Regional Ahadiyya School's Union- Eravur

Regional Ahadiyya School's Union- Eravur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Regional Ahadiyya School's Union- Eravur, School, Main Street, Eravur.

03/09/2024

#இஸ்லாம்_தீனியாத் ( தர்மாச்சார்ய) #சான்றிதழ்_பரீட்சை-2024.

மேற்படி குறித்த சான்றிதழ் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏறாவூர் டாக்டர் அஹமட் பரீட் அஹதிய்யா பாடசாலையினூடாக விண்ணப்பிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த பரீட்சைக்கு தோற்ற ஆர்வமுள்ள பரீட்சார்த்திகள் / விண்ணப்பதாரிகள் கீழ்வரும் வட்சப் இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு- விண்ணப்பபடிவங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை அல்லது அதற்கு முன்னர் (05.09.2024) ஏற்றுக்கொள்ளப்படும்.

0776721230
எம்.என்.எம். ஜெஸ்லான்,
செயலாளர்,
டாக்டர் அஹமட் பரீட் அஹதிய்யா பாடசாலை,
ஏறாவூர்.

11/08/2024
13/01/2024

அஹதிய்யா உருவான கதை

Congratulations Alighar National School - ERAVUR. -All- Island  "The Ball Blaster" Football Championship- 2023-
11/12/2023

Congratulations Alighar National School - ERAVUR.

-All- Island "The Ball Blaster" Football Championship- 2023-

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகு..🌿 _2023.11.26 அஹதிய்யா வகுப்பு  *ஓட்டுப்பள்ளி கிளை* கடந்த ஞாயிறு "பிக்ஹுல் இஸ்...
29/11/2023

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகு..🌿
_2023.11.26 அஹதிய்யா வகுப்பு
*ஓட்டுப்பள்ளி கிளை*
கடந்த ஞாயிறு "பிக்ஹுல் இஸ்லாம்- " வுழூ செய்யும் முறை மற்றும் தொழுகை பயிற்சிகளுடன்" , அஹ்லாக் (பிறருக்கு உதவுதல்) ஆகிய பாடங்கள் ஆசிரியைகளால் சிறப்பாக நடத்தப்பட்டு நடைமுறைப்பயிற்சியும் வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்...❤️
அல்லாஹ் அவர்கள் மீது அருள் புரிவானாக 🤲🏻🤲🏻🤲🏻

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகு இன்று றிபாய் பள்ளி கிளையில் தரம் 04 மாணவர்களுக்கு அஹதிய்யா வகுப்பு நடைபெற்றது...
19/11/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகு இன்று றிபாய் பள்ளி கிளையில் தரம் 04 மாணவர்களுக்கு அஹதிய்யா வகுப்பு நடைபெற்றது. கற்பிக்கப்பட்ட விடயங்கள்:
01.நற் பண்புகள்
02.சுபஹ் தொழுகையின் முக்கியத்துவம்
03.பெற்றோருக்கு கட்டுப்படல்
04.சாப்பிடும் ஒழுங்கு
05.சுத்தம்
🔘ஞாயிற்றுக்கிழமைகளில் வழமையை விட அதிகமான மாணவர்கள் சமூகமளித்தார்கள் நேரத்திற்கு வந்திருந்ததோடு வெளி மாணவி ஒருவரும் கலந்து கொண்டார் அல்ஹம்துலில்லாஹ் சிறப்பாக இன்றைய வகுப்பு நடந்தது...🥰

அதே போன்று ஓட்டுப்பள்ளி கிளையில்
இன்று குர்ஆன் மற்றும் அஹ்லாக் ஆகிய பாடங்கள் ஆசிரியைகளால் சிறப்பாக நடத்தப்பட்டு நடைமுறைப்பயிற்சியும் வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்...❤️

