JaffnaAviation

JaffnaAviation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JaffnaAviation, Aviation school, Jaffna.

Aviation and tourism related updates about Jaffna, North & North Central Provinces, Sri Lanka. யாழ், வடக்கு, வட மத்திய இலங்கையின் விமானம், சுற்றுலா சார்ந்த தகவல்கள்

15.12.2025யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் புதிய பயணியர் முனையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. புதி...
15/12/2025

15.12.2025
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் புதிய பயணியர் முனையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
புதிய முனையத்திற்கான அடிக்கலினை இலங்கை விமான நிலைய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர், யாழ்ப்பாண விமான நிலையத்தின் சிரேஷ்ட முகாமையாளர் மற்றும் பொறியியலாளர் ஆகியோரால் சர்வமத வழிபாடுகளோடு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் விமானநிலைய ஆணைய ஊழியர்கள் சுங்கம் மற்றும் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள், விமான பயணியர் மற்றும் பத்திரிகை நிருபர்கள் கலந்து கொண்டனர்.
மிகவும் எளிமையாக முறையில் அடிக்கல் நாட்டப்பட்ட இவ் பயணியர் முனையம் இன்னும் இரண்டு வருட காலத்திற்குள் சுமார் 700 மில்லியன் மதிப்பில் கட்டப்பட்டு பயணிகள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10.12.2025இன்றைய நாள் இலங்கை விமானத்துறை வரலாற்றின் மிக முக்கியமான நாள். 78 வருடங்களுக்கு முன்பு (10.12.1947) இலங்கையை ச...
10/12/2025

10.12.2025

இன்றைய நாள் இலங்கை விமானத்துறை வரலாற்றின் மிக முக்கியமான நாள். 78 வருடங்களுக்கு முன்பு (10.12.1947) இலங்கையை சேர்ந்த விமான நிறுவனம் தனது முதல் சர்வதேச விமான பயணியர் சேவை இலங்கை மற்றும் இந்தியாவிற்கும் இடையே ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை விமானத்துறை வரலாற்றில் முதல் சர்வதேச விமான சேவை ஆரம்பித்து யாழ்ப்பாண விமான நிலையம். இவ் வரலாறு யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு என்றுமே உரித்தானது.

Today is a very important day in the history of Sri Lankans aviation. 78 years ago, the Sri Lanka flag carrier started its first international passenger service between Sri Lanka and India. Jaffna Airport was the first international flight in the history of Sri Lankans aviation. This history belongs to Jaffna Airport forever.

08/12/2025

08.12.2025

பலாலி வானூர்தி நிலயத்தில் தரை இறங்கிய அமெரிக்க வான்படை சரக்கு வானூர்தி.

இன்றைய தினம் காலை பலாலி வானூர்தி நிலையத்தை வந்தடைந்த அமெரிக்காவின் நிவாராண பொதிகளை சுமந்த வான்படை வானூர்தி.

யாழ்ப்பாணம் சர்வதேச வானூர்தி நிலையத்தில் அமெரிக்காவின் நிவாரண பொதிகளுடன் கூடிய அமரிக்காவின் US Air Force C-130Js வான்படை சரக்கு வானூர்தி தரையிறங்கியது.

நேற்று கட்டுநாயக்க வந்தடைந்த இந்த வானூர்தி வடக்குக்கான நிவாரணப்பொதிகளை இறக்குவதற்காக இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திட்வா புயயால் ஏற்பட்ட காலநிலை சீரின்மையால் நிறுத்தப்பட்ட சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி நகரங்களிற்கும் யாழ்ப்பாணத்திற...
01/12/2025

திட்வா புயயால் ஏற்பட்ட காலநிலை சீரின்மையால் நிறுத்தப்பட்ட சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி நகரங்களிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையேயான விமான சேவை வானிலை சுமுகமான நிலையில், இன்றைய தினம் (01) சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை மீண்டும் ஆரம்பம் ஆனது.

25/11/2025
2026ம் ஆண்டில் உலகில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் இடம்பிடித்தது  #யாழ்ப்பாணம்உலகளாவிய பயண ஊடக நிறுவனமான லோன்லி பிளானட...
29/10/2025

2026ம் ஆண்டில் உலகில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் இடம்பிடித்தது #யாழ்ப்பாணம்

உலகளாவிய பயண ஊடக நிறுவனமான லோன்லி பிளானட்டின் ‘Best in Travel 2026’ என்ற இத்தாலிய பதிப்பால், 22 அக்டோபர் 2025 அன்று மிலனில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக இலங்கையின் யாழ்ப்பாணம், உலகில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் ஒன்றாகப் பெயரிடப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்த சர்வதேச அங்கீகாரம் யாழ்ப்பாணத்திற்கு ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது, இது ஒரு தனித்துவமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு இடமாக நாட்டின் உலகளாவிய ஈர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

யாழ்ப்பாணத்தின் தேர்வு அதன் கலாச்சார மற்றும் வரலாற்று செழுமையை எடுத்துக்காட்டுகிறது. மற்றும் பிராந்திய பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளின் விளைவாகவும் இது காணப்படுகிறது.

இந்த தனித்துவமான அங்கீகாரம் யாழ்ப்பாணத்தின் சர்வதேச ஈர்ப்பை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்த உதவும்.

இதற்கு அச்சாரமாக யாழ்ப்பாணத்தை தனது நேரடி விமானங்கள் மூலம் தென்னிந்தியாவின் திருச்சி மற்றும் சென்னை மாநகரங்களை இணைக்கின்றது.

12/09/2025
15/07/2025
29/06/2025
Today, a private educational center in Jaffna organized an educational tour. As part of the tour, students and teachers ...
15/06/2025

Today, a private educational center in Jaffna organized an educational tour. As part of the tour, students and teachers visited the Jaffna airport and witnessed the landing and parking of the flight from Trichy to Jaffna. Congratulations to the education centre.

மீண்டும் மீண்டும்...சென்னை மற்றும் திருச்சி விமானங்கள் ஓரே பார்வையில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில். இன்று 07.06.2025 கல...
07/06/2025

மீண்டும் மீண்டும்...
சென்னை மற்றும் திருச்சி விமானங்கள் ஓரே பார்வையில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில். இன்று 07.06.2025 கல்விச் சுற்றுலாவாக யாழ்ப்பாணம் விமான நிலையம் வருகைதந்த முன்பள்ளி மாணவர்களுக்கு ஓர் கண்கொள்ளாக் காட்சியாகும். இரண்டு விமானங்களை ஓரே நேரத்தில் கையாளும் திறனை குறைந்த மனித வலுவோடு செயற்படுத்தும் விமான நிலையங்கள் ஆணைக்குழுவிற்கு வாழ்த்துக்கள்.

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when JaffnaAviation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share