Past Pupils' Association, BT/BC/Palamunai Ashraff Vidyalaya

Past Pupils' Association, BT/BC/Palamunai Ashraff Vidyalaya “United by Memories, Driven by Service – Past Pupils of Palamunai Ashraff Vidyalaya”

வாய்ப்புகள் நம் கதவைத் தட்டும்போது அதைத் தவறவிடக்கூடாது. முறையான வழிகாட்டல் இன்றித் தவிக்கும் நம் கிராமத்து இளைஞர்களுக்க...
09/12/2025

வாய்ப்புகள் நம் கதவைத் தட்டும்போது அதைத் தவறவிடக்கூடாது. முறையான வழிகாட்டல் இன்றித் தவிக்கும் நம் கிராமத்து இளைஞர்களுக்கு இந்தத் தகவலைப் பகிர வேண்டும் என்ற நோக்கத்தோடு இதனை பதிவிடுகின்றோம்.

சில நிமிடம் செலவழித்து இதனை முழுமையாக வாசித்து உங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு இளைஞர் யுவதியினருக்காவது இதனை தெரியப்படுத்துங்கள். (இதுவும் நாம் செய்ய வேண்டிய ஸதகாக்களில் ஒன்றுதான்)

மாறும் உலகிற்கு ஏற்ற மாறாத மூலதனம்: ஏன் நீங்கள் NVQ தொழிற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

இன்றைய நவீன உலகில், "என்ன படித்திருக்கிறீர்கள்?" என்பதை விட "உங்களுக்கு என்ன தெரியும்?" அல்லது "உங்கள் கையில் என்ன தொழில் இருக்கிறது?" என்பதே மிக முக்கியமான கேள்வியாக மாறிவிட்டது. இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சூழலில், தொழிற்கல்வி (Vocational Education) முன்னெப்போதையும் விட அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

பட்டப்படிப்பு முடித்தும் வேலை கிடைக்காத நிலையை மாற்றி, உடனடி வேலைவாய்ப்பையும், அதிக வருமானத்தையும் பெற்றுத்தரும் ஒரு துறையாக இது மாறியுள்ளது. அதேசமயம் பாடசாலைக் கல்வியை முடித்துவிட்டு, அடுத்து என்ன செய்வது என்று திசை தெரியாமல் நிற்கும் எமது கிராமத்து இளைஞர்களுக்கு, இந்த மண்முனை பிரதேச சபை பயிற்சி நிலையம் வழங்கும் NVQ தொழிற்பயிற்சி நெறிகள் ஒரு வரப்பிரசாதமாகும்.

ஏன் இந்தப் பயிற்சியில் இணைய வேண்டும்? இதோ அதற்கான 5 முக்கிய காரணங்கள்:

1. NVQ எனும் சர்வதேச கடவுச்சீட்டு (Global Recognition)
NVQ (National Vocational Qualification) என்பது சாதாரண சான்றிதழ் அல்ல. இது இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழில் தகைமைச் சான்றிதழ்.
இன்று மத்திய கிழக்கு நாடுகள் முதல் ஐரோப்பிய நாடுகள் வரை (Middle East to Europe), வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும்போது அவர்கள் எதிர்பார்ப்பது இந்த NVQ சான்றிதழைத் தான்.
எனவே, இது உள்ளூர் அரச வேலைவாய்ப்புகளுக்கு மட்டுமல்ல, வெளிநாட்டு கனவுகளுக்கும் ஒரு திறவுகோலாகும்.

2. உடனடியாக வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும் துறைகள்
இங்கு வழங்கப்படும் பாடநெறிகள் எவையும் காலாவதியானவை அல்ல; இன்றைய சந்தையில் அதிக தேவையுள்ளவை.
Nurse Assistant (தாதியர் உதவியாளர்): உலகம் முழுவதும் முதியோர் பராமரிப்பு மற்றும் மருத்துவத் துறைக்கு ஆட்கள் தேவை அதிகம். இத்துறையில் NVQ Level 3/4 முடித்தவர்களுக்குச் சம்பளம் மற்றும் சமூக அந்தஸ்து இரண்டுமே அதிகம்.
ICT & Hardware Technician: கணினி இல்லாத இடமே இல்லை என்றாகிவிட்டது. அலுவலகங்கள், வங்கிகள் முதல் பாடசாலைகள் வரை கணினி தொழில்நுட்பவியலாளர்களுக்கான தேவை எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.

