Bt/Bc/Al Ashraf Vidyalaya -Eravur

Bt/Bc/Al Ashraf Vidyalaya -Eravur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bt/Bc/Al Ashraf Vidyalaya -Eravur, School, Hizbullah Nagar, Eravur.

அல்-அஷ்ரப் வித்தியாலய முன்றலில் மல்லிகைக் கன்று நடுகை நிகழ்வு சிறப்பான முறையில் ஏற்பாடு!ஏறாவூர் மட்/மம/ அல்-அஷ்ரப் வித்த...
13/07/2026

அல்-அஷ்ரப் வித்தியாலய முன்றலில் மல்லிகைக் கன்று நடுகை நிகழ்வு சிறப்பான முறையில் ஏற்பாடு!

ஏறாவூர் மட்/மம/ அல்-அஷ்ரப் வித்தியாலயத்தின் அழகையும் பசுமையையும் மேம்படுத்தும் நோக்கில், பாடசாலை முன்றலில் மல்லிகைக் கன்றுகள் நடும் விசேட நிகழ்வு 10/07/2026 அன்று மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
பாடசாலை அதிபரின் வழிகாட்டலில், பாடசாலை ஆசிரியர்கள், வித்தியாலய அபிவிருத்திச் சங்க செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களின் கூட்டு ஏற்பாட்டில் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
பாடசாலைச் சூழலைப் பசுமையாக்குவதுடன், மாணவர்களிடையே இயற்கை மற்றும் சூழல் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மல்லிகைக் கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் வித்தியாலய அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, பாடசாலை முன்றலில் மல்லிகைக் கன்றுகளை நட்டு வைத்ததுடன், அவற்றைப் பராமரிப்பதற்கான பொறுப்புகளையும் பகிர்ந்து கொண்டனர். பாடசாலையின் இந்த முன்மாதிரியான முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.மட்டக்களப்பு, ஏறாவூர் மட்/மம/ அல்-அஷ்ரப் வித்தியாலய மாணவர்களின் கல்வித் தேவைகளை நிவ...
13/07/2026

கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு, ஏறாவூர் மட்/மம/ அல்-அஷ்ரப் வித்தியாலய மாணவர்களின் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, கொழும்பைச் சேர்ந்த "P J F M Charity Foundation அமைப்பினால் அண்மையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலை அதிபரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரை கல்வி பயிலும் 138 மாணவர்களுக்கான பயிற்சிக் கொப்பிகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வுதவித் திட்டம் குறித்து பாடசாலை அதிபர் கருத்துத் தெரிவிக்கையில்
"பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சூழலில் வாழும் எமது மாணவர்களின் கல்விப் பயணத்தை எவ்வித தடையுமின்றித் தொடர்வதற்கு இந்த உதவி பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது. எமது வேண்டுகோளை ஏற்று, மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இந்த உன்னதமான உதவிகளை வழங்கிய 'P J F M' அறக்கட்டளை அமைப்பினருக்கு எமது பாடசாலைச் சமூகம், பெற்றோர் மற்றும் மாணவர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்," எனக் குறிப்பிட்டார்.

அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் வண்ணமயமான "சிறுவர் சந்தை" 2026மட்/மம/அல்-அஷ்ரப் வித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் ச...
08/07/2026

அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் வண்ணமயமான "சிறுவர் சந்தை" 2026

மட்/மம/அல்-அஷ்ரப் வித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் சிறுவர் சந்தை இன்று புதன்கிழமை காலை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் TLA. ஸக்கி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
ஏறாவூர் கோட்டக்கல்வி அதிகாரி AL அபுல் ஹசன்,
பாடசாலை இணைப்பாளர் SM றிம்சாத்,
BA. றஹீம்,
பிரதேச பாடசாலை அதிபர்கள், பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள் ,பெற்றோர்கள் பழைய மாணவர்கள் , நலன் விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.

