23/09/2023
கனடாவில் கல்வி கற்க முடிவு எடுக்குமுன் கவனிக்க வேண்டியவை என்ன
அண்மைக்காலமாக கனடா முன்னெப்போதும் இல்லாத அளவில் ஸ்டூடண்ட் விசாக்களை வழங்கி வருகிறது. உங்களுடன் சுத்தி திரிந்த நண்பர்கள் கனடாவிற்கு போய்விட்டதாக கேள்வி படும்போது எப்பிட்றா எண்டு நீங்கள் யோசிக்க கூடும். அதற்கு பல காரணங்கள் இருந்த போதும் முக்கிய காரணம் கனடாவின் குடிவரவு முறைமையில் ஏற்பட்ட மாற்றமே.
இதுநாள் வரையில் பல்கலைக்கழக or காலேஜ் கல்வி முடித்து அதன்பின் கிடைக்கும் Post Graduation Work Permit மூலம் கனடிய வேலை அனுபவத்தை பெற்று Express Entry மூலம் நிரந்தர வதிவுரிமை பெற விண்ணப்பிக்கும் போது கீழ்கண்ட link இல் காட்டப்படும் முறையில் CRS (Comprehensive Ranking System) புள்ளிகள் மதிப்பிடப்பட்டு அது போதுமானதாக இருக்கும் போது PR க்கு விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு கிடைத்த விண்ணப்பங்களில் காலத்துக்கு காலம் இத்தனை புள்ளிகளுக்கு மேல் எடுத்த, இத்தனை பேர் நிரந்தர வதிவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும் என தெரியப்பட்டனர். 2018 ஆண்டளவில் 439-450 புள்ளிகளும் 2019 - 2022வரை கோவிட் காரணமாக புள்ளிகள் இன்னும் குறைந்தது.
2023 இல் இந்த தெரிவு முறையில் கொண்டுவரப்பட்ட பாரிய மாற்றங்களால், அதிகூடிய புள்ளிகள் அடிப்படையில் மட்டும் PR வழங்காது, குறிப்பிட்ட தொழில் துறை சார் கல்வி + வேலை அனுபவம் உடையவர்களை மட்டும் தெரிந்து, அவர்களில் குறிப்பிட்ட CRS புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களை தெரிவு செய்யும் புது முறையும் ( category-based round ) நடைமுறைப்படுத்தபட்டது.
இந்த புதிய முறையின் கீழ் 2023 ல் தெரியப்படப்போகும் தொழில்முறைமைகள் - Categories chosen for 2023
1. French-language proficiency
2. Healthcare occupations
3. Science, Technology, Engineering and Math (STEM) occupations
4. Trade occupations
5. Transport occupations
6. Agriculture and agri-food occupations
அண்மையில் (June 28, July 4 & 5 & 6) நடாத்தப்பட்ட தெரிவுகளில் மேற்கண்ட தொழில்களில் Health Care ம் STEM ம் எனும் மருத்துவ துறை சார்ந்த கல்வி +தொழில் அனுபவத்தை கொண்டவர்கள் மட்டும் தெரியப்பட்டார்கள். இவர்களில் 463- 486 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/corporate/mandate/policies-operational-instructions-agreements/ministerial-instructions/express-entry-rounds.html -auto-4
அதே நேரம் பழைய முறைமை படி தொழில்ரீதியாக பிரிக்காது அதிகூடிய CRS புள்ளிகளை பெற்றவர்களை தெரிவு செய்யும் No Program Specified draw ம் இடம்பெற்றது. இதன்படி ஆக குறைந்த CRS புள்ளிகள் 486 இலிருந்து 511 ஆக உயர்ந்துள்ளது. உதாரணமாக 31 வயதுடைய ஒருவர் இந்த 511 CRS புள்ளிகளை பெற இலங்கையில் master's முடித்து + இலங்கையின் 3 வருட வேலை அனுபவம் முடித்து + IELTS each element 7.5 எடுத்து+ கனடாவில் 1y - 2y டிப்ளோமா கல்வி ஒன்றை முடித்து + அதன் பின் கனடாவில் ஒரு வருட வேலை அனுபவம், இவ்வளவையும் முடித்தால் மட்டுமே சாத்தியம்.
