Michnagar Ilma Vidyalaya

Michnagar Ilma Vidyalaya Time to remain who works hard for the MIV

கோட்டமட்ட போட்டி -2026ஏறாவூர் கோட்ட பாடசாலைகளுக்கிடையிலானா வொலிபோல் சுற்றுப்போட்டி இன்று அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தி...
07/04/2026

கோட்டமட்ட போட்டி -2026

ஏறாவூர் கோட்ட பாடசாலைகளுக்கிடையிலானா வொலிபோல் சுற்றுப்போட்டி இன்று அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் ரத்த இடம்பெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய எமது பாடசாலையின் 16 வயதின்கீழ் ஆண்கள் அணியினர் சாம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதுடன் 18 வயதின்கீழ் ஆண்கள் அணியினர் 2ம் இடத்தினைப் பெற்றுக்கொண்டனர். இவர்களை வழிப்படுத்திய உடற்கல்வி ஆசிரியர் MS. நௌசாத் அவர்களுக்கும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ALM.சிப்லி அவர்களுக்கும் பங்குபற்றிய மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பாடசாலைச் சமூகம் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்.

தரம் 11 மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கலும் பிரியாவிடை நிகழ்வும் - 2026எமது பாடசாலையில் இவ்வருடம் க.பொ.த (சாதாரண தர) ப...
14/02/2026

தரம் 11 மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கலும் பிரியாவிடை நிகழ்வும் - 2026

எமது பாடசாலையில் இவ்வருடம் க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டை (Admission Card) வழங்கும் நிகழ்வும், அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் கடந்த 11.02.2026 அன்று பாடசாலை கேட்போர் அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் HL. முஹாஜிர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில் மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சி மற்றும் பரீட்சைக்கான தயார்படுத்தல்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்தியதுடன் பரீட்சைக்கான உத்தியோகபூர்வ அனுமதி அட்டைகள் அதிபரினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.

இறுதியாக விசேட துஆப் பிரார்த்தனையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
எமது மாணவர்கள் அனைவரும் வரவிருக்கும் சாதாரண தரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்க்க இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

05/02/2026

78th Independence Day celebrations at Michnagar Ilma Vidyalaya

புதிய பயணத்தின் ஆரம்பம்வித்தயாரம்பம் - 2026 "மகிழ்ச்சி, புன்னகை மற்றும் அன்புடன் பாடசாலைக்கு" எனும் மகுட வாசகத்திற்கேற்ப...
01/02/2026

புதிய பயணத்தின் ஆரம்பம்
வித்தயாரம்பம் - 2026

"மகிழ்ச்சி, புன்னகை மற்றும் அன்புடன் பாடசாலைக்கு" எனும் மகுட வாசகத்திற்கேற்ப, மிச்நகர் இல்மா வித்தியாலயத்தின் தரம் - 01 மாணவர்களை வரவேற்கும் உன்னத நிகழ்வு 29.01.2026 ஆந் திகதி பாடசாலை அதிபர் ஜனாப் H.L.M. முஹாஜிர் அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
கல்வி எனும் கடலில் முதன்முதலாக கால்பதிக்கும் எம் பிஞ்சு உள்ளங்களை வாழ்த்தி வரவேற்கப் பல சான்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாப் MA. கலீல் (SLPS-I) ஓய்வுபெற்ற அதிபர் அவர்களும்,கௌரவ அதிதிகளாக ஜனாப் MLA. சபூர் (ஆசிரிய ஆலோசகர்- இஸ்லாம், EPSI இணைப்பாளர் மட்/ மம/ மிச்நகர் இல்மா வித்தியாலயம்,
ஜனாப் SM. றின்ஸாத் அவர்கள் (ஆசிரிய ஆலோசகர்- ஆரம்பக்கல்வி) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இதனோடு பாடசாலையின் அபிவிருத்திச் சங்கச் செயலாளர் மற்றும் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
எதிர்காலத் தூண்களாகத் திகழப்போகும் எம் மாணவர்களின் இந்த ஆரம்பம் வெற்றிப்பாதையாக அமையப் பிரார்த்திக்கிறோம்.

02/01/2026

புதிய ஆண்டிற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்வு - 2026

2026 ஆம் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு எமது மட்/மம/மிச்நகர் இல்மா வித்தியாலயத்தில் கடமைப்பொறுப்புக்களை ஆரம்பிக்கும் சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று (01.01.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் HL.முஹாஜிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிய ஆண்டில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், பாடசாலையின் முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என உறுதிபூண்டனர்.
இப்புதிய ஆண்டு எமது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஒரு வசந்த ஆண்டாக அமையட்டும்!

