22/04/2026
"முதல் நூல் 2025" வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்குதல் மற்றும் நூல் வெளியீடு
ஊவா மாகாண நூலக சேவைகள் சபை,ஊவா மாகண கல்வி அமைச்சு,ஊவா மாகாண கல்வித் திணைக்களம்,மற்றும் Clean Sri-Lanka தேசிய செயலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த "முதல் நூல் 2025"போட்டிக்கு எமது பாடசாலையில் இருந்தும் ஆக்கங்கள் அனுப்பப்பட்டன.
அதில் எமது பாடசாலையான ப/பாதினாவல முஸ்லிம் வித்தியாலயத்தைச் சேர்ந்த M. U ஹஸ்னி அஹமட் இன் ஆக்கமான கவிதைத் தொகுப்பு இறுதிச் சுற்றுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு அச்சிடுவதற்கு பொருத்தமானது என மதிப்பிற்குரிய நடுவர் குழுவின் பரிந்துரைக்கு அமைய நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன.
வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் விருதுகள் மற்றும் பரிசில்களை வழங்குதல் என்பவற்றுடன் அச்சிடப்பட்ட நூல்களின் வெளியீட்டு விழாவும் மிக சிறப்பாக, 2026 ஏப்ரல் மாதம் 28ம் திகதி காலை 9.00 மணிக்கு பதுளை ரேஸ்கோஸ் வீதியில் அமைந்துள்ள ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாடசாலை சமூகம் சார்பாக அம் மாணவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்