New Science World- Eravur

  • Home
  • New Science World- Eravur

New Science World- Eravur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from New Science World- Eravur, School, .

2026 O/L பரீட்சை எழுதும் மாணவர்களுக்கானது
20/05/2026

2026 O/L பரீட்சை எழுதும் மாணவர்களுக்கானது

ஏறாவூர் பிரதேச மாணவர்களுக்கான வாய்ப்பு நீங்கள் விஞ்ஞான பாடத்தை கடினமாக உணர்கின்றீர்களா?தனிப்பட்ட ரீதியாக / ஒரு குழுவாக க...
14/05/2026

ஏறாவூர் பிரதேச மாணவர்களுக்கான வாய்ப்பு
நீங்கள் விஞ்ஞான பாடத்தை கடினமாக உணர்கின்றீர்களா?
தனிப்பட்ட ரீதியாக / ஒரு குழுவாக கற்க விரும்புகின்றீர்களா?
உங்களுக்கு பொருத்தமான நேரசூசியுடன்
இலகுவாக விஞ்ஞானத்தை கற்கலாம்.
உங்கள் வீட்டிலேயே வகுப்புகளை நடாத்தலாம்

தனி வகுப்புகள்/ குழு வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன.

ஆர்வமுள்ள மாணவர்கள் தொடர்புகொள்ளவும்.
0755155061

இரண்டாம் தவணை வகுப்புகள் ஆரம்பம்.அலகு : மனித சமிபாட்டுத்தொகுதி.தரம்: 11
22/04/2026

இரண்டாம் தவணை வகுப்புகள் ஆரம்பம்.
அலகு : மனித சமிபாட்டுத்தொகுதி.
தரம்: 11

09/01/2026

எதிர்கால 2026 இல் இலங்கையின் கல்வியில் ஏற்படப் போகும் மாற்றமானது மாணவர்கள் பாடவிதானம் (Curriculum / பாடத்திட்டம்) தொடர்பாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்த்து, கல்வித் திறனை முன்னேற்ற உதவும் சில நடைமுறை சாத்தியமான விடையங்களில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும்

1. பாடவிதானத்தை தெளிவாகப் புரிந்துகொள்ளுதல்:-

ஒவ்வொரு பாடத்திலும் என்ன கற்றுக்கொள்ள வேண்டும், ஏன் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை ஆசிரியர் தெளிவாக விளக்க வேண்டும்.பாடத்தின் கற்றல் இலக்குகள் (Learning Outcomes) மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும்.

2. மாணவர்களின் கற்றல் வேறுபாடுகளை மதிப்பிடுதல்:-

உட்படுத்தல் கல்வி (inclusive Education)
எல்லா மாணவர்களும் ஒரே வேகத்தில் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மெதுவாக(மெல்ல)கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு:-

1)கூடுதல் விளக்கங்கள்
2)எளிய உதாரணங்கள்
3)தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும்

3. பாட உள்ளடக்கத்தை எளிமைப்படுத்துதல்
பாடங்களை சிறு பகுதிகளாக (chunking) பிரித்து கற்பித்தல்:-

கடினமான கருத்துகளை:
வரைபடங்கள்
படங்கள்
வீடியோக்கள்
தினசரி வாழ்க்கை உதாரணங்கள்
மூலம் விளக்குதல்.

4. தேர்வு மையப்படுத்தப்பட்ட கற்றலை தவிர்த்தல்:-

மதிப்பெண்களை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல்,
1)புரிதல்
2)திறன் வளர்ச்சி
3)சிந்தனை திறன்
மீது அதிக கவனம் செலுத்துதல்.

5. மாணவர்–ஆசிரியர் கலந்துரையாடலை ஊக்குவித்தல்:-

மாணவர்கள் கேள்வி கேட்க அச்சப்படாத சூழல் உருவாக்க வேண்டும்.
1)குழு விவாதங்கள் 11)கருத்துப் பகிர்வு 111)செயல்பாடுகள் நடத்துதல்.