3. சுயதொழில் மூலம் தலைநிமிரும் வாய்ப்பு
எல்லோரும் வேலை தேடி அலைவதை விட, வேலை கொடுப்பவராக மாறுவதே சிறந்தது.
Graphic Designing மற்றும் Hardware Technician போன்ற பயிற்சிகளை முடிப்பதன் மூலம், நீங்கள் யாருடைய சிபாரிசுக்கும் காத்திருக்க வேண்டியதில்லை. சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கலாம் அல்லது வீட்டில் இருந்தபடியே 'Freelancing' மூலம் வருமானம் ஈட்டலாம். உங்கள் உழைப்பிற்கு நீங்களே ராஜா!

4. உயர்கல்விக்கான மாற்றுப் பாதை
பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று கவலைப்படத் தேவையில்லை. NVQ முறைமையானது உங்களை டிப்ளோமா (Diploma), அதனைத் தொடர்ந்து பட்டப்படிப்பு (Degree - NVQ Level 7) வரை கொண்டு செல்லும் ஒரு நேரடிப் பாதையாகும். O/L முடித்த ஒரு மாணவன், இந்தப் பயிற்சியின் மூலம் எதிர்காலத்தில் ஒரு பட்டதாரியாக மாற முடியும்.

5. எட்டக்கூடிய தூரத்தில் ஓர் அரிய வாய்ப்பு
பொதுவாக இத்தகைய தரமான பயிற்சிகளைப் பெற நகரங்களுக்குச் சென்று, அதிக பணம் செலவழிக்க வேண்டும். ஆனால், எமது பிரதேச சபையானது, ஆரையம்பதி மண்ணிலேயே இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

குறைந்த செலவில் அல்லது அரச அனுசரணையுடன், வீட்டிற்கு அருகிலேயே தங்கிப் படிக்கும் வசதி இருக்கும்போது, அதைத் தவறவிடுவது புத்திசாலித்தனமல்ல.

மேற்படி பயிற்சி நெறிக்கு 16 வயதிற்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் இருபாலாரும் பங்கு பெற்ற முடியும். இதற்கான குறிப்பிட்ட விண்ணப்ப படிவங்கள் எதுவும் கிடையாது. மாறாக இதில் இணைய விரும்புவர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதனூடாக தெரிவு செய்யப்படுவார்கள். அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நேர்முகத் தேர்வு விபரங்கள்:
📅 திகதி: 16, 17, 18 டிசம்பர் 2025
🕘 நேரம்: காலை 08:30
📍 இடம்: மண்முனை பிரதேச சபை பயிற்சி நிலையம், ஆரையம்பதி.

🎉 கல்வி வளர்ச்சியே நமதூரின் எழுச்சி! – ஒரு திருப்திகரமான ஆரம்பம்! 🎉அல்ஹம்துலில்லாஹ்! நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக, ப...
24/10/2025

🎉 கல்வி வளர்ச்சியே நமதூரின் எழுச்சி! – ஒரு திருப்திகரமான ஆரம்பம்! 🎉

அல்ஹம்துலில்லாஹ்! நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக, பாலமுனை மண்ணின் கல்வி மறுமலர்ச்சிக்கான முதல் வித்து நேற்று (23.10.2025) விதைக்கப்பட்டுள்ளது!
"கல்வி வளர்ச்சியே நமதூரின் எழுச்சி" என்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்ட சிறப்பான கருத்தரங்கு நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு பாலமுனை அலிகார் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு மத்தி வலய ஆசிரிய ஆலோசகர் எம். ஆர். ஜவாத் அவர்களின் சிறப்புத் தலைமையில், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம். எம். ஜவாத் (நளிமி) அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வு, பாலமுனை அலிகார் மகா வித்தியாலய மற்றும் பாலமுனை அஷ்ரப் வித்தியாலய பழைய மாணவர் சங்கங்களின் இணைந்த ஏற்பாட்டில், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியாக அமைந்தது.

