துளிர்-Thulir-Science with S.Ravichandran

துளிர்-Thulir-Science with S.Ravichandran துளிர்விடும் எம் நாட்டின் எதிர்கால சந்ததியினை விஞ்ஞானத்தில் வியாபித்திருக்கச்செய்தல்
(1)

பகிருங்கள் பலரும் பயன்பெறுவர்
21/08/2026

பகிருங்கள் பலரும் பயன்பெறுவர்

பகிருங்கள் பலரும் பயன்பெறட்டும் #இலங்கை சுகாதார அமைச்சின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்கான துணை மருத்துவப் பயிற்சிப் பாடநெறிகளுக...
12/08/2026

பகிருங்கள் பலரும் பயன்பெறட்டும்
#இலங்கை சுகாதார அமைச்சின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்கான துணை மருத்துவப் பயிற்சிப் பாடநெறிகளுக்கு (Para Medical Training Courses) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதன் முழுமையான விவரங்கள் இதோ:👇👇

முக்கிய விவரங்கள்:
பாடநெறிகள்: மொத்தம் 08 பாடநெறிகள் உள்ளன:

1. பொது சுகாதார பரிசோதகர் (Public Health Inspector - PHI)
2. பல் தொழில்நுட்பவியலாளர் (Dental Technician)
3. மருந்தாளர் (Dispenser)
4. பாடசாலை பல் சிகிச்சை நிபுணர் (School Dental Therapist)
5. சுகாதார பூச்சியியல் அதிகாரி (Health Entomology Officer)
6. இதய மின்னலை வரைவாளர் (Electro Cardiographer)
7. மூளை மின்னலை வரைவாளர் (Electro Encephalographer)
8. செயற்கை அவயவ மற்றும் ஊன்றுகோல் தொழில்நுட்பவியலாளர் (Prosthetist and Orthotist)

விண்ணப்ப முடிவுத் திகதி: 31 ஆகஸ்ட் 2026

அரசாங்க வர்த்தமானி (Gazette): இல. 2501 (07 ஆகஸ்ட் 2026)

தகுதிகள்:
கல்வித் தகுதி: க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான (Biological Science) பிரிவில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

ஆண்டு: 2019, 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சையில் தோற்றியவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
இதர தகுதிகள்: பாடநெறிக்கு ஏற்ப வயது எல்லை,

பாடங்கள் மற்றும் ஏனைய தகுதிகள் மாறுபடும். எனவே, விண்ணப்பிக்கும் முன் உத்தியோகபூர்வ வர்த்தமானியை (Gazette) சரிபார்ப்பது மிக முக்கியம்.
முக்கிய குறிப்பு:

ஒவ்வொரு பாடநெறிக்கும் பயிற்சி காலம் மாறுபடும் (சுமார் 1 முதல் 3 ஆண்டுகள் வரை இருக்கலாம்).
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறை மற்றும் மேலதிக நிபந்தனைகளைத் தெரிந்துகொள்ள,

நீங்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் உள்ள வர்த்தமானி அறிவித்தலை முழுமையாக வாசிக்கவும்.
தற்போது விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் முறை

(Online/Manual) 👇👇

https://openuniversity.lk/application-for-para-medical-training-courses-2026-ministry-of-health-sri-lanka

குறித்த இறுதி அறிவிப்புகள் அந்த இணையதளத்தில் அவ்வப்போது புதுப்பிக்கப்படும், எனவே அதைத் தொடர்ந்து கவனிக்கவும்.
மேலதிக தகவல்களைப் பெறவும், வர்த்தமானி அறிவித்தலைப் பதிவிறக்கம் செய்யவும் அந்த இணையதளத்தை அவ்வப்போது பார்வையிடவும்.