ஆகவே இதையெல்லாம் பற்றி அறியாமல் கனடாவிற்கு foreign student ஆக வந்து ஒண்டாரியோவிலோ பிரிட்டிஷ் கொலம்பியாலயோ நண்பர்கள் இருக்கிறார்கள் உறவினர் இருக்கிறார்கள் என வந்து சேர்ந்து ஒரு செமஸ்டருக்கு $8000 கட்டவே நாக்கு தள்ளி, அதை சமாளிக்க என பதிந்து ஒரு வேலை, பதியாமல் சட்டவிரோதமாக கைக்காசுக்கு ஒரு வேலை என ஓடி ஓடி உழைக்க வெளிக்கிட்டு, படிப்பை கவனிக்க முடியாமல் அதை கோட்டை விட்டு, கடைசியில் அகதி கோரி, அதை ஏன் முதலே கேட்கவில்லை என்று Refugee Board கேட்கும் கேள்விக்கு விடை சொல்ல முடியாமல், அகதி வழக்கு நிராகரிக்கப்பட, இனி சரிவராது யாரையாவது பாத்து கல்யாணத்த கட்டுங்கோ எண்டு அகதி கதை எழுதுற ஆள் சொல்ல , கல்யாணம் காதல் பற்றிய கனவெல்லாத்தையும் தோண்டி புதைச்சிட்டு, ஓடித்திரிஞ்சு கிடைக்கிற ஆளை கல்யாணம் கட்டி, வந்த துணை உங்களை ஸ்பொன்சார் பண்ணும்வரை, நாட்டுல இருக்க விடாம deportation பண்ணாலும் எண்டு அதுக்கு வேறு வக்கீலுக்கு ஆயிரம் ஆயிரமாக கொட்டி குடுத்து, வாழ்க்கையை தொலைத்து ஏண்டா வந்தோம் எண்டு தலையை பிய்க்காமல், கனடா வரவேண்டும் என்று உங்களுக்கு தோன்றும் நாளில் இருந்தே PR எப்படி எடுக்கப்போகிறீர்கள் என்பதை திட்டமிட்டு வாருங்கள்.
எந்த துறையில் படித்தால் என்னால் PR க்கு தெரியப்படமுடியும், நான் படிக்கும் பாடநெறி முடிவில் எனக்கு கிடைக்கவுள்ள CRS புள்ளிகள் என்ன, IELTS புள்ளிகளை அதிகரித்தால் எப்படி எனது CRS புள்ளிகள் அதிகரிக்கிறது, இலங்கையில் நான் செய்யும் மூன்று வருட வேலை அனுபவம் எந்தளவுக்கு எனக்கு புள்ளிகளை கூட்டுகிறது, எந்த province இல் இலகுவாக PR எடுக்கலாம், எங்கு LMIA இன்றி PNP எடுக்கமுடியும், நான் கற்க போகவுள்ள பாடநெறி 1- 3 வருடங்களுக்கு Open work permit (PGWP) தருமா, இலங்கையில் நான் master 's படித்து முடித்தபின் வருவது எவ்வளவுக்கு புள்ளிகளை அதிகரிக்கும் போன்ற விடயங்களை முடிவு செய்து வருபவர்களுக்கு கனடா சொர்க்கம் தான். பல்கலைக்கழகத்தில் சேர்ந்தால் PR கிடைக்கும் என்பது இனி உண்மை அல்ல அதில் வேறு பலவிடயங்களும் ஆதிக்கம் செலுத்தும்.
DO YOUR RESEARCH and BE SMART
23/09/2023
23/09/2023