கல்வி மீதான நமது சமூகத்தின் அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக, பல பள்ளிவாயல் தலைவர்கள், விளையாட்டுக்கழக பிரதிநிதிகள், சமூக சேவை அமைப்புகளின் உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் திரண்டு வந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.

இரு பாடசாலைகளின் அதிபர்களும் ஆசிரியர் வெற்றிடங்கள், கட்டிடத் தேவைகள் மற்றும் பௌதீக வளத் தேவைகள் குறித்த கோரிக்கைகளை முன்வைக்க, பொதுமக்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து, சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டனர். இது பாலமுனை மண்ணில் கல்வி விழிப்புணர்வுக்கான ஒரு வலிமையான ஆரம்ப அடித்தளமாக அமையும் என்ற பெரும் நம்பிக்கை பிறந்துள்ளது.

இந்த உன்னத நிகழ்வு சிறப்பாக அமைவதற்கு உடல், பொருள், ஆலோசனை என பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், முக்கியமாக பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்து ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்த மதிப்புக்குரிய வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களுக்கும், இதனை தலைமையேற்று வழிநடத்திய ஆசிரிய ஆலோசகர் அவர்களுக்கும், அனுமதி வழங்கி உதவிய பாடசாலை நிர்வாகத்திற்கும், தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட இரு பாடசாலைகளின் அதிபர்களுக்கும், முழு ஒத்துழைப்பையும் நல்கிய பாலமுனையின் இரு பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கத்திற்கும், அழைப்பினை ஏற்று சமூகத்தின் அனைத்துப் பிரிவினராய் திரண்டு வந்த அனைத்துப் பொது மக்களுக்கும், எதிர்பாராத சிரமங்களுக்கு மத்தியிலும், நிகழ்வு சிறப்புற உடலாலும் பொருளாலும் உழைத்த பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும் பாலமுனை அஷ்ரப் வித்தியாலய பழைய மாணவர் சங்கம் சார்பாக எமது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்!

இன்ஷா அல்லாஹ், இந்த ஆரம்ப அடித்தளத்தில் ஒரு வலிமையான கல்வி சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் கைகோர்ப்போம்!



🕌 இறுதி அழைப்பு: கல்வியை நோக்கிய நம் சமூகத்தின் போராட்டம்!🚨 இன்றே இறுதி அறிவிப்பு! 🚨அன்பார்ந்த பாலமுனை வாழ் முஸ்லிம் சமூ...
23/10/2025

🕌 இறுதி அழைப்பு: கல்வியை நோக்கிய நம் சமூகத்தின் போராட்டம்!

🚨 இன்றே இறுதி அறிவிப்பு! 🚨

அன்பார்ந்த பாலமுனை வாழ் முஸ்லிம் சமூகமே!

நமது மார்க்கம் 'இக்ரா (ஓதுவீராக!)' என்றே முதல் கட்டளையை நமக்கு இட்டது. நாளை மறுமையில் நம் பிள்ளைகளைப் பற்றி விசாரிக்கப்படும்போது, அவர்களின் கல்விக்காக நாம் என்ன செய்தோம் என்ற கேள்விக்கு, நம்மிடம் பதில் இருக்க வேண்டும் அல்லவா?..

"கல்வி வளர்ச்சியே நமதூரின் எழுச்சி" என்ற இலக்கை அடைவதற்கும், நமது வாரிசுகளை உலக, மறுமை வாழ்வுக்குத் தகுதியானவர்களாக வளர்ப்பதற்கும் ஒரு மகத்தான வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது!

