CP/HZ/Campion TMV Bogawantalawa

CP/HZ/Campion TMV Bogawantalawa Official page of CP/HZ/Campion TMV Bogawantalawa 📚🏫✨

11/08/2026
🌿📚🎓 GCE (A/L) SEMINAR – 2026 🎓📚🌿SPONSORED BY🏆 FAIRTRADE CAMPION ESTATE – BOGAWANTALAWA ✨ "கல்விக்கு உயிர் கொடுப்பவன் என்...
29/07/2026

🌿📚🎓 GCE (A/L) SEMINAR – 2026 🎓📚🌿
SPONSORED BY
🏆 FAIRTRADE CAMPION ESTATE – BOGAWANTALAWA

✨ "கல்விக்கு உயிர் கொடுப்பவன் என்றும் மரணிப்பதில்லை;
எமது சமூகம் முன்னேற கல்வியே சிறந்த ஆயுதம்." ✨

📖🌟 தொடர்ந்து 5வது முறையாக, இவ்வருடம் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக, கெம்பியன் தோட்ட நியாய வர்த்தக சங்கத்தின் பூரண அனுசரணையில், கலைப்பிரிவு மற்றும் வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கு நடைபெறுகிறது.
📅 28.07.2026 – 31.07.2026

💐🙏 இந்நிகழ்விற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிய
🏅 கெம்பியன் தோட்ட முகாமையாளர்
🏅 உதவி முகாமையாளர்
🏅 காரியாலய நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
🏅 நியாய வர்த்தக சங்க உறுப்பினர்கள்
🏅 தொழில் புரியும் பெற்றோர்கள்
ஆகிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் இனிய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
🤝🌹 பாடசாலையின்
👨‍🏫 அதிபர்
👨‍🏫 உதவி அதிபர்
📚 பகுதி தலைவர்கள்
👩‍🏫 ஆசிரியர்கள்
🎓 மாணவர்கள்
👨‍👩‍👧‍👦 பெற்றோர்கள்
🏫 பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்
🎖️ பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்
சார்பாக இதயம் கனிந்த நன்றிகளும் நல்வாழ்த்துகளும்!
🌺 "கல்வியில் முதலீடு செய்வது, தலைமுறைகளை உயர்த்தும் உயரிய சேவை." 🌺

எமது பொகவந்தலாவ  பிரதேசத்தின் தங்களின் சேவை மிக சிறப்பானது மனதார வாழ்த்துகின்றோம்... FINANCE நிறுவனத்தின் 70 ஆம் ஆண்டு ப...
24/07/2026

எமது பொகவந்தலாவ பிரதேசத்தின் தங்களின் சேவை மிக சிறப்பானது மனதார வாழ்த்துகின்றோம்...
FINANCE நிறுவனத்தின் 70 ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு சூழலை பாதுகாப்போம் என்ற வகையில் எமது பாடசாலைக்கு மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் எமது பாடசாலையில் இடம்பெற்றது

அத்துடன் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு சிற்றுண்டி ஏற்பாடும் எமது நிறுவனத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டது

70 வருட சேவையை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் இந்நிறுவனத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்

🎓 கெம்பியன் தமிழ் மகா வித்தியாலயத்தில் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா மற்றும் வெண்பலகைகள் கையளிப்பு📍  கெம்ப...
13/07/2026

🎓 கெம்பியன் தமிழ் மகா வித்தியாலயத்தில் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா மற்றும் வெண்பலகைகள் கையளிப்பு

📍 கெம்பியன் தமிழ் மகா வித்தியாலயத்தில், மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும், பழைய மாணவர் சங்கத்தினால் வெண்பலகைகள் கையளிக்கும் நிகழ்வும் 11.07.2026 அன்று பாடசாலை அதிபர் திரு. அ. இராதாகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

🏅 இந்நிகழ்வில் 50 மாணவர்களுக்கு மாணவர் தலைவர்களுக்கான சின்னங்கள் சூட்டப்பட்டன.

🖊️ மேலும், பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் 12 வெண்பலகைகள் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டன.

🎭 மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், மாணவர் தலைவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான சிறப்புரைகளும் இடம்பெற்று நிகழ்விற்கு சிறப்பூட்டின.

👥 இந்நிகழ்வில் அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

📢 மாபெரும் நடமாடும் சேவை🤝 Caritas Kandy – SETIK ஏற்பாட்டில்🏛️ பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஒத்துழைப்புடன்📅 திகதி: 1...
09/07/2026

📢 மாபெரும் நடமாடும் சேவை

🤝 Caritas Kandy – SETIK ஏற்பாட்டில்
🏛️ பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஒத்துழைப்புடன்

📅 திகதி: 10.07.2026 (வெள்ளிக்கிழமை)
🕘 நேரம்: காலை 9.00 மணி முதல்
📍 இடம்: ஹோலி ரோசரி ஆலய மண்டபம், பொகவந்தலாவ

🙏 அனைவருக்கும் அன்பான அழைப்பு!

