Motivational Sense.com

Motivational Sense.com

Share

“Motivation and Empowerment for a real change”

11/05/2021

இந்த சிரிப்பின் நோக்கம் மறுமையிலே புரியும் அந்த கயவர்களுக்கு!!
"' #ஷாம்' தேசத்திற்கு #நற்செய்தி உண்டு..!"

இந்த வார்த்தை அல்லாஹுவுடைய தூதர் (ஸல்) அவர்களின் வார்த்தை,
ஒரு காலமும் இது பொய்யாகாது..!

ஷாமிற்க்கு நிச்சயமாக துன்பத்திற்கு பிறகு ஓர் இன்பம் உண்டு..!

இப்போது வேண்டுமானால் ஷாம் அலக்கழிக்கப்படலாம்..!

ஆனால்..! ஷாமிற்கென்று ஒரு நாளை அல்லாஹ் ஏற்படுத்துவான் நிச்சயமாக..!

இன்ஷா அல்லாஹ்..!

ஷாம் தேசம் என்பது சிரியா, பலஸ்தீனம், ஜோர்டான், லெபனான். இந்த நான்கு நாடுகள் சேர்ந்ததே ஷாம் தேசம்

ஷாம் தேசத்தின் சிறப்புக்கள்..!

முஹம்மத் (ஸல்) அவர்களால் அதிகம் பிராத்திக்கப்பட்ட இடங்களில் ஒன்று ஷாம்..!

அல்லாஹ்வின் பரக்கத் பொருந்திய இடங்களில் ஒன்று ஷாம்..!

நமது மூன்றாவது புனித ஸ்தலம் மஸ்ஜிதுல் அக்ஸா உள்ள இடமும் ஷாம் தான்..!

நமது மூன்றாவது புனித ஊரும் ஷாம் தான்..!

அதிகமான நபிமார்களை சுமந்த பூமியும் ஷாம் தான்..!

உலகில் அனுப்பப்பட்ட அத்தனை நபிமார்களின் நெற்றி ஸுஜூத் செய்ததும் ஷாமில் தான்..!

வானவர்கள் அதிகம் இறங்குவதும் ஷாமில் தான்..!

வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து வைத்திருப்பதும் ஷாமில் தான்..!

முஹம்மத் (ஸல்) அவர்கள் முதல் முதலாக மக்காவை விட்டு வியாபாரத்திற்காக சென்ற இடமும் ஷாம் தான்..!

பாரசீக கோட்டையில் இஸ்லாமிய கொடி பறக்கும் என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அதுவும் ஷாம் தான்..!

எட்டாயிரத்திற்கும் அதிகமான ஸஹாபாக்கள் (றழி) ஷஹீதானதும் இந்த ஷாமிற்காக தான்..!

உலகில் பல இடங்களில் குழப்பம் ஏற்படும் போது ஈமான் தஞ்சம் அடைவது ஷாமில் தான்..!

கியாம நாள் வரையிலும் ஈமானிற்காக மட்டுமே போராட்டம் நடக்கும் பூமியும் ஷாம் தான்..!

முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு போராட்டக் குழுவை ஆதரித்தார் என்றால் ஷாமின் குழுவை தான்..!

அப்போதைய வல்லரசான பாரசீகத்தை இந்த உம்மத் விரட்டிய இடமும் ஷாம் தான்..!

மல்ஹமா என்ற மிகப்பெரிய யுத்தம் தொடங்குவதும் ஷாமில் தான்..!

ரோமர்களுக்கு இமாம் மஹ்தி (அலை) தலைமையில் சங்கு ஊதுவதும் ஷாமில் தான்..!

யூதர்களை பார்க்கும் இடமெல்லாம் வெட்டுவதும் ஷாமில் தான்..!

ஈஸா (அலை) அலை இறங்குவதும் ஷாமில் தான்..!

தஜ்ஜால் கொல்லப்படுவதும் ஷாமில் தான்..!

மஹ்ஷர் பூமி ஏற்படுவதும் ஷாமில் தான்..!

