28/08/2025
கறம்பாவ அல்-மினா முஸ்லிம் வித்தியாலயத்தில் இன்று (28.08.2025) சிறப்பான நிகழ்வொன்று மூன்று விடயங்களை மையப்படுத்தி இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் போது, பாடசாலையின் புதிய அதிபர் அவர்களை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அன்புடன் வரவேற்றனர். அதேவேளை, NEW FASHlON உரிமையாளர் அவர்களின் நிதி உதவியால் நிர்மாணிக்கப்பட்ட எமது பாடசாலையின் பிரதான நுழைவாயில் திறப்பு விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
மேலும், 2024 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று பாடசாலையின் பெருமையை உயர்த்திய மாணவன் சபீக் கௌரவிக்கப்பட்டார்.
மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பல்வேறு விருந்தினர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு மிகச்சிறப்பாக நிறைவு பெற்றது.
01/12/2023
*voice of MK*
2023.12.01
புகழனைத்தும் இறைவனுக்கே....
*அல்ஹம்துலில்லாஹ்*
🤲🤲🤲🤲🤲
கறம்பாவை அல்-மினா முஸ்லிம் வித்தியாலத்தில் 2022(2023)ம் ஆண்டிற்கான க.பொ.த சதாராண தர பரிட்சையில் தோற்றிய 16 மாணவர்கள் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.....
93.75 சதவீதமானவர்கள் க.பொ.த உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். என்பது மிக முக்கிய அம்சம்...
அல்ஹம்துலில்லாஹ்......
தோற்றிய மாணவர்கள் பெற்றுக்கொண்ட பாடங்களின் சதவீதங்கள்...
*இஸ்லாம்:-100%
*தமிழ்:-100%
*கணிதம்:-100%
*வரலாறு:-100%
*ஆங்கிலம்:-87.5%
*விஞ்ஞானம்:-93.75%
*சித்திரம்:-100%
*சிங்களம்(இரண்டாம் மொழி):-100%
*தமிழ் இலக்கிய நயம்:-93.75%
*சுகாதாரம்:-100%
உயர் தரத்திற்கு 93.75% சதவீத சித்தி
*அல்ஹம்துலில்லாஹ்*
🤲🤲🤲🤲🤲🤲🤲
ஆகவே.. இந்த வெற்றியை அடைய உழைந்த மாணவர்கள், அவர்களை இரவு பகலின்றி சிறப்பாக வழிநடத்திய ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் அனைவருக்கும் கறம்பாவை மக்கள் அன்புடன் நன்றிகளை தொரிவித்துக் கொள்கின்றனர்...
யாஅல்லாஹ்🤲🤲
இன்னும் பல வெற்றிகளை எம் கறம்பாவை மண்ணுக்கு தந்து அருள்செய்துவிடு....
🤲🤲🤲🤲🤲
21/11/2023
புகழனைத்தும் இறைவனுக்கே....
*அல்ஹம்துலில்லாஹ்*
🤲🤲🤲🤲🤲
கறம்பாவை அல்-மினா முஸ்லிம் வித்தியாலத்தில் 2023ம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரிட்சையில் தோற்றி சித்தியடைந்த இரு மாணவிகள் மற்றும் 100க்கு அதிகமான புள்ளிகளைப் பெற்ற மாணவர்களையும் கௌரவிக்கும் ஓர் ஊர்வல நிகழ்வு இன்று (2023.11.21) கறம்பாவை மண்ணில் இடம்பெற்றது...
ஆகவே.. இந்த வெற்றியை அடைய உழைந்த மாணவர்கள், அவர்களை வழிநடத்திய ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் அனைவருக்கும் கறம்பாவை மக்கள் அன்புடன் நன்றிகளை தரிவித்துக் கொள்கின்றனர்...
இந்த வெற்றியைப் பற்றி சென்ற வெள்ளிக்கிழமை (2023.11.17) ஜும்ஆ குத்பாவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யாஅல்லாஹ்🤲🤲
இன்னும் பல வெற்றிகளை எம் கறம்பாவை மண்ணுக்கு தந்து அருள்செய்துவிடு....
🤲🤲🤲🤲🤲
News By:- voice of MK
22/01/2023
உங்கள் பிரார்த்தனைகளில் இவர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்......
விரும்பினால் நீங்களும் Status வைக்கலாம்......