Library of Tamilology

Library of Tamilology Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Library of Tamilology, Educational Research Center, Ramanathan Road, Jaffna.

தமிழ்த்தூது⁣⁣அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக் காட்சிகள் (𝟭𝟵𝟲𝟲-𝟭𝟵𝟴𝟭)யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆறாவது ...
19/08/2025

தமிழ்த்தூது⁣
⁣அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக் காட்சிகள் (𝟭𝟵𝟲𝟲-𝟭𝟵𝟴𝟭)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆறாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டினையொட்டி, அதன் ஒரு பகுதி நிகழ்வாக இடம்பெறும் ஒளிப்படக் காட்சி.

இடம் : கலைக்கூடம்,
நுண்கலைத்துறை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

காலம்: 𝟏𝟓.𝟎𝟖.𝟐𝟎𝟐𝟓 (வெள்ளிக்கிழமை) தொடக்கம் ஐந்து வேலை நாட்கள்
நேரம்: 𝟗.𝟎𝟎-𝟒.𝟎𝟎

கருத்துருவாக்கமும் ஒழுங்கமைப்பும்
தமிழியல் நூலகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் நோக்கில் நம்மவர் முயன்ற வரலாறு காண அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

#தமிழ்த்தூது
#அனைத்துலகத் #தமிழாராய்ச்சி #மாநாட்டுக் #காட்சிகள் #தமிழியல் #நூலகம்
#யாழ்ப்பாணப் #பல்கலைக்கழகம்

Calling Application for Diploma in Balapandithar – Batch 02தமிழ்ப் பாலபண்டிதர் தகைமைச் சான்றிதழ் கற்கைநெறி - 2024/2025(அ...
25/06/2025

Calling Application for Diploma in Balapandithar – Batch 02
தமிழ்ப் பாலபண்டிதர் தகைமைச் சான்றிதழ் கற்கைநெறி - 2024/2025(அணி-II)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,ஆரியதிராவிடபாஷாபிவிருத்திச் சங்கத்துடன் இணைந்து,அதன் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம் ஊடாக நடாத்தும்
தமிழ்ப் பாலபண்டிதர் தகைமைச் சான்றிதழ் கற்கைநெறி - 2024/2025(அணி-II)
தமிழ்ப் பாலபண்டிதர் தகைமைச் சான்றிதழ் கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து கோரப்படுகின்றன.
அனுமதிக்கான தகைமைகள்
1.யாழ்ப்பாண ஆரியதிராவிடபாக்ஷாபிவிருத்திச் சங்கத்தினது தமிழ்ப் பாலபண்டிதர் தகைமைக்கான பிரவேச பரீட்சையிற் சித்தி பெற்றிருத்தல்.
அல்லது
2.சைவப் புலவர் அல்லது சைவசித்தாந்த பண்டிதராயிருத்தல்.
அல்லது
3.க.பொ.த உயர்தரப்பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தி பெற்றிருப்பதுடன் தமிழ் மொழிப்பாடத்தில் திறமைச் சித்தி (C) பெற்றிருத்தல்.
அல்லது
4.க.பொ.த உயர்தரபரீட்சையில் எந்தவொருபாடத்துறையிலாயினும் பல்கலைக் கழகத்திற்கு அனுமதி பெறுவதற்கான தகுதி பெற்றிருத்தல்.
அல்லது
5.ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அல்லது தேசிய கல்வியியற் கல்லூரி முதலான அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது நிறுவனம் ஒன்றில் பயிற்றப்பட்ட ஆசிரியராயிருத்தல்.
கற்கை நெறிக்கானகாலம் - ஒரு வருடம் (இரண்டு பருவங்கள்)
கற்கை நெறிமூலம் - வார இறுதி நாட்களில் நேரடி வகுப்புக்கள்
விண்ணப்பமுடிவுத் திகதி
24.07.2025
விண்ணப்பிக்கும் முறை
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் இணையத்தளத்தில் (www.codl.jfn.ac.lk பதிவினை மேற் கொள்ள முடியும். எந்தவொரு மக்கள் வங்கி கிளையிலும் (890022780003288) எனும் வங்கி கணக்கிலக்கத்திற்கு விண்ணப்ப கட்டணமாக 200.00 ரூபாவினை செலுத்தி அதன் பற்றுச்சீட்டின் மூலப்பிரதியினை இணையத்தள முகவரியில் பதிவேற்றம் செய்யப்படுவதுடன் விண்ணப்பத்தின் மூலப்பிரதியை நேரடியாக அல்லது தபால் மூலமாக "சிரேஷ்ட உதவிப்பதிவாளர், கிறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம், யாழ்பல்கலைக்கழகம், திருநெல்வேலி" எனும் முகவரிக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பபடிவங்களின் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் "தமிழ்ப் பாலபண்டிதர் தகைமைச் சான்றிதழ் கற்கைநெறி 2024/2025 (அணி-II)" எனக்குறிப்பிட்டு அனுப்பிவைக்கவும்.