 #கல்விக்காக_கரம்_கொடுப்போம்வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான  கற்றல் உபகரணங்கள் சேகர...
03/12/2025

#கல்விக்காக_கரம்_கொடுப்போம்

வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் சேகரிக்கின்ற பணி இன்று 03.12.2025 ஆம் திகதி காலை 8.00 மணியளவில் மட்/மம/ மிச்நகர் இல்மா வித்தியாலயத்தில் எமது பாடசாலை முதல்வர் HL.முஹாஜிர் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயத்தின் பிரதிக் கல்வி பணிப்பாளர் TMS.அஹமட் ( SLEAS) அவர்களும், ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி நிலைய முகாமையாளர் A.றியாஸ்(SLTEAS)அவர்களும், ஆரம்பக் கல்விக்கான ஆசிரிய ஆலோசகர் MS.றின்சாத் அவர்களும் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் முனாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் அத்தோடு எமது பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பார்கள் ஆகியோரும் பங்குபற்றியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் எமது மாகாணக கல்விப் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வழி காட்டுதலின் கீழ் எமது ஏறாவூர் மிச்நகர் இல்மா வித்தியாலய முன்றலில் பின்வரும் பொருட்களை சேகரித்து கொண்டிருக்கிறோம்...

1. பயன்படுத்தக்கூடிய சீருடைகள்.
பாதணிகள்
2. கற்றல் உபகரணங்கள் (கொப்பி,
பேனை, பென்சில், அலிஇறப்பர்,
இரேசர், கம்)
3. கடந்தகால வினா விடைப் புத்தகங்கள்
(Pass Papers) (O/ L, A/L மற்றும் தரம் 05)

குறிப்பு : நாளை 04.12.2025 ஆந் திகதியும் இவ்வேலைத்திட்டம் இடம்பெறும் ஆகவே உங்களது நிவாரணப் பொருட்களை உங்கள் கொண்டுவந்து ஒப்படைக்க முடியும் என்பதனை அறியத்தருகின்றோம்.

மட்/மம/மிச்நகர் இல்மா வித்தியாலயத்தில் பாடசாலை மூலிகைத் தோட்டம் ஆரம்பம்-2025சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் புதிய முயற்சி...
24/10/2025

மட்/மம/மிச்நகர் இல்மா வித்தியாலயத்தில் பாடசாலை மூலிகைத் தோட்டம் ஆரம்பம்-2025

சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் புதிய முயற்சி!
சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களின் முக்கியத்துவத்தை மாணவர்கள் மத்தியில் வலியுறுத்தும் வகையில், எமது பாடசாலையின் நேற்றைய தினம் 23.10.2025 ஆந்திகதி சுற்றாடல் முன்னோடிக் கழகத்தினர் (Environmental Pioneers Club) இந்த அருமையான திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

மூலிகைகளின் மருத்துவப் பயன்கள் மற்றும் அவற்றை வளர்க்கும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு செய்முறை அறிவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் MHM.முர்சிதா , விவசாய போதனாசிரியர், விவசாயத் திணைக்களம், ஏறாவூர், பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர், கழகத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு மூலிகைக் கன்றுகளை நட்டு வைத்தனர்.
இதன் மூலம் பாடசாலை வளாகம் பசுமையாவதுடன், மாணவர்களின் சுற்றுச்சூழல் அக்கறையும், மூலிகைகள் பற்றிய அறிவும் மேம்படுத்தப்படுவதுடனும்
எதிர்காலத்தில் இந்தத் தோட்டம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்குப் பெரிதும் உதவும் என நம்புகின்றோம்.அத்தோடு
பாடசாலைக்கான தோட்டத்தினை பொறுப்பெடுத்து அழகிய முறையில் வடிவமைத்து உயிரோட்டாமாக்கிய HM.ஹனீபா ஆசிரியருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

✨ உணர்வுபூர்வமான கௌரவிப்பு நிகழ்வு.  ✨மட்/மம/மிச்நகர் இல்மா வித்தியாலயத்தில் நேற்று (22.10.2025) உணர்வுபூர்வமான ஒரு நிகழ...
23/10/2025

✨ உணர்வுபூர்வமான கௌரவிப்பு நிகழ்வு. ✨
மட்/மம/மிச்நகர் இல்மா வித்தியாலயத்தில் நேற்று (22.10.2025) உணர்வுபூர்வமான ஒரு நிகழ்வு அரங்கேறியது.
பல்லாண்டு காலம் எம் பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து, தற்போது சேவைக்கால ஓய்வு பெற்றுச் செல்லும் மதிப்புக்குரிய ஆசிரியையான திருமதி.HU.மன்சூர்அவர்களுக்கான கௌரவிப்பும், பாடசாலையின் வளர்ச்சிக்குப் பங்களித்து இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது மிச்நகர் இல்மா வித்தியாலயத்தின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரி முதல்வர் HL.முஹாஜிர் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மற்றும் கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மதிப்புமிகு ஆசிரியர்களைக் கௌரவித்தனர்.
பணி நிறைவு செய்து செல்லும் திருமதி HU.மன்சூர் (ஹபீபா உம்மா)ஆசிரியைக்கும், இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களான BS.ஆரிபீன், BM.ஜாமில் கபூரி, திருமதி.FFM.சிவான்(பர்ஹானா), திருமதி. HHM.றசீன்(ஹினாயா), திருமதி.MM.தஸ்மிலா, திருமதி.HU.தௌபீக்(ஹபீரா)ஆசிரியர்களுக்கும் எம் பாடசாலைச் சமூகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளையும், எதிர்காலம் சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர்கள் ஆற்றிய சேவைகளை என்றும் நன்றியுடன் நினைவில் கொள்வோம்.

18/10/2025

Address

Michnagar
Eravur
30300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Michnagar Ilma Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category