தரம்11 | விஞ்ஞானம் | இரண்டாம் தவணை | பகிருங்கள் உங்களால் பலரும் பயன்பெறட்டும்..நீங்களும் பயன்பெற முப்பதாயிரம் followers ...
18/07/2026

தரம்11 | விஞ்ஞானம் | இரண்டாம் தவணை | பகிருங்கள் உங்களால் பலரும் பயன்பெறட்டும்..
நீங்களும் பயன்பெற முப்பதாயிரம் followers பின்தொடரும் எமது பக்கத்தினை follow செய்யுங்கள்👉 https://www.facebook.com/share/1EJZmLRygw/?mibextid=wwXIfr

28/06/2026

பரீட்சைக்காலத்தினை சிறப்பாக எதிர்கொள்வதற்கான கல்வியை எமது YouTube தளத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள் உங்கள் ஆதரவுகளை இன்றுபோல் என்றும் தொடர எமது YouTube channel இனை subscribe செய்ய மறவாதீர்கள்

தரம் 6 காணொளிகளின் தொகுப்பு -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePXWZ1Ew1FqKlSomlVVKElmx

தரம் 7 காணொளிகளின் தொகுப்பு -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePXeUjszRK9FQ3dd0sog-B9s

தரம் 8 காணொளிகளின் தொகுப்பு -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePUCghkpNOU-ZvcVmcY1CS7Q

தரம் 9 காணொளிகளின்தொகுப்பு -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePXOCSKE57GBSs8wjES4jatN

தரம் 10 காணொளிகளின் தொகுப்பு -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePWkYCd8rsLqcftmhZZq30yB

தரம் 11 காணொளிகளின் தொகுப்பு -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePXrjndFjqjp8Nq2ajH9U0gL

போட்டிப்பரீட்சைகளில் வினவப்படும் விஞ்ஞான பொது அறிவு தகவல்கள் தொகுப்பு -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePVuuZ2w4RsNDXNCv9LJmRdX

பரீட்சைகளில் வினவப்படும் விஞ்ஞான விளக்கங்களின் தொகுப்பு-https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePVDjXAAldwHc116G85KsZwD

தரம் 6-11 வரையான பரிசோதனைக்காணொளி-https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePWhJGVd0JdgJ7QbOG4kK80c

தரம் 10,11 உயிரியல் -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePXt6uMfLfzDopBArtGnuop1

தரம் 10,11 பெளதீகவியல் -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePWF0HqnzMTJVv012P-3TXFv

தரம் 10,11 இரசாயனவியல் -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePWjv5J3uvJEYPdA_8f28z4N

தரம் 10 பரிசோதனை காணொளிகளின் தொகுப்பு -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePUk9Eq84IbNPDQNGfhzLFVI

இலங்கையின் பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலங்கள் -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePXe7eKTrahD_ULnejNLpgAa

வீட்டிலிருந்தே சுலபமாக கற்கும் நுட்பங்கள் -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePVJGDLAK1mWdPemrwI_VV_O

போதிய ஆய்வுகூட, ஆளணி வளங்கள் இன்றி கல்விக்காக ஏங்கும் எம் சிறார்களிடம் இத் தொகுப்பை கொண்டு சேர்ப்பதற்காக பலரின் உழைப்பில் உருவான இக் காணொளிகளின் தொகுப்பை Whatsup , viber , Facebook குழுக்களில் இதனை share செய்ய மறக்காதீர்கள்

𝟒வது ஆண்டிலும் முல்லை விடுவமடு மண்ணில்…விரைவாக பெறுபேறுகளை அதிகரிக்கும் 𝐎\𝐋 விஞ்ஞான கருத்தரங்கு தொடர்…அனுமதிகள் வழங்கப்ப...
25/06/2026

𝟒வது ஆண்டிலும் முல்லை விடுவமடு மண்ணில்…விரைவாக பெறுபேறுகளை அதிகரிக்கும் 𝐎\𝐋 விஞ்ஞான கருத்தரங்கு தொடர்…அனுமதிகள் வழங்கப்படுகிறது விரைவாக முற்பதிவுகளை மேற்கொள்ளுங்கள்…. பகிருங்கள் தேவையுடையோர் பயன்பெறட்டுமே!