தமிழ் பாலாபண்டிதர் தகைமைச் சான்றிதழ் கற்கை நெறிக்கான விண்ணப்ப படிவம்
https://docs.google.com/forms/d/1xgCbxImf4PgKuNu5Z4m_pgc9Bq9WUG1QuBP6R9o_ivY/edit?ts=685a1a4e

தமிழியல் நூலகத் திறப்புவிழாதேசிய மற்றும் சர்வதேச ரீதியில்; காணப்படக் கூடிய தமிழியல் சார்ந்த தொகுப்புக்களைச் சேகரித்துப் ...
28/12/2024

தமிழியல் நூலகத் திறப்புவிழா

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில்; காணப்படக் கூடிய தமிழியல் சார்ந்த தொகுப்புக்களைச் சேகரித்துப் பாதுகாக்க வேண்டும், தமிழியல் மாணவர்களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி முதலான அறிவுசார்; செயற்பாடுகளுக்கு உதவும் வகையிலமைந்த நூலகத்தை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, நன்கொடையாளர் சிங்கப்பூர் கந்தையா கார்த்திகேசன் நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் தமிழியல் நூலகப்பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இந்நூலகப் பிரிவைத் திறந்து வைத்தார். நிகழ்வில் பேரவை உறுப்பினர்கள், பீடாதிபதிகள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

தமிழியல் நூலகத் திறப்புவிழா -  ‘வாசி, சிந்தி, உயர்’ என்ற தெருவெளி நாடகம்சேர் பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று, கட்புலக் ...
16/11/2024

தமிழியல் நூலகத் திறப்புவிழா - ‘வாசி, சிந்தி, உயர்’ என்ற தெருவெளி நாடகம்

சேர் பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று, கட்புலக் கலைகள் பீடத்தினுடைய நாடகம் மற்றும் அரங்காற்றுகைக் கலைகள் துறையின் விரிவுரையாளர் தவச்செல்வி ராசன் அவர்களின் நெறியாள்கையில் வாசிப்பின் அவசியம், சுயகற்றல், சுய சிந்தனை மற்றும் தனிநபர் ஆளுமை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் யாழ்ப்பாண பொது நூலகத்துடன் இணைந்து நெறிப்படுத்தப்பட்ட ‘வாசி, சிந்தி, உயர்’ என்ற தெருவெளி நாடகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழியல் நூலக முன்றலில் ஆற்றுகை செய்யப்பட்டது.

தமிழர் அனைவருக்குமான தமிழியல் நூலகம்
13/11/2024

தமிழர் அனைவருக்குமான தமிழியல் நூலகம்

தமிழியல் நூலகத் திறப்புவிழா - சிங்கப்பூர் எஸ்டேட் கந்தையா கார்த்திகேசனின் உருவப்படம் திரைநீக்கம், நினைவுநாள் மரம் நாட்டல...
13/11/2024

தமிழியல் நூலகத் திறப்புவிழா - சிங்கப்பூர் எஸ்டேட் கந்தையா கார்த்திகேசனின் உருவப்படம் திரைநீக்கம், நினைவுநாள் மரம் நாட்டல்

