07/06/2026
#இணையத்தள #அங்குரார்ப்பன #நிகழ்வு
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினுடைய இணையதளம்( https://www.bczone.lk ) 04.06.2026 வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு. எம்.எம்.ஜவாத் (SLEAS) அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த இணையதளத்தில் வலயத்தினைடைய அனைத்து பாடசாலைகளின் தரவுகள் மற்றும் அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்களின் தகவல்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் நேரடியாக வலயக்கல்வி பணிப்பாளருக்கு முறையீடு செய்யக்கூடிய வசதிகளும் இதில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
நவீன வசதிகளுடன் கூடிய கல்வி வலயமாக மாற்றம் பெறும் அடிப்படையில் இந்த இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டது ஒரு சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.