Jaffna Central College

Jaffna Central College Official page of Jaffna Central College
"Central's flag must never be lowered"

National Basketball 2026  Under 20 1 st  match St.Aloysius' College - Galle  23Jaffna Central College 25Jcc won2 nd matc...
20/09/2026

National Basketball 2026 Under 20
1 st match
St.Aloysius' College - Galle 23
Jaffna Central College 25
Jcc won

2 nd match
Maliyadewa College 30
Jaffna central College 34
Jcc won

3rd match Quarter-final
Jaffna Central Colleg 35 Poramadulla Central college 29
Jcc won

சபா லிங்கம் நினைவு வெற்றிக்கிண்ணத்தை (Sabalingam Memorial Trophy - Season 04) கைப்பற்றி சாம்பியனாக மகுடம் சூடியுள்ளது......
08/09/2026

சபா லிங்கம் நினைவு வெற்றிக்கிண்ணத்தை (Sabalingam Memorial Trophy - Season 04) கைப்பற்றி சாம்பியனாக மகுடம் சூடியுள்ளது..............................................................
யாழ்ப்பாண மத்திய கல்லூரி , யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை பாரம்பரிய இருபதுக்கு - 20 (T20) கிரிக்கெட் போட்டியில் வீழ்த்தி, 2026 ஆம் ஆண்டிற்கான சபா லிங்கம் நினைவு வெற்றிக்கிண்ணத்தை (Sabalingam Memorial Trophy - Season 04) கைப்பற்றி சாம்பியனாக மகுடம் சூடியுள்ளது!

இந்த வெற்றியின் மூலம், யாழ்ப்பாண மத்திய கல்லூரி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், தனது ஒட்டுமொத்த தொடர் சாம்பியன் பட்டங்களின் எண்ணிக்கையை மூன்றாக (3) உயர்த்தியுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி: 20 ஓவர்களில் 145/8..

யாழ்ப்பாண மத்திய கல்லூரி: 19.2 ஓவர்களில் 149/4

யாழ்ப்பாண மத்திய கல்லூரி 6 விக்கெட்டுகளால் அமோக வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை, யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் கட்டுப்பாடான மற்றும் ஆக்ரோஷமான பந்துவீச்சாளர்கள் 20 ஓவர்களில் 145 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தினர். பந்துவீச்சில் அசத்திய நிதர்சன் முக்கிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை திணறடித்தார். அவருக்கு பக்கபலமாக டனுசன் மற்றும் திசோன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

146 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய யாழ்ப்பாண மத்திய கல்லூரி, ஆரம்பத்திலிருந்தே மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடியது. அணியின் தலைவர் அமலன் நிதானமாக விளையாடி 34 ஓட்டங்களைப் பெற்று அடித்தளமிட்டார். திசோன் 20 ஓட்டங்களையும், நிதர்சன் 16 ஓட்டங்களையும் பெற்று ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். எனினும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி 60* ஓட்டங்களை விளாசிய ஜெனோசன் (Jenoshan), 4 பந்துகள் மீதமிருக்க அணியை 149/4 என்ற ஓட்டங்களுடன் மிக இலகுவாக வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இப்போட்டியில் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திய யாழ்ப்பாண மத்திய கல்லூரி வீரர்கள், அனைத்து தனிநபர் விருதுகளையும் தட்டிச் சென்றனர்:

🏆 ஆட்டநாயகன் : ஜெனோசன்

🏏 சிறந்த துடுப்பாட்டக்காரர் : ஜெனோசன்,

🎯 சிறந்த பந்துவீச்சாளர்: திசோன்,

⚡ சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் : நிதர்சன்

🦅 சிறந்த களத்தடுப்பாளர் : சாளரன்

எங்களுக்குப் பின்னால் இருந்து பலம் சேர்த்த அற்புதமான ஆதரவு அமைப்பு இல்லாமல் இந்த பெருமைமிக்க சாதனையை எங்களால் சாதித்திருக்க முடியாது. எங்களின் இந்த மகத்தான சாம்பியன் வெற்றிக்கு வழிவகுத்த, எங்களது பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகக் குழுவினர், அர்ப்பணிப்புடன் செயல்படும் பழைய மாணவர்கள் மற்றும் அனைத்து நலம் விரும்பிகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

எமது கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச்செல்லும்உயர்திரு. செ.லோகேஸ்வரன்  அவர்களின் மணி விழா நிகழ்வு 07.08.20...
09/08/2026

எமது கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச்செல்லும்
உயர்திரு. செ.லோகேஸ்வரன் அவர்களின் மணி விழா நிகழ்வு 07.08.2026 அன்று தந்தை செல்வா கலையரங்கில் ஆசிரியர் வட்டத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது.