மேலும்

மிச்நகர் கிளையில் இன்று நடைபெற்ற அஹதிய்யா வகுப்புகளின் தொகுப்பு.. .
தரம் 01,02 மாணவர்களுக்கு அறபுப்பாடத்தில் அறபுச்சொற்களும் கருத்துக்களும், தரம் 03 மாணவர்களுக்கு அகீதா பாடத்தில் 05 ஆம் கலிமாவும், தரம் 04 மாணவர்களுக்கு சென்றவாரம் அல்குர்ஆன் பாடத்தில் படிப்பிக்கப்பட்ட நிறுத்தற் குறியீடுகள் பகுதியில் பரீட்சையும் நடாத்தப்பட்டது. பெற்றோர்களே! தயவுசெய்து உங்கள் பிள்ளைகளை நேரத்திற்கும் தொடர்ச்சியாகவும் அனுப்பவும் , அவ்வாறு அனுப்பும் பட்சத்திலேயே உங்கள் பிள்ளைகள் சிறந்த அடைவுகளை அடைய முடியும் . 🤝🤝🤝

கடந்த ஞாயிறு (12) அஹதிய்யா காலை கூட்டம் நடாத்தப்பட்டு பின்னர்     *அல் ஹதீஸ்*  என்ற தலைப்பில்  grd 4,5 இரண்டு வகுப்புக்க...
14/11/2023

கடந்த ஞாயிறு (12) அஹதிய்யா காலை கூட்டம் நடாத்தப்பட்டு பின்னர் *அல் ஹதீஸ்* என்ற தலைப்பில் grd 4,5 இரண்டு வகுப்புக்களையும் இணைத்து பாடங்கள் நடாத்தப் பட்டது.
🔘தொழுகை சுவர்க்கத்தின் திறவுகோள்
🔘 ஸலாம் சொல்வோம்
🔘 முதியோரை மதித்தல்
சிறார்கள் மீது அன்பு செலுத்துதல்.
முஸ்லிம்களுக்கும்
🔘ஏனைய மதத்தவர்களுக்கும் இடையிலான வேறுபாடு தொழுகை .
போன்றவை பற்றி விளங்கப்படுத்தப்பட்டு
கேள்விகளும் கேட்கப்பட்டு கொப்பியில் குறிப்புகளும் வழங்கப்பட்டது.
பிள்ளைகள் ஆர்வத்துடன் செயற்பட்டார்கள்

அதேபோல் ஏனைய கிளைகளிலும்
வுழு செய்யும் முறை
வுழுவை முறிக்கும் காரியங்கள்
பெற்றோரை மதித்தல்
அஃலாக் பற்றிய தெளிவு
அரபு எழுத்து பயிற்சிகள்

குறித்த தலைப்புக்களில் தெளிவுகள் மற்றும் அது தொடர்பான குறிப்புகள் எழுதுதல் என்பனவும் மாணவர்கள் மத்தியில் நடந்தேறியது.
அல்ஹம்துலில்லாஹ்.

நேற்று அஹதிய்யா காலை கூட்டம் நடாத்தப்பட்டு பின்னர்     *அல் குர்ஆன்*  என்ற தலைப்பில்  grd 4,5 இரண்டு வகுப்புக்களையும் இண...
06/11/2023

நேற்று அஹதிய்யா காலை கூட்டம் நடாத்தப்பட்டு பின்னர் *அல் குர்ஆன்* என்ற தலைப்பில் grd 4,5 இரண்டு வகுப்புக்களையும் இணைத்து பாடங்கள் நடாத்தப் பட்டது.
🔘அல்குர்ஆன் பற்றிய விளக்கம்
🔘அல்குர்ஆன் ஓதும் போது பேண வேண்டி ஒழுக்கங்கள்.
🔘ஓதும் முறை (அஊது பிஸ்மி) .
போன்றவை பற்றி சில சம்பவங்கள் மூலம் விளங்கப்படுத்தப்பட்டு
கேள்விகளும் கேட்கப்பட்டு கொப்பியில் குறிப்புகளும் வழங்கப்பட்டது.
பிள்ளைகள் ஆர்வத்துடன் செயற்பட்டார்கள்.
*அல்ஹம்துலில்லாஹ்..*
🤲🏻🥰

