Kashi Media

Kashi Media Education

31/08/2026
அவசர உதவி கோரல் 🚨🙏கடந்த ஜூன் மாதம் 2ம் திகதி குடும்ப வறுமை காரணமாக ஏதோவொரு வழியில் ஐரோப்பிய நாடொன்றை அடைந்துவிட வேண்டும்...
07/08/2026

அவசர உதவி கோரல் 🚨🙏

கடந்த ஜூன் மாதம் 2ம் திகதி குடும்ப வறுமை காரணமாக ஏதோவொரு வழியில் ஐரோப்பிய நாடொன்றை அடைந்துவிட வேண்டும், குடும்ப சூழலை தரமுயர்த்த வேண்டும் எனும் எண்ணத்துடன் பயணப்பட்ட மட்டக்களப்பை சேர்ந்த 22 வயதான யுவராஜா ஜூட்யுனிஷ்டன் பெலாரஸ் (Belarus) நாட்டு எல்லையில் சடலமாக மீட்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.

தாயின் அரவணைப்பில் வாழ்ந்த மகனை இழந்து அவனது உடலை நாட்டுக்கு கொண்டுவர கடந்த இரண்டு மாதங்களாக தாய் நண்பர்கள், உறவினர்களின் உதவியுடன் போராடி வருகின்றார். பல போராட்டங்களின் பின்னர் நாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அதற்கான நிதி திரட்டுதலில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குறித்த இளைஞனின் நண்பர் ஒருவரினூடாக அறியக்கிடைத்தது.

இலங்கை பெறுமதியின் படி இருபத்தியொரு 21 இலட்சத்து 27,780 ரூபாய் (2,127,780) தேவைப்பட்டதாகவும், அதில் நண்பர்கள், உறவுகளின் உதவியுடன் சுமார் 15 லட்சம் ரூபாயை திரட்டியுள்ளதாகவும், மீதமுள்ள சுமார் 6 லட்சம் ரூபாய் தேவையாகவுள்ளதாகவும் இளைஞனின் நண்பரினூடாக அறியக்கிடைத்தது.

உடனடியாக பணத்தினை செலுத்தினால் விரைவில் உடலத்தை நாட்டுக்கு கொண்டு வர முடியும் என அந்நாட்டு அதிகாரிகளினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் காலம் தாமதிக்க முடியாது எனவும் விரைவில் பணத்தினை செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

ஏற்கனவே உயிரிழந்த சோகத்தில் வாடும் தாயின் ஆசையான இறுதியாக மகனின் முகத்தை பார்க்க வேண்டும், இறுதி கிரியைகளை மேற்கொள்ள வேண்டும் ஆதங்கத்தை உணர்ந்தவனாகவே இந்த பதிவு.

முடியுமானோர் உங்களால் இயன்ற சிறுதொகையை அவரது தாயாரின் வங்கி கணக்கிற்கு வைப்பிலிடுமாறும், மனமிருந்தும் முடியாத நல்லுள்ளங்கள் இந்த பதிவை விரைவாக பகிர்ந்து உங்களது ஒத்துழைப்பை வழங்குமாறும் உரிமையோடு இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

தாயாரின் வங்கி கணக்கு விபரம் :

Y.vergini
8909960
Bank of Ceylon
Kallady
Batticaloa

தொடர்புக்கு :

இளைஞனின் உடன்பிறவா சகோதரன் +94785881853

#குறிப்பு : ஆபத்தான பாதையை குடும்ப சூழ்நிலை கருதி தேர்ந்தெடுக்கும் இளைஞர்கள் தயவுசெய்து உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்நாள் சோகத்திற்கு உள்ளாக்கு விடாதீர்கள் என்று தயவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Address

Batticaloa

Telephone

+94777110004

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kashi Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share