6. நடைமுறை சார்ந்த கற்றல் (Activity-Based Learning):-

செய்முறைப் பயிற்சிகள் (practical exercises)
திட்டப் பணிகள் (Projects)
குழு செயல்பாடுகள்(Group Work's)
மூலம் பாடங்களை கற்றல்.

7. தொடர்ச்சியான மதிப்பீடு (Continuous Assessment):-

ஒரே இறுதி தேர்வை மட்டும் நம்பாமல்:

1)சிறு தேர்வுகள்
11)வகுப்பறை செயல்பாடுகள்
111)வீட்டுப்பாடங்கள்
மூலம் மாணவர்களின் முன்னேற்றத்தை கண்காணித்தல்.

8. ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் புதிய கற்பித்தல் முறைகள்:-

1)தொழில்நுட்ப பயன்பாடு
11)மாணவர் உளவியல் புரிதல்
என்பவற்றில் ஆசிரியர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சி வழங்குதல்.

9. பெற்றோர்– இணைப் பாடவிதான மாற்றங்கள், மாணவர் சிரமங்கள் குறித்து பெற்றோர்களுக்கு தெளிவான தகவல் வழங்கல்,வீட்டில் அழுத்தமின்றி ஆதரவு வழங்க வழிகாட்டுதல், தொடர்ச்சியாக கண்காணித்தல்

10. மாணவர்களின் கருத்துகளை கேட்பது
பாடவிதானம் கடினமாக உள்ளதா,புரியவில்லையா என்பதை மாணவர்களிடமிருந்து நேரடியாக அறிதல்.
மாணவர் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு மாற்றங்களைச் செய்தல்.

இறுதியாக பாடவிதானம் என்பது மாணவர்களை:-

1)அழுத்தும் கொடுக்கக் கூடிய ஒன்றாக இல்லாமல்,
2)புரிந்து கற்றுக்கொள்ளும்,
3) ரசித்து முன்னேறும் கருவியாக மாற்ற வேண்டும்.

✒️✒️✒️📝📝📝📝📝

🚨🚨🚨 மாபெரும் இலவச Online கருத்தரங்கு 🚨🚨🚨Lions Club of Kattankudy MAF Excellence ஏற்பாட்டில் GCE-O/L 2025 மாணவர்களுக்கான ...
16/10/2025

🚨🚨🚨 மாபெரும் இலவச Online கருத்தரங்கு 🚨🚨🚨

Lions Club of Kattankudy MAF Excellence ஏற்பாட்டில் GCE-O/L 2025 மாணவர்களுக்கான இலவச கடந்தகால வினாத்தாள் கருத்தரங்கு முற்றிலும் இலவசமாக நடைபெறுகிறது!
🌟 கருத்தரங்கின் விபரங்கள்: 🌟
👉 பாடம்: SCIENCE 🧪 (கடந்தகால வினாத்தாள் கருத்தரங்கு - 01)
🗓️ திகதி: 26.10.2025 (ஞாயிற்றுக்கிழமை)
⏰ நேரம்: இரவு 8.00 p.m - 9.30 p.m
👨‍🏫 வழிகாட்டி: Lion Mr. MA. Usaith Mohamed. (MAF, BED, Diploma in teaching)
✅ கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் செய்ய வேண்டியவை:
கீழே கொடுக்கப்பட்டுள்ள Whatsapp இலக்கத்திற்கு உங்கள் தகவல்களை அனுப்பி வைக்கவும்:
* பெயர் 📝
* பாடசாலை 🏫
* ஊர் 🏘️
📲 தொடர்புகளுக்கு (Whatsapp): 0755155061
🔗 Whatsapp குழுவில் இணைய:
https://chat.whatsapp.com/EJtHSI7DAN8Dgr2yVfmIa6?mode=ems_copy_t
இப்பொழுதே இணைந்து உங்கள் O/L பரீட்சைக்கு தயாராகுங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

