17/11/2025
எனது பாடசாலையில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருஷாபிஷேகம் 2025.11.06ம் திகதி சிறந்த முறையில் நடைபெற்றது
MR/BEVERLEY.M.V DENIYAYA
17/11/2025
எனது பாடசாலையில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருஷாபிஷேகம் 2025.11.06ம் திகதி சிறந்த முறையில் நடைபெற்றது
19/09/2025
2025.09.19
இன்று எமது பாடசாலையில் இடம்பெற்ற சிறுவர் சந்தை நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்
ALL ISLAND SOFTBALL CRICKET TOURNAMENT
1ST MATCH
MR/BEVERLY TMV
RUNS 110
WICKETS 1
OVERS 7
SATHIS 74*
USANTHAN 30*
Dinu 3
Siddhartha m.v.
57 / 08. [ 7 overs]
09/09/2025
*உதவி கோரல்*
மாறை/பெவரலி த.ம.வி
https://www.facebook.com/share/19vpF7xuyZ/
போட்டி நடைபெறும் திகதி 2025.09.12,13,14
எமது பாடசாலையானது ஒரு கஷ்டப் பிரதேச பாடசாலையாகும். இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் தோட்டப்புறங்களில் வேலை செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவர். இவர்கள் ஒவ்வொரு வருடமும் விளையாட்டில் அது கூடிய திறமைகளை வெளிப்படுத்தி மாகாண மட்டம், தேசிய மட்டத்திற்கு செல்கின்றார்கள் இவ்வருடமும் தேசிய மட்ட கிரிக்கெட் போட்டியில் பங்கு பெறுவதற்காக அனுராதபுரம் செல்லவிருக்கின்றார்கள். இருப்பினும் எமது எமது பாடசாலையில் இருந்து அனுராதபுரம் செல்வதற்கு 420km பயணிக்க வேண்டும் 2 அல்லது 3 நாட்கள் அனுராதபுரத்தில் தங்கி இருக்க வேண்டும். எனவே இதற்காக போக்குவரத்து, உணவு என்பவற்றிற்கு போதுமான நிதி எம்மிடமும் மாணவர்களிடமும் இல்லை. எனவே உதவி புரிவதற்காக நல்லுள்ளங்கள் யாரேனும் இருப்பின் உங்களால் முடிந்த உதவிகளை இம்மானவர்களுக்கு செய்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
அதிபர் - 0770756110
பொறுப்பாசிரியர்கள்
1.M.ஜீவன் 076-8365830
2.K.சாம்பவி 0778834190
04/09/2025
2025ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் இரண்டு மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்று சித்து அடைந்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு தரம் 5 பொறுப்பாசிரியர் k.அஜித்குமார் ஆசிரியர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
K.LEENA ANJALEEN- 136
M.VIDURSHAN - 134
30/08/2025
எமது பாடசாலையின் அதிபர் அவர்களின் புதல்வியும் எமது பாடசாலையில் பழைய மாணவியும் ஆகிய R.லுக்ஷனி அவர்கள் 2025.08.28ம் திகதி இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இருபதாவது பட்டமளிப்பு விழாவில் வர்த்தகத் துறையில் பட்டம் பெற்றுக்கொண்டார். எமது பாடசாலையிலும் எமது தெனியாய சமூகத்திலும் வர்த்தகத் துறையிலே உள்வாரி மாணவியாக பட்டம் பெரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இவர் ஆரம்ப பிரிவு எமது பாடசாலையிலும் இடைநிலை பிரிவை கொழும்பு /சைவ மங்கையர் வித்யாலயத்திலும் கற்றார். வாழ்த்துக்கள்!
24/08/2025
2025.08.22ம் திகதி நடைபெற்ற மாகாணமட்ட மெய்வள்ளுவர் போட்டியில் 18 வயதின்கீழ் பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 3ம் இடத்தைப் பெற்று பெவரலி சமூகத்தில் இருந்து தேசிய மட்ட போட்டியில் போட்டியிடுவதற்கு தகுதி பெற்றுள்ள N. நிஷாந்தினி எனும் எமது பாடசாலை மாணவியை வாழ்த்துகின்றோம்.
23/07/2025
26/06/2025
*மாறை/பெவரலி த.ம.வி. தெனியாய.*
இன்று [2025.06.26]நடைபெற்ற தென்மாகாணம் மாகாண மட்ட கிரிக்கெட் போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளனர் வாழ்த்துக்கள்.
19/06/2025
MR/BEVERLY T.M.V DENIYAYA
இன்று [2025.06.19 ] நடைபெற்ற முடிந்த தெனியாய வலயத்தின் விளையாட்டு போட்டிகள் முடிவுகள் அடிப்படையில் குழு போட்டியில் அதிக வெற்றிகளை பெற்று எமது பாடசாலை முன்னிலையில் இருந்ததோடு, மைதான போட்டிகளில் 77 பாடசாலைகளிலும் ஒன்பதாம் இடம் பெற்றுள்ளது. இதற்காக முன் நின்று செயல்பட்ட எமது பாடசாலை அதிபர்.S. இராஜேந்திரன் ஐயா அவர்களுக்கும் மற்றும் விளையாட்டு ஆசிரியர் P.சாம்பவி அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, இவ் விளையாட்டு போட்டியில் கலந்து வெற்றி ஈட்டிய எமது பாடசாலை மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
09/06/2025
09/06/2025