தவிர்க்க முடியாத காரணத்தால் நேற்று நடைபெறவிருந்த கருத்தரங்கு, இன்று (வியாழக்கிழமை) மாற்றப்பட்டுள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறோம்.

ஒரு தந்தை/தாயின் மிக முக்கிய பொறுப்பு தன் பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியை வழங்குவதே. இந்தப் பொறுப்பை எப்படிச் செவ்வனே நிறைவேற்றுவது என்று நிபுணர்கள் வழிகாட்ட உள்ளார்கள். ஒரு சமூகம் முன்னேற வேண்டுமானால், அது அறிவிலும் கல்வியிலுமே உயர்ந்து நிற்க வேண்டும். நமக்கான பாதையை நாம் இன்று கூட்டாகத் தீர்மானிப்போம். கல்விக்காக நாம் அனைவரும் ஒரு அணியில் திரள்வது, சமூக ஒற்றுமைக்கான ஓர் அடையாளமாகும்.

நிகழ்வு விவரங்கள்:
* இன்று!!
* 🗓️ திகதி: 23.10.2025 (வியாழக்கிழமை)
* ⏰ நேரம்: பி.ப 3.30 மணி (அஸர் தொழுகையைத் தொடர்ந்து)
* 📍 இடம்: பாலமுனை அலிகார் மகாவித்தியாலய கேட்போர் கூடம்

தயவுசெய்து வாருங்கள்! உங்கள் பிள்ளைகளின் பிரகாசமான எதிர்காலத்துக்காக இறைவனிடம் பிரார்த்தித்தவர்களாக, அறிவுத் தேடலுக்காக இந்த நேரத்தில் ஒன்று கூடுவோம்.

ஏற்பாடு:
பாலமுனை அலிகார் மகாவித்தியாலய மற்றும் பாலமுனை அஷ்ரப் வித்தியாலய பழைய மாணவர் சங்கம்

📢 நிகழ்வுத் திகதியில் மாற்றம்!எமது பாலமுனை மண்ணில் ஊர் தழுவிய ரீதியில் நடக்கவிருந்த கல்வி விழிப்புணர்வுக் கருத்தரங்கின் ...
21/10/2025

📢 நிகழ்வுத் திகதியில் மாற்றம்!

எமது பாலமுனை மண்ணில் ஊர் தழுவிய ரீதியில் நடக்கவிருந்த கல்வி விழிப்புணர்வுக் கருத்தரங்கின் திகதி மாற்றப்பட்டுள்ளது.

❌ பழைய திகதி: 22.10.2025 (புதன்கிழமை)
✅ புதிய திகதி: 23.10.2025 (வியாழக்கிழமை)
⏰ நேரம்: பி.ப 3.30 மணி (அஸர் தொழுகையைத் தொடர்ந்து)
📍 இடம்: பாலமுனை அலிகார் மகாவித்தியாலய கேட்போர் கூடம்

தவிர்க்க முடியாத காரணங்களால் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்காக வருந்துகிறோம். மாற்றப்பட்ட திகதியில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
ஏற்பாட்டுக் குழு



நமது குழந்தைகளின் எதிர்காலம் நம் கையில் !."எங்கள் பிள்ளைகளின் கனவுகள் கருகிவிடக் கூடாது!" - ஆம், இது ஒரு சவால்!எமது பாலம...
19/10/2025

நமது குழந்தைகளின் எதிர்காலம் நம் கையில் !.

"எங்கள் பிள்ளைகளின் கனவுகள் கருகிவிடக் கூடாது!" - ஆம், இது ஒரு சவால்!

எமது பாலமுனையின் மண், அறிவாளிகளை ஈன்ற மண். ஆனால், இன்று நமது குழந்தைகளின் கல்விப் பாதையில் எழும் சவால்கள், அவர்களின் எதிர்காலக் கனவுகளை அணைத்து விடுமோ என்ற அச்சம் நம் அனைவர் மனதிலும் உதிக்கின்றது.

