Northern Province Teachers வட மாகாண ஆசிரியர்கள்

Northern Province Teachers வட மாகாண ஆசிரியர்கள்

Share

Its a page for sharing valuable things between teachers. To improve and empower the knowledge of teachers. Since 2017

16/05/2026

🛑கோப்புகள் கையாடல் மூலம் பல மில்லியன் ரூபா மோசடி: # # # # வங்கி பணியாளர்கள் 9 பேர் கைது.!!

பொய்யான ஆவணங்களை தயாரித்து ஒரு கடனாளியின் கடன் தொகையை உயர்த்தி, பல மில்லியன் ரூபா அளவிலான மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, கண்டி பகுதியில் உள்ள # # # # வங்கி கிளையின் பிரதான நிர்வாக அதிகாரி மற்றும் மேலாளர் உட்பட 9 பணியாளர்கள் கண்டி பொலிஸின் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை, குறித்த வங்கியிலிருந்து ரூ.35 மில்லியன் கடன் பெற்ற ரஞ்சித் சந்திரசிறி என்ற தொழிலதிபர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தான் பெற்ற கடன் தொகையை விட அதிகமான தொகை போலியான ஆவணங்கள் மூலம் தனது பெயரில் பதிவு செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக இந்த மோசடி நடைபெற்று வந்ததாகவும், இதுகுறித்து வங்கியின் உயர்மட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை எனவும் தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.

வங்கி அதிகாரிகள் தயாரித்த ஆவணங்கள் போலியானவை என்பது அரச ஆய்வாளர் (Government Analyst) அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்ட பின்னர், முறைப்பாடு செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி மாவட்ட பொலிஸ் பிரிவு மூத்த பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டார ஹக்மனகேவின் அறிவுறுத்தலின் கீழ், சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவின் நிலைய பொறுப்பாளர் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹேரத் உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

12/05/2026

#ஆசிரியர்கள்_அவசர_ஊழியர்கள்_அல்லர்
ஆசிரியர்களின் பணிச் சுதந்திரமும் டிஜிட்டல் ஆக்கிரமிப்பும்: இலங்கை சட்ட மற்றும் நிர்வாக ரீதியான ஒரு பகுப்பாய்வு
இலங்கையின் கல்வித்துறையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வரவேற்கத்தக்கது. எனினும், அண்மைக் காலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் ‘வாட்ஸ்அப்’ (WhatsApp) குழுமங்கள் ஆசிரியர்களின் அடிப்படை உரிமைகளையும், தனிப்பட்ட சுதந்திரத்தையும் மீறும் ஒரு கருவியாக உருவெடுத்துள்ளன. நள்ளிரவிலும் வார இறுதி விடுமுறை நாட்களிலும் உத்தியோகபூர்வத் தகவல்களைப் பகிரும் நடைமுறை, ஆசிரியர்களை உளவியல் ரீதியான அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

1. இலங்கையின் ஆயத்தக் கோவையும் (Establishments Code) உத்தியோகபூர்வ நேரமும்
இலங்கை அரசாங்கத்தின் ஆயத்தக் கோவையின் அத்தியாயம் XVIII (Chapter XVIII) மற்றும் பல்வேறு பொது நிர்வாகச் சுற்றுநிருபங்களின்படி, ஒரு அரச ஊழியரின் உத்தியோகபூர்வ வேலை நேரம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது (காலை 8.30 - மாலை 4.15). இது துறறரீதியாக மாறுபடும்.

பணி நேரத்திற்குப் பின்னரான கடமை: அவசர காலங்கள் அல்லது விசேட கடமைகள் தவிர்ந்த ஏனைய நேரங்களில், ஒரு ஊழியர் தனது தனிப்பட்ட நேரத்தைச் செலவிட முழு உரிமை உண்டு.

ஆசிரிய ஆலோசகர்கள் அல்லது அதிகாரிகள் நள்ளிரவு 1:00 மணிக்கும் அதிகாலை 4:00 மணிக்கும் தகவல்களைப் பதிவிடுவது, ஆயத்தக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள 'ஊழியர் நலன்' மற்றும் 'நிர்வாக ஒழுக்கத்தை' மீறும் செயலாகும்.