கியாம நாளில் நெருப்பு ஒட்டுமொத்த மனிதர்களையும் ஒன்று திரட்டுவதும் ஷாமில் தான்..!

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் இந்த ஷாமிற்கு அவ்வளவு சிறப்பும் மகத்துவமும் உள்ளது

ஷாம் அழிக்கப்படுகிறது என்று யாரும் கவலை கொள்ள வேண்டாம்

இஸ்லாம் உள்ள வரையில் ஷாமை அழிக்க முடியாது

இப்போதைய நமது பணி, ஷாமிற்கும் அம் மக்களுக்கும் அதிகம் பிராத்திப்பதே ஆகும்..!
யா அல்லாஹ் எங்கள் சகோதரர்களுக்கு உதவி செய்வாயாக...ஆமின்!!!🤲
✍️: அஸீம் லாஹிர்
கொழும்பு

03/04/2020

எனதன்பின் முஸ்லிம் சொந்தங்களே!

நான் உங்களது அரசியல் தலைமையோ அல்லது மார்க்கத் தலைமையோ அல்ல. எனவே நீங்கள் இதற்கு கட்டுப்பட வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் கிடையாது. ஆனாலும் ஒரு சகோதர பாசமும், வேதனையின் வலிகளும் இதனை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஆழமாக விதைத்திருக்கின்றன. ஒருபுறம் பலியாடுகளாக ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற அதே வேளை மறுபக்கம் நமது அறிவீனமான செயற்பாடுகளால் நமக்கு நாமே குழி தோண்டிக் கொள்கின்ற துர்ப்பாக்கியமான ஒரு சூழலுக்குள் நாம் இருக்கிறோம்.

இந்த நாட்டில் வாழும் இருபது இலட்சம் முஸ்லிம்களும் இந்த நாட்டுக்கு ஓர் அருட்கொடையாக அமைவதும், ஒரு சாபக்கேடாக அமைவதும் எமது கரங்களிலேதான் தங்கியிருக்கிறது.

கடந்த வருடம் இதே மாதத்தில், எம்மில் மிக மிகக் குறைந்த, விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் ‘தாமும் அழிந்து பிறரையும் அழிப்பதுதான் வாழ்க்கை’ என நினைத்ததன் விளைவாக ஒரு பெரும் அனர்த்தத்துக்குள் இந்த நாட்டையும் அதன் மக்களையும் தள்ளி விட்டுச் சென்றனர்.

எம்மில் இன்னுமொரு சாரார், ‘யாருக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, தாம் வாழ வேண்டும் என்பதற்காக எந்த அளவுக்கும் இறங்கத் தயார்’ என்ற இன்னுமொரு தீவிரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றனர்.

எம்மில் இன்னுமொரு தரப்பினர் தற்போது பரவும் நோயின் தீவிரத்தையும், கொடூரத்தையும் சட்டை செய்யாது சட்டங்களையும் ஒழுங்குகளையும் மீறினர்/மீறுகின்றனர்.

எம்மில் பெரும்பாலானவர்கள் எல்லாவற்றிலும் கருத்துச் சொல்லப் போய், தாமும் உணர்ச்சி வசப்பட்டு, அடுத்தவர்களையும் உணர்ச்சியூட்டி நிலைமையின் பாரதூரத்தை இன்னுமின்னும் அதிகரித்து விடுகின்றனர்.

எம்மில் பலர், மார்க்கம் பற்றிய புரிதலில் உள்ள போதாமையின் காரணமாக, அமைதியாக கடந்து போக வேண்டிய பல அம்சங்களில் போர் முரசு கொட்டி விடுகின்றனர்.

எம்மில் இன்னுமொரு சாரார் பிரச்சினையின் பாரதூரம் புரியாமல் சகோதர சமூகத்தவர்களோடு வாதாட்டங்களுக்கும், விவாதங்களுக்கும் போய்க் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் உண்மையான இஸ்லாமோ...

