Galgamuwa Model Muslim Maha Vidyalaya

Galgamuwa Model Muslim Maha Vidyalaya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Galgamuwa Model Muslim Maha Vidyalaya, School, galgamuwa, Galgamuwa.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ வணக்கம் தேசிய நீர் தினத்தை முன்னிட்டு இலங்கை தேசிய நீர்ப்பாசன திணைக்களத...
08/04/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
வணக்கம்

தேசிய நீர் தினத்தை முன்னிட்டு இலங்கை தேசிய நீர்ப்பாசன திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட

உருகும் பணிப்பாறை எனும் தொனிப்பொருளில்

இடம்பெற்ற பேச்சு போட்டியில் கலந்து கொண்ட எமது பாடசாலையைச் சேர்ந்த தரம்
11A shahama என்ற மாணவி முதலிடத்தை
பெற்றுள்ளார் ...

28/02/2025
28/02/2025

இல்ல விளையாட்டுப் போட்டி - 2025
கல்கமுவ முன்னோடி முஸ்லிம் மஹா வித்தியாலயம்.

நீண்ட நாட்களின் பின் எமது பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி ரூபி, டயமண்ட், எமரல்ட் என்று மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு கிரிக்கெட், எல்லே, கரப்பந்து, கூடைப்பந்து, உதைப்பந்து என பெரு விளையாட்டுக்களும் 2025.02.24,25 திகதிகளில் மெய்வல்லுனர் போட்டிகளும் நடைபெற்று இறுதி நாள் நிகழ்ச்சிகள் 2025.02.27ம் திகதி வியாழக்கிழமை கலையகத்தின் கெளரவ அதிபர் திருவாளர் M.M.M நளீம் தலைமையில் கெளரவ அதிதி திரு சிறிமான(உதவிக் கல்விப் பணிப்பாளர் - மாகோ கல்வி வலயம்), விசேட அதிதி பாராளுமன்ற உறுப்பினர் திரு சந்தன தென்னகோன் , வலயத்தின் ஆசிரிய ஆலோசகர்கள்,சக பாடசாலை அதிபராசிரியர்கள் மேலும் பாடசாலை அபிவிருத்தி சங்கம்,பழைய மாணவ ஒன்றியம் ,பெற்றோர், நலன் விரும்பிகள் , ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வில் 100M , 100×4 M , 400×4 , வினோத உடை முதலான மாணவர் நிகழ்ச்சிகளும்
இன்னும் பழைய மாணவர்களுக்கான அஞ்சல் ஓட்டம், பெற்றோர்களுக்கான அஞ்சல் ஓட்டம், இல்ல ஆசிரியர்களுக்கான அஞ்சல் ஓட்டம் என இரசனையுடன் கூடிய போட்டிகள் நடைபெற்றன.

மேலும் மாணவர்களின் சங்கீத நடனக் கண்காட்சி, அணி நடை மரியாதை என விழாக் கோலம் கொண்டு நிகழ்வுகள் நடைபெற்றது.

இன்னும் இல்ல அலங்கரிப்பில் எமரல்ட் இல்லமும், அணி நடை மரியாதை நிகழ்வில் டயமண்ட் இல்லமும் வெற்றி பெற்றது.

இறுதியாக இல்லங்கள் பெற்ற புள்ளிகள் வழங்கப்பட்டு
479 புள்ளிகளுடன் எமர்ல்ட் இல்லம் மூன்றாமிடத்தையும், 538 புள்ளிகளுடன் டயமண்ட் இல்லம் இரண்டாமிடத்தையும், 558 புள்ளிகளுடன் ரூபி இல்லம் முதலாமிடத்தையும் பெற்று வெற்றி பெற்றது.

ஆகவே இந் நிகழ்வுக்கு அருள் புரிந்த இறைவனுக்கு முதற் கண் நன்றியையும் , மேலும் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பாடசாலை பழைய மாணவர் ஒன்றியம்,பெற்றோர்,நலன் விரும்பிகள், நடுவர்களாக பங்குபற்றிய சக பாடசாலை ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹூஇலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் (Srilanka Broadcasting corporation)வருடா வ...
10/02/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹூ

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் (Srilanka Broadcasting corporation)
வருடா வருடம் நடாத்தும் நாடளாவிய பாடசாலைகளுக்கு இடையிலான அறிவுக்களஞ்சிய
தேசிய மட்ட போட்டியிற்கு எமது பாடசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளது..
Alhamdu lillah

இம்முறை குருநாகல் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று பாடசாலைகளில் எமது பாடசாலையும் ஒன்றாகும்...