2. "தொடர்பைத் துண்டிக்கும் உரிமை" (Right to Disconnect)
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தரநிலைகளின்படி, ஒரு தொழிலாளி தனது வேலை நேரத்திற்குப் பிறகு டிஜிட்டல் சாதனங்கள் ஊடாகத் தொடர்புகொள்வதைத் தவிர்க்கும் உரிமை உண்டு.

விடுமுறை நாட்களிலும் பின்னிரவிலும் வாட்ஸ்அப் செய்திகளுக்குப் பதிலளிக்கக் கோருவது, இலங்கையின் தனிநபர் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை (Fundamental Rights) மறைமுகமாகப் பாதிக்கும் செயலாகும்.

ஆசிரியர்கள் என்பவர்கள் 24 மணிநேரமும் பதிலளிக்க வேண்டிய 'அவசரகால சேவை' ஊழியர்கள் அல்லர் என்பதை நிர்வாகம் உணர வேண்டும்.

3. கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களும் தொடர்பாடல் ஒழுங்கும்
இலங்கை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வத் தொடர்பாடல் தொடர்பான சுற்றுநிருபங்களின்படி, கடிதங்கள் அல்லது மின்னஞ்சல்கள் மூலமே உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் வழங்கப்பட வேண்டும்.

வாட்ஸ்அப் ஒரு மேலதிகத் தகவல் பரிமாற்றக் கருவியே தவிர, அது உத்தியோகபூர்வ கட்டளைகளை விடுமுறை நாட்களில் பிறப்பிப்பதற்கான தளமல்ல.

குறிப்பாக, ஆசிரியர்களை அச்சுறுத்தும் அல்லது பயத்தை ஏற்படுத்தும் வகையில் தகவல்களைப் பதிவிடுவது "நிர்வாகத் துஷ்பிரயோகம்" (Administrative Malpractice) என வகைப்படுத்தப்படலாம்.

4. உளவியல் பாதிப்பும் மனித உரிமை மீறலும்
தொடர்ச்சியான டிஜிட்டல் குறுக்கீடுகள் ஆசிரியர்களின் மனநலத்தைப் பாதிப்பதோடு, அவர்களின் கற்பித்தல் திறனையும் சிதைக்கின்றன.

ஒரு ஆசிரியரால் குடும்பக் கடமைகளைச் செய்ய முடியாது அல்லது நிம்மதியாக உறங்க முடியாது என்ற நிலையை உருவாக்குவது, இலங்கை அரசியலமைப்பின் 11வது உறுப்புரையின் (Freedom from Torture/Degrading Treatment) கீழ் நுணுக்கமாக ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.

இது குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் (HRCSL) முறையிட ஆசிரியர்களுக்கு முழுமையான சட்ட உரிமை உண்டு.

ஆசிரியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்க வேண்டிய சட்ட நகர்வுகள்:
நிர்வாக ரீதியான எதிர்ப்பு: வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உத்தியோகபூர்வ நேரத்தைத் தாண்டி வாட்ஸ்அப் குழுமங்களில் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என எழுத்து மூலம் வலியுறுத்துதல்.

சுற்றுநிருபத்தை கோருதல்: 'டிஜிட்டல் தொடர்பாடல் ஒழுங்கு' (Protocol for Digital Communication) தொடர்பான தெளிவான வழிகாட்டல்களை மாகாணக் கல்வித் திணைக்களம் வெளியிட வேண்டும் என அழுத்தம் கொடுத்தல்.

சான்றுகளைப் பாதுகாத்தல்: சட்டத்தரணிகளின் ஆலோசனையின்படி, முறையற்ற நேரங்களில் வரும் பதிவுகளைத் திரைப் படங்களாக (Screenshots) எடுத்து வைப்பது, ஒழுங்கு நடவடிக்கைகளின் போது வலிமையான ஆதாரமாக அமையும்.