ஓர் ஒழுங்கின் கீழ், கட்டுப்பாட்டுடனும் அமைதியுடனும் வாழுமாறு எம்மைப் பணிக்கின்றது. அடுத்தவர்களை வாழ வைப்பதற்காக வாழ்ந்து மரணிக்குமாறு எம்மை ஏவுகிறது. தனது மறுமை நலனையும் அடுத்தவர்களது இம்மை நலனையும் முற்படுத்துமாறு வழிகாட்டுகிறது. அதற்கு நிலையான சுவர்க்கம் இருப்பதாக வாக்களிக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில் நாமனைவரும் தீர்க்கமான முடிவொன்றுக்கு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

எமக்கு முன்னால் மூன்று தெரிவுகள் இருக்கின்றன.

தீவிரவாத இயக்கங்களும், மற்றும் இஸ்லாமிய வெறுப்பாளர்களும் சொல்லுகின்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட, பிழையான ‘இஸ்லாத்தின்’ பக்கம் செல்வதா?

அல்லது

யாருடைய காலில் விழுந்தாவது ‘நல்ல முஸ்லிம்’ என்ற பெயருடன் சுயநல வாழ்க்கை ஒன்றை வாழ்வதா?

அல்லது

அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த பிரகாரம் எல்லா மனிதர்களுக்கும், ஏனைய ஜீவராசிகளுக்கும் பிரயோசனமுள்ளவர்களாக வாழ்ந்து மரணிப்பதா?

ஓர் உண்மையான முஸ்லிமுக்கு மூன்றாவதைத் தவிர வேறு தெரிவுகள் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

எனதன்பின் முஸ்லிம் சகோதரனே/சகோதரியே!

சுருக்கமாக மூன்று அம்சங்களை உங்களது கவனத்துக்காக முன்வைக்கிறேன்.

1. சோதனைகளின் போது, தள்ளி விட்டவன் யாரென்று பார்ப்பதை ஒரு புறம் வைத்து விட்டு, ‘நான் ஏன் விழுந்தேன்?’ என்று சிந்திப்பதுதான் ஒரு முஸ்லிமின் முதல் பண்பு. எம் பக்கத் தவறு என்ன? நாம் எங்கு சறுக்கினோம்? இந்த நிலைக்கு நாம் ஆளாகுவதற்கான காரணம் என்ன? என்ற ரீதியில் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

2. அநீதிகள் அதிகமாக அரங்கேறும் போது, உங்களுடன் குரோதம் பாராட்டுபவனுக்கு நீங்களும் பரஸ்பரம் குரோதம் பாராட்டாமல், அவனோடு இங்கிதமாக நடந்து கொள்வதும், அவனுக்கு முடியுமான நன்மைகளை செய்வதும் பகைமையை மறக்கடிக்கச் செய்யும். விரோதிகளை இல்லாமல் செய்வதற்கான மிகச் சிறந்த வழி அவர்களை நண்பர்களாக மாற்றுவதே! என அல்குர்ஆன் சொல்லித் தருகிறது.

3. ஒவ்வொரு நிகழ்வு தொடர்பாகவும் அனைவரும் கருத்துச் சொல்லத் தேவையில்லை. அப்படியான நிலை தோன்றுவது பெரும் குழப்பத்தின் அடையாளம் என இஸ்லாம் வழிகாட்டுகிறது.

