தமிழ் கல்வி நிலையம்-தாவடி

தமிழ் கல்வி நிலையம்-தாவடி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தமிழ் கல்வி நிலையம்-தாவடி, Educational consultant, Jaffna.

https://maps.app.goo.gl/E6ai6vtsf3pvoYGy5

https://youtube.com/?si=XkoG2EXxOqSNKNAZ
தரம் 06 தொடக்கம் 11 வரையான தரங்களுக்கான தமிழ்ப்பாட வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

19/09/2026

கல்வியாண்டு:-2027

இதோ ஆரம்பம் ஆகிறது

புலமை பரிசில் பரிசில் எழுதிய மாணவர்களுக்கான

புதிய தரம் 06

தமிழ் பாட குழு வகுப்பு

இடம்:- BEEFORT INTERNATIONAL school
(பிறவுண் வீதி அரசடி சந்தி)

ஆசிரியர் :-
மொழிதம் நித்தி
(BA, Tamil Orator)

அனுமதிகளுக்கு
077 1051015

16/09/2026

#மாணவர்களின் #சுயகற்றலின் #ஆர்வம், #ஆசிரியர்களின் #கற்பித்தலில் #தாக்கம் #செலுத்தும் #விதங்கள்!
ந.சந்திரகுமார் SLPS

அண்மைக்காலமாக மாணவர்களிடத்தில் சுயகற்றலில் ஆர்வம் குன்றி வருவதால், பரீட்சைப் பெறுபேறுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக பல முன்னணி ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

இதற்கு பின்வரும் காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.
*இணையத்தளங்களில் அதிக நேரத்தைச் செலவு செய்தல்.

*பல்வேறு வகையான போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருதல்.

*பெற்றோர்கள் அதிகளவு வசதி வாய்ப்புகள் மற்றும் அதிகளவு போக்கற் மணியை வழங்குதல்.

*வெளிநாட்டு (ஐரோப்பிய நாடுகளில்) வேலைவாய்ப்பு மோகத்தினால், கற்றலில் ஆர்வம் குறைதல்.

*பெற்றோர்களின் கண்டிப்பு மற்றும் கண்காணிப்பு குறைவடைதல்.

*இளவயதில் காதல் வயப்படுதல்.

*வீட்டில் சுய கற்றலுக்கான சூழல் கிடைக்காமை.

*மாணவன் சார்ந்த சமூகத்தின் ஆதரவு மற்றும் வழிகாட்டல் கிடைக்காமை.

எனினும் பாடசாலையிலும், வீட்டுச் சூழலிலும் சுயகற்றலுக்கான சூழலை உருவாக்கி, மாணவர்களை சுயகற்றலை பாட ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஊக்குவிக்கும் போது, மாணவர்களிடத்தில் சுயகற்றலுக்கான உள்ளார்ந்த ஊக்கல் ஏற்படும்.

#சுயகற்றலில் #உள்ளார்ந்த #ஊக்கல் #அடைந்த #மாணவர்கள்....

1.பாடசாலை மற்றும் பிரத்யேக வகுப்புகளில் கற்ற பாடங்களை, தினமும் திட்டமிட்ட சுயகற்றலில் ஈடுபடுவதால், நீண்ட கால ஞாபகத்திற்கு உதவும்.

2.தினமும் ஏற்படும் பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வர்.

3.அதேவேளை மாணவர்கள் தினசரி பாடம் தொடர்பான சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்கும் போது, ஆசிரியர்களும் தினமும் பாட ஆயத்தத்துடன் கற்பித்தலில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும்.

4.இதனால் ஆசிரியர்களும் பாடம் தொடர்பான நிபுணத்துவ அறிவை தற்காலப்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

5.பாட ஆசிரியர்களின் பாட நிபுணத்துவம் மேம்படுவதால், ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தலின் வினைத்திறனும் விளைதிறனும் அதிகரிக்கும்.

