17/10/2023
அஸ்ஸலாமு அலைக்கும், வணக்கம்
சர்வதேச சிறுவர் தினம் 2023
“அனைத்தையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்” என்ற தொனிப் பொருளில்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மாணவர் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாரஸ்யமான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் திங்கட் கிழமை 02-10-2023 மு.ப 08:30 மணிக்கு அல்-மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் Mr. M.S.M Riza அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வுகளை மாணவர் நலன்புரி சங்கத்தின் தலைவர் Second Lieutenant M.A.K Arshad அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது.
நிகழ்வுகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் முகமாக தரம் 9B ஐ சேர்ந்த செல்வன் Hassan ஆல் அல்குர்ஆன் வசனங்கள் சில மொழியப்பட்டது.
அதை தொடர்ந்து கல்லூரியின் கௌரவ அதிபர் அல்ஹாஜ் M.S.M Riza அவர்களால் பாடசாலை கொடியும், நிகழ்வின் பிரதம அதிதியும் அல்-மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் முன்னால் மாணவ சங்க உறுப்பினரும் ஆன சகோதரர் Mr.M.S.M. Iqraam அவர்களால் தேசிய கொடியும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் செயலாளர் அல்ஹாஜ் M. A. M.Numan அவர்களால் மாகாணக் கொடியும் ஏற்றி வைக்கப்பட தேசிய கீதம், பாடசாலை கீதம் என்பன இசைக்கப்பட்டு அனைவராலும் மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் தரம் 6 தொடக்கம் 13 வரையான ஆண், பெண் மாணவர்களுக்கு தனித்தனியாக நடாத்தப்பட்டது.
அந்த வகையில் Circling the wicket, Puzzle Game, Musical Chair, Cup Building, Lava Walk, Water Filling, Musical Ball, Breaking Balloon, Tug of War என்பன நடாத்தப்பட்டதுடன் மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள்.
இறுதியாக பரிசளிப்பு விழா ஒன்றும் நடாத்தப்பட்டது.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஆக்கத்திறன் அதாவது கவிதை, கட்டுரை, சிறுகதை, சித்திரம் ஆகிய போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும், உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரில் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசுகள் அந்தந்த அணித் தலைவர்களிடமும், கடந்த முறை O/L எழுதிய மாணவர்களுக்கும் பாடசாலை அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலை அணிக்கு வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டது.
நிகழ்வுகளை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள் தெரிவித்துக் கொள்கின்றோம் ஜசாக்குமுல்லா ஹய்ர்.
விசேடமாக நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாக ஒழுங்கமைத்து நடாத்திய மாணவர் நலன்புரி சங்கத்தின் செயலாளர், பொருளாலர் உட்பட அனைத்து உறுப்பினர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் ஜசாக்குமுல்லா ஹய்ர்.
தலைவர்
மாணவர் நலன்புரி சங்கம்
அல்-மின்ஹாஜ் தேசிய பாடசாலை