இந்த அச்சத்தைப் போக்கவும், நம் சமூகத்தின் கல்வித் தாகத்திற்குப் புத்துயிர் அளிக்கவும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை பாலமுனை அலிகார் மகாவித்தியாலய மற்றும் பாலமுனை அஷ்ரப் வித்தியாலய பழைய மாணவர் சங்கம் என்பன எடுத்துள்ளோம்.

"கல்வி வளர்ச்சியே நமதூரின் எழுச்சி" என்ற தூரநோக்கோடு, எமது பாலமுனை மண்ணில் மாபெரும் கல்வி விழிப்புணர்வு மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது நமது சமுதாயத்தின் கல்விப் போராட்டத்திற்கான ஒரு திருப்புமுனையாக அமைய வேண்டும் ..!

ஒரு பெற்றோர் அல்லது பாதுகாவலராக, உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உங்கள் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவதிலுள்ள சந்தேகங்கள் மற்றும் சிக்கல்களை தீர்த்துக்கொள்ளவும் அதேபோன்று எமது ஊரில் கல்வி மறுமலர்ச்சிக்கான ஆலோசனைகளையும் உங்களால் வழங்க முடியும்.

இன்ஷா அல்லாஹ், நாம் அனைவரும் இணையும்போது, எந்தத் தடையும் நம் பிள்ளைகளைத் தடுக்க முடியாது!

🎤 தலைமை: MR. ஜவாத் BA (ஆசிரிய ஆலோசகர், மட்டக்களப்பு மத்தி வலயம்)

🎤 பிரதம அதிதி: MM. ஜவாத் (நளிமி) SLEAS (வலயக் கல்விப் பணிப்பாளர், மட்டக்களப்பு மத்தி வலயம்)

🗓️ திகதி: 22/10/2025 (புதன்கிழமை)
⏰ நேரம்: பி.ப 3.30 மணி (அஸர் தொழுகையைத் தொடர்ந்து)
📍 இடம்: பாலமுனை அலிகார் மகாவித்தியாலய கேட்போர் கூடம்

கல்விக்காக நீங்கள் செலவிடும் இந்த இரண்டு மணி நேரம், உங்கள் குழந்தையின் வாழ்வின் திசையை மாற்றியமைக்கும்! தயவுசெய்து உங்கள் இதயம் நிறைந்த ஆர்வத்துடன் வாருங்கள். நமது அடுத்த தலைமுறையை நாமே உருவாக்கும் புனிதப் பணி இது!
நமது குழந்தைகளின் எதிர்காலக் கனவுகளுக்காக, ஒளியேற்றி வைக்க ஒன்று கூடுவோம்!

#️⃣ ஏற்பாடு:
பாலமுனை அலிகார் மகாவித்தியாலய மற்றும் பாலமுனை அஷ்ரப் வித்தியாலய பழைய மாணவர் சங்கம்



மட்/மம/பாலமுனை அஷ்ரப் வித்தியாலயத்தின் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவன் எம்.எப்.எம். பாயிக் அவர்கள், சூழலில் கிடைக்க...
15/10/2025

மட்/மம/பாலமுனை அஷ்ரப் வித்தியாலயத்தின் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவன் எம்.எப்.எம். பாயிக் அவர்கள், சூழலில் கிடைக்கும் கழிவுப்பொருட்களைக் கொண்டு, குறைந்த செலவில், எளிமையான வடிவிலான ஒரு நுணுக்குக்காட்டியை (Microscope) உருவாக்கியிருப்பது சம்பந்தமான பதிவை ஏற்கனவே எமது முகநூல் பக்கத்தில் பதிவேற்றி இருந்தோம்.