சில வருடங்களுக்கு முன், சுய கற்றலில் தூண்டப்பட்ட மாணவன் ஒருவன், ஒரு குறித்த பாட ஆசிரியரிடம் தினமும், சந்தேகங்களை கேட்டு, நச்சரித்ததால்,(பாட முன் ஆயத்தம் செய்ய நேரமில்லாத ஆசிரியர்) முன் கூட்டியே ஓய்வு பெற்றுச் சென்ற வரலாறும் உண்டு.

இன்றைய ஆசிரியர்களில் பலரிடம், மாணவர்கள் பாடம் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்த முன் வராமையினால் தான், ஏனோதானோ என கடமைக்காக கற்பிக்கின்றனர்.

மாணவர்கள் தினமும் ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டு நச்சரித்தால்,பாட முன் ஆயத்தத்துடன் கற்பித்தலில் ஈடுபடுவர்.முடியாவிடில் இடமாற்றம் பெற்றுச் செல்லுவர்/ ஓய்வு பெற்றுச் செல்வர்.

அதிபர்களும், ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தலை மேற்பார்வை செய்து,வினைத்திறனாக கற்பித்தலில் ஈடுபடாத ஆசிரியரின் நேரசூசியை பொருத்தமான வேறு ஆசிரியருக்கு வழங்க வேண்டும்.

ஆகவே மாணவர்களுக்கு வீடுகளில் திட்டமிட்ட நேரசூசி அடிப்படையில் சுயகற்றலில் ஈடுபட பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

திருவிழா முடிந்த வீதிகள்*******************************இன்று காலை நல்லூர் வீதியைக் கடந்து வேலைக்கு சென்றபோது அது எனக்கு ...
14/09/2026

திருவிழா முடிந்த வீதிகள்
*******************************
இன்று காலை நல்லூர் வீதியைக் கடந்து வேலைக்கு சென்றபோது அது எனக்கு அந்நியமான ஒரு வீதியாகத் தோன்றியது.

கடந்த ஒரு மாதமாக அது ஒரு வீதியாக இருக்கவில்லை. அது ஒரு பெரும் உடலாக இருந்தது. ஆயிரக்கணக்கான மனிதர்களின் காலடிகளால் அசைந்துகொண்டிருந்தது.

வாகனங்கள் நின்றன, திரும்பின. தடுப்புகள் எழுந்தன. வழிகள் மாறின. வேலைக்குச் செல்லும் எங்களுடைய சிறிய அவசரங்கள் அந்தப் பெரும் ஓட்டத்தின் முன்னால் ஒதுங்கிக்கொண்டன. அது சில சமயம் எரிச்சலாக இருந்தது. சில சமயம் சிரமமாக இருந்தது. சில சமயம் நம்முடைய அன்றாட வாழ்க்கையைத் தடுத்து நிறுத்துவதாகவும் இருந்தது. ஆனால் அந்தத் தடுப்புகளுக்குள் வேறு ஒன்று நடந்துகொண்டிருந்தது.

ஓர் ஊர் தன்னைத் தானே நினைவுகூர்ந்துகொண்டிருந்தது.

தொலைவில் இருப்பவர்கள் திரும்பி வந்தார்கள். பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்க வேண்டிய முகங்கள் சந்தித்தன. குழந்தைகளுக்கு அவர்கள் வளர்ந்த பிறகும் மறக்க முடியாத காட்சிகளைத் தந்தன. முதியவர்கள் கூட்டத்தின் ஓரமாக நின்று தங்கள் இளமையின் ஏதோ ஒரு காலத்தை மீண்டும் பார்த்துக்கொண்டிருக்கலாம். ஒரு தலைமுறையின் நினைவுகள் அடுத்த தலைமுறையின் கண்களில் ஒப்படைக்கப்பட்டன.

நாம் கவனிக்காமல் வாழ்வில் கடந்து செல்லும் மனிதர்களுக்கிடையே அந்த நாட்களில் ஒரு தெரியாத நூல் இழுக்கப்பட்டது.
அந்த நூலின் பெயர் "ஊர்".