22/06/2026

தரம்6-11 | விஞ்ஞானம் | புரதத்திற்கான சோதனை | பகிருங்கள்பலரும்பயன்பெறுவர்

. #பாடசாலைகளில் உயர் தரம்( A/L) கற்பதற்கு மாணவர்களின் O/L பெறுபேறு எவ்வாறு அமையவேண்டும் பல சுற்றறிக்கைகள் திருத்தங்கள் உ...
20/06/2026

. #பாடசாலைகளில் உயர் தரம்( A/L) கற்பதற்கு மாணவர்களின் O/L பெறுபேறு எவ்வாறு அமையவேண்டும் பல சுற்றறிக்கைகள் திருத்தங்கள் உள்ளதால் தெளிவுக்காக சில தகவல்கள் :-
ஏதும் மாற்றங்கள் இருந்தால் நமது மாணவ செல்வங்களினை சரியான வழிப்படுத்தலின் கீழ் அவர்களின் எதிர்காலம் சிறப்புற அமைய உங்களது கருத்தினை எதிர்பார்த்தே இக்கட்டுரையினை வரைகின்றேன்
@ O/L pass என்பது 6 S ஆகும் பல்கலைக் கழகம் செல்வதற்கான தகுதியும் இதுவாகும் ஒரு மாணவன் 6 S பெற்றால் கணிதம் W எனில் அடுத்து வரும் 2 ஆண்டுகளுக்கிடையில் கணித பாடத்தில் S எடுத்தால் O/L pass என்ற தகுதியினைப் பெறுவார் O/L 6 பாடம் pass தமிழ் பாடம் W எனில் அடுத்து வரும் 1 வருடத்துக்கிடையில் O/L பரீட்சையில் S பெற்றால் அம் மாணவன் O/L pass இம் மாணவர்கள் பாடசாலையில் Vocational stream இல் O/L எல்லாப்பாடங்களிலும் W என்றாலும் கற்க முடியும் மாறாக 6 S எடுத்தாலும் ஏனைய stream இல் கற்க முடியாது
@ பாடசாலைகளில் இணைந்து A/L
,.....................................................................
கற்பதற்கான நிபந்தனைகள் என்ன ......................................................................
1. எந்த stream இலும் கற்பதற்கான குறைந்த பட்ச நிபந்தனை O/L பரீட்சையில் 3 C உம் 3 S உம் ஆகும் இதில் கணிதமும் தமிழும் W இல்லாதிருத்தல் வேண்டும்

2. Bio கற்பதாயின் கணிதம் தமிழ் உட்பட 3 C உம் 3 S உடன் விஞ்ஞான பாடத்தில் C அவசியமாகும்

3. Maths கற்பதாயின் 3 C 3 S உடன் கணித பாடத்தில் C அவசியமாகும் விஞ்ஞான பாடத்தில் S அவசியமாகும்

4. Commerce கற்பதாயின் 3 C 3 S உடன் அச் C சித்தியில் வர்த்தகப் பாடம் அல்லது முயற்சியாண்மைக் கற்கை அல்லது கணித அல்லது வரலாறு பாடத்தில் C அவசியமாகும்

5. Arts கற்பதாயின் 3 C 3 S அவசியமாகும் அல்லது கணிதம் தமிழ் pass பண்ணி 2 C 4 S இருந்தால் 3 வது C இற்காக SBA இல் கணிதம் தமிழ் தவிர்ந்த ஏனைய S எடுத்த பாடத்தில் 3 இருந்தால் கலைப் பிரிவில் கற்க முடியும் எப்பாடத்தினையும் எடுத்துக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை டாப்பில் பெயரினை எழுதி A/ L பரீட்சைக்கு பாடசாலையின் ஊடாக விண்ணப்பம் செய்ய முடியும்