தொழிற்சங்க நடவடிக்கை: திரு. ஜோசப் ஸ்டாலின் போன்ற தலைவர்கள் ஊடாக, ஆசிரியர்களின் "ஓய்வு நேரத்திற்கான உரிமையை" உறுதிப்படுத்தும் தேசியக் கொள்கை ஒன்றை வலியுறுத்துதல்.

வாட்ஸ்அப் குழுமங்கள் ஆசிரியர்களுக்கு வழிகாட்ட வேண்டுமே தவிர, அவர்களின் வாழ்வை வழிப்பறி செய்யக் கூடாது. ஒரு ஆசிரியரின் நிம்மதியான வார இறுதி என்பது அவரது சலுகை அல்ல, அது அவரது உரிமை. சட்ட ரீதியான அணுகுமுறைகள் மற்றும் கூட்டுப் போராட்டங்கள் மூலமே இந்த டிஜிட்டல் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
- தொகுப்பு : இணையம் -
நன்றி இனியவன்(ஓய்வு அதிபர்)

05/05/2026

படி அதிகரிப்பு

02/05/2026

பெற்றோல் டீசல் விலைகள் எகிறியது.
பெற்றோல் 410/-
டீசல் 392/-
மே தின பரிசு

01/05/2026

தொழிலாளராய் ஒன்றுபடுவோம்
உரிமைகளை வென்றெடுப்போம்

01/05/2026

ஓர் அதிபரின் பதிவு

ஒரு நல்ல ஆசிரியர் வருடத்தில் 10 நாள் சமயோசித லீவு பெறுகின்றார்.
அதேயளவு மருத்துவ லீவு பெறுகின்றார்.
கடமை லீவு ஒரு 20 நாள் எடுக்கின்றார்.(தேசிய பரீட்சைக் கடமை,வினாத்தாள் திருத்தம்....)

200 பாடசாலை நாளில் 40 நாள் முடிஞ்சுது.

மிகுதி வேலை நாளில்
மாதத்திற்கு இரண்டு நாள் செயலமர்வு.
போதாதற்கு
அந்த போட்டி ,இந்த போட்டி
வினாத்தாள் திருத்தம்....

கல்வி பிள்ளையின் அடிப்படை உரிமை.
அதை கொள்ளையிட நீங்கள் யார்?
copied - Nallaiah Amirthanathan

29/04/2026

அதிகரிப்பு

28/04/2026

அதிபர் சேவை போட்டிப் பரீட்சை (SLPS -III)
07/June/2026

27/04/2026

தடம் மாறுகிறதா
தமிழ்த் தேசியம்???

