Cadets OB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category