இந்த மூன்று அம்சங்களையும் ஒரு சமூகமாக நாமனைவரும் பின்பற்ற முடியுமானால் அதன் விளைவு எத்தகையதாக அமையும் என்று கற்பனை செய்து பாருங்கள். நிச்சயமாக நாம் ஒரு நாகரிகமடைந்த நிலையை நோக்கி நகர ஆரம்பிப்போம். ஆனால் ‘இதை நீங்களனைவரும் பின்பற்றித்தான் ஆக வேண்டும்’ என்று கட்டளையிடுவதற்கு நான் உங்களது தலைவனல்ல. உங்களில் எவரின் மீதும் எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. நானும் உங்களைப் போன்ற ஒரு சாதாரண இலங்கைக் குடிமகன்தான். ஆனால் நான் கற்ற இஸ்லாத்திலிருந்து என்னைச் சூழ நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது இப்படியொரு பார்வையைத் தவிர வேறொன்று எனக்குத் தோன்றவில்லை. அதை என்னையொத்த ஏனையவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு அதிகாரங்கள் எதுவும் தேவையில்லை என்ற வகையில் கனத்த இதயத்தோடு இவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு முஸ்லிமின் கவலைகளுக்கான நிவாரணம் பிறர் வாழ்வதற்காக வாழ்வதுதான். அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் இந்த நாட்டு மக்கள் உணர வேண்டுமாயின் அது இந்த நாட்டில் வாழும் இருபது இலட்சம் முஸ்லிம்களின் வாழ்க்கை முறைக்கூடாகத்தான் சாத்தியம். எனவே தீர்வு நம் கையில்தான் இருக்கிறது. கொடுக்கத் தயாரானவர்கள் யாருமிருப்பின் இன்றே இப்போதே ஆரம்பியுங்கள்.

இது கட்டளையல்ல!
ஓர் அன்பான வேண்டுகோள் மட்டுமே!

Affan Abdul Haleem
2020.04.03

24/03/2020

BE CAREFULL OF CURFEW…

சட்டம் பிராண்டி விடும்
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

எதற்காக ஊரடங்கு…அந்த நோக்கத்தை சரியாகப் புரிந்து கொண்டால் கேர்ஃபிவை கெயார் பண்ணுவார்கள் நம்ம சிட்டிசன்கள்.

கேர்ஃபிவ் ஒன்றும் அடுத்தவர்களுக்காக அல்ல நமக்காக............... நமக்கே மட்டுமாக. நம்மை கொரொனாவின் கொடூரத்திலிருந்து விலக்களித்துக் கொள்ளுவதற்காக நாமாக தனிமைப்பட மாட்டோம் இவனுகளுக்கு சட்டப்படி ஊரடங்கு போட்டால்தான் ஊட்டுக்குள்ளே அடங்குவார்கள் என்று நம்பி அரசாங்கம் போட்டிருக்கின்ற இந்த ஊரடங்கு தொடர்பில் அடங்குவதற்கு மறுக்காதிருப்போமாக என்று அனைவரையும் மறுபடி மறுபடி கேட்டுக் கொண்டு…இந்த நேரத்தில் ஊரடங்கினை மீறுகின்ற போது ஏற்படுகின்ற சட்ட அட்ராஸிட்டிகளைப் பற்றி “புத்தியுள்ள மாந்தரோடு” உரையாடலமென்று ஆசைப்படுகின்றேன்.

தற்போதைய ஊரடங்கு என்பது சற்று வித்தியாசமானது. முன்னை மாதிரியல்ல. முசுப்பாத்தி காட்ட முடியாது. இப்போதைய கொரொனா வைரஸின் ஊழித் தாண்டவத்தில் அமுலிலிருக்கின்ற ஊரடங்கினை வயலேட் பண்ணுகின்ற சந்தர்ப்பத்தில் சட்டம் நம்மை வைத்து தரமான சம்பவம் செய்யக் காத்திருக்கின்றது என்பதனை சமூகத்தாருக்கு அறியத் தருகின்றேன்.

இது தொடர்பில் இலங்கையில் பல சட்டங்கள் தண்டணையையும் தண்டப் பணத்தையும் ஒன் யுவர் மார்க்கில் வைத்துக் கொண்டு யாராவது மாட்ட மாட்டானா என்ற பெரும் பசியோடு காத்துக் கிடக்கின்றன. தயவு செய்து அநியாயத்துக்கு இரையாகி விடாதீர்கள் சொல் பேச்சு கேட்காத புள்ளீங்களா. கெலின்ம கபால மோட்சம்தான். இரக்கமே காட்ட மாட்டார்கள். சட்டமும்தான் கருணைக்கு சாரி பாஸ்.

பின்வரும் சட்டங்கள் பீதியைக் கிளப்புகின்றன.