✨📚 Online Zoom - Past Paper Class - Science கடந்த கால வினாத்தாள் வகுப்புவிஞ்ஞானம் – 2025 GCE O/L  மாணவர்களுக்கான பொன்னான...
13/09/2025

✨📚 Online Zoom - Past Paper Class - Science
கடந்த கால வினாத்தாள் வகுப்பு
விஞ்ஞானம் –

2025 GCE O/L மாணவர்களுக்கான பொன்னான வாய்ப்பு!

💯 பரீட்சையில் நூற்றுக்கு நூறு பெறுபேறு உங்கள் வசம்!

கடந்த வருடம் எங்கள் வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் 100% சித்தியடைந்தனர் ✅

🚀 இந்த வெற்றியின் இரகசியம் என்ன தெரியுமா?

🔹 இலங்கையில் முதன்முறையாக தமிழில் ஆரம்பிக்கப்பட்ட – கடந்த கால வினாத்தாள்களை அலகு ரீதியாக விரிவான விளக்கங்களுடன் கற்பித்தல்.

🔹 உங்கள் நேரத்துக்கு ஏற்ப வகுப்புகள் – அனைவருக்கும் பொருத்தமான நேரத்தில் கற்றுக்கொள்ளலாம்.

🔹 ஒவ்வொரு வகுப்பிற்கும் முழு HD Video பதிவு வகுப்பு முடிவில் அனுப்பி வைக்கப்படும் – புரியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் பார்வையிட்டு கற்றுக்கொள்ளலாம்.

🔹 அலகு 01-இல் இருந்து ஆரம்பம் –
இதனால் தரம் 10 இருந்தே உங்கள் அடிப்படை வலுப்படுத்தப்பட்டு, பரீட்சைக்குத் தேவையான முழு தயாரிப்பு மேற்கொள்ளப்படும்

📌 இது ஒரு அரிய வாய்ப்பு – தவறவிடாதீர்கள்!
👉 விஞ்ஞானத்தில் உச்ச பெறுபேறுகளைப் பெற இப்போதே பதிவு செய்யுங்கள்!

📞 மேலும் தகவல்களுக்கும் பதிவு செய்வதற்கும்:
📲 [0755155061] இலக்கத்திற்கு Whatsapp செய்யுங்கள்.

🌟 உங்கள் எதிர்காலத்தை மாற்றும் ஒரு முடிவு இது. நம்பிக்கையுடன் வாருங்கள் – வெற்றி உறுதி!

முதல் அலகுக்கான வகுப்பு முற்றிலும் இலவசம் என்பதால் அனைவரும் இணைந்து பயன்பெறவும்

இணைந்துகொள்ள கீழே உள்ள Whatsapp குழுவில் இணையவும்
👇👇👇👇👇👇

https://chat.whatsapp.com/EJtHSI7DAN8Dgr2yVfmIa6?mode=ac_t

அல்ஹம்துலில்லாஹ் எமது New Science World - Eravurrகல்வி நிறுவனத்தில் பகுதிநேரமாக பயின்ற தரம் : 08 மாணவர்களின் முதலாம் தவண...
12/06/2025

அல்ஹம்துலில்லாஹ்

எமது New Science World - Eravurrகல்வி நிறுவனத்தில் பகுதிநேரமாக பயின்ற தரம் : 08 மாணவர்களின் முதலாம் தவணைப் பரீட்சை பெறுபேறுகள் மிகுந்த திருப்தி மிக்கவையாக அமைந்துள்ளன. அல்ஹம்துலில்லாஹ்.

பரீட்சை தயார்படுத்தல்களுக்காக பின்வரும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

1. பரீட்சைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே பாடத்திட்டம் முழுமை செய்யப்பட்டது.

2. ஒவ்வொரு அலகு முடிவிலும் அலகுப்பரீட்சை நடாத்தப்பட்டது.

