Holy Rosary Maha Vidyalayam

Holy Rosary Maha Vidyalayam Welcome to the Official page of Holy Rosary Maha Vidyalaya.

This page shares updates on academic activities, co-curricular programs, sports events, achievements, and important announcements of the school.

🌸 பெருமையின் தருணம் 🌸அன்னை திரேசா உதவும் உள்ளங்கள் சமூக நல அமைப்பின் அனுசரணையில், எமது பாடசாலையில் 2025 ஆம் ஆண்டு க.பொ.த...
10/07/2026

🌸 பெருமையின் தருணம் 🌸

அன்னை திரேசா உதவும் உள்ளங்கள் சமூக நல அமைப்பின் அனுசரணையில், எமது பாடசாலையில் 2025 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும், அவர்களின் வெற்றிக்கு அர்ப்பணிப்புடன் வழிகாட்டிய ஆசிரியர்களையும் கௌரவிக்கும் சிறப்பு நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாணவர்களின் உழைப்பும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், பெற்றோரின் ஒத்துழைப்பும் உயர்வாகப் பாராட்டப்பட்டன.

இந்நிகழ்வை அனுசரித்து மாணவர்களை ஊக்குவித்த அன்னை திரேசா உதவும் உள்ளங்கள் சமூக நல அமைப்பிற்கு எமது பாடசாலை சமூகத்தின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

💐 கௌரவிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எமது இதயம் கனிந்த வாழ்த்துகள்!
உங்கள் சாதனைகள் மேலும் பல வெற்றிகளுக்கு வழிகாட்டட்டும்.

🎉 "மாணவர்களின் வெற்றியே எமது பாடசாலையின் பெருமை!" 🎉

“ரொசாரியன்ஸ் நிதியத்தின்” ஊடாக மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும்-தொழிலதிபர் இராமையா விவேகானந்தராஜா தெரிவிப்பு          ...
01/07/2026

“ரொசாரியன்ஸ் நிதியத்தின்” ஊடாக மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும்

-தொழிலதிபர் இராமையா விவேகானந்தராஜா தெரிவிப்பு

( மஸ்கெலியா நிருபர் )

ஹோலிரோசரி தமிழ் மகா வித்தியாலத்தில் கல்வி பயின்ற பழைய மாணவர்களின் பங்களிப்போடு “ரொசாரியன்ஸ் நிதியம்” உருவாக்கப்பட்டு மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என நுவரெலியா ஹில்லினா பாம் (Hillina Farm) தொழிலதிபர் இராமையா விவேகானந்தராஜா தெரிவித்தார்.

மேற்படி வித்தியாலயத்தில் கடந்த ஆண்டு க.பொ.த. உயர்தரத்தில் 3 ஏ சித்திகளைப் பெற்று பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகியுள்ள இரண்டு மாணவிகளையும் கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் பரசுராமன் சங்கர் தலைமையில் நேற்று முன்தினம் (29) ஹோலிரோசரி ஆலய மண்டபத்தில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

ரொசாரியன்ஸ் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் ஏ. செல்வநாயகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் அருட்பணி பெனி யே.ச. முன்னாள் நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் குழந்தைவேல் ரவி, சமுக செயற்பாட்டாளர் எஸ்.கே. சந்திரசேகரன் உட்பட மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எம்மால் செய்ய முடியாதது என்று எதுவும் கிடையாது, முயற்சி இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியும், எனவே, மாணவர்கள் முடியாது என்ற வார்த்தையை மனதில் இருந்து நீக்கிக் கொண்டு கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

1984 இல் எமது ரொசாரியன்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. மாணவர்கள் நலன்சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டு வருகின்றோம். கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த ஏ. யுகாஷினி, எஸ். பவித்திரா ஆகிய இரண்டு மாணவியர் பல்கலைக் கழகம் செல்கின்றமை பெருமைக்குரிய விடயமாகும். எதிர்காலத்தில் பல மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்கு ஊக்கமளிக்கும் வகையிலேயே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் பல்கலைக்கழகக் கல்வியை நிறைவு செய்த பின்னர் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டு தம்மையும், தமது குடும்பங்களையும் பராமரிக்க வேண்டும் என்று நினைப்பது நியாயமானதே என்றாலும், யாரோ ஒருவரின் கீழ் ஒருவர் வேலை செய்யும் நிலைமை மாறி, எதிர்காலத்தில் எமது இளைஞர், யுவதிகள் ஒவ்வொருவரும் பலருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடிய தொழில் தருநர்களாக வளர வேண்டும். அதற்கான பாடநெறிகளைத் தெரிவு செய்து உன்னத நிலைக்கு உயர திடசங்கற்பம் பூண வேண்டும்.

