16/05/2026
🏆 வெற்றிப் பயணத்தில் மற்றுமொரு மகுடம்! 🏆
ஒவ்வொரு துறையிலும் தமது அபார திறமைகளை வெளிப்படுத்தி, நமது பாடசாலைக்கு பெருமை சேர்த்து வரும் A/Ganewalpola MMV மாணவர்கள் இன்று மீண்டும் ஒரு வெற்றியை தமதாக்கி கொண்டுள்ளனர்!
இன்று நடைபெற்ற தமிழ் தினப் போட்டி நாட்டார் பாடல் நிகழ்வில், எமது மாணவர்கள் வலய மட்டத்தில் முதலாம் இடத்தை (1st Place) தமதாக்கி, மாகாண மட்டப் போட்டிக்கு (Province Level) கம்பீரமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 🎉
"பாரம்பரியக் கலையைத் தம் குரலால் உயிர்ப்பித்து, பாடசாலையின் நாமம் வாழச் செய்த தங்கங்களே... உங்கள் திறமைக்கு எமது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்!"
இவ் வெற்றியை நிகழ்த்தி, பாடசாலைக்கு கீர்த்தியையும் பெருமையையும் தேடித்தந்த அன்பு மாணவச் செல்வங்களுக்கும், அவர்களுக்குப் பின்னால் இருந்து வழிநடத்திய அதிபர், பொறுப்பாசிரியர்கள் மற்றும் பயிற்சியளித்த அனைவருக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்! 👍❤️
மாகாண மட்டப் போட்டியிலும் நீங்கள் பிரகாசித்து, மேலும் பல வெற்றிகளைப் பெற எமது பிராத்தனைகளும் வாழ்த்துக்களும் என்றும் உங்களுடன் இருக்கும்! 🌟💪