ஒரு ஊர் என்பது வீடுகளினதும் கட்டடங்களினதும் தொகுப்பு அல்ல. வீடுகளுக்கு இடையில் ஓடும் நினைவுகளின் தொகுப்பு. அந்த நினைவுகளுக்கு வருடம் தோறும் ஒரு மையம் தேவைப்படுகிறது.
நல்லூர் திருவிழா அந்த மையம் என்று நான் உணர்கிறேன். அதனால்தான் இருபத்தெட்டு நாட்கள் முடிந்ததும் இன்று காலை அதே வீதி மீண்டும் திறந்திருந்தபோது முதலில் எனக்குத் தோன்றியது வெறுமை.

வாகனங்கள் தடையின்றி செல்கின்றன.
வழியெங்கும் எந்தக் கூட்டமும் இல்லை.
நேற்று வரை மனிதர்களின் மூச்சினால் சூடாக இருந்த காற்றில் இன்று ஒரு குளிர்ந்த அமைதி.
நேற்று வரை “அரோகரா…அரோகரா” "அலங்காரா... நல்லூரா" என்று ஒரு குரல் எழுந்தால் அது நூறு குரல்களாகி ஆயிரம் குரல்களாகி அந்த வீதியின் மேல் ஒரு அலையாகச் சென்று கொண்டிருந்தது.

இன்று அந்தக் குரல் இல்லை. அந்த இல்லாமைதான் திடீரென்று அதன் இருப்பை உணர்த்தியது. முருகனுடைய திருவுருவம் அந்த வீதியைக் கடந்து சென்றபோது நாம் பார்த்தது ஒரு தெய்வத்தின் ஊர்வலத்தை மட்டும் அல்ல என்று இப்போது தோன்றுகிறது.

ஒரு வருடம் முழுவதும் சிதறிக்கிடந்த நம்முடைய வாழ்க்கை அந்த ஒரு தருணத்தில் தன்னுடைய மையத்தை அடைந்தது. பின்னர் அது முடிந்தது.

தேரும் போயிற்று.
கூட்டமும் போயிற்று.
கொடிகளும் இறங்கின.
தடுப்புகளும் அகன்றன.
வீதிகள் மீண்டும் எங்களுடையவையாகிவிட்டன.
ஆனால் அந்த வீதிகளில் நடந்துசென்ற ஆயிரக்கணக்கான மனிதர்களின் கால்தடங்கள் நினைவுகளாயிற்று.

வருடம் என்பது நாட்களால் முடிவதில்லை.
நினைவால் முடிகிறது.

நல்லூர் மகோற்சவம் யாழ்ப்பாணத்திற்கு நினைவின் முடிச்சு. ஒரு வருடத்தின் அலைகளை ஒன்றாகச் சேர்த்து ஒரு பெரும் சுழலில் உயர்த்தி மீண்டும் அமைதிக்குள் இறக்கிவிடும் ஒரு நிகழ்வு.

இன்று அந்த அமைதி வந்துவிட்டது.
வீதிகள் வெறுமையாகிவிட்டன.
ஆனால் அந்த வெறுமையின் நடுவே எங்கோ இன்னும் ஒரு குரல் கேட்கிறது.
"அலங்காரா…நல்லூரா" மிகத் தொலைவில் இருந்து. இல்லை … எனக்குள்ளிருந்தே. 🙏

ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயாபுகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா (90) காலமானார்.
11/09/2026

ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா (90) காலமானார்.

கடமையில் ஈடுபட்டிருக்கும் போது விபத்துகளுக்குள்ளான அரச ஊழியர்களுக்கான நிவாரணமளித்தல் தொடர்பான சுற்றுநிருபங்கள்
09/09/2026

கடமையில் ஈடுபட்டிருக்கும் போது விபத்துகளுக்குள்ளான அரச ஊழியர்களுக்கான நிவாரணமளித்தல் தொடர்பான சுற்றுநிருபங்கள்

08/09/2026

O/l 2026 Tamil Paper class 📚
அனுமதிகளுக்கு
07710151015

07/09/2026
03/09/2026

கம்பராமாயணம்(குகப்படலம்)/ தரம்-10/பாடல்:-02/கோசலையை பரதன் குகனுக்கு...

Address

Jaffna
K.K.SROAD,THAVADYJUNCTION,KONDAVIL.

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் கல்வி நிலையம்-தாவடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to தமிழ் கல்வி நிலையம்-தாவடி:

Shortcuts

Share