26/09/2024
எமது பாடசாலை மாணவர்கள் கடந்த மாதம் நடைபெற்ற காற்று துப்பாக்கி சுடும் (Air Rifle Shooting) போட்டியில் பங்கு பெற்றி பாடசாலை மட்டத்தில் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளதுடன் அவர்கள் தேசிய ரீதியிலான காற்று துப்பாக்கி சுடும் (Air Rifle Shooting) போட்டிக்கு தெரிவாகி உள்ளமையை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன். மேலும் அம்மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவிப்பதோடு நமது பாடசாலையில் காற்று துப்பாக்கி (Air Rifle) இல்லாமை பெரும் குறையாக இருந்தது. பாடசாலை மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக எமது பாடசாலையின் பழைய மாணவர்களால் (94 மற்றும் 95 Batch) பாடசாலைக்கு உத்தியோகபூர்வமாக காற்று துப்பாக்கி (Air Rifle) இன்று பாடசாலை அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.இவ் உதவியை செய்த 94/95 Batch இற்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகள் உரித்தாகட்டும்.