எமது கல்லூரியின் பரிசளிப்பு நிகழ்வானது   05.08.2026 அன்று சிறப்பான முறையில் கல்லூரிச்சமூகத்தினரால் கொண்டப்பட்டது.அந்நிகழ...
08/08/2026

எமது கல்லூரியின் பரிசளிப்பு நிகழ்வானது 05.08.2026 அன்று சிறப்பான முறையில் கல்லூரிச்சமூகத்தினரால் கொண்டப்பட்டது.

அந்நிகழ்வின் பதிவுகள்.....

அனுமதி அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டது.........................................................க.பொ.த உயர்தரப்பிரிவு (2026...
03/08/2026

அனுமதி அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டது.........................................................
க.பொ.த உயர்தரப்பிரிவு (2026) இல் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் வழங்கும் நிகழ்வானது இன்று (03.08.2026) தப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் பகுதித்தலைவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டு ஆசி வழங்கினர்.

மாணவர்களை வாழ்த்தி அனுமதி அட்டைகளை அதிபர் வழங்கி வைத்தார்.

பரீட்சைக்கு தோற்றுகின்ற மணவர்கள் உயர்ந்த பெறுபேறுகளை பெற்று வாழ்வில் உயரிய இலட்சியத்தினை அடைந்து கொள்ள கல்லூரிச்சமூகத்தின் சார்பில் நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கல்லூரியின் நிறுவுனர் தின நிகழ்வு இன்று (01.08.2026) இடம்பெற்றது.அந் நிகழ்வின் பதிவுகள்
01/08/2026

கல்லூரியின் நிறுவுனர் தின நிகழ்வு இன்று (01.08.2026) இடம்பெற்றது.

அந் நிகழ்வின் பதிவுகள்

எமது கல்லூரியில் பிரதி அதிபராக சிறந்தமுறையில் கடமையாற்றி இன்று (27.07.2026) மானிப்பாய் இந்துக்கல்லூரியில் அதிபராக பொறுப்...
27/07/2026

எமது கல்லூரியில் பிரதி அதிபராக சிறந்தமுறையில் கடமையாற்றி இன்று (27.07.2026) மானிப்பாய் இந்துக்கல்லூரியில் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட. மே.இந்திரபாலா அவர்களுக்கு கல்லூரிச்சமூகம் சர்பாக நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கல்லூரியின் பழைய மாணவன் V.E.கஸ்ரன் றோய்    அவர்கள் இன்று (27.7.2026)  எமது கல்லூரியின் அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.அவர்...
27/07/2026

கல்லூரியின் பழைய மாணவன் V.E.கஸ்ரன் றோய் அவர்கள் இன்று (27.7.2026) எமது கல்லூரியின் அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.
அவர்களுக்கு கல்லூரிச்சமூகத்தின் சார்பில் நல் வாழ்த்துகள்.

அவருக்கான வரவேற்பு நிகழ்வு கல்லூரி யில் இடம்பெற்றது.
நிகழ்வில் பழைய மாணவர்கள் ,நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர்.

அந்நிகழ்வின் பதிவுகள்

யாழ்ப்பாண வலயமட்ட 2026 ஆம் ஆண்டுக்கான விசேடதேவையுடைய மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில் 18 விசேடகல்வி அலகுள்ள பாடசாலைக...
08/07/2026

யாழ்ப்பாண வலயமட்ட 2026 ஆம் ஆண்டுக்கான விசேடதேவையுடைய மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில் 18 விசேடகல்வி அலகுள்ள பாடசாலைகள் பங்குபற்றி அதில் எமது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி விசேடகல்வி மாணவர்கள் மொத்தமாக 54 புள்ளிகளை பெற்று யாழ் வலயத்தில் 9 ஆம் இடத்தை பெற்றுக் கொண்டனர்.

இவர்களை பயிற்றுவித்த விசேடகல்வி ஆசிரியர்களுக்கும் மற்றும் இந்நிகழ்வில் எமது கல்லூரி சார்பாக பங்குபற்றி பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்துக்கொள்கிறோம்.

உதைபந்தாட்டம்,தடகளம், கராத்தே, மேசைப்பந்தாட்டம்  போட்டிகளில் சாதித்த வீரர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வின் பதிவுகள்....
03/07/2026

உதைபந்தாட்டம்,தடகளம், கராத்தே, மேசைப்பந்தாட்டம் போட்டிகளில் சாதித்த வீரர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வின் பதிவுகள்....

Address

Rajendraprasad Road
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Central College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jaffna Central College:

Shortcuts

Share

Category