குறித்த வகுப்புக்கள் ஏறாவூரின் பல்வேறு கிளைகளில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

அல்ஹம்துலில்லாஹ்.எமது மட்/மம.டாக்டர் பதியுதீன் மஹ்மூத் அஹதிய்யா பாடசாலையில் மாணவர்களுக்கான வாராந்த காலைகூட்டம் ஆசிரியைகள...
20/11/2022

அல்ஹம்துலில்லாஹ்.

எமது மட்/மம.டாக்டர் பதியுதீன் மஹ்மூத் அஹதிய்யா பாடசாலையில் மாணவர்களுக்கான வாராந்த காலைகூட்டம் ஆசிரியைகளால் நிகழ்த்தப்பட்டதுடன் வகுப்புக்களில் மாணவர்களது ஆற்றல்களும் வெளிப்படுத்தப்பட்ட போது.

அஹதிய்யா பாடசாலைகள் அங்குரார்ப்பண நிகழ்வுஏறாவூர் பிரதேச அஹதிய்யா பாடசாலைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அஹதிய்யா வகுப்புக்க...
30/10/2022

அஹதிய்யா பாடசாலைகள் அங்குரார்ப்பண நிகழ்வு

ஏறாவூர் பிரதேச அஹதிய்யா பாடசாலைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அஹதிய்யா வகுப்புக்களை முதற்கட்டமாக ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (30) டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது ஒன்றியத்தின் தலைவரும் பாடசாலையின் அதிபருமான எம்.எம் ஜலால்தீன் அவர்களின் தலைமையில் இடமபெற்றது.

அங்குரார்ப்பண நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ்.எம். நழீம் அதிதியாக கலந்துகொண்டதுடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் (கொழும்பு) அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏம்.ஸியாத், மட்டக்களப்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் உப தலைவரும் கலாச்சார உத்தியோகத்தருமான எஸ்.ஏ.முஹம்மத் நளீம் (நளீமி), மட்டக்களப்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் பொருளாளர் மெளலவி எம்.எல்.எம்.இர்ஷாத் (யெமனி), ஏறாவூர் அறபா வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.எம்.எம். நவாஸ், ஏறாவூர் அல் அமான் வித்தியாலயத்தின் அதிபர் வீ.டி.எம். இஸ்ஸத் , ஏறாவூர் அஹதிய்யா பாடசாலைகள் ஒன்றியத்தின் செயலாளர் எம.என்.எம். ஜெஸ்லான் , ஒன்றியத்தின் உறுபினர்களான எம். எல்.எம்.ஹிஜ்ரத் மெளலவி, ஐ.எம். பிர்தெளஸ் மெளலவி மற்றும் பெற்றோர்கள் , வளவாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அஹதிய்யா பாடசாலைகள் தொடர்பான முக்கியத்துவங்கள், அரச அங்கீகாரங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் ஏறாவூர் பிரதேசத்தில் எதிர்காலத்தில் அஹதிய்யா வகுப்புக்களை விருத்தி செய்வற்கு தன்னாளான முறையான பங்களிப்புக்கள் வழங்கப்படும் எனவும் நகரசபை தவிசாளரால் உறுதியளிக்கப்பட்டிருந்தது.