3. 25+ க்கு மேற்பட்ட கடந்தகால முதலாம் தவணை வினாத்தாள்கள் முழுவதுமாக செய்து முடிக்கப்பட்டது.

4. இருதியாக மாதிரி பரீட்சைகள் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டது(அவற்றின் புள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

இவ்வாறான தொடர்ச்சியான பரீட்சை செயற்பாடுகளால் மாணவர்களுக்கு பரீட்சை பற்றிய பயம் முழுவதுமாக இல்லாமல் செய்யப்பட்டு பரீட்சை ஒரு சாதாரண செயற்பாடு போல மாற்றம் செய்யப்பட்டமையும் தாம் செய்து பார்த்த அனைத்து வினாக்களும் பரீட்சை வினாத்தாளில் வந்ததால் பரீட்சையை மகிழ்ச்சியாக எதிர்கொள்ளும் நிலை ஏற்படுத்தப்பட்டது.

இதன் படி அனைத்து மாணவர்களும் 60+ க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற முடிந்ததுடன்

80% மாணவர்கள் (30 மாணவர்கள்) 80 க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றுக்கொண்டனர்.

40% மாணவர்கள் 90க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றனர்.

எமது மாணவர்களின் இந்த அபரிமித முயற்சி பாராட்டுக்குறியது.

இதே முயற்சியில் தொடர்ந்து பயனிக்க மாணவர்களை வாழ்த்துவதுடன்

சற்று குறைவான புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கான ஆலோசனையாக வகுப்புகளில் தவறாமல் கலந்துகொள்வதுடன் பரீட்சைகளை பயமின்றி எதிர்கொள்ள பழக வேண்டும்.

மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

புதிதாக இணைய விரும்பும் ஏறாவூரை சேர்ந்த மாணவர்கள் நேரடியாக இணைந்துகொள்ள முடியும்

வெளியூரை சேர்ந்த மாணவர்களின் நலன்கருதி Zoom வழி Online வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணைந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

தொடர்புகளுக்கு: 0755155061

GCE O/L - 2024(2025)மாபெரும் இருதி கருத்தரங்குவிஞ்ஞானம் - தமிழ் மொழி மூலம்வருடா வருடம் நடைபெறும் எமது New science world ...
06/03/2025

GCE O/L - 2024(2025)
மாபெரும் இருதி கருத்தரங்கு
விஞ்ஞானம் - தமிழ் மொழி மூலம்

வருடா வருடம் நடைபெறும் எமது New science world இன் விஞ்ஞான பாட இருதிக்கருத்தரங்கு வழமை போன்று இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல பிரபல்யமான பாடசாலை ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு வினாக்களை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள் முழுமையாக கற்பிக்கப்படும்
Part- I (1 hour)
Structure (1 hour)
Essay ( 2Hours)

முதலில் முன்பதிவு செய்யும் 60 மாணவர்களே இணைத்துக்கொள்ளப்படவுள்ளதால்

தேவையானோர் பதிவுசெய்துகொள்ளுங்கள்
Call / whatsapp : 0755155061

காலம் : 08.03.2025 ( சனிக்கிழமை
நேரம் : காலை 8.00 - மதியம் 12.00 வரை
இடம் : New science world, New Kattupalli Road, Eravur-02

உங்கள் நண்பர்களுக்கும் பகிர்வதன் மூலம் அவர்களும் பயனடைய உதவுங்கள்

RAMADAN TIMETABLE FOR OUR STUDENTSரமழான் மாதத்துக்கு உரிய நேரசூசி - 2025 New Science World - EravurNew Kattupalli Cross ...
01/03/2025

RAMADAN TIMETABLE FOR OUR STUDENTS
ரமழான் மாதத்துக்கு உரிய நேரசூசி - 2025

New Science World - Eravur
New Kattupalli Cross Road, Eravur -02
Call / whatsapp : 0755155061

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when New Science World- Eravur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share