இந்த முயற்சிக்கு உறுதுணையாக பங்களிப்பு செய்யும் வகையில் பழைய மாணவர்களைக் கொண்டு “ரொசாரியன்ஸ் நிதியம்” உருவாக்கப்படவுள்ளது. ஹோலிரோசரி தமிழ் மகா வித்தியாலயம் உட்பட மலையகத்தில் உள்ள அனைத்து மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள், பரீட்சை வழிகாட்டல் செயலமர்வுகள், புலமைப் பரிசில் வழங்குதல், வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவுதல் போன்ற மாணவர்களின் நலன்கள் சார்ந்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தத் திட்டமிட்டுள்ளோம். எமது கல்லூரியில் கல்வி பயின்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொழில் புரியும் நல்லுள்ளங்கள் மற்றும் நலன் விரும்பிகள் பங்களிப்பு செய்ய முன்வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. மலையகத்தின் எதிர்காலம் சிறப்பதற்கு “ரொசாரியன்ஸ் நிதியம்” அதன் சேவையைத் தொடரும் என்றார்

🏆🌟 ENGLISH DAY COMPETITION 2026 – A PROUD ACHIEVEMENT 🌟🏆We are delighted to celebrate the success of our students at the...
26/06/2026

🏆🌟 ENGLISH DAY COMPETITION 2026 – A PROUD ACHIEVEMENT 🌟🏆

We are delighted to celebrate the success of our students at the Bogawanthalawa Area English Day Competition – 2026.

Our heartfelt congratulations to all the prize winners for their outstanding performances. Your dedication, confidence, and hard work have brought great honour to CP/HZ/Holy Rosary Maha Vidyalayam, Bogawanthalawa.

We extend our sincere gratitude to our Principal for her continuous guidance, encouragement, and unwavering support. A special thank you to our English teachers for their dedication, commitment, and excellent preparation of our students. We also appreciate all the teachers, parents, and well-wishers whose support and encouragement played a vital role in this achievement.

May this success inspire our students to aim even higher and continue striving for excellence.

Congratulations once again to all our winners! We wish you even greater success in your future endeavors. 🎉👏

👍👍🏆🏆🏆👏🔥🔥🔥
15/06/2026

👍👍🏆🏆🏆👏🔥🔥🔥

14/06/2026

2025 GCE O/L Results Expected Next Week
https://1teachmore.lk/2025-gce-o-l-results-to-be-released-next-week/

2025 සාමාන්‍ය පෙළ ප්‍රතිඵල ලබන සතියේ නිකුත් කරනවා - අධ්‍යාපන නියෝජ්‍ය අමාත්‍ය

2025 සාමාන්‍ය පෙළ ප්‍රතිඵල ලබන සතියේ නිකුත් කරනවා - අධ්‍යාපන නියෝජ්‍ය අමාත්‍ය

🍹🎓 க.பொ.த. உயர்தர மாணவர்களின் திறமையை பாராட்டுகிறோம்! 🎓🍹இவ்வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் எமது மனைப...
11/06/2026

🍹🎓 க.பொ.த. உயர்தர மாணவர்களின் திறமையை பாராட்டுகிறோம்! 🎓🍹

இவ்வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் எமது மனைப் பொருளியல் பாட மாணவர்கள், தங்களது செய்முறைப் பரீட்சைக்கான (Practical Examination) பயிற்சியின் ஒரு பகுதியாக இன்று 10 வகையான பழச்சாறுகளை தயாரித்து காட்சிப்படுத்தினர்.

மாணவர்களின் ஆர்வம், படைப்பாற்றல், சுத்தம், ஒழுங்கு மற்றும் தொழில்முறைத் திறன் ஆகியவை உண்மையிலேயே பாராட்டத்தக்கதாக இருந்தன. அவர்கள் தயாரித்த பழச்சாறுகள் மிகவும் சுவையாகவும் தரமானதாகவும் அமைந்திருந்தன.