3 C 3 S உடன் தமிழ் பாடம் W ஆயின் அடுத்து வரும் 1 வருடத்திற்குள் தமிழ் பாடத்தில் O/L பரீட்சையில் S எடுத்தால் போதுமானது அல்லது 3 C 3 S உடன் தமிழ் பாடத்தில் S எடுத்து கணிதப்பாடத்தில் W எடுத்தால் அடுத்து வரும் 2 வருடத்திற்குள் O/L பரீட்சையில் S எடுத்தால் போதுமானது தமிழ் அல்லது கணிதம் W எடுத்த மாணவர்களின் பெயரினை Pending டாப்பில்தான் எழுதவேண்டும் மற்றய வழமையான டாப்பில் எழுத முடியாது இம் மாணவர்கள் அடுத்து வரும் O/ L பரீட்சையில் pass பண்ணி results இனை பாடசாலையில் காண்பித்த பிற்பாடே pending டாப்பில் உள்ள பெயரினை நீக்கிவிட்டு மற்றய டாப்பில் எழுத வேண்டும் இவ்வாறு பூர்த்தி செய்த மாணவர்கள் A/L பரீட்சைக்கு பாடசாலையின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் பல்கலைக் கழகமும் தாராளமாகச் செல்ல முடியும் ஆனால் O/L பரீட்சைப் பெறுபேறு A/L பரீட்சைக்கு விண்ணப்பம் செய்வதற்கு பிற்பாடே வெளியாவதால் கணித பாட 2 வருட நிபந்தனையின் படி குறிப்பிட்ட மாணவர்களினை 2 வருடமும் பாடசாலையில் வைத்திருந்து பாடசாலையின் ஊடாக விண்ணப்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது A/L பரீட்சைக்கு விண்ணப்பித்த பிற்பாடு குறித்த மாணவன் அடுத்த வருடம் O/L பரீட்சைக்கு விண்ணப்பிக்காது அல்லது W சித்தி பெற்றால் இம் மாணவனுக்கு A/L பரீட்சைக்கான அனுமதி அட்டையினை வழங்க முடியாது அவ்வாறு அனுமதி அட்டையினை வழங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும். இம் மாணவன் கணித பாடத்தில் s எடுத்தால் பிரச்சினை எதுவும் இல்லை W எடுத்தால் பிரச்சினை ஆரம்பமாகிறது A/L விண்ணப்பம் செய்கின்ற போது கணித பாடம் W எடுத்த மாணவர்கள் கேட்குகின்ற கேள்வி ஏன் நீங்கள் இவ்வளவு காலமும் பாடசாலையில் கற்க அனுமதி வழங்கினதால் தனிப்பட்ட முறையில் விண்ணப்பம் செய்ய முடியாது என மறுத்து அதனை உரிமை மீறலாகப் பார்க்கின்றனர் இப்பிரச்சினைக்கு இரு வழிகளில் தீர்வுகாணலாம்

1. O/L பரீட்சைப் பெறுபேறு A/L பரீட்சைக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்னதாக வெளியாக வேண்டும் அல்லது

2. பாடசாலையில் கணிதபாடத்தில் W சித்தியில் இணைந்தோர் அடுத்து வரும் ஆண்டில் ( ஒரு வருடத்திற்குள்) S சித்தி பெற வேண்டும் அவ்வாறு பெறாவிட்டால் ஒரு வருடத்தால் அம்மாணவர்களினை பாடசாலையில் இருந்து நீக்கிவிட வேண்டும் இதுதான் தற்போது அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறையாக இருக்குமென நினைக்கின்றேன்.

அம்மாணவர்களினை நீக்கிவிடுகின்ற போது அவர்களிடம் கூறவேண்டும் ஒரு வருடம் தவறிவிட்டீர்கள் அடுத்து வரும் வருடம் O/L பரீட்சையில் S எடுத்தால் A/L பரீட்சைக்கு தனிப்பட்ட பரீட்சாத்தியாகத் தோற்றி பல்கலைக் கழகம் செல்ல முடியும் என்று கூறுங்கள் 2 வருடமும் தவறினால்தான் பல்கலைக் கழகம் செல்ல முடியாது.

என மாணவர்களினை சரியான முறையில் தகுதியானவர்களினைக் கொண்டு வழிப்படுதல் ஆலோசனை சேவையினை வழங்குங்கள் குறிப்பாக தமிழ் பாடத்தில் W பெற்றவர்கள் ஒரு வருடத்தால் மீண்டும் W பெற்றால் அம்மாணவர்கள் தாமாகவே பாடசாலையினை விட்டு விலகிக்கொள்வர் இம் மாணவர்கள் தனிப்பட்ட பரீட்சாத்தியாக தோற்றினாலும் பல்கலைக் கழகம் செல்ல முடியாது.

