08/01/2023
யாழ்ப்பாணம் இந்து பௌத்த கலாச்சார பேரவையின் இரண்டாம் மொழி கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது.
இந்த கலாச்சார பேரவையில் இரண்டாம் மொழி கற்கையைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு ஆசிரிய நியமனம் வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சர் வழங்கிய வாக்குறுதியை அடுத்து இன்று ஆளுநர் அலுவலகத்தில் ஆசிரிய பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது இந்து கலாச்சார பேரவையின் தலைவர் எம்.ரி.எஸ்.இராமசந்திரன் கருத்து தெரிவித்தார்.
இதன்போது வடக்கு மாகாணத்தில் இருந்து ஆசிரியர் பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.