1947ம் அண்டின் 25ம் இலக்க பொது மக்கள் பாதுகாப்பு (Public Security Ordinance) சட்டத்தின் பிரவு-16ன் கீழ் அதிமேதகு ஜனாதிபதி நாட்டின் அவசர நிலைமை கருதி ஊரடங்கு சட்டத்தை வர்த்தமாணி மூலம் அறிவித்து அமுல்படுத்துகின்ற சந்தர்ப்பத்தில் அதனை மீறி நடக்கின்றவர்கள் ஒரு மாதத்துக்கு விஞ்ஞாத கடூழிய சிறைத் தண்டனைக்கு ஆளாவார்கள்.

இதே போல இலங்கை தண்டனைச் சட்டக்கோவை (Sri Lankan Penal Code) பிரிவு-264ன் கீழ் “தொற்று நோய் காரணமாக தனிமைப்படுத்தல் கட்டளையாக்கப்பட்டிருக்கின்ற நேரத்தில் அதனை மீறி நடக்கின்ற நபர்கள் குற்றவாளியாகக் காணப்படுகின்ற விடத்து ஆறு மாத காலத்துக்கு விஞ்ஞாத சிறைத் தண்டணைக்கு ஆளாவார்கள்.

இதே போல 1897ம் ஆண்டின் 03ம் இலக்க நோய் தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளை சட்டத்தின் (Quarantine and Prevention of Diseases Ordinance No: 3 of 1897) பிரிவு-04ன் படி இந்த கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளையோ அல்லது அதன் கீழ் ஆக்கப்படுகின்ற விதிகளையோ (இப்போது இந்த சட்டம்தான் நாடடி;ல் ஃபுல் எக்டீவெஷனில் இருக்கின்றது) மீறுவது குற்றமாகும். இந்த சட்டத்தின் பிரிவு-05 ன் படி இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் காணப்படுகின்றவர்கள் ஆறு மாத காலத்தால் தண்டிக்கப்படக் கூடிய சிறைத் தண்டனையாலும் ரூபா. 2000க்கு விஞ்ஞாத தண்டப் பணத்தாலும் தண்டிக்கப்படுவார்கள். பிரவு-06ன் படி இந்த சட்டத்தின் கீழ் குற்றம் செய்தவர்களாக காணப்படுகின்றவர்களை பொலிசார் எந்தவிதமான கைதாணையுமில்லாமல் (Without Warrant) கைது செய்ய முடியும்.

இப்படி எல்லா சட்டங்களும் ஊரடங்கினை மீறுகின்ற சட்ட மறுப்பான்களுக்கெதிராக சம்பவம் செய்ய வழி மேல் வழி வைத்த வெறித்தன வெயிட்டிங்கில் இருக்கின்றன. கொரொனா தொற்றிலிருந்து தேசத்தை மீட்க முடிந்தளவு அரசாங்கமும் சம்பநதப்பட்ட வைத்தியர்கள் தாதிகள் அதிகாரிகள் போரடிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் சட்டத்தை மதிக்காமல் ஊரடங்கை மீறி குரங்கு சேட்டை பண்ணுகின்றவர்களுக்கெதிராக சத்தியமாக இங்கேயிருக்கின்ற எந்த சட்டமும் கருணை ப்ளீஸ் என்று காப்பாற்ற முன் வராது என்பதனை மனதிற் கொள்க எனது மனிதருள் மாணிக்கங்களே.

கிண்ணியா சபருள்ளாஹ்
2020-03-23

Photos from Motivational Sense.com's post 24/03/2020

Dear world....

22/03/2020

படிப்பினை தரும் வரலாற்று கதை..

அப்பாஸியா கலீஃபாக்களில் ஐந்தாவது கலீஃபா ஹாரூன் ரஷீது என்பவர்.

அப்பாஸியாக்களின் ஆட்சி நீண்ட நெடிய காலம் இருந்திருந்தாலும், அவர்களில் கலீஃபா ஹாரூன் ரஷீத் மட்டுமே மிகவும் பிரபலமாக திகழ்ந்தார் எனலாம்.