# தொழில் நுட்ப்ப் பிரிவில்( Technical stream) பொறியியல் தொழில் நுட்பம்(E-Tech) கற்க விரும்பும் மாணவர்கள் 3 C 3 S உடன் கணித பாடத்திலும் விஞ்ஞான பாடத்திலும் S இருந்தால் போதுமானது கணித பாடத்தில் அல்லது விஞ்ஞான பாடத்தில் W இருந்தால் இத்துறையில் கற்க முடியாது உயிரியல் தொழில் நுட்பம் ( B- Tech) கற்க விரும்பும் மாணவர்கள் 3 C 3 உடன் கணித பாடத்தில் W என்றாலும் பிரச்சினை இல்லை ஆனால் விஞ்ஞான பாடத்தில் S சித்தி அவசியமாகும் கணித பாடத்தில் W ஆயின் நிபந்தனையின் பெயரில் இணைக்கப் பட்டு உரிய காலத்திற்குள் S பெறவேண்டும்
#இரு வருடங்களின் O/L பெறுபேற்றினைக்கொண்டு கலைத்துறையில் பாடசாலையில் மாணவர்களினை இணைப்பதாயின் முதல் வருடத்தில் 3 C 2 S பெற்று 5 பாடம் என இருந்தால் அடுத்து வரும் வருடம் O/L பெறுபேற்றினையும் இணைத்து இம் மாணவர்களினை பாடசாலையில் இணைத்துக்கொள்ள முடியும் குறித்த வருடம் 3 C 2 S இல்லாத மாணவர்களினை தவறான முறையில் இணைத்து விட்டு அடுத்து வருட O/L பெறுபேற்றோடு கற்க அனுமதி வழங்க முடியாது

Note:- ஒரே நேரத்தில் இரு நிபந்தனைகளுடன் மாணவர்களினை பாடசாலையில் இணைக்க முடியாது அதாவது கணிதமும் தமிழும்W அல்லது கணிதம் அல்லது தமிழ் W இருந்தால் 6 பாட சித்தியுடன் 2 C தான் எனில் 3 வது C இற்காக SBA பார்க்க முடியாது.
# கலைப் பிரிவுக்கும் B- Tech இற்கும் நிபந்தனை அடிப்படையில் பாடசாலையில் இணைத்துக்கொள்ள முடியும் அது தவிர Bio Maths Commerce E- Tech போன்ற பிரிவுகளில் முடியாது
# என் அன்புக்குரிய ஆசிரியர்களே பிரத்தியேக வகுப்பிற்கு(tution) அதிகமான மாணவர்களினை தன்வசம் ஈர்த்துக்கொள்ளும் நோக்கில் தவறான வழியில் மாணவர்களினை தயவு செய்து வழிப்படுத்த வேண்டாம் .
K.t.Brownsen
Career Guidance & Counselling

⭕️இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் **TIN (Taxpayer Identification Number)** எனப்படும் வரி அடையாள இலக்கத்தைப் பெற...
18/06/2026

⭕️இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் **TIN (Taxpayer Identification Number)** எனப்படும் வரி அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது தற்பொழுது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

✅இதனை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் (Inland Revenue Department - IRD) அதிகாரப்பூர்வ **RAMIS** இணையதளம் மூலம் ஆன்லைனில் மிக எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம்.

⭕️அதற்கான நேரடி ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறைகள் இதோ:

✅தேவையான ஆவணங்கள் (முன்னதாக தயாராக வைத்துக்கொள்ளவும்):

✅உங்கள் **தேசிய அடையாள அட்டையின் (NIC)** இரு பக்கங்களின் தெளிவான புகைப்படம் அல்லது PDF (மிக முக்கியம்).

✅அடையாள அட்டையில் உள்ள முகவரியும் தற்போதைய முகவரியும் வேறாக இருந்தால், முகவரியை உறுதிப்படுத்த கடந்த 3 மாதங்களுக்குள் பெறப்பட்ட **மின்சாரப் பட்டியல் (Utility Bill), வங்கி அறிக்கை (Bank Statement)** அல்லது **கிராம நிலதாரி சான்றிதழ்**.

