Jaffna University Students' Union

Jaffna University Students' Union Official Facebook Profile of the Jaffna University Students' Union.

"தியாகத்தால் நெய்யப்பட்ட வரலாற்றிற்கு உணர்வால் செலுத்தும் அஞ்சலி..." 🪔✨காலத்தின் பக்கங்களில் கரையாத தியாகச் சுடராக மிளிர...
24/09/2026

"தியாகத்தால் நெய்யப்பட்ட வரலாற்றிற்கு உணர்வால் செலுத்தும் அஞ்சலி..." 🪔✨

காலத்தின் பக்கங்களில் கரையாத தியாகச் சுடராக மிளிரும் தியாகத்தீ திலீபன் அண்ணாவின் நினைவுகளை நெஞ்சில் ஏந்தி, யாழ் பல்கலைக்கழக மண்ணில் உணர்வுபூர்வமாக ஒன்றுகூடுகின்றோம்.

நண்பகல் 01:00 மணியளவில் யாழ் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகும் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து, பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் மாணவர்களின் அமைப்பாக்கத்தில் எழுச்சிமிக்க கருத்தரங்கமும், உணர்வுபூர்வமான நாடக ஆற்றுக்கையும் நடைபெறவுள்ளன.

தியாக நாயகனின் நினைவுகளைப் போற்றி, உணர்வோடு அஞ்சலி செலுத்த அனைத்துப் பொதுமக்களையும், பல்கலைக்கழக சமூகத்தையும் தோளோடு தோள் நிற்குமாறு உரிமையோடு அழைத்து நிற்கின்றோம்.

நிகழ்வு நிரல் & விபரங்கள்:
🗓️ காலம்: 25 செப்டம்பர், 2026
⏰ நேரம்: நண்பகல் 01:00 மணி
📍 இடம்: யாழ். பல்கலைக்கழக முன்றல் (தொடர்ந்து கைலாசபதி அரங்கு)

- யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

தியாகத்தின் வழியில் மனிதநேயம் காக்க அனைவரும் வாரீர்!📅 நாள்: 24.09.2026⏰ நேரம்: காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை📍 ...
24/09/2026

தியாகத்தின் வழியில் மனிதநேயம் காக்க அனைவரும் வாரீர்!

📅 நாள்: 24.09.2026
⏰ நேரம்: காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை
📍 இடம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் வளாகம் (Student Complex)

அன்பும் ஈரமும் கொண்ட கரங்களால் உயிர்களைக் காப்போம்!

- யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

#நினைவேந்தல்வாரம் #யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் #மாணவர்சமூகம் #இரத்ததானமுகாம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஆண்டுதோறும் பாரம்பரியமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க ...
27/08/2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஆண்டுதோறும் பாரம்பரியமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தின் பத்தாம் நாள் திருப்பூசை நிகழ்வு, கடந்த 21-ஆம் திகதி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகம், அப்பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் ஆன்மீக நலன்விரும்பிகள் எனப் பெருந்திரளானோர் ஒன்றிணைந்து இவ்வாண்டுப் பூசையை மிகவும் பக்திப்பூர்வமாகவும் எழுச்சியாகவும் சிறப்பித்தனர்.

- யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

The University Students’ Union of the University of Jaffna had the privilege of meeting His Excellency Mr. Matthew Duckw...
15/08/2026

The University Students’ Union of the University of Jaffna had the privilege of meeting His Excellency Mr. Matthew Duckworth, Australian High Commissioner to Sri Lanka, following his request for an engagement with the Jaffna University Students’ Union.

The meeting provided an opportunity for a constructive exchange of views on student-related matters, opportunities for collaboration, and areas of mutual interest.

- Jaffna University Students’ Union

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கு திரு. மெத்யூ டக்வொர்த் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடனான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலானது, மாணவர் நலன் சார்ந்த விவகாரங்கள், எதிர்கால இருதரப்பு ஒத்துழைப்புகளுக்கான வாய்ப்புகள் மற்றும் பரஸ்பர நலன்சார் விடயங்கள் குறித்துக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கான ஆக்கபூர்வமான ஒரு தளமாக அமைந்தது.

- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

நாடளாவிய ரீதியில் இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள் எதிர்கொண்டு வரும் உள்ளகப் பயிற்சி வாய்ப்புகளின் பற்றாக்குறை தொடர்...
23/07/2026

நாடளாவிய ரீதியில் இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள் எதிர்கொண்டு வரும் உள்ளகப் பயிற்சி வாய்ப்புகளின் பற்றாக்குறை தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து, இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியம் இச்செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து, மாணவர்கள் எதிர்நோக்கும் உள்ளகப் பயிற்சி தொடர்பான சவால்கள், நீண்டகால தாமதங்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் கல்வி மற்றும் தொழில்முறை பாதிப்புகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்தது.

இப்பிரச்சினைக்கு உரிய மற்றும் நிலையான தீர்வு கிடைக்கும் வரை, நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியங்களுடன் இணைந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் மாணவர்களின் உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும்.

-யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

A press conference addressing the nationwide shortage of internship opportunities faced by students of Faculties of Allied Health Sciences was held today at the Jaffna Press Club.

The Allied Health Sciences Faculty Students’ Union, in collaboration with the University of Jaffna Students’ Union, organized the press conference and briefed the media on the challenges faced by students, the prolonged delays in securing internship placements, and the resulting academic and professional consequences.

Until a fair and sustainable solution is provided, the University of Jaffna Students’ Union will continue to stand together with Allied Health Sciences students’ unions across the country and raise its voice in support of students’ rights and legitimate demands.

-Jaffna University Students’ Union

The University Students’ Union (USU) of the University of Jaffna have been recognized as a valued organizer of blood don...
29/06/2026

The University Students’ Union (USU) of the University of Jaffna have been recognized as a valued organizer of blood donation campaigns and to receive an honorary memento in appreciation of its contributions to the National Blood Transfusion Services. ✨

As the representative body of the students of the University of Jaffna, the USU is committed to safeguarding student welfare while actively contributing to the well-being of the wider community. Organizing blood donation campaigns is one of the many ways we strive to make a meaningful social impact, fostering a culture of compassion, service, and collective responsibility.

Press Release University Students’ Union, University of Jaffna 02/06/2026
02/06/2026

Press Release
University Students’ Union,
University of Jaffna
02/06/2026

ஊடக அறிக்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழப்பாணப் பல்கலைகழகம் 02/06/2026
02/06/2026

ஊடக அறிக்கை
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,
யாழப்பாணப் பல்கலைகழகம்
02/06/2026

நேற்று என் கனவில்புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.சிவில் உடை அணிந்தஅரச காவலர் அவரைக் கொன்றனர்.யாழ் நூலகத்தின் படிக்கட்...
31/05/2026

நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.
இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?'
என்று சினந்தனர்.
'இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்......
என்றனர் அவர்கள்.
'சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை'
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.
சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்
சிகாலோவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
தம்மபதமும் தான் சாம்பல் ஆனது!

- பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் -

யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 45 ஆண்டுகள் (1981-2026)

Address

PO Box 57, Thirunelvely, Yazlpannam (Jaffna)
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna University Students' Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jaffna University Students' Union:

Shortcuts

Share