⛪ பொகவந்தலாவ ஹோலி ரோசரி ஆலயத்தின் பங்குத்தந்தையின் ஏற்பாட்டிலும், 🏛️ பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடனும், 10.07.2026 (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி முதல் ஹோலி ரோசரி ஆலய மண்டபத்தில் மாபெரும் நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.

🤝 Caritas Kandy – SETIK ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு நமது சமூக மக்களின் நலனையும் சேவையையும் முன்னிறுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது.

🌧️ 'டித்வா' புயலால் பாதிக்கப்பட்ட மலையக மக்களின் நலனுக்காகவும் இந்நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📝 வழங்கப்படும் சேவைகள்

✅ பிறப்புச் சான்றிதழ்

✅ இறப்புச் சான்றிதழ்

✅ திருமணச் சான்றிதழ்

🪪 தேசிய அடையாள அட்டை தொடர்பான சேவைகள்

✍️ பெயர் மாற்றம் / பெயர் திருத்தம்

👶 இதுவரை பிறப்புச் சான்றிதழ் பெறாதவர்களுக்கு, தேவையான ஆவணங்கள் இருப்பின் பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகள்

📂 ஏனைய சிவில் பதிவுகள் தொடர்பான சேவைகள்

💯 மேற்கண்ட அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படும்.

📢 இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

📲 இந்த முக்கிய அறிவிப்பை உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்களுடன் பகிர்ந்து அனைவரும் பயன்பெற உதவுங்கள்.

🌟 இவ்வரிய சேவையைத் தவறவிடாதீர்கள்!

🎉 வாருங்கள்... பயன்பெறுங்கள்!

🎓 இன்று, (05.07.2026) எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் 🤝 ஒத்துழைப்புடன், 2020 ஆம் ஆண்டு பழைய மாணவர் தொகுதியின் 💙 ...
06/07/2026

🎓 இன்று, (05.07.2026) எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் 🤝 ஒத்துழைப்புடன், 2020 ஆம் ஆண்டு பழைய மாணவர் தொகுதியின் 💙 அனுசரணையில் உயர்தர மாணவர்களுக்கான 📚 விசேட கருத்தரங்கு வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டது.

👨‍🏫 இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், 👥 பழைய மாணவர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள், 🎓 2020 ஆம் ஆண்டு தொகுதியினர் மற்றும் 👨‍🎓👩‍🎓 மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

💐 மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் நலனையும் கருத்தில் கொண்டு இந்நல்ல செயற்திட்டத்தை முன்னெடுத்த 🌟 2020 ஆம் ஆண்டு பழைய மாணவர் தொகுதியினருக்கு, பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக 🙏 மனமார்ந்த நன்றிகளையும் 💖 பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

✨ "மாணவர்களுக்காக ஒன்றிணையும் பழைய மாணவர்கள் – பாடசாலையின் மிகப்பெரிய பலம்!" ✨

🤍 நன்றி.

🌹🏫 மமா/ஹவ/ கெம்பியன் த.ம.வி – பொகவந்தலாவ 🏫🌹💡⚡ 2002 ஆம் ஆண்டு பழைய மாணவர்களின் உயரிய கல்விப் பணி ⚡💡"ஒளியை வழங்கும் கரங்கள...
03/07/2026

🌹🏫 மமா/ஹவ/ கெம்பியன் த.ம.வி – பொகவந்தலாவ 🏫🌹
💡⚡ 2002 ஆம் ஆண்டு பழைய மாணவர்களின் உயரிய கல்விப் பணி ⚡💡

"ஒளியை வழங்கும் கரங்கள், எதிர்காலத்தை உருவாக்கும் இதயங்கள்!" 🌟

எமது பாடசாலையின் மூன்று மாடி கட்டிடத் தொகுதிக்கு மின்சார இணைப்பை ஏற்படுத்தும் நோக்கில், 2002 ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் மின் இணைப்பிற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் அன்புடன் வழங்கியதுடன், மின்சார இணைப்பு வசதிகளையும் சிறப்பாக செய்து வழங்கியமை எமது பாடசாலையின் வளர்ச்சியில் என்றும் மறக்க முடியாத உயரிய சேவையாகும். 🙏⚡

🙏💐 பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் சார்பாக 2002 ஆம் ஆண்டு பழைய மாணவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும், இனிய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
🌹 "ஒன்றுபட்ட பழைய மாணவர்கள் – உயர்வடையும் பாடசாலை!" 🌹
💖 நன்றி! வாழ்த்துகள்! இறைவன் அருள் என்றும் உங்களோடு இருப்பதாக! 🙏✨

Address

Campion TMV
Bogawantalawa
22060

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 14:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when CP/HZ/Campion TMV Bogawantalawa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category