✅அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்

⭕️படி 1
உங்கள் மொபைல் அல்லது கணினியில் கூகுள் குரோம் (Google Chrome) திறந்து, eservices.ird.gov.lk என்ற இணையதளத்திற்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தில் உள்ள "TIN Registration" என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
2. பதிவு வகையைத் தெரிவு செய்யவும் (Registration Type)
⭕️படி 2
அடுத்ததாக வரும் பக்கத்தில் "Individual Local" (உள்நாட்டு தனிநபர்) என்பதைத் தெரிவு செய்து, உங்களது விபரங்களை உள்ளிடத் தொடங்கவும்.
3. தனிப்பட்ட விபரங்களை நிரப்பவும்
⭕️படி 3
உங்களுடைய முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை எண் (NIC), பிறந்த திகதி மற்றும் பாலினம் ஆகியவற்றைச் சரியாக உள்ளிடவும். தொடர்புகொள்வதற்கான உங்களது கைபேசி எண் (Mobile Number) மற்றும் மின்னஞ்சல் முகவரியை (Email) துல்லியமாக வழங்கவும்.
4. முகவரி மற்றும் மொழித் தெரிவு
⭕️படி 4
உங்களது நிரந்தர முகவரியை (Permanent Address) தட்டச்சு செய்யவும். மேலும், அவர்களுடன் தொடர்புகொள்வதற்கு உங்களுக்கு விருப்பமான மொழி (தமிழ் / ஆங்கிலம் / சிங்களம்) மற்றும் தொடர்பாடல் ஊடகத்தை (Mode of Communication - Email/SMS) தெரிவு செய்யவும்.
5. ஆவணங்களைப் பதிவேற்றவும் (Upload Documents)
⭕️படி 5
"Document Upload" என்ற பகுதிக்குச் சென்று, நீங்கள் ஏற்கனவே தயாராக வைத்துள்ள உங்களது தேசிய அடையாள அட்டையின் (NIC) புகைப்படத்தை இணைக்கவும் (Upload). முகவரி மாறியிருந்தால் அதற்குரிய ஆவணத்தையும் இங்கே பதிவேற்ற வேண்டும்.
6. நோக்கத்தைக் குறிப்பிட்டு சமர்ப்பிக்கவும்
⭕️படி 6
இறுதியாக, "Purpose of Registration" என்ற இடத்தில் "TAX PURPOSE" அல்லது "INCOME TAX CLEARANCE" என்பதைத் தெரிவு செய்து, நீங்கள் உள்ளிட்ட விபரங்கள் அனைத்தும் சரிதானா என ஒருமுறை சரிபார்த்துவிட்டு "Submit" பொத்தானைக் கிளிக் செய்யவும்.
✅⏳ அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
விண்ணப்பத்தை வெற்றிகரமாகச் சமர்ப்பித்ததும், உங்கள் திரையில் ஒரு **ஒப்புகை எண் (Acknowledgement Number)** காண்பிக்கப்படும். அதனைப் புகைப்படம் எடுத்து அல்லது குறித்து வைத்துக் கொள்ளவும்.
✅உங்கள் விபரங்கள் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பின் (பொதுவாக சில நாட்களுக்குள்), உங்களுடைய **TIN சான்றிதழ் (TIN Certificate)** நீங்கள் வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு (Email) அனுப்பி வைக்கப்படும்.
> **பாதுகாப்பு எச்சரிக்கை:** ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ gov.lk என்ற இணையதள முகவரியை மட்டுமே பயன்படுத்துங்கள். வேறு எந்தவொரு வெளி நபர்களிடமும் உங்களது NIC விபரங்களையோ, ரகசிய எண்களையோ பகிர வேண்டாம்.

பகிருங்கள் பலரும் பயன்பெறுவர்

23/04/2026

தரம் 11 | விஞ்ஞானம் | அலகு 3 | கலவை | பகுதிபடகாய்ச்சிவடித்தல்| பகிருங்கள் பலரும் பயன்பெறுவர்

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when துளிர்-Thulir-Science with S.Ravichandran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category