26/04/2026

அரசாங்க அலுவலகங்கள் / அரசாங்க பாடசாலைகளில் பயன்பாட்டிலுள்ள பொது விண்ணப்பப் படிவங்கள் மற்றும் பதிவேடுகள்
-------------------------------------------------------
1. பொது - 3 – “பொதுப்” படிவத்தினை புதிதாக அச்சடிப்பதற்கான கோரிக்கைப் படிவம்.
2. பொது - 5 – விபத்துக்கான விடுமுறைப் படிவம்.
3. பொது - 18 – தினவரவுக் கையொப்பப்பதிவேடு (கல்விசார் / கல்விசாராப் பணிக்குழுவினர்).
4. பொது - 21 – விடுமுறை புகையிரத ஆணைச்சீட்டுக்கான விண்ணப்பம்.
5. பொது - 29 – அரைசிறை மீளளிப்பு விண்ணப்பம்.
6. பொது - 35 – உறுதிச்சீட்டு (நிதி வவுச்சர்).
7. பொது - 35A – மேலதிக நேரக் கொடுப்பனவு படிவம்.
8. பொது - 38 – D விண்ணப்பம்.
9. பொது - 39 – இலங்கை குடியரசிடமிருந்து பெற்ற நிதி விண்ணப்பம்.
10. பொது - 42 – H கணக்குக் கடிதம் (FR 353 படி).
11. பொது - 44 – பொருட்பதிவேடு.
12. பொது - 53 – வரலாற்றுத்தாள்.
13. பொது - 53A – வரலாற்றுத்தாள் - ஓய்வூதிய உரித்துடையோர்.
14. பொது - 55 – ஓய்வூதியம் / பணிக்கொடை / மரணப்பணிக்கொடை.
15. கல்வி B - 59 – மாணவர் செயலாற்றுகை படிவம் (மாணவர் விடுகைப்பத்திரம்).
16. பொது - 70 – தேவைப்பாட்டுப் படிவம்.
17. பொது - 71 – வைப்புக்களின் கூற்றுப் பொழிப்பு.
18. பொது - 86 – விதவைகள், அனாதைகள், ஓய்வூதிய சட்டத்தின் 21 ஆம் பிரிவின் கீழான வெளிப்படுத்துகை.
19. பொது - 86A – விதவைகள், அனாதைகள் உபகார நிதிக் கட்டளைச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் படி செய்யும் பிரகடனம்.
20. பொது - 87 – பிறப்பு, திருமணம், குழந்தை இறப்பு, விவாகரத்து அல்லது கணவரின் இறப்பு தொடர்பான தகவல் அறிவிப்பு படிவம்.
21. பொது - 90 – இரகசிய அறிக்கை.
22. பொது - 92 – மோட்டார் வாகனங்கள் வாங்குவதற்கான விண்ணப்பம்.
23. கல்வி B - 100 – ஆசிரியர் லீவு அட்டவணை.
24. கல்வி C - 100 – வசதிகள் சேவைகள் கட்டணப்பற்றுச்சீட்டு.
25. பொது - 103 – கடனைப் புதுப்பித்தல் படிவம்.
26. பொது - 124 – அரசாங்க கட்டிடங்கள் மற்றும் தோட்டங்களுக்கான வாடகையை மீளச் செலுத்தும் படிவம்.
27. பொது - 125A – லீவு விண்ணப்பம்.
28. பொது - 126 – இலங்கைக்கு வெளியே லீவில் செல்வதற்கான விண்ணப்பம்.
29. கல்வி C - 132 – நூல்நிலைய புத்தகங்களை பதிவு செய்தல் பதிவேடு.
30. பொது - 134 – நிலம் கையகப்படுத்தல் / குத்தகைக்கு வழங்குவதற்கான அனுமதி விண்ணப்பம்.
31. பொது - 142 – மருத்துவக் குழு முதலாம் விண்ணப்பம்.
32. பொது - 142A – மருத்துவக் குழு இரண்டாம் விண்ணப்பம்.
33. பொது - 157 – No-Claim சான்றிதழுக்கான விண்ணப்பம்.
34. பொது - 158 – பிணைமுறி உடன்படிக்கை விண்ணப்பம்.
35. பொது - 160 – ஒப்பந்தப் படிவம்.
36. பொது - 161 – இணைந்த பிரயாணப்படி கொடுப்பனவுப் படிவம்.
37. பொது - 164 – விடுமுறை பயண ஆணைச்சீட்டுப் பதிவேடு.
38. சுகாதாரம் - 169 – அரசாங்க உத்தியோகத்தரின் வைத்திய பரிசோதனை அறிக்கைப் படிவம்.
39. பொது - 176 – குடியியல் நிலைமை மற்றும் வாழும் நிலைமை தொடர்பான வெளிப்படுத்தல்.
40. பொது - 177 – பிரயாணக் கொடுப்பனவு விண்ணப்பம்.
41. பொது - 178 – இடமாற்ற பிரயாணக் கொடுப்பனவுப் படிவம்.
42. பொது - 185 – சம்பள ஏற்றப் படிவம்.
43. பொது - 190 – லீவுப் பதிவேடு.
44. கல்வி C - 31 – மாணவர் தினவரவு இடாப்பு.
45. கல்வி C - 32 – மாணவர்களைச் சேர்த்தல், வகுப்பேற்றுதல், விலக்கிக்கொள்ளுதல்.
46. பொது - 215 – பிணையாளர்களின் உடன்படிக்கைகள்.
47. பொது - 217 – மருத்துவ பரிசோதனைக்கான விண்ணப்பம்.
48. பொது - 224A – ஓய்வூதியப் பங்களிப்பாளரின் திருமணம் தொடர்பான அறிவிப்புப் படிவம்.
49. பொது - 225 – உத்தியோகபூர்வ காசுக் கட்டளைக்கான படிவம்.
50. பொது - 230B – மெச்சூரைகள் மற்றும் கண்டனங்கள் வழங்கும் படிவம்.
51. பொது - 230C – வருடாந்த இரகசிய அறிக்கைகள் வழங்கும் படிவம்.
52. பொது - 232 – வருடாந்த சம்பள ஏற்றம் பெறுவதற்கான கட்டளை வழங்கும் படிவம்.
53. பொது - 233 – மேலதிக செலவீனத்திற்கான அதிகாரம் வழங்கும் விண்ணப்பம்.
54. பொது - 250 – தற்காலிக உறுதிச்சீட்டுக்கள்.
55. பொது - 263 – உடன்படிக்கைப் படிவம்.
56. பொது - 264 – பிணை வழங்கும் பிணைப்பொறுப்புப் பத்திரம்.
57. பொது - 265 – இரத்துச் செய்யப்பட முடியாத “அட்டோணி” தத்துவப் படிவம்.
58. பொது - 272 – கடன் உடன்படிக்கைப் படிவம்.
59. பொது - 274 – இலவச புகையிரத விடுமுறை ஆணைச்சீட்டுக்கான விண்ணப்பம்.
60. பொது - 278 – சத்தியம் அல்லது உறுதிமொழி வழங்கும் விண்ணப்பம்.
61. பொது - 279 – அர்ப்பணிப்புத்தாள் (Commitment Sheet).
62. பொது - 284 – FR 104(4) இன் கீழ் இழப்புக்கள் பற்றிய இறுதி அறிக்கை.
63. பொது - 285 – FR 109 இன் படி இழப்புக்களை பதிவழிப்பதற்கான விண்ணப்பம்.

