27/08/2026
“அழகிய பொறுமையை கடைப்பிடிப்பீராக”
(யூசுப்: 18)
எனது நண்பனே! உனது அல்குர்ஆன் பிரதியோடு நீ இருந்து கொள்.
உனது தொழுகையைப் பேணிப் பாதுகாத்துக் கொள். உனக்கு ஏற்படுகின்ற
வலிகளுக்கு இறைவனிடம் கூலி உண்டு என்பதை நினைத்துக் கொள். எது
நடந்தாலும் அது இறை நியதிப்படியே நடக்கிறது.
உலகம் என்பதே சோதனைதான். அது நிச்சயம் முடிவடைந்து விடும்.
இறுதிக்கட்டத்தில் நாம் கடக்க வேண்டியதை கடந்து விடுவோம். வாழ்வில்
சில கட்டங்கள் மிகவும் கஷ்டமானதாக இருக்கும். இப்படி எத்தனையோ
கட்டங்களை நானும் நீங்களும் கடந்து விட்டோம். அவற்றை எப்படி கடந்தோம் என்பதை இப்போது யோசித்துப் பார்த்தால் ஆச்சரியம் மேலிடும்.
உறுதியாக நம்பிக்கை கொள்ளுங்கள்! என்றோ ஒரு நாள் சுவனத்தின் நிழலில்
நாம் அமர்ந்து கொண்டு, உலகின் அனைத்தையும் நினைத்துச் சிரித்துக்
கொண்டிருப்போம். எதுவெல்லாம் எமது கவனத்தைத் திருப்பியுள்ளன என்று எமக்கே ஆச்சரியமாக இருக்கும்.
அத்ஹம் ஷர்காவி
"அல் குர்ஆன் சொல்லும் செய்திகள்" நூலில் இருந்து