இந்த செயற்பாடு வெற்றிகரமாக அமைய மாணவர்களை அர்ப்பணிப்புடன் வழிநடத்தி, தேவையான அறிவு மற்றும் பயிற்சிகளை வழங்கிய உயர்தர மனைப் பொருளியல் ஆசிரியர் திருமதி கீதா கௌரி அவர்களுக்கும் எல்லாவகையிலும் உதவியாக இருக்கும் அதிபர் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது அன்பு மாணவர்களுக்கு எதிர்வரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த வெற்றிகளைப் பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் எதிர்கால கல்விப் பயணமும் சிறப்புற அமைய வாழ்த்துகின்றோம். 🌟📚

:::

🌱🌍 உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நோர்வூட் பிரதேச சபையால் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் எமது ஹொலி ரோசரி மகா வித்திய...
10/06/2026

🌱🌍 உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நோர்வூட் பிரதேச சபையால் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் எமது ஹொலி ரோசரி மகா வித்தியாலய மாணவர்கள் சிறப்பான வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

🏆 வெற்றி பெற்ற மாணவர்கள்:

🥇 நிதுர்ஷன் – தரம் 13 – முதலாம் இடம்

🏅 நவீன் – தரம் 13 – ஐந்தாம் இடம்

🥇 ஹரிகேசவ் – தரம் 8 – முதலாம் இடம்

இம்மாணவர்களின் திறமை மற்றும் கடின உழைப்பிற்கு எமது இதயம் கனிந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 💐

மேலும், மாணவர்களுக்கு திறம்பட வழிகாட்டி ஊக்கமளித்த ஆசிரியர் திரு.சிவகுமார் மற்றும் ஆசிரியை கௌசல்யா அவர்களுக்கும், போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கிய எமது பாடசாலையின் அதிபர் அவர்களுக்கும், உப அதிபர்கள் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 🙏

எமது மாணவர்கள் எதிர்காலத்திலும் பல்வேறு துறைகளில் தொடர்ந்தும் சாதனை படைத்து பாடசாலைக்கு மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகின்றோம். 🌟





🎉 கௌரவிப்பு நிகழ்வு – திரு. A. ஜோர்ஜ் வில்சன் அவர்கள் 🎉1990.02.06 அன்று ஆரம்ப கல்வி ஆசிரியராக தனது கல்விச் சேவையைத் தொடங...
10/06/2026

🎉 கௌரவிப்பு நிகழ்வு – திரு. A. ஜோர்ஜ் வில்சன் அவர்கள் 🎉

1990.02.06 அன்று ஆரம்ப கல்வி ஆசிரியராக தனது கல்விச் சேவையைத் தொடங்கிய திரு. A. ஜோர்ஜ் வில்சன் அவர்கள், ஆசிரியர், அதிபர், ஆசிரிய ஆலோசகர் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்து கல்வித் துறைக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி, 2026.06.30 அன்று ஓய்வுபெற உள்ளார்.

அவரது சிறப்புமிக்க மற்றும் முன்மாதிரியான கல்விச் சேவையைப் பாராட்டும் வகையில், எமது ஹோலி ரோசரி மகா வித்தியாலயத்தில் இன்று காலை கூட்டத்தின் போது, அதிபர் அவர்களின் தலைமையில் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் உப அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு, அவருடைய நீண்டகால அர்ப்பணிப்பான சேவைக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

கல்வித் துறையில் அவர் ஆற்றிய அரிய பங்களிப்பிற்காக எமது பாடசாலை சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியையும், ஓய்வுக்காலம் ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

🌹 "உங்கள் அர்ப்பணிப்பான சேவை எப்போதும் கல்வி உலகில் நினைவுகூரப்படும்."

🏆 அகில இலங்கை தமிழ் மொழி தினம் – 2026 🏆ஹட்டன் வலய மட்டப் போட்டிகள்🎵 பிரிவு : 4🎤 நிகழ்ச்சி : தனி இசை🥈 இரண்டாம் இடம்ரா. தக...
06/06/2026

🏆 அகில இலங்கை தமிழ் மொழி தினம் – 2026 🏆

ஹட்டன் வலய மட்டப் போட்டிகள்

🎵 பிரிவு : 4
🎤 நிகழ்ச்சி : தனி இசை
🥈 இரண்டாம் இடம்

ரா. தக் ஷியா

எமது ஹொலி ரோசரி மகா வித்தியாலயத்தின் மாணவி
ரா. தக் ஷியா அவர்கள், அகில இலங்கை தமிழ் மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஹட்டன் வலய மட்டப் போட்டிகளில் தனி இசை நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பெற்றுத் தந்துள்ளமை எமக்கு பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கின்றது.

இம்மாணவியின் சிறப்பான சாதனைக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரை வழிநடத்திய அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் எமது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

🌹 மேலும் பல வெற்றிகளைப் பெற்று உயர வாழ்த்துகள்! 🌹

Holy Rosary Maha Vidyalayam
"Success Through Dedication and Talent" ✨

Address

Balangoda Road
Bogawantalawa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Holy Rosary Maha Vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share