Vivekananda Osa

Vivekananda Osa

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vivekananda Osa, Community College, New Chetty Street, Colombo.

What started as a mere sports club to support the school’s sports activities, has come a long way since then and by today has established itself as the Old Students Association of Vivekananda College. The association which has grown in leaps and bounds since its inception, today focuses mainly on uplifting the standards of education in the school as it believes in preparing its students for what l

20/05/2026
13/05/2026

அனைத்து பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களுக்கும், பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும் எதிர்வரும் 20.05.2026, பிற்பகல் 1.30 மணிஅளவில் ( புதன்கிழமை) கொழும்பு விவேகானந்தா கல்லூரி - சித்தி விநாயகர் ஆலய வருஷாபிஷேகம் இடம்பெற உள்ளது.
இவ் வருஷாபிஷேகத்திற்கு பொருள் உதவி மற்றும் பண உதவி செய்ய விரும்புவோர் திருமதி கு. பத்மநாபன் ஆசிரியையுடன் தொடர்பு கொள்ளவும்.
மேலும் அனைவரையும் இவ் அபிஷேக ஆராதனைகளில் கலந்து இறை ஆசியை பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் - ஆலய பொறுப்பாசிரியர்கள்.

25/04/2026

Heartfelt thanks to everyone who attended and blessed our Poojai program. Your presence made the occasion special and memorable. Special thanks to the 2015 O/L & 2018 A/L Batch for your generous support in making the Primary IT Unit a reality for our young learners. Together we inspire, together we build – Be and Make.

23/04/2026

காலை வணக்கம் அனைவருக்கும்,

எங்கள் அன்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பள்ளியின் வரலாறு, நினைவுகள் மற்றும் பெருமைகளைப் பதிவு செய்யும் சிறப்பு நினைவிதழ் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பெருமையான பயணத்தில் ஒவ்வொரு பேட்சும் முக்கிய பங்காற்றியுள்ளது. ஆகவே, ஒவ்வொரு பேட்சின் புகைப்படமும் இதில் இடம்பெறுவது மிகவும் அவசியமானதாகும்.

நூற்றாண்டு விழா நினைவிதழில் அனைத்து பேட்ச்களின் குழு புகைப்படங்களும் கட்டாயமாக இடம்பெற வேண்டும், ஏனெனில் ஒவ்வொரு பேட்சும் எங்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கும் சிறப்பிற்கும் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளது. இது ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அரிய சந்தர்ப்பம். எனவே அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பேட்சை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பலரின் கோரிக்கைக்கு இணங்க, இதுவரை புகைப்படம் எடுக்காத பேட்ச்களுக்கான குழு புகைப்படம் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) காலை 9.00 மணி முதல் எங்கள் பள்ளியில் எடுக்கப்படும்.

உடை ஒழுங்கு:
👩 பெண்கள் – சேலை
👨 ஆண்கள் – வேஷ்டி மற்றும் சட்டை

அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்:

தலைவர் – மீனாட்சி சுந்தரம்
செயலாளர் – முருகானந்தன்
உறுப்பினர் செயலாளர் – சித்ராதேவி

நன்றி

Photos from Vivekananda Osa's post 20/04/2026

எமது பாடசாலையின் 2017/2020 முன்னாள் மாணவர்களின் சிறப்பு பூஜை, நேற்று (19.04.2026)எமது பாடசாலை வளாகத்தில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்புற நடைபெற்றது.

18/04/2026

✨ Vivekananda National College – 100th Year Celebration ✨

Dear all,

We warmly invite all our batchmates, teachers, Principal, and OSA members to join our Batch Poojai for the 100th year celebration.

📅 Date: 19th April 2026
🕓 Time: 4.30 PM onwards
📍 Venue: Vivekananda National College

Let’s come together, get blessings, and celebrate this special milestone of our school ❤️

See you all there! 🙏

✨ விவேகானந்தா தேசிய கல்லூரி – 100வது ஆண்டு விழா ✨

அன்புடையீர்,

எங்கள் 2017 O/L & 2020 A/L மாணவர்கள் சார்பில் நடைபெறும் Batch Poojaiக்கு, அனைத்து பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர் மற்றும் OSA உறுப்பினர்களை அன்புடன் அழைக்கிறோம்.

📅 தேதி: 19 ஆம் நாள் ஏப்ரல் 2026
🕓 நேரம்: மாலை 4.30 முதல்
📍 இடம்: விவேகானந்தா தேசிய கல்லூரி

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆசீர்வாதம் பெற்று இந்த சிறப்பான நிகழ்வை கொண்டாடுவோம் ❤️

அனைவரையும் எதிர்பார்க்கிறோம்! 🙏

06/04/2026

எமது கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட முத்திரை ஒட்டப்பட்ட ஞாபகார்த்த தபால் உறை, இரண்டு தபால் அட்டைகள் ஆகியவற்றை பெற விரும்புவோர் பெரியசாமி சுரேஷ் 0777 35 11 91 ஆகிய இலக்கத்தில் தொடர்புகொள்ளவும். ரூ.1000 மட்டுமே. அத்துடன் குறைந்தளவே கையிருப்பில் உள்ளது.

Want your school to be the top-listed School/college in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


New Chetty Street
Colombo
01300