B/Craig T.M.V

B/Craig T.M.V

Share

This is our official page

15/01/2025

.அன்புடையீர்,
எமது பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சுமார் 105000 ரூபா பெறுமதியான ஒலிபெருக்கி கருவிகளை அன்பளிப்பாக வழங்கிய 2000-2003 வரையான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பிரிவு பழைய மாணவர்களுக்கு பாடசாலை சமூகம்
சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எம் மாணவர்களின் தேவையறிந்து செய்த இவ் அளப்பரிய உதவி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். மேலும் இவ் உதவியை வழங்கிய பழைய மாணவர்களின் பெற்றோர்கள், குடும்ப அங்கத்தவர்கள், நிறுவன ஊழியர்கள். மற்றும் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவனின் பூரண அருளாசிகள் கிட்ட பாடசாலை சமூகம் சார்பாகவும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

01/12/2023

Congratulation to Midhurshana who got 9A in G.C.E ( O/L)

24/10/2023

Congratulation teachers those who are selected to the principal service from our school.

N.Vimaleason
R.Sendhil Pragash
S.Sivayogamathi
S.Ushanandhini
S.Nishanthini

28/07/2023

எமது பாடசாலையில் 2016 டிசம்பர் மாதம் முதல் அதிபராக கடமையாற்றிய திரு.வி.விவேகானந்தன் அவர்கள் 2023.07.27 அன்று இப்பாடசாலையில் இருந்து இடமாற்றம் பெற்று வெளிமடை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபராக தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இவர் அதிபராக கடமையாற்றிய காலகட்டத்தில் பாடசாலையில் வளர்ச்சிக்கென பல செயற்றிட்டங்களை மேற்கொண்டார். அவற்றுள் சில

13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வி நிகழ்ச்சி திட்டத்தினை பாடசாலையில் நடைமுறைப்படுத்தபட்டது மற்றும் அதற்கென சகல வசதிகளுடன் கூடிய தொழினுட்ப கூடம் மற்றும் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டது.

பாடசாலையில் tab unit ஆரம்பிக்கப்பட்டு tabs ஊடாக கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை

பாடசாலையில் SMART BOARD வசதிகளுடன் கூடிய 5 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டது

CCTV கட்டமைப்பினூடாக பாடசாலையின் பாதுகாப்பை உறுதிபடுத்தப்பட்டது.

பாடசாலையின் காரியாலயம் திறன் வகுப்பறைகள் மற்றும் தொழினுட்ப ஆய்வுகூடம் ஆகியவற்றிற்கான இணையதள வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

பாடசாலை பிரதான மண்டபம் புணரமைக்கப்பட்டது.

பாடசாலை மைதானத்திற்கு அருகாமையில் காணப்பட்ட நீர் ஊற்றினை சீரமைத்து பாடசாலைக்கு நீர் வசதி பெற்றுக் கொடுக்கப்பட்டது

நடனத்துறை மற்றும் இசை துறையில் பல்கலைகழத்திற்கு இரு மாணவிகள் தெரிவு செய்யப்பட்டனர்

வரலாற்றில் முதன் முறையாக தேசிய உற்பத்திதிறன் போட்டியில் தேசிய ரீயியில் 3ம் இடம் பெறப்பட்டது.

வரலாற்றில் முதன்முறையாக பாடசாலை கரப்பந்தாட்ட அணிகள் கோட்டமட்ட வலய மட்ட போட்டிகளில் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவானது

வரலாற்றில் முதன்முறையாக பாடசாலையின் 80 வருட நிறைவை முன்னிட்டு பாடசாலை பரிசளிப்பு விழா மாகாண ஆளுனரின் பங்கேற்புடன் பண்டாரவளை இந்து கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.

வரலாற்றில் முதன்மறையாக பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிக்கான சுவட்டு மற்றும் மைதான போட்டிகள் அனைத்தும் பண்டாரவளை நகரசபை மைதானத்தில் இடம்பெற்றமை.

அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டிகளில் பல துறைகளில் தேசிய ரீதியில் முதலாம் இடம் பெறப்பட்டது.

Photos from B/Craig T.M.V's post 28/07/2023

கிரேக் தமிழ் மகா வித்தியாலத்தின் 96ம் ஆண்டு க.பொ.த.சதாரண தர மாணவர்களால் 2023 ம் ஆண்டு இடம் பெற்ற கோட்டமட்ட மற்றும் வலயமட்ட கரப்பந்தாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு மற்றும் அம்மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு என்பன 2023.07.27 ம் அன்று பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் 96ம் ஆண்டு கல்விகற்ற பழைய மாணவர்கள் கோட்டக்கல்வி காரியாலத்தின் விளையாட்டு ஆசிரிய ஆலோசகர் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Photos from Civil Engineering's post 19/03/2023
Photos from B/Craig T.M.V's post 04/02/2023

Independents day at craig t.m.v

Photos from B/Craig T.M.V's post 27/12/2022

அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டியில் வீணை வாசித்தலில் முதலாம் இடத்தை பெற்ற மாணவன் மற்றும் 3ம் இடத்தை பெற்ற மாணவி ஆகியோருக்கும் பயிற்றுவித்த ஆசிரியருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்

Photos from B/Craig T.M.V's post 24/12/2022

OLI VIZHA 2022

Photos from B/Craig T.M.V's post 18/12/2022

பாடசாலை வணிக மன்றத்தின் ஏற்பாட்டில் பாடசாலை சந்தை இடம்பெற்றது

Photos from B/Craig T.M.V's post 18/12/2022

MAHENDRA IDEAL FINANCE நிறுவனத்தின் 10 ஆண்டு நிறைவையொட்டி பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் புத்தக பைகளை வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பங்கேற்ற அந்நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் குழுவினருக்கு பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

Photos from B/Craig T.M.V's post 07/12/2022

பாடசாலை மாணவர் பாராளுமன்றத்தின் பாடசாலைகளுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்தும் அமைச்சு மற்றும் SDB வங்கியின் அனுசரனையில் அயற் பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 5 மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சைக்கான வழிகாட்டல் கருத்தரங்கு 6.12.2022 அன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

Want your school to be the top-listed School/college in Bandarawela?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Poonagala Road
Bandarawela