சிறார்கள் தங்கள் படைப்புகள் மற்றும் விளையாட்டுகளுடன் மகிழ்சியுடன் பங்கேற்றனர். இது அவர்களின் தலைமைத்துவம், ஒத்துழைப்பு மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் அருமையான அனுபவமாக அமைந்தது ❤️

#சிறுவர்சந்தை

மிகவும் மகிழ்ச்சியான செய்தி!மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் எமது பாடசாலையில் முதல் ஐந்து இடங்களை...
03/07/2026

மிகவும் மகிழ்ச்சியான செய்தி!
மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் எமது பாடசாலையில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு
பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களின் கரங்களால் அவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பது, அந்த மாணவர்களுக்கு இன்னும் பல சாதனைகளைச் செய்யப் பெரும் ஊக்கமளிக்கும். அதேநேரம், மற்ற மாணவர்களுக்கும் இது ஒரு சிறந்த முன்மாதிரியாகவும், தூண்டுதலாகவும் அமையும்.
வெற்றி பெற்ற அனைத்து மாணவச் செல்வங்களுக்கும், அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
அதிபர்

வாழ்த்துகள்!பாடசாலை மட்ட ஆசிரியர் வாண்மை விருத்திச் செயற்பாடுகள் (SBPTD) மேற்பார்வையில் 71 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத...
01/07/2026

வாழ்த்துகள்!
பாடசாலை மட்ட ஆசிரியர் வாண்மை விருத்திச் செயற்பாடுகள் (SBPTD) மேற்பார்வையில் 71 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்தமைக்காக ஆசிரியர்கள உங்களுக்கு
பாராட்டுகள்.
முறையான ஆவணப் பேணல் மற்றும் கூட்டு முயற்சியின் மூலமே இந்த வெற்றியை அடைய முடிந்திருக்கும்.

நமது பாடசாலையின் கல்வித் தரத்தையும், ஆசிரியர்களின் வாண்மை விருத்தியையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உங்களின் இந்த கூட்டு முயற்சியும் (Team Work) கடின உழைப்பும் மிக முக்கிய காரணியாக அமைந்தன.
இதே போன்றதொரு அர்ப்பணிப்புடனும் உத்வேகத்துடனும் எமது பாடசாலையின் எதிர்கால வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் நாம் அனைவரும் தொடர்ந்து ஒன்றிணைந்து பயணிப்போம்.
அனைவருக்கும் மீண்டும் எனது வாழ்த்துகளும் நன்றிகளும்!
இறைவன் என்றும் துணை நிற்பானாக!
இப்படிக்கு,
அதிபர்

🌸 பல்லின கலாசார விழா 2026 🌸📅 30.06.2026மட்/மம/ அல் அஷ்ரப் வித்தியாலயத்தின் தரம் 1 மாணவர்களின் பங்கேற்புடன் இன்று பல்லின ...
30/06/2026

🌸 பல்லின கலாசார விழா 2026 🌸
📅 30.06.2026
மட்/மம/ அல் அஷ்ரப் வித்தியாலயத்தின் தரம் 1 மாணவர்களின் பங்கேற்புடன் இன்று பல்லின கலாசார விழா இனிதே நடைபெற்றது.
பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் கலாசாரங்களின் அழகை அறிந்துகொண்டு, அனைவரையும் அன்புடனும் மரியாதையுடனும் ஏற்றுக்கொள்ளும் பண்பை மாணவர்களிடம் வளர்க்கும் அர்த்தமுள்ள நிகழ்வாக இது அமைந்தது.

நிகழ்வின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த ஆசிரியை அஸ்பா அவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆர்வமுடன் பங்கேற்ற ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் அனைவருக்கும் எமது பாடசாலையின் அதிபர் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

தரம் 1 மாணவர்களின் வாசிப்பு திறன் மேற்பார்வை 24/6/2016
28/06/2026

தரம் 1 மாணவர்களின் வாசிப்பு திறன் மேற்பார்வை 24/6/2016

மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பாடசாலை தோட்டத்தை சுத்தப்படுத்தும் காட்சிகள்.
28/06/2026

மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பாடசாலை தோட்டத்தை சுத்தப்படுத்தும் காட்சிகள்.

புதிய அதிபர் வரவேற்பும் மர நடுகையும் 18/06/2027 அன்று இடம் பெற்றது.
20/06/2026

புதிய அதிபர் வரவேற்பும் மர நடுகையும் 18/06/2027 அன்று இடம் பெற்றது.

Address

Hizbullah Nagar
Eravur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bt/Bc/Al Ashraf Vidyalaya -Eravur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category