SHM.THAHIR

T/THIRIYAI TAMIL MAHA VIDYALAYAM

26/04/2026

Be Aware of Cyber Bullying

“இன்றைய கொள்ளை கத்தி கொண்டு வராது, ஒரு message ஆகவும் வரும்....."

இணைய மோசடியில் சிக்காமல் இருக்க சில முக்கிய அறிவுரைகள்

🔹 தெரியாத link வந்தால் — click செய்யாதீர்கள்

🔹Bank தகவல்களை double check செய்யுங்கள்

🔹 OTP கேட்டால் — யாருக்கும் சொல்லாதீர்கள்

🔹 Bank call என்றாலும் — முதலில் verify செய்யுங்கள்

🔹 Email வந்தால் — sender address சரிபார்க்கவும்

🔹 Password — ஒரே password எல்லா இடத்திலும் பயன்படுத்தாதீர்கள்

🔹 Social media link — அவசரத்தில் open செய்யாதீர்கள்

🔹 “Offer / Prize” message — 95% scam என்று நினைக்கவும்

🔹 Public WiFi-ல் — bank login செய்யாதீர்கள்

🔹 உங்கள் phone-ல் — lock & update வைத்திருங்கள்

🔹“Urgent”, “Immediate action” என்றால்
👉 90% scam

🔹Email attachments open பண்ணும் முன் யோசிக்கவும்
👉 PDF / Word fileல கூட virus(malware) இருக்கலாம்

🔹Two-Factor Authentication (2FA) ON பண்ணுங்கள்
👉 Password leak ஆனாலும் account safe இருக்கும்

🔹App download செய்யும் போது கவனம்.
Play Store / App Store இல்லாத இடங்களில் இருந்து download செய்யாதீர்கள்
👉 Fake apps = data steal

"மோசடி செய்பவன் புத்திசாலி இல்லை…
அவசரப்படும் நாம்தான் பலவீனம்.”


copied

Want your school to be the top-listed School/college in Jaffna?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Main Street
Jaffna
40000