பாயிக்கின் இந்த முயற்சியை ஊக்கப்படுத்தி, வழிகாட்டிய பாடசாலை அதிபர் எம்.ஏ.எம். பரீட் அவர்களுக்கும், விஞ்ஞான பாட ஆசிரியர் ஏ.எம்.எம். ஸாகிர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு இந்தச் சிறப்பான செய்தியைத் தமது தளங்களில் வெளியிட்டு, மாணவனின் உழைப்பை உலகறியச் செய்த "Sky Tamil News" மற்றும் "தமிழன் பத்திரிகை (14.10.2025)" ஆகிய ஊடகங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இத்தருணத்தை ஏற்படுத்தி, இந்த மாணவ கண்டுபிடிப்பை அழகாக நெறிப்படுத்தித் தந்த காத்தான்குடியை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.பஹத் ஜுனைட் (Fahad Junaid) அவர்களுக்கு எங்கள் சமுதாயத்தின் சார்பில் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்! உங்களைப் போன்றவர்களின் ஆதரவே பாயிக் போன்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு பெரிய உந்துசக்தியாக அமையும். பாயிக்கின் எதிர்பார்ப்பின்படி, இந்த எளிய நுணுக்குக்காட்டி கல்வி அமைச்சரின் இளம் கண்டுபிடிப்பாளர் ஊக்கப்படுத்தல் திட்டத்தின் ஊடாக ஏனைய பாடசாலைகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று நாங்களும் வாழ்த்துகிறோம்.

"SKY Tamil news" video link:
https://www.facebook.com/share/v/1EpaSbS7X9/

இது குறித்து தமிழன் பத்திரிகையில் வெளியான செய்தித் துணுக்கானது இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.



பண்படுத்துவது என்பது புண்படுத்துதல் அல்ல..."மாணவன் தவறு செய்தால் அடிக்கக் கூடாது, திட்டவும் கூடாது, மனம் புண்படும் படி ப...
06/10/2025

பண்படுத்துவது என்பது புண்படுத்துதல் அல்ல...

"மாணவன் தவறு செய்தால் அடிக்கக் கூடாது, திட்டவும் கூடாது, மனம் புண்படும் படி பேசவும் கூடாது.. "
எனில்...

படிக்குமாறு அறிவுறுத்தக் கூடாது, ஒழுக்கத்தை வலியுறுத்தக் கூடாது, இது எதுவுமே மாணவனுக்கு பிடிக்காது, மாணவன் மனம் புண்படும்..

எனில் ஆசிரியரின்( பெற்றோரின் ) வேலை தான் என்ன...?

கற்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் - இங்கு சிற்பங்கள் எப்படி கிடைக்கும்...?

நிலங்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் - இங்கு விளைச்சல் எப்படி கிடைக்கும்...?

தங்கத்தை நெருப்பில் இடாதே என்று சொன்னால் - தங்க ஆபரணங்கள் எப்படி கிடைக்கும்...?

புரிதல் வேண்டும்...

பண்படுத்துவது என்பது - புண்படுத்துவது அல்ல என்ற புரிதல்
மாணவர்களுக்கு மட்டுமல்ல - மற்றவர்களுக்கும் வேண்டும்...!

ஒரு பச்சிளம் குழந்தைக்கு ஊசி போடுகிறார் மருத்துவர்...
குழந்தைக்கு வலிக்கும் இது தவறு என்று அவரிடம் சொன்னால் குழந்தை நலமுடன் வாழ்வது எப்படி...?

ஒரு வீட்டில் குழந்தையின் கைகளை தந்தை பிடிக்க, கால்களை மாமா பிடிக்க.. தலையை அசைக்காமல் பாட்டி அழுத்தி பிடிக்க, குழந்தைக்கு பிடிக்காத கசப்பு மருந்தை தாய் தருகிறாள்...

குழந்தையின் மீது செலுத்தப்படும் எவ்வளவு மோசமான வன்முறை இது... அவர்களுக்கான தண்டனை என்ன...?

குழந்தையின் நலன்கள் இரண்டு..
உடல் நலன்...
உள்ள நலன்...