இவருடைய ஆட்சி காலத்தில் ஒரு தடவை மிகப்பெரிய பஞ்சம் வந்தது. இந்த பஞ்சத்தின் விளைவுகள் சமர்கந்திலிருந்து பக்தாது வரையிலும், கூஃபாவிலிருந்து மராகிஷ் வரையிலும் கடும் நெருக்கடியை உண்டாக்கியது.

ஹாரூன் ரஷீத் அவர்கள் இந்த நிலைமைகளை சமாளிக்க பலவித திட்டங்களை செயல்படுத்தினார்.

மக்களுக்காக அரசாங்க உணவுக்கிடங்குகளை திறந்து விட்டார். வரிகளை மன்னித்தார். நாடு முழுவதும் இலவச உணவுப் பந்தல்களை உண்டாக்கினார்.

அதிகாரிகள், தலைவர்கள், வியாபாரிகள் எல்லோரையும் மக்கள் சேவையில் ஈடுபடச் செய்தார். எத்தனை முயற்சிகள் செய்தும் நிலைமையை சரிபடுத்த இயலவில்லை.

இந்த பிரச்சினைகளின் காரணமாக ஒருநாள் இரவு ஹாரூன் ரஷீத் கடும் மன உளைச்சலில் இருந்தார். அவரால் உறங்க முடியவில்லை.

எனவே, நிலைமை குறித்து ஆலோசனை செய்ய தலைமை அமைச்சர் "யஹ்யா பின் காலித்" அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இவர் கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்களுக்கு ஆசிரியரும் கூட. கலீஃபா சிறு வயது முதலே அவரிடம் பாடம் படித்துள்ளார்.

ஹாரூன் ரஷீத், தனது ஆசிரியரும் தலைமை ஆசிரியருமான யஹ்யா அவர்களிடம் கேட்டார், "ஆசிரியர் அவர்களே! எனது மன உளைச்சலை போக்கி, நிம்மதி தருகின்ற வகையில் ஏதாவது ஒரு கதையோ, வரலாறோ சொல்லுங்களேன்."

இதைக் கேட்ட யஹ்யா புன்னகைத்தவாறே கூறினார்: "மன்னர் அவர்களே! ஏதோ ஒரு நபியின் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நான் படித்துள்ளேன். அல்லாஹ்வின் தக்தீர் (விதி) மற்றும் திருப்தி போன்ற விவரங்களை அழகாக விளக்கும் கதை அது. நீங்கள் விரும்பினால் கூறுகிறேன்."

ஹாரூன் ரஷீத் கூறினார்: "முதலில் அதை சொல்லுங்கள். மன உளைச்சலின் காரணமாக எனக்கு மூச்சு முட்டுகிறது." யஹ்யா கதையை சொல்ல ஆரம்பித்தார்.

ஏதோ ஒரு காட்டில் ஒரு பெண் குரங்கு தனது குட்டியுடன் வசித்து வந்தது. ஒரு நாள் அது எங்கோ தூர பயணம் போக வேண்டி இருந்தது. ஆனால் குட்டியை உடன் கொண்டு போக முடியாத சூழ்நிலை. எனவே காட்டுக்கு ராஜாவாக இருந்த சிங்கத்திடம் வந்து, அரசே! நான் வெளியூர் பயணம் போகிறேன். நீங்கள் காட்டுக்கே ராஜா. அதனால் உங்கள் பாதுகாப்பில் எனது குட்டியை விட்டு செல்கிறேன். பார்த்து கொள்வீர்களா? என கேட்டது. சிங்கமும் ஏற்றுக் கொண்டது. குரங்கும் பயணம் போய் விட்டது.

அதன் பிறகு சிங்கம் வெளியே போகும் போதெல்லாம் குரங்கு குட்டியை தனது தோளில் ஏற்றிக்கொண்டு காட்டை வலம் வரத்தொடங்கியது. தினமும் இதே வழக்கம். குட்டியும் பாதுகாப்பாக இருந்தது.