இவ் அங்குரார்ப்பண நிகழ்வு சுமார் 120 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் வாரத்தில் ஒரு நாளான ஞாயிற்று கிழமைகள் மாத்திரம் இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஹதியா பாடசாலைகளை ஏறாவூரில் ஆரம்பிப்பது குறித்து வளவாளர்களுடனான சந்திப்புஏறாவூர் பிரதேசத்தில் அஹதியா பாடசாலைகளை ஆரம்பிப்...
24/10/2022

அஹதியா பாடசாலைகளை ஏறாவூரில் ஆரம்பிப்பது குறித்து வளவாளர்களுடனான சந்திப்பு

ஏறாவூர் பிரதேசத்தில் அஹதியா பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்தும் வியாபிப்பது குறித்தும் வளவாளர்களுடனான சந்திப்பு இன்றைய தினம் (21) Dr பதியுதீன் மஹ்மூத் வித்தியாலய அரங்கில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது ஏறாவூர் பிரதேச அஹதியா பாடசாலைகள் சம்மேளனத்தின் தலைவரும் அதிபரும் ஜலால்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏறாவூர் பிரதேச கள உத்தியோகத்தர் ஸியாத் , கலாச்சார உத்தியோகத்தர் நளீம் (நளிமி), அஹதியா பாடசாலைகளின் மட்டு மாவட்ட சம்மேளனத்தின் பொருளாளர் மெளலவி இர்ஷாத் (யெமனி), ஏறாவூர் அஹதியா பாடசாலைகளின் சம்மேளனத்தின் உறுப்பினர் மெளலவி ஹிஜ்ரத், ஏறாவூர் பிரதேச அஹதியா பாடசாலைகளின் சம்மேளனத்தின் பொது செயலாளர் ஜெஸ்லான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஏறாவூர் பிரதேசத்தில் அஹதியா பாடசாலைகளை, முழு பிரதேசமும் ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்களோடு , குறித்த வகுப்பின் முக்கியத்துவதுங்கள், அரச அங்கீகாரங்கள் என்பவை பற்றியும் வளவாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன் பாட திட்ட அறிமுகமும் இடம்பெற்றிருந்தது.

இதன் முதற்கட்டமாக ஏறாவூரில் அஹதியா பாடசாலைகள் எதிர்வரும் 30 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யவுள்ளதுடன், அஹதியா பாடசாலைகள் அரச அங்கீகாரத்துடன் இலங்கை புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் கீழ் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினூடாக இடம்பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

20/10/2022

வளவாளர்களுக்கான திறந்த அழைப்பு...

இன்ஷா அல்லாஹ் எமது அஹதியா பாடசாலைகளை ஏறாவூர் பிரதேசத்தில் ஆரம்பிப்பது தொடர்பிலும் அஹதியா பாடசாலைகளுக்கான வளவாளர்களை இனங்கண்டு இணைத்தல் தொடர்பான நிகழ்வு எதிர்வரும் திங்கள் கிழமை (24) அன்று காலை 8.30 மணியளவில் டாக்டர் பதீயுதீன் வித்தியாலய பாடசாலையில் இடம்பெற இருக்கின்றது.

ஆகையால் கற்றவர்கள் ( ஆசிரியர்கள் , உலமாக்கள் ,கற்பிக்கக்கூடிய திறமையுள்ளவர்கள்) வளவாளர்களை அன்போடு அழைக்கின்றோம்..

" தான தருமங்களைவிட சிறந்தது ஒருவர் தான் கல்வி கற்று, பிறருக்கு கல்வி கற்றுக்கொடுப்பதாகும்' (இப்னு மாஜா) என்றும் 'யார் கல்வியின் பாதையை தேடிச் செல்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் பாதையை இலேசாக்குகிறான்' (முஸ்லீம்) என்றும் நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்."

உங்கள் வருகையை கீழ் வரும் வட்சப் இலக்கத்தினூடாக உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

0756006170
எம்.ஜெஸ்லான் ,
பொது செயலாளர்
அஹதியா பாடசாலைகளுக்கான சம்மேளனம் - ஏறாவூர்.

Address

Main Street
Eravur
30300

Opening Hours

08:00 - 12:00

Telephone

+94772841757

Website

Alerts

Be the first to know and let us send you an email when Regional Ahadiyya School's Union- Eravur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category