உடல் நலனுக்காக இயங்கும் மருத்துவத்துறையின் கைகளை...
"ஊசி குழந்தைக்கு வலிக்கும், மருந்து குழந்தைக்கு கசக்கும், அறுவை சிகிச்சை அதை விட வலிக்கும்... எனவே எல்லாவற்றையும் தவிர்த்து
குழந்தைக்கு மனம் நோகாமல் அறிவுரை மட்டும் கூறி அனுப்புங்கள்" என்று சொல்வீர்களா...?

மருத்துவ துறையின் கைகள் கட்டப்பட்டால், உடல் நலன் ஒழிந்தது என்று அர்த்தம்...

புரிதல் வேண்டும்...

அதே போல...
உள்ள நலனுக்கானது தான் - கல்விக்கூடங்கள்...
அது கூடாது, இது கூடாது என்று இங்கே கற்பிப்பவரின் கையும், சுய சிந்தனை உணர்வும் கட்டப்பட்டுவிட்டன...

விளைவு - நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு கல்விக்கூடம் மூடப்பட்டால் - அது நூறு சிறைச்சாலைகள் திறப்பதற்கு சமம்.

மூடும் அளவிற்கு அதிக சிரமம் வேண்டாம்...
ஆசிரியரின் உடலும், உள்ளமும், கைகளும் கட்டப்பட்டாலே போதும்...
மாணவன் ஆசிரியரால் திருத்தப்படாவிட்டால்,காவலர்களின் அடியால் திருந்த வேண்டும் அல்லது சிறைச்சாலைக்குத்தான் செல்ல வேண்டும்.

சிந்தியுங்கள் பெற்றோர்களே..….!

மனம் நொந்து போயுள்ள ஆசிரிய சமுதாயம் சார்பாக.

சமுதாய வளர்ச்சிக்காக பெரும் சேவையாற்றிக் கொண்டிருக்கும், மாணவர்களை தன் பிள்ளைகள் போல் நினைத்து கற்பிப்பதுடன், அவர்களை சிறந்த முறையில் வழிநடாத்தி, அவர்களை ஓர் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற இலட்சியத்திற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் நல்லுள்ளம் கொண்ட ஒவ்வொரு ஆசிரிய / ஆசிரியைகளுக்கும் இப்பதிவு சமர்ப்பணம்.

(Copied post)



02/10/2025

விழிப்புணர்வு பதிவு: 01

பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரின் பங்கு

நம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பினால் மட்டும் போதாது!

" உங்கள் பிள்ளையின் கல்வி வெற்றிக்கு, நீங்கள் பாடசாலையை விடவும் முக்கியமானவர்கள் "



01/10/2025

" நமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் ஒழுக்கமிகு சமூகத்தை கட்டியெழுப்பவும் ஊர் மக்கள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கைகோர்ப்போம்!. ."



உலகெங்கிலும் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்! 👭👬👭ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனித்துவமான திறம...
01/10/2025

உலகெங்கிலும் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்! 👭👬👭
ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனித்துவமான திறமை கொண்டது. அவர்களின் கனவுகள் மெய்ப்பட நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம்.
குழந்தைமையின் மகிழ்ச்சியையும், குறும்புத்தனத்தையும் கொண்டாடும் இந்த நாளில், நம் உள்ளத்திலும் குழந்தைமை உணர்வு என்றும் வாழட்டும்!
இந்த சிறப்புமிக்க நாளில், உங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக மாற்றுங்கள்.

அனைத்து குழந்தைகளுக்கும் மீண்டும் ஒருமுறை குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

Happy Children's Day to all the children around the world!
Every child is a unique talent. Let's all be supportive so their dreams come true.
On this day that celebrates the joy and innocence of childhood, may the childlike spirit always live within our hearts!
On this special day, spend time with your children. Do things they love and make this day even more special.

Happy Children's Day once again to all the children!



Address

Hizbullah Road, Palamunai/10, Arayampathy
Batticaloa
30158

Website

Alerts

Be the first to know and let us send you an email when Past Pupils' Association, BT/BC/Palamunai Ashraff Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category