Past pupils association-Palamunai Ashraf Vidyalayam

Past pupils association-Palamunai Ashraf Vidyalayam கற்க கசடற கற்க

அன்புள்ள பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும்,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹுஒரு வருடகா...
25/09/2025

அன்புள்ள பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

ஒரு வருடகாலத்திற்கும் மேலாக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நமது பாலமுனை அஷ்ரப் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் இயங்காமல் இருந்ததை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

இந்த சிரமத்திற்கு வருந்துகிறோம். இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக, புதிய முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்.

இனிவரும் காலங்களில், சங்கத்தின் அனைத்து அறிவிப்புகளும், நிகழ்வுகளும், புகைப்படங்களும் இந்த புதிய பக்கத்திலேயே பகிரப்படும். நமது ஒற்றுமையையும், பாடசாலை மற்றும் கல்வி மீதான அன்பையும் வெளிப்படுத்த, இந்தப் புதிய பக்கத்தைப் பின்தொடர்ந்து (follow) ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புதிய பக்கத்தின் இணைப்பு:
https://www.facebook.com/profile.php?id=61581467065500

நன்றி!
பழைய மாணவர் சங்கம்,
பாலமுனை அஷ்ரப் வித்தியாலயம்.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூஇன்று எமது பாடசாலையில் நடைபெற்ற 2001 scholar...
31/05/2024

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ

இன்று எமது பாடசாலையில் நடைபெற்ற 2001 scholarship batch இனால் கடந்த பழைய மாணவர் சங்க ஒன்று கூடலில் பொறுப்பெடுக்கப்பட்ட 120000 ரூபாய் பெறுமதிமிக்க 50 பிளாஸ்டிக் கதிரைகள் பாடசாலை அதிபர் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது.

இதில் பாடசாலை அதிபர் அவர்களும் ஆசிரியர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் எமது பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் 2001 scholarship வகுப்பு மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவ் உதவியை வழங்கிய 2001 scholarship வகுப்பு மாணவர்களுக்கு எமது பழைய மாணவர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூஇன்று எமது பாடசாலையில் நடைபெற்ற 2002 scholar...
01/03/2024

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ

இன்று எமது பாடசாலையில் நடைபெற்ற 2002 scholarship batch இனால் கடந்த பழைய மாணவர் சங்க ஒன்று கூடலில் பொறுப்பெடுக்கப்பட்ட க/பொ/த சாதாரண தர மாணவர்களுக்கான கடந்த கால பரீட்சை வினாத்தாள் பத்திரங்களும் 25 கதிரைகளும் பாடசாலை அதிபர் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது.

இதில் பாடசாலை அதிபர் அவர்களும் ஆசிரியர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் எமது பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் 2002 scholarship வகுப்பு மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவ் உதவியை வழங்கிய 2002 scholarship வகுப்பு மாணவர்களுக்கு எமது பழைய மாணவர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Album 📸⭐♥️
21/01/2024

Album 📸⭐♥️

பழைய மாணவர் சங்க ஒன்று கூடலின் போது எடுக்கப்பட்ட வகுப்பு ரீதியான புகைப்படங்களின் போது....
21/01/2024

பழைய மாணவர் சங்க ஒன்று கூடலின் போது எடுக்கப்பட்ட வகுப்பு ரீதியான புகைப்படங்களின் போது....

Address

Hisbullah Road, Palamunai-11, Arayampathy
Batticaloa
30150

Website

Alerts

Be the first to know and let us send you an email when Past pupils association-Palamunai Ashraf Vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category