புதிதாக அமைக்கப்பட்ட தமிழியல் நூலகத்தில், தமிழியல் நூலக கட்டிட புனரமைப்பு உட்பட தமிழியல் நூலக செயற்றிட்டத்திற்கான முழுமையான நிதிப்பங்களிப்பை வழங்கிய கொடை வள்ளல் சிங்கப்பூர் எஸ்டேட் கந்தையா கார்த்திகேசனின் உருவப்படம் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. கந்தையா கார்த்திகேசனின் தாராள சிந்தையை நினைந்து ஆரிய திராவிட பாஷா பிவிருத்திச் சங்கத்தின் செயலாளரால் நன்றி நவிலல் வாழ்த்துப்பா இசைக்கப்பட்டது. தமிழியல் நூலக முன்றலில் துணைவேந்தர் மற்றும் தமிழியல் நூலகச் செயற்றிட்ட இணைப்பாளர் ஆகியோரால் நினைவுநாள் மரம் நாட்டப்பட்டது. “தமிழியல் நூலகவாசலிலே கொன்றைமரம் பொன்பூச்சொரியவேண்டும்” என்ற ஆதர்சத்தோடு இந்த மரம் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.

தமிழியல் நூலகத் திறப்புவிழாயாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது தமிழியல் சார் ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் வகையிலமைந்த விசேட நூலக...
06/11/2024

தமிழியல் நூலகத் திறப்புவிழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது தமிழியல் சார் ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் வகையிலமைந்த விசேட நூலகப் பிரிவொன்றை சிங்கப்பூர் கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்பில் நிறுவியுள்ளது. தமிழியல் நூலகம் எனப் பெயர் பெறும் இப்பிரிவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்திற்கும் அப்பால் விரிந்த தளத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குரியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் 29.10.2024 அன்று வைபவரீதியாக வாசகர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

தமிழியல் நூலகத் திறப்புவிழா கட்டுரை
01/11/2024

தமிழியல் நூலகத் திறப்புவிழா கட்டுரை

27/10/2024

தமிழியல் நூலகத் திறப்புவிழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது தமிழியல் சார் ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் வகையிலமைந்த விசேட நூலகப் பிரிவொன்றை சிங்கப்பூர் கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்பில் நிறுவியுள்ளது. தமிழியல் நூலகம் எனப் பெயர் பெறும் இப்பிரிவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்திற்கும் அப்பால் விரிந்த தளத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குரியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் 29.10.2024 அன்று வைபவரீதியாக வாசகர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுகிறது.

𝐆𝐫𝐚𝐧𝐝 𝐎𝐩𝐞𝐧𝐢𝐧𝐠 𝐨𝐟 𝐋𝐢𝐛𝐫𝐚𝐫𝐲 𝐨𝐟 𝐓𝐚𝐦𝐢𝐥𝐨𝐥𝐨𝐠𝐲யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது தமிழியல் சார் ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் வகையிலமைந்த...
26/10/2024

𝐆𝐫𝐚𝐧𝐝 𝐎𝐩𝐞𝐧𝐢𝐧𝐠 𝐨𝐟 𝐋𝐢𝐛𝐫𝐚𝐫𝐲 𝐨𝐟 𝐓𝐚𝐦𝐢𝐥𝐨𝐥𝐨𝐠𝐲

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது தமிழியல் சார் ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் வகையிலமைந்த விசேட நூலகப் பிரிவொன்றை சிங்கப்பூர் கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்பில் நிறுவியுள்ளது. தமிழியல் நூலகம் எனப் பெயர் பெறும் இப்பிரிவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்திற்கும் அப்பால் விரிந்த தளத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குரியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் 29.10.2024 அன்று வைபவரீதியாக வாசகர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுகிறது.

Address

Ramanathan Road
Jaffna
40000

Opening Hours

Monday 08:30 - 06:00
Tuesday 08:30 - 06:00
Wednesday 08:30 - 06:00
Thursday 08:30 - 06:00
Friday 08:30 - 06:00
Saturday 08:30 - 06:00
Sunday 08:30 - 06:00

Alerts

Be the first to know and let us send you an email when Library of Tamilology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share