இப்போட்டியானது இம்மாதம் 19 ஆம் திகதி colombo இல் உள்ள
Al hidaya maha vidyalayam தில் இடம்பெற உள்ளது

2025வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி  Galgamuwa model muslim m.v பாடசாலையை பொருத்தவரையில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல்...
10/02/2025

2025வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி Galgamuwa model muslim m.v

பாடசாலையை பொருத்தவரையில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாற்டோடு இணைப் பாடவிதான செயற்பாட்டிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தி ஆர்வப்படுத்துவது மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்தின் வளர்ச்சியின் அத்தியாவசியமான ஓர்அம்சமாகும் ..

அதனடிப்படையில் சுமார் 7 வருடங்களுக்கு பின்னர் எமது பாடசாலையில் இவ்வருடம் 2025 ஆம் ஆண்டு இல்ல விளையாட்டுப் போட்டி ஒன்று மிகச் சிறப்பாகவும் வெகு விமர்சையாகவும் மூன்று இல்லங்களினுடைய ஆடை அறிமுகத்துடன் இனிதே ஆரம்பமாகியது..
Al hamdu lillah

பாடசாலையின் அதிபர்
M.M.M.Naleem அவர்களின் தலைமையில் இனிதே ஆரம்பமாகிய.
ஆரம்ப நிகழ்வுக்கு பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் பாடசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்..

மூன்று இல்லங்களின் பெயர்களும் நிறங்களும் இல்ல ஆசிரிய தலைவர்களின் பெயர்களும்

1) RUBY HOUSE
சிவப்பு நிறம்
இல்ல ஆசிரிய தலைவர் : Reji sir

2) DIAMOND HOUSE
நீல நிறம்
இல்ல ஆசிரிய தலைவர் : Nafrees sir

3) EMERALD HOUSE
பச்சை நிறம்
இல்ல ஆசிரிய தலைவர்: Safran sir

இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியான கிரிக்கெட் போட்டியில்
EMERALD HOUSE அணியினரை வீழ்த்தி DIAMOND HOUSE அணியினர் CHAMPION ஆக மகுடம் சூடினர்..

நேற்றைய தினம் (2025/02/04) எமது பாடசாலையின் பிரதான மண்டபத்தில் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் இரவு 8:45 மணியளவில் ...
05/02/2025

நேற்றைய தினம் (2025/02/04) எமது பாடசாலையின் பிரதான மண்டபத்தில் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் இரவு 8:45 மணியளவில் அதிபர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில், வளவாளர்களாக மாகோ கல்வி வலயத்தின் பணிப்பாளர் அஷ் ஷெய்க் ரிஸ்வி சுபைர் அவர்களும், மேர்சி கல்வி வளாகத்தின் கலாநிதி அஷ் ஷெய்க் பவ்ஸுர் ரஹ்மான் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பழைய மாணவர் சங்கத்தின் 6 வருட பூர்த்தி (2019/02/04 - 2025/02/04) அன்றைய தினமாகும்.
அதனை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் கீதமும் முதல் முறையாக வெளிவிடப்பட்டது.

அன்றைய பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து பிரமுகர்களுக்கும் நலன்விரும்பிகளுக்கும் பழைய மாணவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
புதிய நிறுவாக உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

O.S.A

இன்று எமது (2024.11.4) பாடசாலையில் உயர்தர  கலைப்பிரிவு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட இறுதிக் கருத்தரங்கு நடைபெற்றது.வளவாளர்...
07/11/2024

இன்று எமது (2024.11.4) பாடசாலையில் உயர்தர கலைப்பிரிவு மாணவர்களுக்கான இஸ்லாம் பாட இறுதிக் கருத்தரங்கு நடைபெற்றது.

வளவாளர் : எம்.என்.தாரிக் மொஹமட் (நளீமி).

ஏற்பாடு : பாடசாலை நிர்வாகம்

அனுசரனை : SDC & OSA

மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா.2024 கடந்த வாரம் புதன்கிழமை (2024.10.30) அன்று காலை 10 மணி முதல் இவ்விழா நடை...
05/11/2024

மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா.2024

கடந்த வாரம் புதன்கிழமை (2024.10.30) அன்று காலை 10 மணி முதல் இவ்விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக மாகோ வலயக் கல்வி காரியாலயத்தின் பணிப்பாளர் கௌரவ ஆர் .எம். ஐ. எம் .ஏ. ஜின்னா அவர்கள் கலந்து கொண்டார்கள். விசேட அதிதியாக கல்கமுவ பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் நிர்வாக அத்தியட்சகர் எச். எம். ஏ. ஆர்.திவுல்கனே அவர்கள் கலந்து கொண்டார்கள். சிறப்பு அதிதிகளாக மாகோ வலயக் கல்விக்காரியாலயத்தின் தமிழ் மொழி பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ். ஏ .எம். ரிஸ்வி அவர்களும், மாகோ வலயக் கல்விக்காரியாலயத்தின் ஆசிரியர் வான்மை நிலைய பிரதிப் பணிப்பாளர் எச் .எம் திலகரத்ன அவர்களும், கல்கமுவ கோட்டக்கல்வி காரியாலயத்தின் பணிப்பாளர் டி .எம். எஸ். பி. தென்னகோன் அவர்களும், மாஹோ வலயக் கல்விக்காரியாலயத்தின் ஆசிரிய ஆலோசகர்களான என்.எம். எம். ஹாபிஸ், எம். எம்.எம்.ரம்ஸான், ஏ. சி.பாரிஸ்கான், டபிள்யூ. எம்.வர்னசூரிய அவர்களும் ,முன்னாள் அதிபரான ஏ. எஸ்.நிஸாரா அவர்களும் ,முன்னாள் ஆசிரியர்களான எம். ஆயிஷா, எம் .எம் .எப்.ஸனீகா,ஏ.ஆஸியா, எம். எச் .எஸ்.ஸனூபா அவர்களும், அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் உட்பட உறுப்பினர்களும், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் உட்பட உறுப்பினர்களும், பெற்றோர் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

இவ்விழாவிற்கு தலைமை தாங்கி வழிநடாத்திய எமது பாடசாலையின் கௌரவ அதிபர் எம் .எம்.எம்.நளீம் அவர்களுக்கும் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்து ஒழுங்கமைத்த ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் நிர்வாகத்தினர் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்..

மாகோ கல்வி வலய தமிழ்ப் பிரிவின் ஏற்பாட்டில், கல்கமுவ மு ம வி இன் ஒழுக்காற்று குழு இணைந்து  மாணவ தலைவர்களுக்கான பயிற்சி ம...
27/10/2024

மாகோ கல்வி வலய தமிழ்ப் பிரிவின் ஏற்பாட்டில், கல்கமுவ மு ம வி இன் ஒழுக்காற்று குழு இணைந்து மாணவ தலைவர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்று கல்கமுவ மு.ம.வி இல் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.எம். நளீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பேற்படி நிகழ்வில், வளவாளராக உளவள ஆலோசகர், பயிற்றுவிப்பாளர் எம்.டீ.நுஸ்ரத் கலந்துகொண்டதுடன் அயல் பாடசாலைகளான ஜாகம அல் ஹகீம் மு.வி, கள்ளாவ மு.வி ஆகிய பாடசாலைகளும் உள்ளடங்களாக 100 மாணவ தலைவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வுகளுக்கான ஒத்துழைப்பினை கல்கமுவ மு.ம.வி. உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட SDEC, OSA உறுப்பினர்களும் வழங்கியிருந்தனர்.
அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்

இப்படிக்கு
அதிபர்.

12/10/2024

📼🎤🎧📼🎙️🎧📼🎧🎙️
*இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்- முஸ்லிம் நிகழ்ச்சி பிரிவு*
🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

*கலையரங்கம் வானொலி நிகழ்ச்சி.*

*நாளைய தினம்*
*(2024/10/13) ஞாயிற்றுக்கிழமை*

⏰⏰⏰⏰⏰🕰️🕰️🕰️🕰️

நேரம் : *காலை 10:45 மணி தொடக்கம் 11.10 மணிக்கு இடைப்பட்டநேரத்தில் எதிர்பாருங்கள்...*

கலந்து சிறப்பிக்கும் பாடசாலை👇

*குருணாகல் மாவட்டம்,கல்கமுவ முன்மாதிரி முஸ்லிம் மகா வித்தியாலயம்*
🎤🎤🎙️🎙️📹📹🎤🎤🎙️
மாணவர்களின் ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிக்கொணர்வதற்காக களம் அமைக்கும் *"கலையரங்கம் வானொலி நிகழ்ச்சி "*

கலையரங்கம் வட்சப் குழுமத்தில் இணைந்துகொள்ள👇
Follow this link to join my WhatsApp group:

Address

Galgamuwa
Galgamuwa

Telephone

+94775353133

Website

Alerts

Be the first to know and let us send you an email when Galgamuwa Model Muslim Maha Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Galgamuwa Model Muslim Maha Vidyalaya:

Shortcuts

Share

Category