ஒரு நாள் சிங்கம் இப்படி குரங்கு குட்டியை தோளில் வைத்தவாறு போய்க்கொண்டு இருந்த போது எங்கிருந்தோ திடீரென வந்த கழுகு பறவை ஒன்று, குட்டியை தூக்கிக் கொண்டு பறந்து விட்டது. சிங்கம் அங்கே இங்கே ஓடி, தேடி அலைந்தாலும் கழுகையும் காண முடியவில்லை; குரங்கு குட்டியையும் மீட்க முடியவில்லை. சிங்கம் பெரிய கவலையில் ஆழ்ந்தது.

சில நாட்களுக்கு பிறகு வந்த தாய்க்குரங்கு, சிங்கத்திடம் தனது குட்டியை திரும்ப கேட்டது. சிங்கம் வெட்கத்தோடு நடந்ததை கூறியது. அதைக் கேட்ட குரங்கு, சிங்கத்தை தாறுமாறாக திட்டியது.

"உனக்கு வெட்கமாக இல்லையா? நீ காட்டுக்கே அரசன் என்கிறாய். ஒரு குட்டியை, அமானிதத்தை பாதுகாக்க முடியவில்லையே. முழு காட்டையும் எப்படி ஆளப்போகிறாய்?"

சிங்கம் வெட்கத்தோடு பதில் சொன்னது, "நான் நிலத்தில் தான் ராஜா. தரைவழியாக எந்தவித ஆபத்து வந்து இருந்தாலும் நான் உனது குட்டியை காப்பாற்றி இருப்பேன். ஆனால் இந்த ஆபத்து வானத்திலிருந்து வந்தது. அதை வானத்தில் உள்ளவன் காக்க முடியும். நான் என்ன செய்ய!"

யஹ்யா பின் காலித் இந்த கதையை கூறிவிட்டு,
"அரசர் அவர்களே! இந்த பஞ்சமும் நிலத்திலிருந்து உண்டாகி இருந்தால், நீங்கள் அரசராக நின்று, கட்டுப்படுத்தி இருக்க முடியும். ஆனால் இது வானத்திலிருந்து இறங்கிய வேதனை. அதை இறக்கிய அல்லாஹ் தான் போக்க முடியும்.

எனவே, நீங்கள் அரசராக இல்லாமல், ஒரு யாசகனாக அல்லாஹ்விடம் மண்டியிட்டு உதவி கேளுங்கள். நிச்சயம் அல்லாஹ் இந்த பஞ்சத்தைப் போக்கி விடுவான்."

"ஆபத்துகள் இரண்டு வகையில் வரலாம். நிலத்திலிருந்து உண்டாகும் ஆபத்துகளை மக்கள் இக்லாசான முறையில் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் உதவியோடு போராடினாலே, தீர்த்து விடலாம்.

வானத்திலிருந்து வரும் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு பெற வேண்டுமானால்... அல்லாஹ்வை திருப்தி படுத்தாத வரை முடியாது. அல்லாஹ்வை திருப்தி படுத்த நீங்கள் அரசராக அல்ல ; யாசகனாக மாற வேண்டும். அவனிடம் தவ்பா செய்து உதவி தேடுங்கள். நிச்சயம் கிடைக்கும்.

எல்லா பிரச்சினைகளுக்கும், அதன் தீர்வுகளுக்கும் மத்தியில் உள்ள இடைவெளி, நெற்றிக்கும், ஸஜ்தா செய்யும் இடத்திற்கும் உள்ள தூரம் தான்.

நமது பிரச்சனைகளுக்கு தீர்வை தேடி ஏழு கடல்களையும் தாண்டி போக முயல்கிறோம். ஆனால் நமது நெற்றியை தரையில் வைத்து அல்லாஹ்விடம் உதவி கேட்க மறக்கிறோம்.

கதையின் நீதி:
இப்போது நம்மை சூழ்ந்து கொண்டுள்ள எல்லா வித ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பு பெற, அல்லாஹ்விடமே சரணடைவோம், உதவி பெறுவோம்.

(உருதுவிலிருந்து)

- சென்னை ஜியாவுதீன் பாகவி

21/03/2020
Want your school to be the top-listed School/college in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Colombo