01/08/2026
CENTRAL DAY🤎💙
எங்களரும் கல்லூரியை வளர்க்கப் போகிறோம்
இடிந்தவற்றைக் கட்டிமீள எழுப்பப் போகிறோம்
அலுப்புவரும் சலிப்புவரும் அயரப் போவதில்லை
ஆற்றலுள்ள மட்டும்நாங்கள் ஓயப் போவதில்லை
வகுப்பறைகள் நெருக்கமாக இருப்பதனைப் பாரும்
விருப்புடனே சேவைசெய்தால் இடவசதி கூடும்
நூல்நிலையம் முற்றாகச் சிதைந்துபோச்சு பாரும்
நினைத்துநாமும் முயற்சிசெய்தால் பலநூல்கள் சேரும்
ஓட்டைகளாய் தெரிகின்ற கட்டிடங்கள் பேணும்
ஒழுங்காகச் செப்பனிட ஒத்துழைப்புத் தாரும்
வீடுதியது வெகுவாக அழிந்தநிலை ஆச்சு
விரைவாகத் திருத்தாவிடில் அதன்வளங்கள் போச்சு
மத்தியத்தின் பெயரைச்சொல்லி மனமகிழ்ந்து நில்லு
மகிமையுடன் நித்தியமும் வாழுமென்று சொல்லு.